TNPSC Tamil Objective Questions – 02

TNPSC Tamil Objective Questions – 02:

51. சந்திப் பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக :

  1. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும்.
  2. மாட்டை தழுவும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும்.
  3. தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.
  4. தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.

(A) 1 மற்றும் 2

(B)  1 மற்றும் 4

(C) 2 மற்றும் 3

(D) 3 மற்றும் 4

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

52. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றுக.

ஊட்டமிகு உணவு உண்டார் – அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

(A) ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

(B) ஊட்டமிகு உணவு உண்டதால் அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்

(C) ஊட்டமிகு உணவு உண்டு அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்

(D) ஊட்டமிகு உணவால் அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

53. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

(A) கர்நாடகம்

(B) கேரளா

(C) இலங்கை

(D) ஆந்திரா

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

54. எதிர்ச்சொற்களைப் பொருத்துக:

  1. எளிது – புரவலர்
  2. ஈதல் – அரிது
  3. அந்நியர் – ஏற்றல்
  4. இரவலர் – உறவினர்

(A)          2              1              4              3

(B)          3              4              1              2

(C)          2              3              4              1

(D)          3              4              2              1

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

55. “புதுமணல்” – என்பதன் எதிர்ச்சொல் எழுதுக

(A) புதுமை மணல்

(B) புதிய மணல்

(C) பழமணல்

(D) பூமணல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

56. எதிர்சொல்லை எடுத்தெழுதுதல்

இயற்கை

(A) வன்மை

(B) செயற்கை

(C) செழுமை

(D) வலிமை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

57. பிரித்து எழுதுக:

“துயின்றிருந்தார்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது.

(A) துயின்று + இருந்தார்

(B) துயில் + இருந்தார்

(C) துயின்றி + இருந்தார்

(D) துயின் + இருந்தார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

58. விடை வகைகள்:

‘நீ சாப்பிட வில்லையா?’ என்ற வினாவிற்கு “சாப்பிட்டால் தூக்கம் வரும்” என்று உரைப்பது.

(A) இன மொழி விடை

(B) உறுவது கூறல் விடை

(C) உற்றது உரைத்தல் விடை

(D) நேர் விடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

59. அலுவல் சார்ந்த கலைச் சொற்களை கண்டறிந்து எழுதுக:

ஃபோல்டர் (Folder)

(A) கோப்பு

(B) இழுவை முத்திரை

(C) மை பொதி

(D) மடிப்புத்தாள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

60. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்:

வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.

தோசை வைக்கப்பட்டது.

(A) செயப்பாட்டு வினை

(B) தன்வினை

(C) பிறவினை

(D) செய்வினை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும் (61 – 65):

காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார் உடனே அவர்களை உள்ளே அழைத்தார். யாரைப் பார்க்க வந்தீங்க? என்று அன்புடன் வினவினார். “எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால், என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் அம்மா அனுப்பி விட்டாரா?” என்று காமராசர் கேட்டார். இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்திட்டு வருவாங்க அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.

மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர், ஐயா தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு இந்த இரசீதை (பற்றுச் சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்றனர். அதனைக் கேட்டு காமராசர் மனம் நெகிழ்ந்தார்.

61. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் யார்?

(A) பெற்றோர்

(B) மக்கள்

(C) சிறுவன்- சிறுமி

(D) ஆசிரியர்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

62. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது?

(A) ஏழ்மை

(B) நேர்மை

(C) உழைப்பு

(D) கல்லாமை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

63. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் எப்படியிருந்தது?

(A) மகிழ்ந்தார்

(B) நெகிழ்ந்தார்

(C) துன்பப்பட்டார்.

(D) கோபப்பட்டார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

64. சிறுவனும் சிறுமியும் எதற்காக காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?

(A)  தேர்வுக்கு பணம் கட்ட

(B) புத்தகம் வாங்க

(C) பொருள் வாங்க

(D) பேனா வாங்க

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

65. மறுநாள் குழந்தைகள் எதைக் கொண்டு வந்தனர்?

(A) இரும்புப்பெட்டி

(B) இரசீதை (பற்றுச்சீட்டு)

(C) கடிதம்

(D) உணவு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

66. ஒருமை பன்மை பிழையற்றதைக் கண்டறிக

(A) மேகங்கள் சூழ்ந்து கொண்டது

(B) மேகம் சூழ்ந்து கொண்டன

(C) மேகம் சூழ்ந்து கொண்டது

(D) மேகம் சூழ்ந்து கொள்கின்றன.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

67. கீழ்க்காணும் தொடர்களில் தன்மை ஒருமை தொடரைத் தேர்க

(A) நான் அல்லோம்

(B) நாம் அல்லோம்

(C) அவன் அல்லன்

(D)  நான் அல்லேன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

68. ஒருமை, பன்மை பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக

(A) மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை

(B) மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று

(C) மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்ல

(D) மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லேன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

69. தவறான பொருத்தம் எது?

