TNPSC Tamil MCQ Questions and Answers – 01

TNPSC Tamil MCQ Questions and Answers – 01:

1) அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க : (கண்ணெழுத்து )

(A) சங்க காலத்தில் ஓவியங்களை _____________ என்று அழைத்தனர்.

(B) நேர்கோடு, வளைகோடு கொண்டு வரையப்பட்ட ஓவியங்களை ______________ என்று அழைத்தனர்.

(C) வண்ணங்கள் குழப்பும் பலகையை ______________ என்று அழைத்தனர்.

(D) கரித்துண்டுகளால் வரையப்படும் ஓவியங்களை _________ என்று அழைத்தனர்.

(E) விடை தெரியவில்லை

 ANSWER KEY: A

 

2. அடைப்புக்குள் உள்ள ஒலி மரபுச் சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க : (பேசும்)

(A) குயில் _________

(B) மயில் _________

(C) கிளி ________

(D) கூகை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

3. சரியான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு.

இது கோவிலா தேரா என்று தெரியவில்லை. ___________ தான் குழப்பத்துடன் பார்த்தேன்.

(A) உடனே

(B) அதனால்

(C) மேலும்

(D) ஏனெனில்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

4. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு:

நெல்லையப்பர் கோவில் ___________ உள்ளது?

(A) எவ்விடம்

(B) எங்கு

(C) ஏன்

(D) எதற்கு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

5. பொருத்தமான காலம் கண்டறிக :

(A) போட்டியில் வென்றார் (நிகழ்காலம்)

(B) மேடையில் பேசுகிறான் (எதிர்காலம்)

(C) தடுப்பூசி செலுத்தினேன் (இறந்த காலம்)

(D) பள்ளிக்குச் செல்வேன் (இறந்த காலம்)

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

6. பொருத்தமான காலம் கண்டறிக :

(A) மிதிவண்டி ஓட்டுவேன் (எதிர்காலம்)

(B) திடலில் ஓடினேன் (எதிர்காலம்)

(C) பெயர் சூட்டினார் (நிகழ்காலம்)

(D) வீட்டிற்குச் செல்வேன் (நிகழ்காலம்)

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

7. பொருத்தமான காலம் கண்டறிக :

(A) நாங்கள் வருவோம் (நிகழ்காலம்)

(B) அவன் வருகிறான் (இறந்த காலம்)

(C) அவை வருகின்றன (நிகழ்காலம்)

(D) அது வந்தது (எதிர்காலம்)

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

8. பேச்சு வழக்கு. எழுத்து வழக்கு

பின்வருவனவற்றுள் பேச்சு வழக்கு அல்லாத தொடரைக் கண்டறிக

(A) முருகா, வந்தியா?

(B) முருகா, வண்ட்டியா?

(C) முருகா, வந்துவிட்டாயா?

(D) முருகா, வந்துட்டியா?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

9. சரியான நிறுத்தற்குறிகளை உடைய சொல்லைக் கண்டறிக

(A) காகத்திற்கு காது உண்டா! அதற்கு காது கேட்குமா?

(B) காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா!

(C) காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?

(D) காகத்திற்கு காது உண்டா! அதற்கு காது கேட்குமா!

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

10. ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் __________ வரும்.

(A) அரைப்புள்ளி (;)

(B) முக்காற் புள்ளி (:)

(C) முற்றுப்புள்ளி (.)

(D) வினாக்குறி (?)

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

11. வியப்புக்குறி இட வேண்டிய சரியான தொடரைக் கண்டறிக.

(A) இயல் இசை நாடகம்

(B) நல்லவன் வாழ்வான்

(C) தமிழின் இனிமைதான் என்னே

(D) சேக்கிழார் எழுதிய நூல் எது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

TNPSC Tamil MCQ Questions and Answers:

 

12. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது ?

(A) கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னரும் பணிந்தனர்.

(B) கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னரும் பணிந்தான்.

(C) கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னரும் பணிந்தன.

(D) கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னரும் பணிந்தது.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

13. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?

(A) தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தன.

