TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION PAPER

TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION PAPER:

வினாக்கள் : 1 – 100

Questions : 1 – 100

COMPUTER BASED TEST – 2022

PAPER – II  –  தாள் – II

COMPULSORY TAMIL LANGUAGE ELIGIBILITY TEST (SSLC standard)

கட்டாய தமிழ்மொழித் தகுதித் தேர்வு (பத்தாம் வகுப்பு தரம்)

பகுதி -அ (பொது தமிழ்)

Part – A (General Tamil)

 

1) பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

(A) பால் ஊறும்

(B) பாலூறும்

(C) பால்லூறும்

(D) பாஊறும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

2) சேர்த்தெழுதுதல்

வான் + ஒலி

(A) வான் ஒலி

(B) வானொலி

(C) வாவொலி

(D) வானெலி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

3) கல் + தீது என்பது ______________ எனவும் சேரும்.

(A) கல்தீது

(B) கல்லீது

(C) கஃறீது

(D) கற்றீது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

4) கலம் + ஏறி – சேர்த்து எழுதுக.

(A) கலம்ஏறி

(B) கலமறி

(C) கலன்ஏறி

(D) கலமேறி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

5) பெயரறியா – பிரித்து எழுதுக.

(A) பெயர + றியா

(B) பெயர் + ரறியா

(C) பெயர் + அறியா

(D) பெயர + அறியா

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

6) நீளுழைப்பு – பிரித்து எழுதுக.

(A) நீளு + உழைப்பு

(B) நீண் + உழைப்பு

(C) நீள் + அழைப்பு

(D) நீள் + உழைப்பு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

7) பிரித்தெழுதுக : பாடாண்திணை

(A) பாடாண் + திணை

(B) பாட்டு + ஆண் + திணை

(C) பாடு + ஆண் + திணை

(D) பாடா + ஆண் + திணை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

8) எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக  –  ” அல் ”

(A) இரவு

(B) பகல்

(C) காலை

(D) மாலை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

9) எதிர்ச்சொல் தருக.

ஐயம்

(A) சோர்வு

(B) தெளிவு

(C) பொய்மை

(D) விலகு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

10)  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

அகத்திணை அல்லாததைக் கண்டறிக.

(A) குறிஞ்சி

(B) காஞ்சி

(C) முல்லை

(D) மருதம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTION PAPER – Q-11 TO 20:

 

11) தவறான இணையைக் கண்டறிக.

(A) சிலை –  வில்

(B) புள் –  பறவை

(C) தெவ் –  பகைமை

(D) சேந்தன – சேர்ந்தன

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

12) பொருந்தா இணையைக் கண்டறிக.

(A) கொற்றவை – கிணறு

(B) முருகன் – சுனைநீர்

(C) திருமால்  – காட்டாறு

(D) இந்திரன் – செங்கழுநீர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

13) பொருந்தாதச் சொல்லை கண்டறிக.

(A) விளம்புதல்

(B) செப்புதல்

(C) கேட்டல்

(D) மொழிதல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

14)  பொருந்தா இணை எது?

(A) தூறு – புதரின் அடிப்பகுதி

(B) வெங்கழி – காய்ந்த கழி

(C) செம்மல் – வாடிய பூ

(D) கொழுந்தாடை – காய்ந்த கட்டை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

15) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

(A) ஏரி

(B) குளம்

(C) குணம்

(D) ஆறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

16) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

சூம்பல், சொத்தை, அழுகல், கடலை

(A) சூம்பல்

(B) சொத்தை

(C) கடலை

(D) அழுகல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

17) வழுவற்ற தொடரைக் கண்டறி.

(A) செழியன் வந்தான்

(B) செழியன் வந்தது

(C) செழியன் வந்தாள்

(D) செழியன் வந்துட்டான்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

18) மரபுச்சொல்லைப் பொருத்தி எழுதுக.

(a) சோறு         1. தின்

(b) முறுக்கு       2. குடி

(c) தண்ணீர்       3. பருகு

(d) பால்          4. உண்

(a)          (b)         (c)           (d)

(A)          2              3              1              4

(B)          1              4              3              2

(C)          4              1              2              3

(D)          3              2              4              1

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

19)  மரபுப்பிழை இல்லாத தொடர் எது ?

(A) கோழி கூவும்

(B) சேவல் கொக்கரிக்கும்

(C) நாய் கத்தும்

(D) காகம் கரையும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

20) சந்திப்பிழையற்ற தொடர் எது ?

