Special TET Tamil Material (Manerkeni Questions):
Class : 8 – Chapter : இயற்கை – ஈடில்லா இயற்கை
1) கொங்கு மண்டலத்தில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை ______ ஆகும்.
A) 26
B) 25
C) 24
D) 23
ANSWER: C
2) சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும் என்று “கோணக்காத்துப் பாட்டு” – இல் குறிப்பிடப்பட்டுள்ளது?
A) தீப்பிடிப்பு
B) நோய்கள்
C) இயற்கை
D) புயல்
ANSWER: C
3) கொடுக்கப்பட்டுள்ளவற்றில் இயற்கை எத்தன்மை வாய்ந்தது என்பதில் பொருந்தாதது _______.
A) தன்னலமானது
B) அமைதியானது
C) அழகானது
D) மகிழ்ச்சி அளிப்பது
ANSWER: A
4) “கூட்டம்” என்னும் பொருளை உணர்த்தும் சொல் இடம் பெற்றுள்ள தொடரைத் தேர்வு செய்க.
A) வாகுடனே தொண்டைமான்சீமை
B) சேகரமாய் வைத்தமரங்கள்
C) ஆரங்கள்வைத்த சுவரெல்லாம்
D) மாளாத பருத்திஎல்லாம்
ANSWER: B
5) உருமங்கட்டிய முகில் என்பது _______ ஆகும்.
A) கோபம் நிறைந்த மேகங்கள்
B) சீற்றம் கொண்ட மேகங்கள்
C) திரண்டு எழுந்த மேகங்கள்
D) அழகால் கட்டப்பட்ட மேகங்கள்
ANSWER: C
6) “தானடைந்து” என்பதனை பிரித்து எழுதக் கிடைப்பது ________
A) தானே + அடைந்து
B) தான் + ஐடந்து
C) தான + உடைந்து
D) தான் + அடைந்து
ANSWER: D
7) “தெத்துக்காடு காளப்பநாயக்கன் – பட்டியிலே செத்திறந்த ஆடுமாடு மெத்தவுண்டாம்” – இவ்வரிகளில் இடம்பெற்றுள்ள தொடைநயம் ___________
A) மோனை
B) எதுகை
C) முரண்
D) இயைபு
ANSWER: B
8) “உழன்று உழன்றுமெத்த அடித்ததினால்” – இவ்வரியில் குறிப்பிட வருவது ______ ஆகும்.
A) வெள்ளம்
B) மழை
C) காற்று
D) மரங்கள்
ANSWER: C
9) பின்வரும் கூற்றுகளை ஆராய்க.
கூற்று 1 : தொண்டைமான் பகுதியில் இருந்த தென்னை மரங்கள் அனைத்தும் புயல் காற்றினால் வீணாயின.
கூற்று 2 : வாங்கல் நாட்டில் சிறப்பாய், கூட்டமாய் வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் புயல் காற்றினால் ஒடிந்து விழுந்தன.
A) கூற்று 1 சரி; கூற்று 2 தவறு
B) கூற்று 1 தவறு; கூற்று 2 சரி
C) கூற்று 1 மற்றும் கூற்று 2 சரி
D) கூற்று 1 மற்றும் கூற்று 2 தவறு
ANSWER: D
10) இடையூறு, தடை போன்ற பொருள்களையுடைய சொல்லைப் பின்வரும் சொற்களில் இருந்து தேர்வு செய்க.
A) வாகு
B) விக்கினம்
C) சேகரம்
D) மெத்த
ANSWER: B
11) பின்வருவனவற்றில் இருந்து மக்கள் தடுமாறி தவித்த சமயத்தைத் தேர்வு செய்க.
A) ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய புயலால்
B) மரங்கள் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்ததினால்
C) பருத்திச் செடிகள் அனைத்தும் குச்சிகளாய் மாறியதால்
D) கப்பல்கள் கடலில் கவிழ்ந்ததினால்
ANSWER: A
12) “உருமங்கட் டியமுகிலால் – கோணக்காத்து உழன்று உழன்றுமெத்த அடித்ததினால்” – இவ்வரிகளில் பயின்று வந்துள்ளவை ______
A) சீர் மோனை, அடி மோனை
B) சீர் எதுகை, அடி எதுகை
C) சீர் மோனை, அடி எதுகை
D) அடி மோனை, அடி எதுகை
ANSWER: A
13) கடலில் கப்பல்கள் கவிழ்ந்ததன் காரணம் ______
காரணம் 1 : மாரி
காரணம் 2 : சூறைக்காற்று
A) காரணம் 1 சரி; காரணம் 2 தவறு
B) காரணம் 1 தவறு; காரணம் 2 சரி
C) காரணம் 1 மற்றும் காரணம் 2 சரி
D) காரணம் 1 மற்றும் காரணம் 2 தவறு
ANSWER: C
14) எட்டாம் வகுப்பு பயிலும் பாத்திமாவின் வீட்டுப் பகுதியைச் சுற்றிலும் வெள்ளப் பெருக்கு அபாயம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், அரசு ஒதுக்கியுள்ள இடங்களில் தங்கவும் அறிவிப்பு விடுத்தனர். இந்நிலையில் பாத்திமா அவளின் வீட்டாருடன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்க.
