NMMS Social Science Question Bank

NMMS Social Science Question Bank:

1) தொடக்க இடைக்கால இந்திய வரலாற்று காலம் என்பது

  1. கி.பி. 700 முதல் 1200 வரை
  2. கி.பி. 600 முதல் 1100 வரை
  3. கி.பி. 500 முதல் 1000 வரை
  4. கி.பி. 800 முதல் 1300 வரை

ANSWER KEY: 1

2) பின் இடைக்கால இந்திய வரலாற்று காலம் என்பது

  1. கி.பி. 1000 முதல் 1500 வரை
  2. கி.பி.1100 முதல் 1600 வரை
  3. கி.பி. 1200 முதல் 1700 வரை
  4. கி.பி.1300 முதல் 1800 வரை

ANSWER KEY: 3

3) இடைக்கால இந்திய வரலாற்றை கற்கும் அறிஞர்களுக்கு நல்வாய்ப்பாக கிடைக்கப் பெற்றவை

  1. பணம்
  2. சான்றுகள்
  3. மனிதர்கள்
  4. விலங்குகள்

ANSWER KEY: 2

4) அதிக செய்திகளை வழங்கும் இடைக்கால இந்திய வரலாற்றுச் சான்றுகள்

  1. கல்வெட்டுகள்
  2. கட்டடங்கள்
  3. இலக்கியங்கள்
  4. பயணக்குறிப்புகள்

ANSWER KEY: 1

5) ஔரங்கசீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞராக இருந்தவர்

  1. காஃபிகான்
  2. நேதாஜி
  3. வாஸ்கோடகாமா
  4. அக்பர்

ANSWER KEY: 1

6) விசுவாசம் உள்ளவராக இருத்தல், ஆபத்துக்கு அஞ்சாமை ஆகியவை வரலாற்று ஆசிரியரின் கடமைகள் என்று கூறியவர்

  1. ஔரங்கசீப்
  2. நேதாஜி
  3. காஃபிகான்
  4. ஜஹாங்கீர்

ANSWER KEY: 3

7) கடந்த காலத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு உதவக்கூடிய பதிவுகளே __________ எனப்படும்.

  1. கடமைகள்
  2. சான்றுகள்
  3. உரிமைகள்
  4. கூற்றுகள்

ANSWER KEY: 2

8) சான்றுகள் உதவியுடன் நாம் ­­­­­­­­________________, பொருளாதார, சமூக பண்பாட்டு வளர்ச்சி ஆகிய விவரங்களை திறனாய்வு செய்கிறோம்.

  1. அரசியல்
  2. சினிமா
  3. கல்வி
  4. கூற்றுகள்

ANSWER KEY: 1

9) இந்திய வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் ___________ வகைப்படும்.

  1. இரண்டு
  2. மூன்று
  3. நான்கு
  4. ஐந்து

ANSWER KEY: 1

10) கீழ்க்கண்டவற்றுள் எது முதல்நிலைச் சான்றுகளுள் ஒன்று அல்ல?

  1. பொறிப்புகள்
  2. கல்வெட்டுகள்
  3. நாணயங்கள்
  4. சுயசரிதைகள்

ANSWER KEY: 4

11) இரண்டாம்நிலைச் சான்றுகளுக்கு எடுத்துக்காட்டு

  1. பொறிப்புகள்
  2. இலக்கியங்கள்
  3. செப்புப்பட்டயங்கள்
  4. நாணயங்கள்

ANSWER KEY: 2

12) பாறைகள், கற்கள், கோவிற்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றில் கடினமான மேற்பரப்பின் மேல் பொறிக்கப்படும் எழுத்துக்கள் _________ எனப்படும்.

  1. பொறிப்புகள்
  2. இலக்கியங்கள்
  3. பயணக்குறிப்புகள்
  4. நாணயங்கள்

ANSWER KEY: 1

13) சட்டப்பூர்வமான ஆவணங்களாக ஐயப்பாடுகளுக்கு இடமில்லாத மதிப்புகளைக் கொண்டுள்ளவை _____________ ஆகும்.

  1. இலக்கியங்கள்
  2. பயணக்குறிப்புகள்
  3. நாணயங்கள்
  4. செப்புப்பட்டயங்கள்

ANSWER KEY: 4

14) செப்புப்பட்டயங்கள் விலை அதிகமாக இருப்பதன் விளைவாக அவற்றுக்கு மாற்றாகப் பயன்பாட்டுக்கு வந்த சான்று ____________.

  1. பனையோலை
  2. கற்கள்
  3. தகடுகள்
  4. உலோகங்கள்

ANSWER KEY: 1

15) செப்புப்பட்டயங்கள் நடைமுறைக்கு வந்த ஆண்டு _________.