(B) தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தனர்.

(C) தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது.

(D) தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருப்பவை.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

14. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது ?

(A) இலக்கியக் கூறுகள் என்பவை மருந்தின் மேலிட்ட இனிப்பு போன்றது

(B) இலக்கியக் கூறுகள் என்பவை மருந்தின் மேலிட்ட இனிப்பு போன்றவை

(C) இலக்கிய கூறுகள் என்பவை மருந்தின் மேலிட்ட இனிப்பு போன்றன

(D) இலக்கிய கூறுகள் என்பவை மருந்தின் மேலிட்ட இனிப்பு போன்றனர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

15. பிழை திருத்துதல் : (ஒரு – ஓர்)

(ஒரு-ஓர் சரியாக அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக்க)

(A) ஒரு அணில் மரத்தில் ஏறின.

(B) ஓர் அணில் மரத்தில் ஏறின.

(C) ஓர் அணில் மரத்தில் ஏறியது.

(D) ஒரு அணில் மரத்தில் ஏறியது.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

16. சரியான தொடரைத் தேர்ந்தெடு :

தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன

இது – எவ்வகைத் தொடர்?

(A) வினாத்தொடர்

(B) கட்டளைத் தொடர்

(C) செய்தித்தொடர்

(D) உணர்ச்சித் தொடர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

17. சரியான தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(A) நீலாம்பிகை அம்மையார் மறைமலை அடிகளின் மகள் ஆவார்.

(B) நீலாம்பிகை அம்மையார் மகள் மறைமலை அடிகள் ஆவார்.

(C) மறைமலை அடிகளாரின் நீலாம்பிகை அம்மையார் மகள் ஆவார்.

(D) மறைமலை அடிகளாரின் மகள் ஆவார் நீலாம்பிகை அம்மையார்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

18. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.

(A) பழங்குடியினர் இயற்கையைப் போற்றும் உணர்வினைக் கொண்டிருந்தனர்.

(B) இயற்கையைப் போற்றும் உணர்வினை பழங்குடியினர் இருந்தனர் கொண்டு.

(C) பழங்குடியினர் உணர்வினைக் கொண்டு இருந்தனர் இயற்கையைப் போற்றும்.

(D) உணர்வினை பழங்குடியினர் கொண்டிருந்தனர் இயற்கையைப் போற்றும்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

19. கலைச்சொல் அறிதல் :

ESCALATOR

(A) மின்தூக்கி

(B) மின்படிக்கட்டு

(C) மின்னஞ்சல்

(D) மின்நூல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

20. கூற்று: த், ந் – ஆகிய எழுத்துகள் இன எழுத்துகள் ஆகும். இவற்றை ‘நட்பெழுத்துகள்’ எனவும் கூறுவர்.

காரணம் : த், ந் – இவ்விரண்டெழுத்தும் நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் பிறக்கின்றன.

(A) கூற்று, காரணம் – இரண்டும் சரி

(B) கூற்று சரி, காரணம் தவறு

(C) கூற்று தவறு, காரணம் சரி

(D) கூற்று, காரணம் – இரண்டும் தவறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

TNPSC Tamil MCQ Questions and Answers:

 

21. குறில் நெடில் மாற்றம் அறிந்து பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக.

சிலை – சீலை

(A) ஓவியம் – வண்ணம்

(B) இறைவன் திருவுருவம் – துணி

(C) மணல் – குன்று

(D) மறை – வேதம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

22. இருபொருள் தருக :

திங்கள்

(A) அறிவு, சந்திரன்

(B) அணி, மாதம்

(C) நிலவு, மாதம்

(D) உடல், நிலவு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

23. சரியான இணையைத் தேர்க :

I. முகநூல்             – App

II. மின்னஞ்சல்  – Search Engine

III. செயலி          –     Touch Screen

IV. புலனம்          – Whatsapp

(A) III

(B) II

(C) I

(D) IV

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

24. எதிர்ச் சொல்லை எடுத்தெழுது:

