TNPSC Tamil Objective Questions – 01

TNPSC Tamil Objective Questions – 01:

1. ‘ஐ’, ‘ஔ’ என்ற எழுத்துக்களின் இன எழுத்துகளைக் கண்டறிக

(A) அ, இ

(B) இ, உ

(C) ஈ, ஓ

(D) அய், அவ்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

2. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை கண்டறிக.

கரை                                  கறை

(A) கரைதல்            –     அறை

(B) ஓரம்         –     அழுக்கு

(C) புரை         –     பறை

(D) முதலை      –     முதல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

3. சரியான நிறுத்தற் குறிகளைக் கண்டறிக.

(A) ‘பாரத ஸ்டேட் வங்கி’ ‘இலா’ என்னும் மென்பொருளை உருவாக்கியிருக்கிறது.

(B) பாரத ஸ்டேட் வங்கி, ‘இலா’ என்னும் மென்பொருளை உருவாக்கியிருக்கிறது.

(C) பாரத, ஸ்டேட் வங்கி “இலா” என்னும் மென்பொருளை உருவாக்கியிருக்கிறது.

(D) “பாரத ஸ்டேட் வங்கி” இலா என்னும் மென்பொருளை உருவாக்கியிருக்கிறது.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

4. ஊர்ப் பெயர்களின் மரூஉவைக் கண்டுபிடிக்க.

தஞ்சாவூரின் மரூஉவைக் கண்டுபிடிக்க.

(A) சோணாடு

(B) பழையாறை

(C) தென்னாடு

(D) தஞ்சை

(E) விடை தெரியவில்லை.

ANSWER KEY: D

 

5. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக.

(A) ஆடு அலப்பும்

(B) மயில் கூவும்

(C)  நரி ஊளையிடும்

(D) நாய் கத்தும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

6. சொல்லைப் பிரித்துப் பொருந்தாத தொடரை அறிக.

கானடை

(A) கான் + அடை – காட்டைச்சேர்

(B) கான் + நடை – காட்டுக்கு நடத்தல்

(C) கால் + நடை – விலங்குகள்

(D) கால் + நடை- காலால் நடத்தல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

7. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.

கேட்டார்

(A) கேட்

(B) கேட்ட

(C) கேட்டு

(D) கேள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

8. வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்

எழுதுகிறாள்

(A) எழுதுகின்றார்

(B) எழுதுவாள்

(C) எழுது

(D) எழுதுகின்றாள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

9. தாமரை தன் தோழியுடன் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடை வீதிக்குச் சென்றாள் – இவ்வாக்கியத்துக்கு பொருத்தமற்ற வினாச்சொல் இடம்பெற்றுள்ள தொடரைச் சுட்டுக.

(A) தாமரை எங்குச் சென்றாள்?

(B) தாமரை எப்படிச் சென்றாள்?

(C) தாமரையுடன் சென்றது யார்?

(D) தாமரை எப்பொழுதுச் சென்றாள்?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

10. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க.

(A) பைந்தமிழ், பெருவெடிப்பு, பீடு, பேரண்டம்

(B) பீடு, பெருவெடிப்பு, பேரண்டம், பைந்தமிழ்

(C) பேரண்டம், பைந்தமிழ், பெருவெடிப்பு, பீடு

(D) பெருவெடிப்பு, பீடு, பேரண்டம், பைந்தமிழ்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

TNPSC Tamil Objective Questions

 

11. சொற்களை இணைத்து புதியசொல் உருவாக்கல்.

‘பூ’ என்ற சொல்லோடு இணையாத சொல்லைக் கண்டறிக.

(A) மாலை

(B) மணி

(C) விலங்கு

(D) குண்டுமணி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

12. கீழ்கண்ட வாக்கியங்களில் பேச்சு வழக்கில் அமைந்துள்ள வாக்கியத்தைக் கண்டறிக.

(A) தமிழ் இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது

(B) தமிழ் முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது

(C) தமிழ் ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது

(D) தமிழ் படிச்சவங்களால் வளர்க்கப்பட்டது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

13. சரியான வினாச் சொல் எது ?

