Tamil Eligibility Test Previous Year Question Paper 01:
1) சொற்களை ஒழுங்குபடுத்துக
”சொல்லையோ திரும்பத் சொல்வதுண்டு கருத்தையோ திரும்பச்”
A) கருத்தையோ சொல்லையோ திரும்பத் திரும்பச் செல்வதுண்டு
B) திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு கருத்தையோ சொல்லையோ
C) சொல்லையோ சொல்வதுண்டு கருத்தையோ திரும்பத் திரும்பச்
D) சொல்லையோ கருத்தையோ திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
2) சொற்களை ஒழுங்குபடுத்துக
“மிகப்பெரிய எதிரியல்ல அறிவாற்றலின் அறியாமை”
A) அறியாமை எதிரியல்ல மிகப்பெரிய அறிவாற்றலின்
B) அறியாமை எதிரியல்ல அறிவாற்றலின் மிகப்பெரிய
C) அறியாமை அறிவாற்றலின் மிகப் பெரிய எதிரியல்ல
D) மிகப்பெரிய எதிரியல்ல அறிவாற்றலின் அறியாமை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
3) ஏற்கனவே நேர்ந்ததைக் கூறும் விடை?
A) இனமொழி விடை
B) உற்றது உரைத்தல் விடை
C) உறுவது கூறல் விடை
D) நேர் விடை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
4) பொருந்தா இணையைக் கண்டபிடி
விடை விளக்கம்
A) மறை விடை – மறுத்துக் கூறும் விடை
B) உறுவது கூறல் விடை – வினாவிற்கு விடையாக இனிமேல் நோ்வதை கூறல்
C) சுட்டு விடை – உடன்பாட்டுக் கூறும் விடை
D) ஏவல் விடை – மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
5) விடைக்கேற்ற வினாவைத் தேர்க
பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
A) பானையின் எப்பகுதி நமக்கு பயன்படுகிறது ?
B) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
C) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
D) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
6) ”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கா் கேட்டது எவ்வகை வினா?
A) ஐய வினா
B) அறி வினா
C) அறியா வினா
D) கொளல் வினா
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
7) எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
உரை கவிதாவால் படிக்கப்பட்டது.
A) செயப்பாட்டு வினைத்தொடா்
B) செய்வினைத் தொடர்
C) தன்வினைத் தொடா்
D) பிறவினைத் தொடர்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
8) எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக
A) சட்டி உடைந்து போயிற்று
B) அப்துல் நேற்று வந்தான்
C) கவிதா உரை படித்தாள்
D) பாட்டுப் பாடுகிறாள்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
9) ”உயிரும் உடலும் போல” உவமை கூறும் கொருள் தெளிக.
A) ஒற்றுமை
B) வேற்றுமை
C) அன்பு
D) பகை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
10) உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க.
A) ஒற்றுமை
B) வேற்றுமை
C) பாதுகாப்பு
D) ஏமாற்றம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
11) தவறான கலைச் சொல்லைக் கண்டறிக.
A) Leadership – தலைமைப் பண்பு
B) Member of Legislative Assembly – சட்டமன்ற உறுப்பினா்
C) Punctuation – விழிப்புணா்வு
D) Equestrian – குதிரை யேற்றம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
12) கலைச்சொல்
SATELLITE
A) நுண்ணறிவு
B) செயற்கைக் கோள்
C) செயற்கை நுண்ணறிவு
D) மீத்திறன் கணினி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
13) விடை வகைகள்
”தேர்வ எழுதி விட்டாயா?” என்ற வினாவிற்கு ”எழுதாமல் இருப்பேனா?“ என்று கூறுவது?
A) உற்றது உரைத்தல் விடை
B) வினா எதிர் வினாதல் விடை
C) உறுவது கூறல் விடை
D) வெளிப்படை விடை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
14) பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்
A) சா்வா் (Server) – செதுக்கி
B) ஃபோலடா் ( Folder) – வையக விரிவு வலை வழங்கி
C) கர்சர் (Cursor) – ஏவி அல்லது சுட்டி
D) க்ராப் (Crop) – உறை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
15) பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்
கம்ப்யூட்டா்
A) ரோபோ
B) கணினி
C) மிஷின்
D) காலிங்பெல்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
16) ஊர்ப்பெயர்களின் மரூஉ –வை எழுதுக.