ஊக்கம்

(A) உற்சாகம்

(B) சோர்வு

(C) உடைமை

(D) மயக்கம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

25. சேர்த்தெழுதுதல் :

பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

(A) பொங்கலன்று

(B) பொங்கல் அன்று

(C) பொங்கலென்று

(D) பொங்க அன்று

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

26. ‘படிப்பறிவு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

(A) படி + அறிவு

(B) படிப்பு + அறிவு

(C) படி + வறிவு

(D) படிப்பு + வறிவு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

27. ‘தற்பவம்’ சொல்லைக் கண்டறிக :

(A) லக்ஷ்மி

(B) கமலம்

(C) இலக்குமி

(D) அலங்காரம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

28. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்க :

Agency

(A) முகவாண்மை

(B) முகவர்

(C) தானியங்கி

(D) அஞ்சலகம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

29. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுது.

ஆன்லைன் ஷாப்பிங் (Online Shopping)

(A) மின்னணு வணிகம்

(B) இணையத்தள வணிகம்

(C) மின்னணுமயம்

(D) இணையம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

30. விடை வகைகள் :

“கடைக்குப் போவாயா” என்ற கேள்விக்குப் “போவேன்” என்று உடன்பட்டுக் கூறல்

(A) நேர் விடை

(B) ஏவல் விடை

(C) உற்றது உரைத்தல் விடை

(D) சுட்டுவிடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

TNPSC Tamil MCQ Questions and Answers:

 

31. ‘காஸ்மிக் ரேய்ஸ்’ என்பது

(A) புற ஊதாக் கதிர்கள்

(B) அகச் சிவப்புக் கதிர்கள்

(C) விண்வெளிக் கதிர்கள்

(D) சூரியக் கதிர்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

32. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் :

“கமலா சிலப்பதிகாரம் கற்றாள்”

(A) முற்றுவினை வாக்கியம்

(B) பிறவினை வாக்கியம்

(C) செய்வினை வாக்கியம்

(D) செயப்பாட்டுவினை வாக்கியம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

33. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக :

(A) ஆசிரியர் பாடம் படிப்பித்தார்.

(B) ஆசிரியர் பாடம் படித்தார்.

(C) ஆசிரியர் பாடம் படித்தாரா?

(D) ஆசிரியர் பாடம் படிக்கிறார்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

34. சாலைகளின் இடப்பக்கம் வண்டிகள் செல்வதே சாலை விதிகளில் முதன்மையான விதி –

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க :

(A) சாலை விதிகளில் முதன்மையான விதி எது ?

(B) சாலை விதிகள் யாவை?

(C) சாலை விதி என்றால் என்ன?

(D) சாலைகளின் இடப்பக்க விதி யாது ?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

 

35. ‘திருநின்றவூர்’ எனும் ஊர்ப்பெயரின் மரூஉ எதுவெனக் கண்டறிக :

(A) திருவூர்

(B) தேரூர்

(C) நின்றவூர்

(D) தின்னனூர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

36. சரியான தொடரைத் தேர்ந்தெடு

விரிந்தது – விரித்தது

(A) மழை பெய்ததால், பூவின் இதழ் விரிந்தது, மயில் தோகையை விரித்தது.

(B) மழை பெய்ததால், பூவின் இதழ் விரித்தது, மயில் தோகையை விரித்தது.

(C) மழை பெய்ததால், பூவின் இதழ் விரிந்தது, மயில் தோகையை விரிந்தது.

(D) மழை பெய்ததால், பூவின் இதழ் விரித்தது, மயில் தோகையை விரிந்தது.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

37. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டு பொருத்துக:

(a) Guild                      –           1. நிலப்பகுதி

(b) Patent                    –           2. துணைத்தூதரகம்

(c) Consulate               –           3. காப்புரிமை

(d) Territory                –           4. வணிகக்குழு

(a)        (b)        (c)        (d)

(A)       1          2          3          4

(B)       2          4          1          3

(C)       4          3          2          1

(D)       3          4          1          2

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

38. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல் : சொற்களை ஒழுங்குபடுத்துக.