  1. 11 ஆம் நூற்றாண்டு
  2. 12 ஆம் நூற்றாண்டு
  3. 13 ஆம் நூற்றாண்டு
  4. 14 ஆம் நூற்றாண்டு

ANSWER KEY: 3

16) பிற்கால சோழர்களின் காலம்

  1. 5 – 10 ஆம் நூற்றாண்டு
  2. 10 – 15 ஆம் நூற்றாண்டு
  3. 10 – 13 ஆம் நூற்றாண்டு
  4. 15 – 20 ஆம் நூற்றாண்டு

ANSWER KEY: 3

17) பிற்காலச் சோழர்கள் காலத்தில் கொடை வழங்கியவரின் அறச்செயல்கள் அதிகம் பதிவு செய்யப்பட்ட ஆவணம் ___________.

  1. செப்புப்பட்டயங்கள்
  2. கல்வெட்டுகள்
  3. பனையோலைகள்
  4. நாணயங்கள்

ANSWER KEY: 2

18) உத்திரமேரூர் கல்வெட்டுகள் ____________ நிர்வாகம் குறித்த விவரங்களை உள்ளடக்கியது ஆகும்.

  1. அரசவை
  2. மாவட்டங்கள்
  3. சான்றுகள்
  4. கிராமங்கள்

ANSWER KEY: 4

19) தவறான இணையைக் கண்டுபிடி.

  1. வேளாண் வகை – பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்
  2. பிரம்மதேயம் – பிராமணர்க்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
  3. சாலபோகம் – கல்வி நிலையங்களைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள்
  4. தேவதானம் – சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்

ANSWER KEY: 4

20) சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள் ____________ ஆகும்.

  1. பள்ளிச் சந்தம்
  2. தேவதானம்
  3. சாலபோகம்
  4. பிரம்மதேயம்

ANSWER KEY: 1

21) இந்தியாவில் புதுவகையான கட்டடக்கலையை அறிமுகம் செய்தவர்கள்

  1. அசோகர்கள்
  2. சீக்கியர்கள்
  3. மராத்தியர்கள்
  4. சுல்தான்கள்

ANSWER KEY: 4

22) இந்தியாவில் சுல்தான்கள் அறிமுகம் செய்த புதுவகையான கட்டடக்கலையின் முக்கியக் கூறுகளுள் ஒன்று ___________.

  1. குவிமாடங்கள்
  2. பயணக்குறிப்புகள்
  3. நாணயங்கள்
  4. செப்புப்பட்டயங்கள்

ANSWER KEY: 1

23) பிற்காலச் சோழர்கள் தமிழ்நாட்டில் கட்டியெழுப்பிய நேர்த்தியான பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கு அடையாளமாகத் திகழ்வது ________.

  1. கஜுராகோ
  2. அபுகுன்று
  3. கங்கைகொண்ட சோழபுரம்
  4. விருப்பாக்சா

ANSWER KEY: 3

24) ஹைதராபாத்தில் உள்ள இடைக்காலத்தைச் சேர்ந்த முக்கியமான மசூதி _____________.

  1. மோத்-கி-மசூதி
  2. சார்மினார்
  3. ஜமா மசூதி
  4. குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி

ANSWER KEY: 1

25) வட இந்தியாவில் உள்ள பாழடைந்த நகரம் ____________.

  1. சென்னை
  2. மும்பை
  3. கேரளா
  4. துக்ளகாபாத்

ANSWER KEY: 3

26) பொருத்துக.

i) கஜுராஹோ கோயில் – a) ஒடிசா

ii) அபு குன்று – b) தமிழ்நாடு

iii) கோனார்க் கோயில்        – c) தில்வாரா

iv) பிரகதீஸ்வரர் கோயில் – d) மத்தியப்பிரதேசம்

1)  i – d, ii – c, iii – b, iv – a

2)  i – a, ii – d, iii – b, iv – c

3)  i – d, ii – c, iii – a, iv – b

4)  i – d, ii – a, iii – b, iv – c

ANSWER KEY: 2

27) பொருத்துக.

i) ஜெய்ப்பூர் அரண்மனை –  a) கர்நாடகா

ii) ஹம்பி           –  b) பாழடைந்த நகரம்

iii) பெரியபுராணம்         –  c) சேக்கிழார்

iv) துக்ளகாபாத்       –  d) இராஜபுத்திரர்கள்

1)  i – d, ii – a, iii – c, iv – b

2)  i – d, ii – a, iii – b, iv – c

3)  i – d, ii – c, iii – a, iv – b

4)  i – a, ii – d, iii – b, iv – c

ANSWER KEY: 4

28) தென்னிந்தியாவில் உள்ள ___________ இடைக்கால இந்திய வரலாற்றுக்கான சான்றுக் கருவூலமாகும்.