மனப்பாடச் செய்யுளைப் படித்தாயா?

(A) அறியாவினா

(B) கொடைவினா

(C) அறிவினா

(D) ஏவல்வினா

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

14. காண்பான் – கீழ்க்கண்டவற்றுள் எது சரி ?

(A) நடந்து முடிந்தசெயலைக் குறிப்பது

(B) நடந்த செயலைக் குறிப்பது

(C) நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது

(D) நடக்கும் செயலைக் குறிப்பது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

15. கிறு, கின்று, ஆநின்று – எக்காலத்திற்கு உரிய இடைநிலைகள்?

(A) எதிர்கால இடைநிலைகள்

(B) நிகழ்கால இடைநிலைகள்

(C) இறந்தகால இடைநிலைகள்

(D) எதிர்மறை இடைநிலைகள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

16. விடைக்கேற்ற வினாவைக் கண்டறி.

‘தென்னாட்டுப் பெர்னாட்ஷா’ என்று அறிஞர் அண்ணா புகழப்படுகிறார்.

(A) அறிஞர் அண்ணா எவ்வாறு புகழப்படுகிறார்?

(B) அறிஞர் அண்ணா தென்னாட்டுப் பெர்னாட்ஷா என ஏன் புகழப்படுகிறார்.

(C) பெர்னாட்ஷா யார்?

(D) பெர்னாட்ஷா எவ்வாறு புகழப்படுகிறார்?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

17. சரியான இணையைத் தேர்ந்தெடு.

(A) அலை – கடலலை

(B) அளை – வரவழை

(C) அழை – நண்டு

(D) அனை – கூப்பிடு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

18. சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரைத் தேர்க.

(A) சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு ஐந்து பாடலிலும் கருத்துகள் இடம் பெற்றுள்ளன

(B) சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் இடம்பெற்றுள்ளன

(C) ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் சிறுபஞ்சமூலத்தின் இடம்பெற்றுள்ளன

(D) ஒவ்வொரு ஐந்து பாடலிலும் சிறுபஞ்சமூலம் இடம்பெற்றுள்ளன

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY: B

 

19. ஊர்ப் பெயர்களின் மரூஉ

சரியான இணையைத் தெரிவு செய்க.

(A) கோயம்புத்தூர் – கோவைபுதூர்

(B) புதுச்சேரி – புதுவை

(C) கும்பகோணம் – கும்பை

(D) திருநெல்வேலி – நெய்வேலி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

20. ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக.

(A) மாமல்லபுரம் – மயிலை

(B) செங்கல்பட்டு – செஞ்சி

(C) உதகமண்டலம் – உதகை

(D) புதுச்சேரி – புதுகை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

TNPSC Tamil Objective Questions

 

21. இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.

‘வெயிட்’

(A) எடை

(B) நிறை

(C) பருமன்

(D) தராசு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

22. பிறமொழிச் (ஆங்கிலச்) சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்.

பேங்க் (BANK)

(A) பெட்டகம்

(B) இணையதள வணிகம்

(C) வணிக வளாகம்

(D) வங்கி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

23. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக.

(a) Aesthetis                     1. தொன்மம்

(b) Artifacts                      2. கலைச்சொல்

(c) Terminology              3. கலைப்படைப்புகள்

(d) Myth                            4. அழகியல்

(a)          (b)          (c)          (d)

(A)          2              3              4              1

(B)          4              2              3              1

(C)          1              3              4              2

(D)          4              3              2              1

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

24.விடை வகைகள் :

‘விளையாட்டு மைதானம் எங்குள்ளது?’ என்ற வினாவிற்கு ‘இப்பக்கத்தில் உள்ளது’ என உரைப்பது

(A) ஏவல் விடை

(B) மறை விடை

(C) நேர் விடை

(D) சுட்டு விடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

25. பொருத்தமான காலம் அமைத்தல்.

சரியான தொடரைத் தேர்ந்தேடு.

