TNPSC Tamil Questions:
TNPSC TAMIL QUESTIONS:
1) பலவுயிர் – பிரித்தெழுதுக.
(A) பல் + உயிர்
(B) பல + உயிர்
(C) பல + வுயிர்
(D) பல் + வுயிர்
(E) விடை தெரியவில்லை
2) இல்லாது + இயங்கும் – சேர்த்து எழுதுக.
(A) இல்லாது இயங்கும்
(B) இல்லாஇயங்கும்
(C) இல்லாதியங்கும்
(D) இல்லதியங்கும்
(E) விடை தெரியவில்லை
3) ‘வண்கீரை’ – பிரித்தெழுதுக.
(A) வண் + கீரை
(B) வண்ணம் + கீரை
(C) வளம் + கீரை
(D) வண்மை + கீரை
(E) விடை தெரியவில்லை
4) உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்.
(A) மறைந்த
(B) நிறைந்த
(C) குறைந்த
(D) தோன்றிய
(E) விடை தெரியவில்லை
5) சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச் சொல்.
(A) அழிவு
(B) துன்பம்
(C) சுறுசுறுப்பு
(D) சோகம்
(E) விடை தெரியவில்லை
6) பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க.
(A) ஹைக்கூ
(B) சென்ரியு
(C) மரபுக் கவிதை
(D) லிமரைக்கூ
(E) விடை தெரியவில்லை
7) பொருந்தாத இணை எது?
(A) தோல் கருவிகள் — உடுக்கை, தவண்டை
(B) நரம்புக் கருவிகள் — யாழ். வீணை
(C) காற்றுக் கருவிகள் — குழல், சங்கு
(D) கஞ்சக் கருவிகள் — சாலரா, சேகண்டி
(E) விடை தெரியவில்லை
8) பொருந்தாதவற்றைக் கண்டறிக.
(A) தோசை வைக்கப்பட்டது – செய்வினைத் தொடர்
(B) அப்துல் நேற்று வந்தான் – தன்வினைத் தொடர்
(C) கவிதா உரை படித்தாள் – செய்வினைத் தொடர்
(D) கோவலன் கொலையுண்டான் – செயப்பாட்டு வினைத் தொடர்
(E) விடை தெரியவில்லை
9) மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக.
(A) பாடும் குயில்
(B) கத்தும் குயில்
(C) பேசும் குயில்
(D) கூவும் குயில்
(E) விடை தெரியவில்லை
10) சந்திப்பிழையைச் சரிபார்த்து எழுதுக.
(A) கண்களை கசகிக் கொண்டுபார்த்தான்
(B) கண்களைக் கசக்கி கொண்டுபார்த்தான்
(C) கண்களைக் கசக்கிக் கொண்டுபார்த்தான்
(D) கண்களை கசகி கொண்டுபார்த்தான்
(E) விடை தெரியவில்லை
11) சந்திப்பிழை இல்லாத தொடரைக் காண்க.
(A) ஆசிரியர் வருவதாக கூறிச் சென்றார்
(B) ஆசிரியர் வருவதாகக் கூறிச் சென்றார்
(C) ஆசிரியர் வருவதாகக் கூறி சென்றார்
(D) ஆசிரியர் வருவதாக கூறி சென்றார்
(E) விடை தெரியவில்லை
12) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக.
(A) Document – ஆவணம்
(B) Patent – பாசனம்
(C) Guild – தூதரகம்
(D) Consulate – வணிகக் குழு
(E) விடை தெரியவில்லை
13) மயங்கொலிப் பிழையற்ற தொடரைக் கண்டறிக.
(A) பேச்சுமொழி சிறப்பாக அமையக் குறல் ஏற்றத்தாள்வு அவசியம்
(B) பேச்சுமொழி சிரப்பாக அமையக் குரல் ஏற்றத்தாள்வு அவசியம்
(C) பேச்சுமொழி சிரப்பாக அமையக் குறல் ஏற்றத்தாழ்வு அவசியம்
(D) பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்
(E) விடை தெரியவில்லை
14) வழுவற்ற சொல்லைக் காண்க
(A) அரிவாமணை
(B) ஒட்டடை
(C) தாவாரம்
(D) அடமழை
(E) விடை தெரியவில்லை
15) ‘அடல்’ என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க.
