Tamil Eligibility Test Previous Year Question Paper 02:
51) பிழை திருத்துக
கண்ணகி சிலம்பு அணிந்தான்
A) கண்ணகி சிலம்பு அனிவித்தாள்
B) கண்ணகி சிலம்பு அணிந்துள்ளாள்
C) கண்ணகி சிலம்பு அணிந்தது
D) கண்ணகி சிலம்பு அணிந்தாள்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
52) சொல் – பொருள் பொருத்துக. ( எதிர்ச்சொல் பொருத்துக)
a) எளிது – புரவலா்
b) ஈதல் – அரிது
c) அந்தியா் – 3) ஏற்றல்
d) இரவலா் – 4) உறவினா்
a b c d
A) 3 1 2 4
B) 2 3 4 1
C) 1 4 3 2
D) 4 2 1 3
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
53) சொல் – பொருள் கொருத்துதல்
a) நாற்று – பறித்தல்
b) நீர் – அறுத்தல்
c) கதிர் – 3) நடுதல்
d) களை – 4) பாய்ச்சுதல்
a b c d
A) 3 4 2 1
B) 3 1 4 2
C) 4 2 1 3
D) 2 3 1 4
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
54) ஒருமை பன்மை பிழை
குழந்தைகள் ——————-இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்
A) தாம்
B) தம்மால்
C) தமக்கு
D) தன்னால்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
55) ஒருமை பன்மை பிழை நீக்குக
சிறுமி —————— கையில் மலர்களை வைத்திருந்தாள்
A) தன்
B) தாம்
C) தனது
D) தமது
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
கீழ்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையை தோ்ந்தெடு
ஆசியாவிலேயே மிகப்பழமையான நுாலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நுாலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படகின்றன. உலகலாவிய தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலம் கன்னிமாரா நுாலகமே. இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நுாலகம் என்ற பெருமைக்கு உரியது. திருவனந்தபுரம் நடுவண் நுாலகம். கொல்கத்தாவில் 1936-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1953 இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட தேசிய நுாலகமே இந்தியாவின் மிகப் பெரிய நுாலகமாகும். இது ஆவணக் காப்பக நுாலகமாகவும் திகழ்கிறது. உலகில் மிகப் பெரிய நுாலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்.
56) உலகளவில் தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் எது?
A) சுரசுவதி மகால் நுாலகம்
B) கன்னிமாரா நுாலகம்
C) திருவனந்தபுரம் நடுவண்நுாலகம்
D) தேசிய நுாலகம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
57) சரசுவதி மகால் நுாலகம் அமைந்துள்ள இடம் யாது?
A) தஞ்சாவூர்
B) திருச்சி
C) கோவை
D) சென்னை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
58) தேசிய நுாலகம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த ஆண்டு
A) 1836
B) 1953
C) 1957
D) 1837
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
59) உலகில் மிகப் பெரிய நுாலகம் எது?
A) தஞ்சை சரஸ்வதி மஹால்
B) கன்னிமாரா நுாலகம்
C) லைப்ரரி ஆப் காங்கிரஸ்
D) லைப்ரரி ஆப் அமெரிக்கா
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
60) தேசிய நுாலகத்தின் சிறப்பம்சம்
A) ஓலைச்சுவடிகள்
B) புத்தக நகல்கள்
C) ஆவணக் காப்பகம்
D) படிமங்கள்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
61) பயன் + இலா என்பதனைச் சோ்த்து எழதக் கிடைக்கும் சொல்
A) பயன்னில்லா
B) பயன்இலா
C) பயனிலா
D) பயன் இல்லா
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
62) சீரிளமை – பிரித்தெழுதுக.
A) சீர் + இளமை
B) சீா்மை + இளமை
C) சீரி + இளமை
D) சீற் + இளமை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
63) வெங்கரி – பிரித்தெழுதுக.
A) வெம் + கரி
B) வெங் + கரி
C) வெண் + கரி
D) வெம்மை + கரி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
64) சேர்த்து எழுதுக
முத்து + சுடா் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
A) முத்துசுடா்
B) முச்சுடா்
C) முத்துடா்
D) முத்துச் சுடா்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
65) முதுமை மொழி சோ்த்து எழுதும் போது கிடைக்கும் சொல் அறிக
A) முதுமொழி
B) முதியமொழி
C) முதல்மொழி
D) முதுமைமொழி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
66) பிரித்து எழுதுக
உயா்வடைவோம்
A) உயா் + வடைவோம்
B) உயா் + வடை + ஓம்
C) உயா்வு + அடைவோம்
D) உயா் + அடைவோம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
67) பிரித்து எழுதுக
“செம்பயிர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A) செம்மை பயிர்
B) செம் + பயிர்
C) செமை + பயிர்
D) செம்பு + பயிர்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
68) எல் – எதிர்ச்சொல் தருக
A) பகல்
B) எல்லை
C) தானியம்
D) இரவு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
69) வெற்பு – எதிர்ச்சொல் தருக
A) மலை
B) பள்ளம்
C) மழை
D) பட்டம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
70) பொருந்தாத இணை எது?