(A) அறக்கோட்டமாக சிறைக் கோட்டத்தை மன்னன் வேண்டினான் மாற்ற.

(B) சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினான்.

(C) மன்னன் அறக்கோட்டமாக மாற்ற சிறைக்கோட்டத்தை வேண்டினான்.

(D) மன்னன் வேண்டினான் அறக்கோட்டத்தை சிறைக்கோட்டமாக மாற்றினான்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

39. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்.

(A) வெய்யோ பொய்யோ மையோ ஐயோ

(B) ஐயோ பொய்யோ மையோ வெய்யோ

(C) பொய்யோ ஐயோ மையோ வெய்யோ

(D) வெய்யோ மையோ ஐயோ பொய்யோ

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

40. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.

(A) அவிழ் அலரி அசைத்த அரும்பு

(B) அரும்பு அவிழ் அசைத்த அலரி

(C) அலரி அசைத்த அவிழ் அரும்பு

(D) அசைத்த அரும்பு அலரி அவிழ்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

TNPSC Tamil MCQ Questions and Answers:

 

41. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.

(A) கிளை கழை குச்சி கொழுந்தாடை

(B) கழை கிளை குச்சி கொழுந்தாடை

(C) கொழுந்தாடை குச்சி கிளை கழை

(D) குச்சி கழை கிளை கொழுந்தாடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

42. ‘பௌவம்’ என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க.

(A) முந்நீர்

(B) கடல்

(C) ஆழி

D) ஊழி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

43. தாவரத்தின் இளம் பயிர் வகையை சுட்டாத சொல் எது ?

(A) நாற்று

(B) இளநீர்

(C) குருத்து

(D) பிள்ளை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

44. நிலவகை அல்லாத சொல்லைக் கண்டறிக.

(A) தரிசு

(B) பரிசு

(C) சுவல்

(D) அவல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

45. வலி, வளி, வழி – ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.

(A) துன்பம், காற்று, நெறி

(B) காற்று, நெறி, துன்பம்

(C) நெறி, காற்று, துன்பம்

(D) துன்பம், நெறி, காற்று

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

46. CIVILIZATION என்பதன் தமிழாக்கம்

(A) வேளாண்மை

(B) நாகரிகம்

(C) பயிரிடுதல்

(D) உழவியல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

47. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுது:

SUBMARINE

(A) கப்பல்

(B) கலங்கரை விளக்கம்

(C) நீர்மூழ்கிக் கப்பல்

(D) துறைமுகம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

48. இவ்வாக்கியத்தில் உள்ள பிழையை நீக்குக.

(A) என் மணம் இகல்ந்தால் இறந்து விடாது!

(B) இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது!

(C) இரந்து விடாது என் மனம் இகழ்ந்தால்!

(D) என் மனம் இரந்தும் இகழ்ந்து விடாது!

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

49. சந்திப் பிழையற்ற தொடர் எது ?

(A) கைவினைக் கலைகளுள் ஒன்றைக் கற்றுக் கொள்வேன்.

(B) கைவினைக் கலைகளுள் ஒன்றை கற்று கொள்வேன்.

(C) கைவினைக் கலைகளுள் ஒன்றைக் கற்று கொள்வேன்.

(D) கைவினைக் கலைகளுள் ஒன்றை கற்றுக் கொள்வேன்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

50. கீழ்க்கண்டவற்றுள் எது சரி?

விளக்கு – இருபொருள்.

(A) (i)  இலக்கணப்பாடத்தை விளக்கிக் கூறு

(ii)  இளமையில் கல்

(B) (i) விளக்கை அணைத்து விடு

(ii) கற்களால் ஆனது கோபுரம்

(C) (i) நல்ல நூல்களைப் படி

(ii) ஆறு கால்களை உடையது ஈ

(D) (i) இலக்கணப்பாடத்தை விளக்கிக் கூறு

(ii) விளக்கை அணைத்து விடு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

TNPSC TAMIL QUESTIONS

 

TNPSC ORIGINAL QUESTIONS ANSWER KEY

Leave a Comment