புதுச்சேரி என்பதன் மரூஉ
A) புதுக்கோட்டை
B) புதுப்பேட்டை
C) புதுவை
D) புதுச்சேரி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
17) ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக
நாகப்பட்டினம் என்பதன் மரூஉ
A) நாகப்பட்டினம்
B) நாகை
C) நாகூர்
D) பட்டினம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
18) நிறுத்தற்குறிகளை அறிக (எது சரியானது)
A) மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்
B) மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை, வெளியிடும் இடங்களில், வியப்புக்குறி இட வேண்டும்
C) மகிழ்ச்சி, வியப்பு, அச்சம் அவலம் இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்
D) மகிழ்ச்சி வியப்பு அச்சம், அவலம் இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
19) சரியான நிறுத்தற்குறியிட்ட சொற்றொடரினை தோ்ந்தெடு
A) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று வாழை இலை, பறித்து வந்தான்
B) பொழிலன், தோட்டத்திற்குச் சென்று, வழை இலை, பறித்து வந்தான்
C) பொழிலன் தோட்டடத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்
D) பொழிலன், தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
20) எழுத்து வழக்கு தொடரைத் தேர்ந்தெடு
A) எங்கதெ பெரிசு
B) எங்கதெ பெரியது
C) என் கதை பெரிசு
D) என் கதை பெரியது
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
21) ”சொல்றேன்” என்பதன் எழுத்து வழக்கு
A) சொல்லுவேன்
B) சொன்னேன்
C) சொல்வேன்
D) சொல்கின்றேன்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
22) சொற்களை சரியாக இணைத்து புதிய சொல் உருவாக்குக
புளியங் ———————–
A) கன்று
B) குருத்து
C) பிள்ளை
D) மடலி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
23) மனிதநேயம் என்ற சொல்லில் இணைந்துள்ள இரண்டு சொற்களைக் கண்டறிக
A) மனிதன், நேயம்
B) மனிதம், நேயம்
C) மனிதா், நேயம்
D) மனிதள், நேயம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
24) இவற்றுள் எது சரியானது?
நிகழ்காலத்தைத் தோ்ந்தெடுத்து எழுதுக
A) சுடா்க்கொடி பாடினாள்
B) சுடா்க்கொடி பாடுகிறாள்
C) சுடா்க்கொடி பாடுவாள்
D) சுடா்க்கொடியால் பாடப்பட்டது
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
25) மல்லிகைப் பந்தலின் கீழே தங்கினான்.
தங்கினான் என்பது எக்காலத்தைக் குறிக்கும்
A) நிகழ்காலம்
B) இறந்தகாலம்
C) எதிர்காலம்
D) சங்ககாலம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
26) சரியான வினாச்சொல்லைத் தோ்ந்தெடு
A) ஆழ்வார்கள் எத்தனை போ்?
B) ஆழ்வார்கள் பத்து பேர்?
C) ஆழ்வார்கள் இங்கும் இடம்?
D) ஆழ்வார்கள் பாடிய பாடல்?
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
27) சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு
A) அறநெறிச்சாரம் என்பதன் பொருள் என்ன?
B) அறநெறிச்சாரம் அறிவுடையது?
C) அறநெறிச்சாரம் விளக்கம் தருவது?
D) அறநெறிச்சாரம் பொருள் அறிவது?
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
28) ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.
எனக்கு ——————— பங்கு பிரித்துக் கொடுக்க வா!
கீழே ஈரம் பார்த்து உன் ————————- ஐ வை.
A) கை
B) கால்
C) அகல்
D) அலை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
29) வல்லினம் மிகும் மிகாத் தொடா்களின் பொருளறிந்து பொருத்துக.
a) பாலை பாடினான் – 1) தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்
b) பாலைப் பாடினான் – 2) தேரினைப் பார்த்தான்
c) தேரை பார்த்தான் – 3) பாலினைப் பாடினான்
d) தேரைப் பார்த்தான் – 4) பாலைத் திணை பாடினான்
a b c d
A) 4 1 3 2
B) 2 3 1 4
C) 4 3 1 2
D) 2 4 1 3
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
30) பின்வரும் தொடரில் உள்ள நால்வகை சொற்களில் உரிச்சொல்லை தேர்ந்தெடு
வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்
A) ஏறினா்
B) வளவனும் தங்கையும்
C) பேருந்த
D) மாநகரம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
31) அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (முழை)
A) சிங்கம் —————– யில் வாழும்
B) பறவை ——————யில் வாழும்
C) யானை —————–யில் வாழும்
D) எலி ——————– யில் வாழும்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
32) இரு பொருள் தருக. (துய்ப்பது)
A) உண்பது, துாய்மை
B) கற்பது, தருதல்
C) நுகா்வது, துாய்மை
D) துாய்மை, தருதல்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
33) இரு பொருள் தருக (நுால்)
A) ஆடை நெய்வது, மூதுரை அறநுால்
B) பூணுால், செய்தி
C) அறநுால், மாலை
D) ஆடை தைப்பது. நேரம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
34) அடைப்புக் குறிக்குள் உள்ள சொற்கள் பொருந்தக் கூடிய தொடரைக் கண்டறிக
(பட்டு – பாட்டு)
A) கவலைப்பட்ட வாழ்விற்குப் பாட்டு அவசியம்
B) நுாண்டிலில் பட்ட மீனைப் பாட்டுப் பாடி இழுத்தான்
C) பட்டு மெத்தையில் பாட்டுக் கேட்டபடி துாங்கினாள்
D) துன்பப்பட்டு வாழும் வாழ்வில் பாட்டுக்கு என்ன வேலை?