(A) திங்கள் – மாதம்

(B) ஓடு – மேற்கூரை

(C) நகை – மெய்ப்பாடு

(D) அரம் – ஆயுதம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

70. சரியான பொருத்தம் :

சொல்           பொருள்

(A) யாக்கை      –     காக்கை

(B) சேக்கை       –     படுக்கை

(C) பிணித்து      –     பிணி

(D) வாய்ந்த       –     வாய்ச்சொல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

71. சொல்லை ஏற்புடைய பொருளுடன் பொருத்துக:

(A) மயலுறுத்து       –              சீராக

(B) அருகுற                 –              அருகில்

(C) லயத்துடன்      –              தீராத

(D) மாளாத                 –              மயங்கச்செய்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

72. பிழையற்ற தொடரை அறிக:

(A) செழியன் விளையாட வந்தது

(B) கண்ணகி மதுரையை எரித்தான்

(C) மாடலன் நேற்று வந்தான்

(D) செல்வன் பாடங்களைப் படித்து வந்தாள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

73. மரபுச் சொற்களைப் பொருத்துக:

(a) கிளி           1. கூவும்

(b) மயில்         2. பேசும்

(c) ஆந்தை       3. அகவும்

(d) சேவல்        4. அலறும்

(a)          (b)          (c)          (d)

(A)          2              4              3              1

(B)          2             3              4              1

(C)          3              2              1              4

(D)          3              1              4              2

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

74. பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கி பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் எது?

(A) புறநானூறு

(B) பழமொழி நானூறு

(C) அகநானூறு

(D) பாஞ்சாலி சபதம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

75. ‘தூது இலக்கியம்’ வேறு எந்த பெயரால் அழைக்கப்படுகிறது?

(A) சிந்து இலக்கியம்

(B) சந்து இலக்கியம்

(C) சங்க இலக்கியம்

(D) காதல் இலக்கியம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

76. மக்கள் – கூட்டுப்பெயர் :

சரியான எண்ணடையைக் கண்டறிக

(A) மக்கள் மந்தை

(B) மக்கள் கூட்டம்

(C) மக்கள் திரள்

(D) மக்கள் குவியல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

77. பொருத்தமற்ற தொடரை அறிக

(A) அவரை கொத்துக் கொத்தாய்க் காய்க்கும்

(B) முந்திரி குலை குலையாய்க் காய்க்கும்

(C) வைக்கோலைக் கற்றை கற்றையாய்க் கட்டி வைத்தனர்

(D) மக்கள் குவியல் குவியலாய்த் திரண்டனர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

78. தகுந்த சொல்லைத் தேர்ந்தெடு

பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது _______________.

(A) வம்பு

(B) அமைதி

(C) அடக்கம்

(D) பொறை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

79. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் :

_____________ விலங்கிடம் பழகாதே.

(A) நல்ல

(B) பெரிய

(C) இனிய

(D) கொடிய

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

80. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

Passenger Name Record

(A) பயணியர் வருகைப் பதிவு

(B) பயணியர் முன்பதிவு

(C) பயணியர் பெயர்ப்பதிவு

(D) பயணியர் அவசரப்பதிவு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

81. Irrigation – ஏற்ற தமிழ்ச்சொல் கண்டறிக

(A) நிலப்பகுதி

(B) காப்புரிமை

(C) பாசனம்

(D) வயல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

82. ‘Puppetry’ – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

(A) சிலம்பாட்டம்

(B) கோலாட்டம்

(C) பொம்மலாட்டம்

(D) கரகாட்டம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

83. கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று : நடுவண் அரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு 2004.

காரணம் : உலக மொழிகளில் மூத்தமொழி தமிழ்.

(A) கூற்று தவறு, காரணம் சரி

(B) கூற்று சரி, காரணம் தவறு

(C) கூற்று சரி, காரணம் சரி

(D) கூற்று தவறு, காரணம் தவறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

84. கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று : நல்லொழுக்கமே நல்ல மனிதர்களை உருவாக்கும்.

காரணம் : நாம் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை அற நூல்கள் விளக்குகின்றன.

