TNPSC Tamil Questions Test 2

TNPSC Tamil Questions Test 2

tnpsc tamil questions test

51. ‘வள்ளைப்பாட்டு என்பது

(A) உலக்கைப் பாட்டு.

(B) வாய்ப்பாட்டு

(C) தெம்மாங்குப் பாட்டு

(D) உழவுப்பாட்டு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

52. தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்

எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்.

இயைபு சொற்கள் யாது?

(A) தப்பேது, தருட்புகழை

(B) நான் செயினும், நீ பொறுத்தல்

(C) இயம்பிடல், எந்தை

(D) வேண்டும். வேண்டும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D                      

53. சந்திப்பிழை அற்ற வாக்கியத்தைக் கண்டறிக.

(A) இந்த பூமியின் ஒவ்வொரு துகளும் எம்மக்களுக்குப் புனிதமானதாகும்

(B) இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம்மக்களுக்கு புனிதமானதாகும்

(C) இந்த பூமியின் ஒவ்வொருத் துகளும் எம்மக்களுக்குப் புனிதமானதாகும்

(D) இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம்மக்களுக்குப் புனிதமானதாகும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

54. பிள்ளைத் தமிழுக்குரிய பருவங்கள்

(A) 3

(B) 10

(C) 11

(D) 9

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

55. பாரதி தன் குயில்பாட்டில் பாடும் பாடல் வரிகளைக் கண்டறிக.

(A) வார்த்தைத் தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா மார்பு துடிக்கு தடீ

(B) பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு

(C) பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா

(D) உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

56. ‘நீராருங் கடலுடுத்த….’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றுள்ள நூல்

(A) சீவக சிந்தாமணி

(B) மணிமேகலை

(C) தேம்பாவணி

(D)  மனோன்மணியம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

57.‘ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப – என்ற தொல்காப்பிய நூற்பாவுக்கேற்றதொரு இலக்கிய வடிவம்

(A) பரணி

(B) உலா

(C) குறவஞ்சி

(D) பள்ளு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

58. ‘குறம்’ என கூறப்பெறும் சிற்றிலக்கிய வகை எது?

(A)  குறவஞ்சி

(B) கோவை

(C) மணிமாலை

(D) கலம்பகம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

59. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருள் தரும் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

புலி-புளி

(A) விலங்கு – பழம்

(B) வண்ணம் – பறவை

(C) நூல் – எழுதுகோல்

(D) ஆடு – கன்று

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

60. சரியான தமிழ்ச்சொல் தெரிவு செய்க

Folk arts

(A) நாட்டுப்புறக் கலைகள்

(B) நாட்டுப்புறக் கலை

(C) நாட்டுப்புறப் பாடல்

(D) நாட்டுப்புற விழா

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

61. ‘ரேவதி’ என்ற புனைப்பெயரில் படைப்புகளை எழுதியவர் யார்?

(A) வல்லிக்கண்ணன்

(B) ந. பிச்சமூர்த்தி

(C) சு.சமுத்திரம்

(D) தி. ஜானகிராமன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

62. அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது?

(A) மாறனலங்காரம்

(B) தண்டியலங்காரம்

(C) தொல்காப்பியம்

(D) வீர சோழியம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

63. பழமொழிகள் :

ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப்/பழமொழியில் சரியானதைக் கண்டறிக.

Art is long but life is short

(A) கல்வி கற்பவர் கரையில் நாள் சில

(B) கல்வி கரையில, கற்பவர் நாள் சில

(C) கற்பவர் நாள் சில கல்வி கரையில்

(D) கல்வி கரையில நாள் சில கற்ப

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

64. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு மூன்று டன் முதல் எட்டு டன் வரை எடை உள்ள ____  கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

(A) 3581

(B) 3481

(C) 3681

(D) 3781-

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

65. “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாடியவர்

(A) கவிமணி

(B) பாரதிதாசன்

(C) பாரதியார்

(D) நாமக்கல் கவிஞர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

66. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாகத் தொடங்கும் காப்பியம் எது?

(A) கம்பராமாயணம்

(B) சிலப்பதிகாரம்

(C) சீவக சிந்தாமணி

(D) மணிமேகலை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

67. ‘முதிரையும் சாமையும் வரகும் மொய்மணிக்

குதிரைவா லியும்களம் குவித்துக் குன்று என’ – இவ்வரிகள் குறிக்கும் நிலம்

(A) குறிஞ்சி

(B) முல்லை

(C) மருதம்

(D) நெய்தல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

68. திரிகடுகம் எனும் நூலின் வெண்பாக்களின் எண்ணிக்கை

(A) 100 – வெண்பாக்கள்

(B) 102 – வெண்பாக்கள்

(c) 200 – வெண்பாக்கள்

(D) 90 – வெண்பாக்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

69. கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன்

(A) செய்ங்கொண்டார்.