(A) எங்கள் ஊர் கோயிலில் குதிரை சிற்பங்கள் உள்ளன

(B) அழகிய கலைகளை பற்றி அறிந்தோம்

(C) மூங்கிலைக் கொண்டு பல வகையான கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றன

(D) பாய் என்பது படுக்க பயன்படுவது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

21) பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது ?

(A) கொடுங்கோல் அரசன் அக்ரமம் செய்தான்

(B) குழந்தைக்குக் கண் திருஷ்டி சுற்றிப்போடு

(C) ஆகாசத்தில் பட்சி பறந்தது

(D) ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கினேன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

22) சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கூறுக.

(A) அந்தக் காட்சியைப் பார்

(B) அந்த காட்சியை பார்

(C) அந்தக் காட்சியை பார்

(D) அந்த காட்சியைப் பார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

23) சந்திப்பிழை இல்லாத தொடரைக் காண்க

(A) மெட்டுக்கு பாட்டு பாடு

(B) மெட்டுக்குப் பாட்டுப் பாடு

(C) மெட்டுக்குப் பாட்டு பாடு

(D) மெட்டுக்கு பாட்டுப் பாடு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

24) பிறமொழி சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக.

(A) காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்

(B) மாதவன் ஷாப்பிங் சென்றான்

(C) கமலா மில்க் குடித்தாள்

(D) மாலையில் விளையாடு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

25) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிக.

(a) பயணப்படகுகள்           1. Commodity

(b) கடற்பயணம்        2. Adulteration

(c) கலப்படம்           3. Ferries

(d) பண்டம்             4. Voyage

(a)          (b)          (c)           (d)

(A)          3              4              2              1

(B)          1              2              3              4

(C)          2              1              4              3

(D)          4              3              1              2

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

26) ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்

வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே  –

இவ்வடி உணர்த்தும் பொருள்

(A) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்

(B) வறண்ட வயிலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்

(C) செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்

(D) பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

27) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக.

கூரை, கூறை

(A) சட்டை, புடவை

(B) வீட்டின் கூரை, புடவை

(C) புடவை, வீட்டின் கூரை

(D) புடவை, வீட்டின் சுவர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

28) “மதி” என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க.

(A) அறிவு

(B) நிலவு

(C) ஞானம்

(D) பகலவன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

29) “வேழம்” என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க.

(A) பிடி

(B) களிறு

(C) சிங்கம்

(D) பெண் யானை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

30) வேர்ச்சொல்லை தேர்வு செய்க.

“ஓடினான்”

(A) ஓடி

(B) ஓடு

(C) ஓடின

(D) ஓடிய

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

31) வேர்ச்சொல்லை தேர்வு செய்க.

“சொன்னார்”

(A) சொல்

(B) சொன்

(C) சொன்ன

(D) சொல்ல

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

32) வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க – கொடு.

(A) கொடுத்தல்

(B) கொடுத்த

(C) கொடுத்து

(D) கொடுத்தவன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

33) வினைமுற்றுக்குரிய வேர்ச்சொல்லை எழுதுக – தருகின்றனர்

(A) தருவி

(B) தந்த

(C) தந்து

(D) தா

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

34) அகரவரிசையில் எழுதுக :

(A) அன்பு, இரக்கம், ஓசை, ஐந்து, ஒழுக்கம்

(B) அன்பு, இரக்கம், ஐந்து, ஒழுக்கம், ஓசை

(C) ஒழுக்கம், ஓசை, இரக்கம், அன்பு, ஐந்து

(D) இரக்கம், ஒழுக்கம், ஐந்து, ஓசை, அன்பு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

35) அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.

(A) ஊக்கம், ஈதல், இரக்கம், எளிமை, ஆடு

(B) ஈதல், இரக்கம், ஊக்கம், ஆடு, எளிமை

(C) ஆடு, இரக்கம், ஈதல், எளிமை, ஊக்கம்

(D) ஆடு, இரக்கம், ஈதல், ஊக்கம், எளிமை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

36) அகர வரிசையில் எழுதுக.

(A) கற்றல், காணுதல், கிளி, கீசு, கொம்பு

(B) கிளி, கீசு, கொம்பு, காணுதல், கற்றல்

(C) கற்றல், கீசு, கொம்பு, காணுதல், கிளி

(D) கொம்பு, கீசு, கிளி, காணுதல், கற்றல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

37) அகர வரிசையில் எழுதுக.