  1. பிரோஷாபாத்
  2. ஹம்பி
  3. துக்ளகாபாத்
  4. டெல்லி

ANSWER KEY: 2

29) _______________ இல் உள்ள உலோகக்கலவை பேரரசின் பொருளாதார நிலை குறித்த செய்திகளை வழங்குகின்றன.

  1. கட்டடங்கள்
  2. கல்லறைகள்
  3. மசூதிகள்
  4. நாணயங்கள்

ANSWER KEY: 4

30) தான் வெளியிட்ட தங்கநாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்தவர்

  1. முகமது கோரி
  2. அக்பர்
  3. நேதாஜி
  4. வாஸ்கோடகாமா

ANSWER KEY: 1

31) டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள _____________ என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன.

  1. ஜிட்டல்
  2. டங்கா
  3. தேவாரம்
  4. குன்றிமணி

ANSWER KEY: 1

32) தவறான இணையைக் கண்டுபிடி.

  1. டெல்லி சுல்தான் – ஜிட்டல்
  2. இல்துமிஷ் – டங்கா
  3. அலாவுதீன் கில்ஜி – வெள்ளி நாணயங்கள்
  4. முகமது பின் துக்ளக் – செப்பு நாணயங்கள்

ANSWER KEY: 3

33) ஒரு ஜிட்டல் என்பது __________ வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டதாகும்.

1)   3.6

2)   3.2

3)  3.4

4)  3.8

ANSWER KEY: 1

34) ஒரு வெள்ளி டங்காவுக்குச் சமமானது _________ ஜிட்டல்கள் ஆகும்.

  1. 36
  2. 42
  3. 56
  4. 48

ANSWER KEY: 4

35) கீழ்க்காணும் அரசர்களுள் தங்க நாணயங்களை வெளியிட்டவர் / வெளியிட்டவர்கள் _________________.

  1. அலாவுதீன் கில்ஜி
  2. முகமதுகோரி
  3. இல்துமிஷ்
  4. முகமதுபின் துக்ளக்

1)   1 மட்டும்

2)   1 மற்றும் 2

3)   1, 2, மற்றும் 3

4)   எதுவுமில்லை

ANSWER KEY: 2

36) “பக்தி இலக்கியங்களின் காலம்” என்று அழைக்கப்படுவது ___________ காலமாகும்.

  1. முகலாயர்கள்
  2. சோழர்கள்
  3. சேரர்கள்
  4. பாண்டியர்கள்

ANSWER KEY: 2

37) கீழ்க்காண்பவைகளுள் எது சமய இலக்கிய நூல்களுள் ஒன்று?

  1. மதுராவிஜயம்
  2. அமுக்த மால்யதா
  3. ராஜதரங்கிணி
  4. திருவாசகம்

ANSWER KEY: 4

38) கீழ்க்காண்பவைகளுள் எது சமயச் சார்பற்ற இலக்கியங்களுள் ஒன்று அல்ல?

  1. மதுராவிஜயம்
  2. அமுக்தமால்யதா
  3. ராஜதரங்கிணி
  4. திருவாசகம்

ANSWER KEY: 4

39) பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்டு நாதமுனியால் தொகுக்கப்பட்ட பக்தி இலக்கியம் ______________.

  1. கம்பராமாயணம்
  2. பெரியபுராணம்
  3. தேவாரம்
  4. நாலாயிர திவ்விய பிரபந்தம்

ANSWER KEY: 4

40) அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்டு நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட பக்தி இலக்கியம் __________

  1. தேவாரம்
  2. கீதகோவிந்தம்
  3. திருவாசகம்
  4. பெரியபுராணம்

ANSWER KEY: 1

41) பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த இறைநிலை உணர்வு பெற்ற கவிஞர் _____________.

  1. முகமது கோரி
  2. அலாவுதீன்
  3. கபீர்தாஸ்
  4. இல்துமிஷ்

ANSWER KEY: 3

42) கங்காதேவியால் இயற்றப்பட்ட இலக்கியம் ________________.

  1. அமுக்த மால்யதா
  2. மதுரா விஜயம்
  3. திருவாசகம்
  4. தேவாரம்

ANSWER KEY: 2

43) இஸ்லாமுக்கு முந்தைய காலத்தைப் பற்றி விளக்கும் ஒரே சான்று கல்ஹணரின் ______________ மட்டுமே ஆகும்.

  1. ராஜதரங்கிணி
  2. பிருதிவிராஜ ராசோ
  3. மதுரா விஜயம்
  4. அமுக்த மால்யதா

ANSWER KEY: 1

NMMS QUESTIONS

Leave a Comment