(B) மூன்றாம் நந்திவர்மன்

(C) முதற் குலோத்துங்க சோழன்

(D) தொண்டைமான்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

70. தமிழின் முதல் அகராதியான சதுரகராதியை இயற்றியவர்

(A) ஜி.யு.போப்

(B) கால்டுவெல்

(C) எட்கார் ஆலன்போ

(D) வீரமாமுனிவர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

71. சரியான அகர வரிசையில் அமைந்த தொடரைத் தேர்க

(A) மழையில் மண்டூகம் மாய்ந்தது

(B) மண்டூகம் மழையில் மாய்ந்தது

(C) மாய்ந்தது மண்டூகம் மழையில்

(D) மழையில் மாய்ந்தது மண்டூகம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

72. ‘படி’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு

(A) படித்தவர்

(B) படித்தனர்

(C) படிக்கிறான்

(D) படிப்பான்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

73.”வா’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க

(A) வருதல்

(B) வந்தான்

(C) வந்து

(D) வந்த

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

74. ‘அமர்ந்தான்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லை தேர்க.

(A) அமர்

(B) அமரர்

(C) அமரார்

(D) அமர்ந்த

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

75. பொருத்துக.

(a) செய்யுளிசை அளபெடை     1. எங்ங்கிறைவன்

(b) இன்னிசை அளபெடை           2. வரனசைஇ

(c) சொல்லிசை அளபெடை       3. கெடுப்பதூஉம்

(d) ஒற்றளபெடை            4. நல்ல படாஅ பறை

                (a)          (b)          (c)           (d)

(A)          4              3              2              1

(B)          4             3              1              2

(C)          1              2              3              4

(D)          1              2              4              3

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

76. ‘மூடுபனி’ என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு

(A) பண்புத்தொகை

(B) வினையெச்சம்

(c) பெயரெச்சம்

(D) வினைத்தொகை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

77. முகத்தைக் குறிப்பது ______ பெயர் ஆகும்.

(A) பொருட்பெயர்

(B) இடப்பெயர்

(C) குணப்பெயர்

(D) சினைப்பெயர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

78. ‘தமிழ் மாணவன்” என்று தம்மை அறிவித்துக் கொண்டவர் யார்?

(A) ஜி.யு. போப்

(B) வீரமாமுனிவர்

(C) குணங்குடி

(D) பரிதிமாற்கலைஞர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

79. சேரநாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுள் ஒன்று

(A) தந்தம்

(B) தங்கம்

(C) பவளம்

(D) செம்பு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

80. அடையாற்றில் அவ்வை இல்லம் நிறுவப்பட்ட ஆண்டு எது?

(A) 1930

(B) 1952

(C) 1882

(D) 1848

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

81. “தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” என கரும்பைப் பிழியும் எந்திரம் பற்றிக் கூறும் நூல்

(A) நற்றிணை

(B) பதிற்றுப் பத்து

(C) பரிபாடல்

(D) கலித்தொகை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

82. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?

(A) கால்டுவெல்

(B) வீரமாமுனிவர்

(C) ஜி.யு.போப்

(D) ஷெல்லி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

83. தத்துவச் சரடு, இருண்மை, அறிவியல் நுட்பம், படிமம், அங்கதம் ஆகியவற்றை உத்திகளாகக் கொண்டு கவிதை படைத்தவர்

(A) ஞானக்கூத்தன்

(B) சி.மணி

(C) அப்துல் ரகுமான்

(D) தருமு சிவராமு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

84. பிக்ஷு, ரேவதி ஆகிய புனை பெயர்களில் படைப்புகளை எழுதியவர்

(A) பசுவைய்யா

(B) கலாப்ரியா

(C) கல்யாண்ஜி

(D) ந. பிச்சமூர்த்தி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

85. “காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக் கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்” என்று கூறியவர்

(A) கண்ணதாசன்

(B) வாணிதாசன்

(C) முடியரசன்

(D) பாவாணர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

86. கொடுக்கப்பட்டுள்ள பெயர்களுள் கரிசிலாங்கண்ணியின் பெயர் அல்லாத ஒன்றினைக் கண்டறிக

(A) கையாந்தகரை

(B) ஞானப்பச்சிலை

(C) பிருங்கராசம்

(D) தேகராசம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

87. ‘தமிழ்மொழி தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற ஆங்கிலக் கட்டுரை எழுதியவர்

(A) பரிதிமாற் கலைஞர்

(B) சி. இலக்குவனார்

(C) ஆறுமுக நாவலர்

(D) வையாரி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

88. ‘வசன நடை கைவந்த வல்லாளர்’ என்று ஆறுமுக நாவலரைப் பாராட்டியவர் யார்?