(A) மக்கள், அலுவலர், மாந்தர், மொழி

(B) அலுவலர், மக்கள், மாந்தர், மொழி

(C) மொழி, மக்கள், மாந்தர், அலுவலர்

(D) மக்கள், மாந்தர், மொழி, அலுவலர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

38) அகர வரிசையில் எழுதுக.

(A) அன்பு, ஊக்கம், ஏது, ஒளவை, ஆடு

(B) ஊக்கம்,ஏது, ஒளவை, ஆடு, அன்பு

(C) அன்பு, ஆடு, ஊக்கம், ஏது, ஔவை

(D) ஒளவை, ஏது, ஊக்கம், ஆடு, அன்பு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

39) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

(A) வாக்கு, வம்பு, விசை, வீழ்ச்சி

(B) வம்பு, வாக்கு, விசை, வீழ்ச்சி

(C) வீழ்ச்சி, விசை, வாக்கு, வம்பு

(D) விசை, வாக்கு, வம்பு, வீழ்ச்சி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

40) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

(A) துன்பம், தூண், தேன், தாண்டுதல்

(B) தூண், தேன், துன்பம், தாண்டுதல்

(C) தாண்டுதல், துன்பம், தூண், தேன்

(D) தேன், தூண், துன்பம், தாண்டுதல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

41) சொற்களை முறைப்படுத்தி சொற்றொடராக்குக.

மிகப் பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்.

(A) சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்

(B) மீனைப் பிடித்தார் மிகப்பெரிய சாண்டியாகோ

(C) சாண்டியாகோ பிடித்தார் மீனை மிகப் பெரிய

(D) மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

42) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்.

(A) புகழ் பெற்ற சான்றோர்கள் உழைத்து உள்ளனர் பிறருக்காக

(B) பிறருக்காக உழைத்துப் புகழ் பெற்ற சான்றோர்கள் உள்ளனர்.

(C) சான்றோர்கள் தனக்காக புகழ் பெற்று உழைத்து உள்ளனர்

(D) உழைத்துப் புகழ் பெற்று உள்ளனர் சான்றோர்களே

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

43) “கடைக்குப் போவாயா?” என்ற கேள்விக்குப் “போக மாட்டேன்” என மறுத்துக் கூறல்

(A) நேர் விடை

(B) மறை விடை

(C) ஏவல் விடை

(D) இனமொழி விடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

44) விடை வகையை கண்டறிக.

“என்னுடன் ஊருக்கு வருவாயா?” என்ற வினாவிற்கு “வராமல் இருப்பேனா?” என்று கூறுவது

(A) ஏவல் விடை

(B) சுட்டு விடை

(C) வினா எதிர் வினாதல் விடை

(D) உறுவது கூறல் விடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

45) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.

தேவநேயப் பாவாணர் மொழி ஞாயிறு என்றழைக்கப்படுகிறார்.

(A) தேவநேயப் பாவாணர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

(B) மொழி ஞாயிறு என்றால் என்ன?

(C) தேவநேயப் பாவாணர் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்?

(D) தேவநேயப் பாவாணர் யார்?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

46) விடைக்கேற்ற வினா அமைக்க.

“தொடக்க காலத்தில் மனிதர்கள் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வந்தனர்”

(A) தொடக்க காலத்தில் மனிதர்கள் எங்கு வாழ்ந்தனர்?

(B) தொடக்க காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தனர்?

(C) தொடக்க காலத்தில் மனிதர்கள் தனியாக வாழ்ந்தார்களா?

(D) தொடக்க காலத்தில் குழுவாக மனிதர்கள் வாழ்ந்தார்களா?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

47) இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்.

சரியானத் தொடரைத் தேர்ந்தெடு

பணிந்து – பணித்து

(A) இறைவனைப் பணித்தால் பெற்றோர் பணிந்தனர்

(B) இறைவனைப் பணிந்து செல்ல வேண்டும் என பெற்றோர் பணித்தனர்

(C) பெற்றோரை பணிந்து இறைவனை பணித்தனர்

(D) பணிந்து சென்றால் இறைவனை பணியலாம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

48) இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்

சரியான தொடரைத் தேர்ந்தெடு.