(A) கண்ணனைப் பார்த்தேன் (நிகழ்காலம்)

(B) கண்ணனைப் பார்க்கப் போகிறேன் (எதிர்காலம்)

(C) கண்ணனைப் பார்க்கிறேன் (இறந்தகாலம்)

(D) கண்ணனைப் பார்ப்பேன் (எதிர்காலம்)

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

26. சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க.

குருவி, கொய்யா, சோறு, பழம், போட்டி

(A) குருவி போட்டி

(B) கொய்யா சோறு

(C) சோறு போட்டி

(D) கொய்யாப் பழம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

27. பேச்சு வழக்கில் இருந்து எழுத்து வழக்காக மாற்றுக.

இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சுக்கோ.

(A) இப்பொழுது எனக்கு புரிஞ்சுது. நீயும் புரிஞ்சுக்க.

(B) இப்பொழுது எனக்கு புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.

(C) இப்போ எனக்கு புரிஞ்சுருச்சு. நீயும் புரிந்துகொள்.

(D) இப்ப எனக்கு புரிந்துவிட்டது. நீயும் புரிஞ்சுக்க.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

28. சரியான ‘அகர’ வரிசையைத் தேர்ந்தெடு

(A) தூசும், துகிரும், ஆரமும், அகிலும், முத்தும், மணியும்

(B) தூசும், துகிரும், முத்தும், மணியும், அகிலும், ஆரமும்

(C) அகிலும், ஆரமும், துகிரும், முத்தும், தூசும், மணியும்

(D) அகிலும், ஆரமும், துகிரும், தூசும், மணியும், முத்தும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

29. தொடரின் வகையைக் கண்டறிக.

– அவன் திருந்தினான்.

(A) பிறவினைத் தொடர்

(B) கட்டளைத் தொடர்

(C) தன்வினைத் தொடர்

(D) செய்தித் தொடர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

30. பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன் _____________ பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.

(A) மேலும்

(B) ஆகையால்

(C) ஏனெனில்

(D) அதனால்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

TNPSC Tamil Objective Questions

 

31. தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது – இத்தொடருக்கு ஏற்ற வினா அமைத்திடுக.

(A) மழை ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

(B) வெள்ளம் ஏன் மழையில் மூழ்கியது?

(C) மழையும் வெள்ளமும் ஏன் புவியில் மூழ்கியது?

(D) புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

32. பிரித்தெழுதுதல்.

‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

(A) வெண் + குடை

(B) வெண்மை + குடை

(C) வெம்+ குடை

(D) வெம்மை + குடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

33. சேர்த்தெழுதுதல்.

நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

(A) நிலயென்று

(B) நிலவென்று

(C) நிலவன்று

(D) நிலவுஎன்று

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

34. உவமைக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற்போல

(A) ஒற்றுமை

(B) நட்பு

(C) ஒற்றுமையின்மை

(D) பகைமை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

35. வினைமுற்றுக்குரிய வேர்ச்சொல்லை எழுதுக – பயின்றாள்

(A) படி

(B) பயின்று

(C) பயின்ற

(D) பயில்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

36. ஒரு பொருள் தரும் பல சொற்கள்

சூரியன்

(A)  ஞாயிறு, பரிதி

(B) பரிதி, திங்கள்

(C) திங்கள், நிலவு

(D) நிலவு, கதிரவன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

37. ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான தொடரைத் தேர்க.

  1. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ள வரையிலும்
  2. உயிரெழுத்துகள் பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
  3. வென்றதை பகைவரை பாடும் இலக்கியம் ஆகும் பரணி.
  4. அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ்.

(A) 1 மற்றும் 3

(B) 2 மற்றும் 4

(C) 2 மற்றும் 3

(D) 3 மற்றும் 4

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

38.பிழையற்ற சரியான தொடரைக் கண்டறிக.

(A) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.

(B) தேர்த்திருவிலாவிற்குச் சென்றனர்.

(C) வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது.