(A) சங்கரதாஸ் சுவாமிகள்

(B) பரிதிமாற் கலைஞர்

(C) பரிமேலழகர்

(D) தாயுமானவர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

89. எப்பண்பின் அடிப்படையில் நாடகக் கலை அமைந்துள்ளது ?

(A) போலச் செய்தல்

(B) பார்த்து செய்தல்

(C) பாடி செய்தல்

(D) அசைந்து செய்தல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

90. இரண்டு வாக்கியங்களுக்கிடையே வரும் சரியான இணைப்புச் சொல்லை அறிக

அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன். அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்து விடுகிறது.

(A) எனவே

(B) ஆகையால்’

(C)  ஏனெனில்

(D) அதனால்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

91. விடைக்கேற்ற பொருத்தமான வினாவைத் தேர்க.

அன்னம்  கூடை முடைந்தாள்.

(A) அன்னம் கூடை முடைந்தாளா?

(B) அன்னம் கூடை முடைந்தாள் என்பது சரியா?

(C) அன்னம் என்ன செய்தாள்?

(D) அன்னம் என்பது பறவையா?

(E) விடை தெரியவில்லை.

ANSWER KEY: C

92. துவ்வா – என்பதன் எதிர்ச்சொல் யாது?

(A) நுகருதல்

(B) கொடுத்தல்

(C) விலக்குதல்

(D) பறித்தல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

93. பொருத்தமற்ற இணை தேர்க :

இங்கே இருப்பது சிலகாலம்

இதற்குள் ஏனோ அகம்பாவம்

இதனால் உண்டோ ஒருலாபம்

எண்ணிப்பாரு தெளிவாகும்.

இப்பாடலில் இடம்பெற்றுள்ள நயங்களின்படி பொருந்தாத எதுகை, மோனை, இயைபு எது எனக் கண்டறிந்து எழுதுக.

(A) இங்கே, இருப்பது – சீர்மோனை

(B) இதற்குள், இதனால் – அடி எதுகை

(C) பாவம், லாபம் – இயைபு

(D) இருப்பது, இதனால் – இணை மோனை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

94. கீழ்வருவனவற்றுள் ‘செயப்பாட்டு வினை வாக்கியம்’ எது?

(A) மூவர் தேவாரத்தை இயற்றினர்

(B) பாண்டியன் கதவைத் தட்டினான்

(C) நான் மனம் திறந்து பேசுகிறேன்

(D) பாண்டியன் பரிசு’ – பாரதிதாசனால் பாடப்பட்டது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

95. கீழ்க்கண்டவற்றுள் கட்டளைத் தொடர்கள் எவை?

(i) அகராதியில் காண்க

 (ii) படம் தரும் செய்தியைப் பத்தியாகத் தருக

(iii) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

(iv) புயலின்போது வெளியே செல்ல வேண்டாம்

(A) (i), (ii) ஆகிய இரண்டும் சரி

(B) (i) மட்டும் கட்டளைத் தொடர்

(C) (i), (ii), (iii) ஆகிய மூன்றும் கட்டளைத் தொடர்கள்

(D) (i), (iv) ஆகிய இரண்டும் சரி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

96. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் உருவாக்குக.

ஒருவர் புலவர்களுள் மருதன் இளநாகனார் சங்ககாலம்

(A) ஒருவர் மருதன் இளநாகனார் புலவர்களுள் சங்ககாலம்

(B) மருதன் இளநாகனார் புலவர்களுள் ஒருவர் சங்ககாலம்

(C) ஒருவர் சங்ககாலப் புலவர்களுள் மருதன் இளநாகனார்

(D) மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

97. தாளாற்றித் தந்த பொருளென்று வள்ளுவர் உரைப்பது

(A) மூதாதையர் கொடுத்த பொருள்

 (B) இலவசமாக வந்த பொருள்

(C) தன்முயற்சியால் ஈட்டிய பொருள்

(D) தானமாக தந்த பொருள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

98. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் இடம் பெற்ற நூல்

(A) தொல்காப்பியம்

(B) நன்னூல்

(C) சங்க இலக்கியம்

(D) திருக்குறள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

99. பிரான்சு “தேசிய நூற்கூடத்தில் (Bibliothque Nationale) மாணிக்கவாசகர்

பிள்ளைத்தமிழ் சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ் முதலிய நூல்கள் உள்ளன” என்று கூறியவர்

(A) கால்டுவெல்

(B) ஈராஸ் பாதிரியார்

(C)  தனிநாயக அடிகள்

(D) பெர்சிவல் பாதிரியார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

100. கன்னிமாரா நூலகம் அமைந்துள்ள இடம்

(A) சென்னை அண்ணாநகர்

(B) சென்னை எழும்பூர்

(C) சென்னை கோட்டூர்புரம்

(D) சென்னை கோயம்பேடு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

Leave a Comment