மாறு, மாற்றி

(A) மாறு வேடத்தில் பரிசு பெற்றவுடன் வேடத்தை மாற்றிக் கொண்டார்

(B) மாறி வந்தவர் பரிசு பெற்று மாற்றிக் கொண்டார்

(C) வேடம் மாறிக் கொண்டு பரிசை மாற்றினார்.

(D) மாறிமாறி வந்தவர் பரிசை மாற்றினார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

49) “உள்ளங்கை நெல்லிக்கனி போல” – உவமை கூறும் பொருள் தெளிக.

(A) தெளிவாக

(B) சிறப்பாக

(C) நன்றாக

(D) வெளிப்படைத் தன்மையாக

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

50) கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – உவமை கூறும் பொருள் தெளிக.

(A) எதிர்பாரா நிகழ்வு

(B) தற்செயல் நிகழ்வு

(C) பயனற்ற செயல்

(D) எதிர்பார்த்த நிகழ்வு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

51) சரியான விடையை பொருத்துக.

(a) ஏவு ஊர்தி     1. Missile

(b) ஏவுகணை    2. Download

(c) பதிவிறக்கம்   3. Nautical Mile

(d) கடல்மைல்   4. Launch Vehicle

(a)          (b)          (c)           (d)

(A)          4              2              3              1

(B)          2              3              1              4

(C)          4              1              2              3

(D)          3              2              4              1

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

52) சரியான கலைச்சொற்களைக் கண்டறிக.

Consumer – Entrepreneur

(A) தொழில் முனைவோர் – உணர்பவர்

(B) நுகர்வோர் – தொழில்முனைவோர்

(C) நுகர்வோர் – தொழிலாளி

(D) தொழில்முனைவோர் – நுகர்வோர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

53) விடை வகைகள் :

“நீ படிக்கவில்லையா?” என்ற வினாவிற்குத் “தலை வலிக்கும்” என்று உரைப்பது

(A) இனமொழி விடை

(B) வெறுப்பு விடை

(C) உறுவது கூறல் விடை

(D) நேர் விடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

54) ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.

சைபர்ஸ்பேஸ் (Cyberspace)

(A) பூஜ்யவெளி

(B) இணையவெளி

(C) சமவெளி

(D) வையக விரிவு வலை வழங்கி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

55) ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.

சாப்ட்வேர்  (Software)

(A) மென்பொருள்

(B) மென்னீர்

(C) வலை தளம்

(D) இணையவெளி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

56) சரியான ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக.

(A) உதகை – உதகமண்டலம்

(B) நெல்லை – மன்னார்குடி

(C) கும்பை – கும்பகோணம்

(D) புதுச்சேரி – புதுகை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

57) ‘வானவன் மாதேவி’ எனும் ஊர்ப்பெயரின் மரூஉ எதுவெனக் கண்டறிக :

(A) மாதேவி

(B) வாதாபி

(C) மானாம் பதி

(D) வானகரம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

58) நிறுத்தற்குறிகள் (எது சரியானது) :

(A) படிக்கிற பையன்கள் இதை கட்டிகிட்டா பரீட்சையக் கூட சுலபமா எழுதி பாஸ் பண்ணிடலாம்! என்றான் தாயத்து விற்கிறவன்.

(B) படிக்கிற பையன்கள் இதைக் கட்டிகிட்டா, பரீட்சையக் கூட சுலபமா எழுதி பாஸ் பண்ணிடலாம்!” என்றான், தாயத்து விற்கிறவன்.

(C) படிக்கிற பையன்கள் இதைக் கட்டிகிட்டா பரீட்சையைக் கூட சுலபமா எழுதி பாஸ் பண்ணிடலாம்! என்றான் தாயத்து விற்பவன்

(D) படிக்கிற பையன்கள் இதைக் கட்டிகிட்டா பரீட்சையைக் கூட சுலபமா! எழுதி பாஸ் பண்ணிடலாம் என்றான் தாயத்து விற்பவன்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

59) பின்வருவனவற்றில் எது சரியான நிறுத்தற்குறிகளை பெற்றுள்ளது?

(A) வீட்டிற்கு வருபவர்களை, ‘வாங்க வாங்க, உட்காருங்க; அம்மா வந்திடுவாங்க’ என்று வரவேற்பாள்.