A) க்ராப் – செதுக்கி
B) கா்சர் – ஏவி
C) கர்வர் – உலவி
D) ஃபோல்டா் – உறை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
71) பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக
”குழல்கள் செய்ய இயலாத மரங்கள்”
A) கருங்காலி
B) செங்காலி
C) சந்தனம்
D) அகில்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
72) பொருந்தாத இணையைக் கண்டறிக
A) துவரை -பவளம்
B) மல்லல் – வளம்
C) கோடு – கொம்பு
D) செறு – செருக்கு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
73) பொருந்தாத இணையைக் கண்டறிக.
A) ஏறுகோள் – எருதுகட்டி
B) திருவாரூா் – கரிக்கையூர்
C) ஆதிச்சநல்லுார் – அரிக்கமேடு
D) பட்டிமன்றம் – பட்டிமண்டபம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
74) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
A) நாற்று – நடுதல்
B) நீா் – பாய்ச்சுதல்
C) கதிர் – அறுத்தல்
D) கறை – அடித்தல்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
75) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
A) அப்துல்கலாம் பிறந்த நாள் – ஆசிரியா் நாள்
B) விவேகானந்தா் பிறந்த நாள் – தேசிய இளைஞா் நாள்
C) காமராசா் பிறந்த நாள் – கல்வி வளா்ச்சி நாள்
D) ஜவஹா்லால் நேரு பிறந்த நாள் – குழந்தைகள் நாள்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
76) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A) திங்கள் – மாதம்
B) பகலவன் – கதிரவன்
C) மெய் – உண்மை
D) பொய்மை – மெய்ம்மை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
77) சந்திப்பிழை அற்ற வாக்கியங்களை அறிக
1) பதிகம் என்பத பத்துப் பாடல்களைக் கொண்டது
2) பதிகம் என்பது பத்து பாடல்களைக் கொண்டது
3) விழாக்களின் போது இசை கருவிகளை இசைப்பது வழக்கம்
4) விழாக்களின் போது இசைக் கருவிகளை இசைப்பது வழக்கம்
A) 1 மற்றும் 3 சரி
B) 2 மற்றும் 3 சரி
C) 1 மற்றம் 4 சரி
D) 2 மற்றும் 4 சரி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
78) இளமைப் பெயா்கள் கண்டு பொருத்துக
a) புலி – குட்டி
b) சிங்கம் – கன்று
c) ஆடு – 3) குருளை
d) யானை – 4) பறழ்
a b c d
A) 4 3 1 2
B) 3 4 2 1
C) 3 1 4 2
D) 4 1 2 3
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
79) வழுவற்ற தொடரைக் காண்க
A) கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதின
B) கைகள் இரண்டும் உதவவே என சான்றோர்கள் கருதின
C) கை இரண்டும் உதவவே எனச் சான்றோர் கருதினா்
D) கைகள் இரண்டும் உதவவே எனச் சான்றோர்கள் கருதினா்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
80) வழுவுச் சொல்லற்ற தொடரை அறிக
A) சிற்பி சிலையைச் செய்தான்
B) சிற்பி சிலையைச் செதுக்கினான்
C) சிற்பி சிலையை வனைந்தான்
D) சிற்பி சிலையை வார்த்தான்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
81) வல்லினம் மிக இடத்தைக் காண்க
A) குடி தண்ணீா்
B) கனா கண்டேன்
C) தனி சிறப்பு
D) பூ பந்தல்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
82) Crying Child will get milk. இணையான தமிழ்ப் பழமொழியை எழுதுக.