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
35) குறில் – நெடில் மாற்றம், பொருள் வேறுபாடு தருக
சிறு – சீறு
A) வறுமை – புலி
B) கருமை – வலிமை
C) சிறுமை – பாய்தல்
D) கருவி – சிறியது
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
36) கூற்று – பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத்தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது மங்கலம் ஆகும்.
காரணம் – பொற்கொல்லா் பொன்னைப் “பறி“ என்று உரைப்பர்
A) கூற்று, காரணம் இரண்டும் சரி
B) கூற்று சரி, காரணம் தவறு
C) கூற்று தவறு காரணம் சரி
D) கூற்று காரணம் இரண்டும் தவறு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
37) கூற்று – வாய்ப்பூட்டுச் சட்டத்திற்கு ஆட்பட்ட தலைவா்கள் வட இந்தியாவில் பாலகங்காதர திலகரும், தென்னாட்டில் முத்துராமலிங்கரும் ஆவா்
காரணம் – ஆங்கில ஆட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
A) கூற்று காரணம் இரண்டும் சரி
B) கூற்று காரணம் இரண்டும் தவறு
C) கூற்று சரி காரணம் தவறு
D) கூற்று தவறு காரணம் சரி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
38) காலைச் சொல் அறிதல் Paaddy
A) சோளப்பயிர்
B) நெற்பயிர்
C) வாழை
D) கரும்பு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
39) கலைச் சொல் அறிதல் Poet
A) ஓவியா்
B) எழுத்தாளா்
C) கவிஞா்
D) பாடகா்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
40) அடிவகைகளில் தவறான இணை எது?
A) தாள் – கேழ்வரகு
B) தண்டு – வாழை
C) துாறு – புதா்
D) கோல் – குத்துச் செடி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
41) பூக்கையைக் குவித்து
பூவே புரிவோடு காக்க என்று வேண்டியது
A) கருணையன் பூக்களுக்காக
B) கருணையன் எலிசபெத்துக்காக
C) எலிசபெத் தமக்காக
D) எலிசபெத் பூமிக்காக
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
42) சொல்லும் பொருளும் சரியானது எது?
A) பாசவா் – வெற்றிலை
B) ஓசுநா் – நெய்பவா்
C) மண்ணுள் வினைஞா் – சிற்பி
D) வாசவா் – எண்ணெய் விற்பவா்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
43) தொகையின் வகை எது?
பெரிய மீசை சிரித்தார்
A) வேற்றுமைத் தொகை
B) உம்மைத் தொகை
C) அன்மொழித் தொகை
D) பண்புத் தொகை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
44) அருந்துணை என்பதை பிரித்தால்
A) அருமை + துணை
B) அரு + துணை
C) அருமை + இணை
D) அரு + இணை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
45) சரியான அகர வரிசை எது?
A) உழவு, மண், ஏர், மாடு
B) மண், மாடு, ஏர், உழவு
C) உழவு, ஏர், மண், மாடு
D) ஏர், உழவு, மாடு, மண்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
46) வீரனைப் புகழ்ந்து பாடுவது எந்த திணை?
A) வெட்சித் திணை
B) வஞ்சித் திணை
C) நொச்சித் திணை
D) பாடான் திணை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
47) சரியான கூட்டுப் பொயரைத் தேர்ந்தெடு
வேலமரம்
A) வேலந்தோப்பு
B) வேல மரங்கள்
C) வேலங்காடு
D) வேலக்கொல்லை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
48) சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க
A) உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன
B) கழுத்தை இடமாகக் கொண்டு உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் பிறக்கின்றன
C) பன்னிரண்டு உயிர் எழுத்துகள் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன
D) பிறக்கின்ற உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
49) பின்வருவனவற்றுள் முறையான தொடரைத் தேர்ந்தெடுக்க
A) தமிழா் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
B) தமிழா் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
C) தமிழா் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
D) தமிழா் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
50) பிழை திருத்துக
கோவலன் சிலம்பு விற்கப் போனாள்
A) கோவலன் சிலம்பு விற்கப் போனான்
B) கோவலன் சிலம்பு விற்கப் போணாள்
C) கோவலன் சிலம்பு விற்கப் போனார்
D) கோவலன் சிலம்பு விற்கப் போகின்றார்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A