(B) வீட்டிற்கு வருபவர்களை, வாங்க வாங்க உட்காருங்க, அம்மா வந்திடுவாங்க என்று வரவேற்பாள்

(C) வீட்டிற்கு வருபவர்களை ‘வாங்க வாங்க’ உட்காருங்க அம்மா வந்திடுவாங்க’ என்று வரவேற்பாள்

(D) வீட்டிற்கு வருபவர்களை, ‘வாங்க வாங்க’, உட்காருங்க அம்மா வந்திடுவாங்க! என்று வரவேற்பாள்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

60)  சரியான எழுத்து வழக்குச் சொல்லினைத் தேர்ந்தெடு

(A) பதில் சொல்லுச்சு

(B) பதில் சொன்னியா

(C) பதில் சொல்லிக்கினியா

(D) பதில் சொல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

61) பேச்சு வழக்கு – எழுத்து வழக்கு

சரியானதைத் தேர்ந்தெடு

(A) மணி நேற்று பள்ளிக்கு வந்தியா?

(B) மணி நேற்று பள்ளிக்கு வந்திட்டியா?

(C) மணி நேற்று பள்ளிக்கு வந்தாயா?

(D) மணி நேற்று பள்ளிக்கு வந்துக்கின?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

62) சரியான ஆண்பால் பெயருடன் பெண்பால் பெயரைப் பொருத்துக.

(a) எருது         1. பிடி

(b) களிறு         2. மந்தி

(c) கலை         3. பசு

(d) கடுவன்       4. பிணை

(a)          (b)          (c)           (d)

(A)          3              2              4              1

(B)          4              3              1              2

(C)          3              1              4              2

(D)          2              3              1              4

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

63) ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக.

மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் __________ ; மயில் தோகையை __________ .

(A) சேர்ந்து – சேர்த்து

(B) குவிந்து – குவித்து

(C) விரிந்தன – விரித்தது

(D) பொருந்து – பொருத்து

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

64) பொருத்தமான காலம் கண்டறிக.

(A) வீட்டிலேயே இருந்தேன் (எதிர்காலம்)

(B) நாளை வருவேன் (இறந்தகாலம்)

(C) வெற்றி பெற்றேன் (எதிர்காலம் )

(D) விளையாடுகின்றேன் (நிகழ்காலம்)

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

65) பொருத்தமான காலம் அமைத்தல்

தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.

(A) வாழ்வான் – எதிர்காலம்

(B) வீழ்கிறான் – நிகழ்காலம்

(C) வருவாள் – நிகழ்காலம்

(D) வெல்வாள் – எதிர்காலம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

66) வினா எழுத்துகளைத் தேர்ந்தெடு :

(A) எ, யா, ஆ

(B) ஓ, ஆ, உ

(C) அ, இ, உ

(D) அ, யா,  இ

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

67) கீழ்க்காணும் விடைக்குப் பொருந்தாத வினாச் சொல்லைத் தேர்ந்தெடு :

‘பாட்டுக்கொரு புலவன்’ என பாராட்டப்பட்டவர் பாரதியார்.

(A) யார்?

(B) எப்படி?

(C) ஏன்?

(D) எவ்வாறு?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

68) தவறான இணைப்புச்சொல் இடம்பெற்றுள்ள வாக்கியத்தைக் கண்டறிக.

(A) அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். ஆகையால் மரங்கள்தான் மழைக்கு அடிப்படை.

(B) நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

(C) எழிலன் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர். ஏனெனில் அவர் எளிமையை விரும்பியவர்

(D) கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் இரண்டு நாள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

69) சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக :

முருகன் படித்து முடித்துவிட்டான். _________ முகிலன் படிக்கவில்லை.

(A) ஆனால்

(B) அதனால்

(C) ஏனெனில்

(D) ஆகையால்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

70) ஆட்சியாளர் – இச்சொல்லின் தொழிற்பெயர் விகுதியை கண்டறிக.

(A) ஆட்சி

(B) ஆளர்

(C) யா

(D) சி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

71) அடைப்புக்குள் உள்ள சொல்லை தொடருக்கு ஏற்றவாறு மாற்றுக.

கபிலர் திறமையானவர் என்று ___________ (குமரன்) தெரியும்.

(A) குமரனால்

(B) குமரனை

(C) குமரனது

(D) குமரனுக்கு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

72) கடை என்பதன் சரியான இருபொருள் காண்க.