(D) இளைக்கு வேறு பெயர் தளை.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

39. நிறுத்தற்குறியிட்ட சரியான தொடரைத் தேர்ந்தெடு.

(A) 11வது வயதிலேயே, அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றார் பாரதியார்

(B) 11வது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி “பாரதி” என்னும் பட்டம் பெற்றார் பாரதியார்

(C) 11வது வயதிலேயே, அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’ என்னும் பட்டம் பெற்றார், பாரதியார்

(D) 11வது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’ என்னும் பட்டம் பெற்றார் பாரதியார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

40. சரியான நிறுத்தற்குறியிட்ட வாக்கியத்தைக் கண்டறிக.

(A) திருமணம்; வளைகாப்பு; பிறந்தநாள் போன்றவற்றை இல்லவிழாக்களாக கொண்டாடினர்.

(B) திருமணம்; வளைகாப்பு, பிறந்தநாள், போன்றவற்றை இல்லவிழாக்களாக கொண்டாடினர்.

(C) திருமணம் : வளைகாப்பு : பிறந்தநாள், போன்றவற்றை இல்ல விழாக்களாக கொண்டாடினர்.

(D) திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் போன்றவற்றை இல்ல விழாக்களாக கொண்டாடினர்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

TNPSC Tamil Objective Questions

 

41. ஒரு பொருள் தரும் பல சொற்கள்

கிளி

(A) தத்தை, கிள்ளை

(B) உயிர், உண்மை

(C) வாய்மை, பொய்மை

(D) கண், உண்மை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

42. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிக.

(a) மூவேந்தர்                            1.   இறந்த, நிகழ், எதிர்

(b) முக்கனி                                  2.   சேரர், சோழர், பாண்டியர்

(c) முத்தமிழ்                               3.   மா, பலா, வாழை

(d) முக்காலம்                           4.   இயல், இசை, நாடகம்

(a)          (b)         (c)          (d)

(A)          4             1              2              3

(B)          2              3              4              1

(C)          2             1              4              3

(D)          3              2              4              1

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

43. தமிழ்ச் சொல் அறிக.

ப்ரௌசர் (Browser) என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல் எது?

(A) சுட்டி

(B) உலவி

(C) செதுக்கி

(D) கணினி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

44. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தெரிக.

Cultural Values

(A) கலை விழா

(B) கலாச்சாரப் பெருமை

(C) பண்பாட்டு எல்லை

(D) பண்பாட்டு விழுமியங்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

45. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக.

புலி

(A) குட்டி

(B) குருளை

(C)  பறழ்

(D) கன்று

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

46. சொல்லத்தகாத சொற்களை மறைத்துக் கூறுவது

(A) மரபு

(B) குழூஉக்குறி

(C) மரூஉ

(D)  இடக்கர் அடக்கல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

47. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.

(A) தொன்மை,தேங்காய், தௌவை, தோழன்

(B) தொன்மை, தௌவை, தோழன், தேங்காய்

(C) தேங்காய், தொன்மை, தோழன், தௌவை

(D) தேங்காய், தௌவை, தோழன், தொன்மை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

48. ‘கேள்’- என்ற வேர்ச் சொல்லின் வினைமுற்று கண்டறிக.

(A) கேட்ட

(B)  கேட்டான்

(C) கேட்டு

(D) கேட்டல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

49. வேர்ச்சொல்லின் எதிர்மறை தொழிற்பெயரைக் காண்க – ‘நட’

(A) நடத்தல்

(B) நடந்த

(C) நடவாமை

(D) நடந்தவன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

50. சொற்களை ஒழுங்குபடுத்துக.

“காவிய இன்பமும் ஒன்று வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள்”

(A) இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று வாழ்விற்குரிய

(B) காவிய் இன்பத்துறைகளுள் இன்பமும் வாழ்விற்குரிய ஒன்று

(C) ஒன்று காவிய இன்பமும் வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள்

(D) வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY: D

 

TNPSC TAMIL QUESTIONS

 

TNPSC ORIGINAL QUESTIONS ANSWER KEY

Leave a Comment