A) பாலைப் பார்த்தால் குழந்தை அழும்
B) அழுத பிள்ளை பால் குடிக்கும்
C) அழுதால் குழந்தைக்குப் பால் கிடைக்கும்
D) அழுத பிள்ளை பால் குடிக்காது
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
83) சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக
A) கால வெள்ளத்தில் கரைந்துப்போன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்தி கொண்டுள்ளது தமிழ்
B) கால வெள்ளத்தில் கரைந்துப்போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை தானே நிலை நிறுத்திக்கொண்டுள்ளதுத் தமிழ்
C) கால வெள்ளத்தில் கரைந்து கோன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளதுத் தமிழ்
D) கால வெள்ளத்தில் கரைந்து கோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
84) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக
A) Wealth – கடமை
B) Courtesy – நற்பண்பு
C) Poverty – பொதுவுடைமை
D) Ambition – அயலவா்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
85) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக
A) Herostone – புடைப்பியல்
B) Epigraphy – பண்பாட்டியல்
C) Excavation – அகழாய்வு
D) Inscription – கல்வெட்டு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
86) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக
திணை – தினை
A) உயா் திணை – ஊா்
B) ஒழுக்கம் – தானியம்
C) திண்ணுதல் – வாக்கியம்
D) திண்ணை – துணிவு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
87) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக
A) வரவழைத்தல், கடலலை
B) கடலலை, வரவழைத்தல்
C) அலைதல், வரவழைத்தல்
D) அலைத்தல், வரவழைத்தல்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
88) ஒரு பொருள் தரும் பல சொற்ககள்
சரியான இணையைத் தோ்ந்தெடு
A) நாவாய், வங்கம்
B) ஆழி, சுழி
C) அழி, ஆழி
D) கப்பல், பேருந்து
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
89) ஆழி, முந்நீா், பௌவம் ஆகிய சொற்கள் கீழ்கண்டவற்றில் எதைக் குறிக்கிறது?
A) சக்கரம்
B) மூன்று
C) கடல்
D) வெந்நீா்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
90) “படி“ என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக.
A) படித்தான்
B) பாடினான்
C) கற்றான்
D) கற்பனை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
91) பாடினாள் – வேர்ச்சொல்லைத் தருக
A) பா
B) வா
C) பாடு
D) ஆடு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
92) ”ஆடு” என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயா் வடிவம் தருக
A) ஆடுதல்
B) ஆடி
C) ஆடியவன்
D) ஆடினான்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
93) “ஆடு“ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்கு
A) ஆடி
B) ஆடுதல்
C) ஆடிய
D) ஆடினான்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
94) அகரவாிசைப்படி சொற்களை சீா் செய்க
A) கிண்ணம், காட்சி, கீரி, கல்வி, கேள்வி
B) கீரி, கிண்ணம், காட்சி, கல்வி, கேள்வி
C) கல்வி, காட்சி, கிண்ணம், கீரி, கேள்வி
D) காட்சி, கிண்ணம், கீரி, கல்வி, கேள்வி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
95) அகரவரிசைப்படி சொற்களை சீா் செய்து எழுது.
A) சூடு, செடி, சுடு, சோழன், சேரன்
B) சுடு, சூடு, செடி, சேரன், சோழன்
C) செடி, சுடு, சேரன், சோழன், சூடு
D) சோழன், சேரன், சுடு, சூடு, செடி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
96) அகரவரிசையில் எழுதுக
A) முதல், மீமிசை, மிசை, மலை, மாலை
B) மிசை, மீமிசை, மலை, மாலை, முதல்
C) மலை, மாலை, மிசை, மீமிசை, முதல்
D) மலை, மாலை, முதல், மிசை, மீமிசை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
97) கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து
A) பாட்டி, பணம், பேட்டை, போ, பெட்டி
B) பணம், பாட்டி, பெட்டி, பேட்டை, போ
C) பெட்டி, பணம், பேட்டை, போ, பாட்டி
D) போ, பாட்டி, பெட்டி, பணம், பேட்டை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
98) கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து
A) வேற்றுமை, வீடு, வாரம், விசிறி, வலிமை
B) வீடு, வாரம், வேற்றுமை, விசிறி, வலிமை
C) வாரம், வேற்றுமை, விசிறி, வீடு, வலிமை
D) வலிமை, வாரம், விசிறி, வீடு வேற்றுமை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
99) கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்து
A) நான்கு, நன்மை, நெருப்பு, நீட்சி, நிலம்
B) நிலம், நெருப்பு, நான்கு, நீட்சி நன்மை
C) நன்மை, நான்கு, நிலம், நீட்சி, நெருப்பு
D) நெருப்பு, நிலம், நன்மை, நீட்சி, நான்கு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
100) அகரவரிசையில் எழுதுக.
A) பள்ளம், பாலை, பிணி, பீடு, புணை
B) பாலை, பள்ளம், பீடு, புணை, பிணி
C) பிணி, பள்ளம், பீடு, புணை, பாலை
D) பீடு, பாலை, பள்ளம், புணை, பிணி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A