(A) காண்க  – கருவி

(B) கொடுமை  –  கடினம்

(C) முடிவு  – அங்காடி

(D) உடுக்கை – உடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

73) இரு பொருள் தருக :

ஆறு

(A) பதினாறு –  பதிநான்கு

(B) பாலாறு – தேனாறு

(C) கண்ணாறு – கடையாறு

(D) எண்களில் ஆறு, காவேரி ஆறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

74)  குறில் நெடில் மாற்றம்

சரியான பொருள் வேறுபாடறிந்து தெரிவு செய்க.

சிலை            சீலை

  1. சிற்பி – துணி
  2. சிற்பம் – துணி
  3. வில் – அம்பு
  4. அம்பு – வில்

(A) 1

(B) 2

(C) 3

(D) 4

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

75) பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?

(A) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

(B) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

(C) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

(D) தமிழர் வாழை இலைப் பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

76) கூற்று 1: நாட்டைக்கைப்பற்றல் – மஞ்சள் நிறம் கொண்ட மலர் – கொடி வகை

கூற்று 2: நிரை மீட்டல் – நீலம் கலந்த சிவப்பு மலர் – செடி வகை

கூற்று 3 : எதிர்த்து போரிடுவது – நீல நிறமலர் – குறுமர வகை

கூற்று 4 : கோட்டையை கைப்பற்றல் – வெண்ணிறம் – செடி வகை

(A) கூற்று 1, 4 மட்டும் சரி

(B) கூற்று 2, 4 மட்டும் சரி

(C) கூற்று 1, 2 மட்டும் சரி

(D) கூற்று 3 மட்டும் சரி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

77) மூதுரை குறித்த கூற்றுகளில் தவறான கூற்றைக் கண்டறிக.

(A) மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்

(B) இந்நூலின் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன

(C) கற்றவரை விட மன்னரே சிறந்தவர் ஆவார்

(D) மன்னனை விட கற்றவரே சிறந்தவர் ஆவார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

78) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிக  – ‘Tempest’

(A) நிலக்காற்று

(B) பெருங்காற்று

(C) கடற்காற்று

(D) சுழல்காற்று

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

79) சரியான இணையைத் தெரிவு செய்க.

(A) புதர் – Thicker

(B) பள்ளத்தாக்கு  – Ridge

(C) சமவெளி  – Locust

(D) மலைமுகடு – Tribe

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

80) மலரைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி

(A) வீ

(B) சீ

(C) மீ

(D) தீ

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

81) “வள்ளுவர் பெரும்புகழை உடையவர்” – என்ற தொடர் எவ்வகை பொருளில் வரும்

(A) உடைமை

(B) ஆக்கல்

(C) அடைதல்

(D) அழித்தல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

82) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க :

வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?

(A) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

(B) வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்

(C) செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்

(D) பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

83) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.

அரிச்சுவடி

(A) அரிசி

(B) மண் அரிப்பு

(C) ஓலைச் சுவடிகள்

(D) அகர வரிசை எழுத்துகள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

  1. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க :

ஆமா என்னும் கலைச் சொல்லின் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.

(A) மாநாடு

(B) மாநிலம்

(C) மாநிறம்

(D) காட்டுப்பசு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

  1. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க :

வாரணம்

(A) வருவாய்

(B) தோரணம்

(C) குதிரை

(D) யானை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

86) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் :

ஆழி

(A) உலகம்

(B) கடல்

(C) பள்ளம்

(D) அழித்தல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

87) சொற்களின் கூட்டுப் பெயர்கள் :

ஆடு –  கூட்டுப்பெயர்

(A) ஆட்டுக்கூட்டம்

(B) ஆட்டுத்தொழுவம்

(C) ஆட்டுமந்தை

(D) ஆட்டுசந்தை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

88) வன்தொடர்க் குற்றியலுகரம் எது ?

(A) முதுகு, வரலாறு

(B) நாக்கு, வகுப்பு

(C) நெஞ்சு, இரும்பு

(D) எஃது, அஃது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

89) யாப்பிலக்கணத்தின்படி மூவகை எழுத்துக்கள் யாவை?

