10th Tamil Book Questions for TET and PAPER-1 COMPETITIVE EXAMS
இயல் -1
1) ‘எந்தமிழ்நா’ என்பதை பிரித்தால் இவ்வாறு வரும்
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
2) ‘இன்னறும் பாப்பத்தே’ என பெருஞ்சித்திரனார் பாடுவது
அ) பதிற்றுப்பத்து
ஆ) பத்துப்பாட்டு
இ) தமிழ்விடு தூது
ஈ) பிள்ளைத்தமிழ்
3) பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்
அ) பழ. முத்தையா
ஆ) துரை. மாணிக்கம்
இ) இரா. கிருஷ்ணமூர்த்தி
ஈ) சொ. விருதாச்சலம்
4) ‘பாவலரேறு’ என சிறப்பிக்கப்படுபவர்
அ) திரு.வி.க.
ஆ) பெருஞ்சித்திரனார்
இ) வாணிதாசன்
ஈ) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
5) ‘அன்னை மொழியே’ என்ற பெருஞ்சித்திரனாரின் பாடல் இடம் பெற்ற நூல் ………
அ) கனிச்சாறு
ஆ) எண்சுவை எண்பது
இ) நூறாசிரியம்
ஈ) உலகியல் நூறு
6) காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் – நிலத்துக்கு நல்ல உரங்கள் –
இத்தொடரில் அடிகோடிடப்பட்ட பகுதி குறிப்பிடுவது
அ) இலையும் சருகும்
ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும்
ஈ) சருகும் சண்டும்
7) வேர்க்கடலை, மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றை குறிக்கும் பயிர்வகை………..
அ) குலை வகை
ஆ) மணி வகை
இ) கொழுந்து வகை
ஈ) இலை வகை
8) நெல், கேள்வரகு போன்ற தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொல்
அ) கோல்
ஆ) தாள்
இ) தூறு
ஈ) தண்டு
9) அடிமரத்திலிருந்து பிரியும் மாபெரும் கிளையின் பெயர்
அ) சினை
ஆ) கவை
இ) போத்து
ஈ) கொம்பு
10) சோளம், கரும்பு முதலியவற்றின் இலை வகைகளை குறிக்கும் சொல் …….
அ) இலை
ஆ) ஓலை
இ) தோகை
ஈ) தாள்
11) கரும்பின் நுனிப் பகுதியை குறிக்கும் சொல் ………….
அ) கொழுந்து
ஆ) தளிர்
இ) குருத்து
ஈ) கொழுந்தாடை
12) பூ விரியத் தொடங்கும் நிலை
அ) அரும்பு
ஆ) செம்மல் இ) போது
ஈ) வீ
13) அவரை, உழுந்து முதலியவற்றின் தானியங்களுக்கு வழங்கும் சொல் ………….
அ) விதை
ஆ) முத்து
இ) முதிரை
ஈ) பயறு
14) ‘சொல்லாய்வுக் கட்டுரைகள்’ என்னும் நூலின் ஆசிரியர் …….
அ) இளங்குமரனார்
ஆ) தேவநேயபாவாணார்
இ) கால்டுவெல்
ஈ) வீரமாமுனிவர்
15) மலேசியாவில் நடைபெற்ற முதல் உலக மாநாடு எம்மொழிக்காக நடத்தப்பட்டது?
அ) ஹீப்ரு மொழி
ஆ) சீனமொழி
இ) கிரேக்கம்
ஈ) தமிழ்
16) வரகு, குதிரைவாலி போன்ற தானிய வகைகளை ____________ என அழைப்பர்.
அ) சிறுகூலங்கள்
ஆ) தானியம்
இ) சம்பா
ஈ) முதிரை
17) திராவிட மொழிகளில் ஒப்பியல் இலக்கணத்தை கூறியவர்
அ) தேவநேயபாவாணர்
ஆ) கால்டுவெல்
இ) இளங்குமரனார்
ஈ) பெருஞ்சித்திரனார்
18) தமிழ் தென்றால் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்
அ) இளங்குமரனார்
ஆ) பாவாணர்
இ) ஜி.யு. போப்
ஈ) பெருஞ்சித்திரனார்
19) ‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
அ) வணிக கப்பல்களும் நம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெருங்காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிக கப்பல்களும் அணிகலன்களும்
20) சந்தக் கவிமணி எனக் குறிப்பிடப்படுபவர் …….
அ) பாவாணர்
ஆ) தமிழழகனார்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) இளநாகனார்
இயல் – 1 இலக்கணம் (கற்கண்டு)
1) கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது – இத்தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே
அ) பாடிய, கேட்டவர்
ஆ) பாடல், பாடிய
இ) கேட்பவர், பாடிய
ஈ) பாடல், கேட்பவர்
2) உயிரளபடையின் வகைகள்
அ) மூன்று
ஆ) இரண்டு
இ) நான்கு
ஈ) ஐந்து
3) கீழ்காண்பனவற்றுள் முதல் எழுத்துக்கள் அல்லாதவை
அ) வல்லின மெய்கள்
ஆ) உயிர்நெட்டெழுத்துக்கள்
இ) அளபெடைகள்
ஈ) உயிரும் மெய்யும்
4) இசைநிறை அளபெடை என்பது
அ) இன்னிசை அளபெடை
ஆ) செய்யுளிசை அளபெடை
இ) ஒற்றளபெடை
ஈ) சொல்லிசை அளபெடை
5) கண்ணன் வந்தான் என்பது
அ) தனிமொழி
ஆ) பொதுமொழி
இ) தொடர்மொழி
ஈ) தொழிற்பெயர்
6) எட்டு என்பது
அ) தனிமொழி
ஆ) தொடர்மொழி
இ) அளபெடை
ஈ) பொதுமொழி
7) “ஒருமொழி ஒரு பொருளனவா” என நன்னூல் குறிப்பிடுவது
அ) பொதுமொழி
ஆ) தொடர்மொழி
இ) தனிமொழி
ஈ) விணையாலணையும் பெயர்
8) “விகுதிப் பெறாமல் வினைப் பகுதியே
தொழிற்பெயராதல்” என்பதற்கு சான்று
அ) நடத்தல்
ஆ) கொல்லாமை
இ) ஆளல்
ஈ) உரை
9) “பொறுத்தார் பூமியாள்வார்” என்ற தொடரில் வினையாலணையும் பெயர்
அ) பூமியாள்வார்
ஆ) பொறுத்தார்
இ) பொறுத்தார் பூமியாள்வார்
ஈ) எதுவுமில்லை
10) ஒரு வினைமுற்றுப் பெயரின் தன்மையை அடைந்து வரும் பெயர்
அ) தொழிற்பெயர்
ஆ) வினையெச்சம்
இ) வினையாலணையும் பெயர்
ஈ) பெயரெச்சம்
11) தொழில் அல்லது வினை நிகழாதிருப்பதைக் குறிக்கும் பெயர்
அ) விகுதி பெற்ற தொழிற்பெயர்
ஆ) எதிர்மறைத் தொழிற்பெயர்
இ) முதனிலைத் தொழிற்பெயர்
ஈ) முதனிலைத் தெரிந்த தொழிற்பெயர்
Leave a Reply