(A) கூற்று தவறு, காரணம் சரி

(B) கூற்று சரி, காரணம் தவறு

(C) கூற்று சரி, காரணம் சரி

(D) கூற்று தவறு, காரணம் தவறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

85. குறில் நெடில் மாற்றம் அறிந்து, பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக:

வனம்                               வானம்

(A) விசும்பு       –     அரண்

(B) கான்         –     விசும்பு

(C) முளி          –     ஆரம்பம்

(D) சோலை      –     பொழில்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

86. குறில் நெடில் மாற்றம் அறிந்து பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக:

மலை                               மாலை

(A) மழை         –     வெள்ளம்

(B) தொடுதல்     –     விடுதல்

(C) சிகரம்        –     சிறு பொழுது

(D) விலங்கு      –     ஓவியம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

87. கீழ்கண்ட சொற்களில் வேகமாக நடத்தல், கூரையாக பயன்படுத்தும் பொருள் என்பதைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக

(A) வீடு

(B) தேடு

(C) நாடு

(D)  ஓடு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

88. இரு பொருள் தருக. ஒரு சொல்லால் நிரப்பு :

மழலை பேசும் __________ அழகு.

இனிமைத் தமிழ் ___________ எமது.

(A) பேச்சு

(B)  மொழி

(C) சொல்

(D) செப்புதல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

89. இரு பொருள் கொண்ட ஒரு சொல்:

நீ அறிந்ததைப் பிறருக்கு ______________.

எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது ______________.

(A) சொல்

(B) பதம்

(C) வார்த்தை

(D) கிளவி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

90. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்க (அழகாக)

(A) ஊர்தி ___________ சென்றது.

(B) காலம் ____________ ஓடுகிறது.

(C) சங்க இலக்கியம் வாழ்க்கையை _____________ காட்டுகிறது.

(D) இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் ____________ காட்டு.

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY: C

 

91. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (பெண்ணும்)

(A) ஆணும் __________ சமம்.

(B) சேவலும் __________ பறவைகள்

(C) __________  ஆய்ச்சியும் முல்லை நில மக்கள்.

(D) தந்தை தாயை ____________ ஐயை என்பர்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

92. சரியான இணைப்புச் சொல் எது?

காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர் ____________ அவர் எளிமையை விரும்பியவர்.

(A) மேலும்

(B) ஆகையால்

(C) ஏனெனில்

(D) எனவே

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

93. சரியான இணைப்புச் சொல் எது?

அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன் ____________ அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்து விடுகிறது.

(A) அதனால்

(B) அதுபோல

(C) ஏனெனில்

(D) எனவே

ANSWER KEY: C

 

94. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

‘மழைமுகம் காணாப்பயிர் போல’

(A) ஏக்கம்

(B) இரக்கம்

(C) நட்பு

(D) பகைமை

ANSWER KEY: A

 

95. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களை கண்டெழுதுதல்:

தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.

(A) கயல்விழி காலையில் படித்தாளா?

(B) கயல்விழி காலையில் படித்தாள்

(C) கயல்விழி காலையில் படிக்கவில்லை

(D) கயல்விழி காலையில் படிப்பித்தாள்

ANSWER KEY: B

 

96. கவிதா பாடம் படித்தாள் – இத்தொடரை பிறவினையாக்குக.

(A) பாடம் கவிதாவால் படிக்கப்பட்டது

(B) கவிதா பாடம் படிப்பித்தாள்

(C) பாடத்தைப் படித்தவள் கவிதா

(D) கவிதா பாடத்தைப் படிக்கவில்லை

ANSWER KEY: B

 

97. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:

பந்து உருண்டது

(A) தன்வினைத் தொடர்

(B) பிறவினைத் தொடர்

(C) செயப்பாட்டு வினைத்தொடர்

(D) எதிர்மறை வினைத்தொடர்

ANSWER KEY: A

 

98. விடைக்கேற்ற வினா அமைக்க:

தமிழ் நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் மேட்டுப்பாளையம் ஆகும்.

(A) கால்நடை வளங்கள் என்றால் என்ன?

(B) தமிழ் நாட்டில் உள்ள வனக்கல்லூரிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

(C) தமிழ் நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?

(D) காடு என்பதன் மற்றொரு பொருள் என்ன?

ANSWER KEY: C

 

99. விடைக்கேற்ற வினா அமைத்தல்:

எனக்கு கதை எழுதத் தெரியும்

(A) உனக்கு கதை எழுதத் தெரியுமா?

(B) உனக்கு எழுதத் தெரிந்த கதை எது?

(C) உனக்குத் தெரிந்த கதைகள் என்னென்ன?

(D) உனக்குத் தெரிந்த கதைகளைக் கூறு?

ANSWER KEY: A

 

100. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் அறிக:

(a) Satellite                            1. மீத்திறன் கணிணி

(b) Intelligence                     2. செயற்கைக் கோள்

(c) Super computer              3. செயற்கை நுண்ணறிவு

(d) Artificial Intelligence    4. நுண்ணறிவு

(a)    (b)    (c)    (d)

(A)    2     4     1     3

(B)    3     2     1     4

(C)    2     3     1     4

(D)    1     4     2     3

ANSWER KEY: A

 

TNPSC TAMIL QUESTIONS

 

TNPSC ORIGINAL QUESTIONS ANSWER KEY

Leave a Comment