(A) குறில், உயிர்க்குறில், ஒற்று

(B) உயிர், மெய், உயிர்மெய்

(C) குறில், நெடில், ஒற்று

(D) மெய், உயிர்மெய், ஆய்தம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

  1. பிழை திருத்துக – சரியான எண்ணடையைத் தெரிவு செய்க :

ஒன்று + உயிர்

(A) ஒரு உயிர்

(B) ஓர் உயிர்

(C) ஒன்று உயிர்

(D) மூன்றும் சரி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

91) பிழை திருத்துக – சரியான எண்ணடையைத் தெரிவு செய்க :

இரண்டு + எழுத்து

(A) இரண்டு எழுத்து

(B) இரு எழுத்து

(C) ஈரெழுத்து

(D) மூன்றும் சரி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

92) சொல்  –  பொருள் –  பொருத்துக :

(a) அணங்கு            1. கடல்

(b) மாகால்       2. நீர்நிலை

(c) மந்நீர்         3. தெய்வம்

(d) கயம்          4. பெருங்காற்று

(a)          (b)          (c)           (d)

(A)          3              4              1              2

(B)          2              4              3              1

(C)          4              3              1              2

(D)          3              2              4              1

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

93) சொல் – பொருள் –  பொருத்துக  :

(a) கொடியனார்  1. பெரியமலை

(b) இசை         2. கொம்பு

(c) மருப்பு         3. மகளிர்

(d) மால்வரை    4. புகழ்

(a)          (b)          (c)           (d)

(A)          2              4              1              3

(B)          1              2              4              3

(C)          4              3              1              2

  1. D) 3 4              2              1

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

94)  ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு :

(A) மனிதன் பொருள் தேடுவதற்காக பல ஊர்களுக்குச் செல்கிறார்கள்

(B) மனிதர்கள் பொருள் தேடுவதற்காக பல ஊர்களுக்கு செல்கிறார்

(C) மனிதர்கள் பொருள் தேடுவதற்காக பல ஊர்களுக்குச் செல்கிறார்கள்

(D) மனிதர்கள் பொருள் தேடுவதற்காக ஒரு ஊர்களுக்குச் செல்கிறார்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

95) ஒருமை – பன்மை பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க.

(A) பிரம்பினால் செய்யப்பட்ட பலவகையான பொருள்கள் இங்கே உள்ளன

(B) பிரம்பினால் செய்யப்பட்ட பலவகையான பொருள் இங்கே உள்ளன.

(C) பிரம்பினால் செய்யப்பட்ட பலவகையான பொருள்கள் இங்கே உள்ளது

(D) பிரம்புகளால் செய்யப்பட்ட பலவகையான பொருள்கள் இங்கே உள்ளது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

கீழ்க்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு.

மழை என்றதும் குழந்தைகளின் நினைவுக்கு வருவது காகிதக் கப்பல். மழை நீரில் காகிதக் கப்பல் விட்டு விளையாடாத குழந்தைகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு நம் ஆழ்மனத்தில் கப்பல் இடம் பெற்றுள்ளது. பழங்காலம் முதல் தமிழர்கள் கப்பல் கட்டும் கலையில் சிறந்திருந்ததன் மரபுத் தொடர்ச்சி என்று இதனைக் கூறலாம். தமிழர்கள் கப்பல்களைக் கட்டினர் என்பதற்கும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்றனர் என்பதற்கும் நம் இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன. நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையானது தொல்காப்பியம். அந்நூல் முந்நீர் வழக்கம் என்று கடற்பயணத்தைக் குறிப்பிடுகிறது. எனவே, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் கடல் பயணம் செய்துள்ளனர் என்பதை அறியலாம்.

96) மழை என்றதும் குழந்தைகளின் நினைவுக்கு வருவது எது ?

(A) காகிதம்

(B) காகிதக்கப்பல்

(C) படகு

(D) தோணி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

97)  பழங்காலம் முதல் தமிழர்கள் எந்த கலையில் சிறந்திருந்தனர்?

(A) ஓவியக்கலை

(B) இசைக்கலை

(C) கப்பல் கட்டும்கலை

(D) நாட்டியக்கலை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

 

98)  தமிழர்கள் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்றனர் என்பதற்கு சான்று எது?

(A) திருக்குறள்

(B) இலக்கியங்கள்

(C) காவியம்

(D) புறநானூறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

 

99) நமக்குக் கிடைத்துள்ள மிக பழமையான நூல் எது ?

(A) நன்னூல்

(B) நாலடியார்

(C) பரிபாடல்

(D) தொல்காப்பியம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

 

100) தொல்காப்பியம் கடற்பயணத்தை எதுவாகக் குறிப்பிடுகிறது?

(A) முந்நீர் வழக்கம்

(B) நாவாய்

(C) முத்தமிழ்

(D) படகு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

 

TNPSC TAMIL QUESTIONS COLLECTION

Leave a Comment