(A) வலிமை
(B) வெற்றி
(C) போர்
(D) ஆடல்
(E) விடை தெரியவில்லை
16) கரி என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க.
(A) யானை
(B) அடுப்புக்கரி
(C) கருமை
(D)இறைச்சி
(E) விடை தெரியவில்லை
17) அகர வரிசைப்படுத்துக.
(A) ஆரம், அழகுணர்ச்சி, இரண்டல்ல, ஈசன்
(B) அழகுணர்ச்சி, ஆரம், இரண்டல்ல, ஈசன்
(C) அழகுணர்ச்சி, ஆரம், ஈசன், இரண்டல்ல
(D) ஆரம், ஈசன், அழகுணர்ச்சி, இரண்டல்ல
(E) விடை தெரியவில்லை
18) அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
பாம்பு, பேரியாழ், படகம், பிடில்
(A) பிடில், பாம்பு, படகம், பேரியாழ்
(B) பேரியாழ், பிடில், படகம், பாம்பு
(C) படகம், பாம்பு, பிடில், பேரியாழ்
(D) பேரியாழ், பாம்பு, படகம், பிடில்
(E) விடை தெரியவில்லை
19) அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்.
(A) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு
(B) மனத்துயர், முந்நீர், மீமிசை, மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு
(C) மனத்துயர், மீமிசை, மேடுபள்ளம், முந்நீர், மொழிபெயர்ப்பு
(D) மனத்துயர், முந்நீர், மீமிசை, மொழிபெயர்ப்பு, மேடுபள்ளம்
(E) விடை தெரியவில்லை
20) அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்.
கீழ்க்காணும் சொற்களை அகர வரிசையில் எழுதுக.
(A) வாழ்க்கை, வேப்பிலை, வெகுளாமை, வீடுபேறு, வையம்
(B) வாழ்க்கை, வேப்பிலை, வீடுபேறு, வெகுளாமை, வையம்
(C) வாழ்க்கை, வீடுபேறு, வையம், வெகுளாமை, வேப்பிலை
(D) வாழ்க்கை, வீடுபேறு, வெகுளாமை, வேப்பிலை, வையம்
(E) விடை தெரியவில்லை
21) “குறிஞ்சி நகர் எங்கே இருக்கிறது? – இந்த வழியாகச் செல்லுங்கள்” என்று விடையளிப்பது.
(A) நேர்விடை
(B) மறைவிடை
(C) சுட்டுவிடை
(D) ஏவல்விடை
(E) விடை தெரியவில்லை
22) வெளிப்படை விடைகளைக் கண்டறிக.
(A) சுட்டு, ஏவல், இனமொழி
(B) சுட்டு, மறை, நேர்
(C) சுட்டு, நேர், உறுவது கூறல்
(D) சுட்டு, நேர், ஏவல்
(E) விடை தெரியவில்லை
23) விடைக்கேற்ற வினா அமைத்திடுக.
சிலப்பதிகாரம், முத்தமிழ்க் காப்பியம் என்றும் குடிமக்கள் காப்பியம் என்றும்
அழைக்கப்படுகிறது.
(A) சிலப்பதிகாரம் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
(B) முத்தமிழ்க் காப்பியம் என்றழைக்கப்படும் நூல் எது?
(C) குடிமக்கள் காப்பியம் என்றழைக்கப்படும் நூல் எது?
(D) சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப்பட காரணம் என்ன?
(E) விடை தெரியவில்லை
24) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
“கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்”.
(A) கரகாட்டம் என்றால் என்ன?
(B) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
(C) கரகாட்டத்தின் வேறு வடிவங்கள் யாவை?
(D) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
(E) விடை தெரியவில்லை
25) சரியான கலைச் சொல்லை கண்டறிக :
(A) Objective – அரசியலமைப்பு
(B) Confidence – நம்பிக்கை
(C) Agreement – குறிக்கோள்
(D) Constitution – ஒப்பந்தம்
(E) விடை தெரியவில்லை
TNPSC TAMIL QUESTIONS ANSWER KEY:
1) B
2) C
3) D
4) A
5) C
6) C
7) A
8) A
9) D
10) C
11) B
12) A
13) D
14) B
15) D
16) D
17) B
18) C
19) A
20) D
21) C
22) B
23) A
24) D
25) B
Leave a Reply