நடவடிக்கை 1 : முக்கிய அடிப்படை தேவை பொருட்களை மட்டும் தன்னுடன் எடுத்து செல்லுதல்.
நடவடிக்கை 2 : எரிபொருள், மின்சாதனம் மற்றும் நீர் இணைப்புகளை துண்டித்து விட்டு செல்லுதல்.
நடவடிக்கை 3 : பாதுகாப்பான, தாழ்வான இடங்களுக்கு செல்லுதல்.
நடவடிக்கை 4 : வெள்ளம் சூழ்ந்த சாலைகளை கடந்து செல்லுதலைத் தவிர்த்தல்.
A) நடவடிக்கை 1, நடவடிக்கை 2 மற்றும் நடவடிக்கை 3 பொருந்தும்; நடவடிக்கை 4 பொருந்தாது.
B) நடவடிக்கை 1, நடவடிக்கை 2 மற்றும் நடவடிக்கை 4 பொருந்தும்; நடவடிக்கை 3 பொருந்தாது.
C) நடவடிக்கை 1, நடவடிக்கை 3 மற்றும் நடவடிக்கை 4 பொருந்தும்; நடவடிக்கை 2 பொருந்தாது.
D) நடவடிக்கை 2, நடவடிக்கை 3 மற்றும் நடவடிக்கை 4 பொருந்தும்; நடவடிக்கை 1 பொருந்தாது.
ANSWER: B
15) வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது வகுப்பறையில் திடீரென அதிர்வு ஏற்பட்டது. சிறிது விநாடிகளுக்குப் பிறகே ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் நிலநடுக்கம் ஏற்படப்போகிறது எனப் புரிந்தது. இந்நிலையில் வகுப்பில் இருந்த அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருந்தனர். அங்கிருக்கும் மாணவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களின் செயல் பின்வருவனவற்றில் என்னவாக இருக்கலாம் என்பதனைத் தேர்வு செய்க.
A) தன் பெற்றோர்களிடம் ஓடிச் செல்ல முற்படுதல்.
B) கனமான மேசை போன்ற ஏதாவது ஒன்றின் கீழ் பதுங்கிக் கொள்ளுதல்.
C) வகுப்பறையை விட்டு வெளியே செல்லுதல்.
D) பதட்டமின்றி என்ன செய்வது என்று நிதானமாக யோசித்தல்.
ANSWER: B
16) இயற்கை சீற்றம் கொண்டு பேரிடர்கள் நேரிட்டாலும் மனிதர்களால் ஏற்படக்கூடிய பேரிடர்களே அதிகமாக உள்ளது. மனிதர்களால் ஏற்படக்கூடிய பேரிடர்களில் முக்கியமான ஒன்று சாலை விபத்து. இந்த விபத்துகள் நடக்காமலிருக்க நாம் எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும் என்ற சில விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் உள்ள முரணான ஒன்றைத் தேர்வு செய்க.
A) கருப்பு வெள்ளைக் கோடுகள் இடப்பட்ட இடத்தில் சாலைகளைக் கடக்க வேண்டும்.
B) சாலையைக் கடக்கும்போது நில், கவனி, நட என்பதனை எப்போதும் மறக்காமல் இருக்க வேண்டும்.
C) சிவப்பு சமிக்ஞை போட்டிருக்கும் போது அங்கு நின்று கொண்டிருக்கும் வாகனங்களில் ஒலி ஒழுப்ப வேண்டும்.
D) பேருந்துகளில் பின் படிக்கட்டுகளின் வழியே ஏறவும், முன் படிக்கட்டுகளின் வழியாக இறங்கவும் வேண்டும்.
ANSWER: C
17) செய்தி : கஜா புயல் என்பது வங்கக் கடலில் உருவாகிய புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். தமிழகக் கடற்கரையைக் கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்க.
பாதிப்பு 1 : மனிதர்களின் உடைமைகள் பாதிப்படைந்தன.
பாதிப்பு 2 : கட்டமைப்புகள் பாதிப்படைந்தன.
பாதிப்பு 3 : இயற்கை வளங்கள் பாதிப்படைந்தன.
பாதிப்பு 4 : கால்நடைகள் பாதிப்படைந்தன.
A) பாதிப்பு 1 மற்றும் பாதிப்பு 2 செய்திக்கு பொருந்தும்; பாதிப்பு 3 மற்றும் பாதிப்பு 4 செய்திக்கு பொருந்தாது.
B) பாதிப்பு 1 மற்றும் பாதிப்பு 2 செய்திக்கு பொருந்தாது; பாதிப்பு 3 மற்றும் பாதிப்பு 4 செய்திக்கு பொருந்தும்.
C) பாதிப்பு 1, பாதிப்பு 2, பாதிப்பு 3 மற்றும் பாதிப்பு 4 செய்திக்கு பொருந்தும்.
D) பாதிப்பு 1, பாதிப்பு 2, பாதிப்பு 3 மற்றும் பாதிப்பு 4 செய்திக்கு பொருந்தாது.
ANSWER: C
18) உலகிற்கே நுரையீரலாக விளங்கும் அமேசான் காடுகள் உலகின் 20% ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. 2019 ஆம் ஆண்டில் அமேசான் காடுகளில் காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீ என்பது, எரியக்கூடிய தாவரங்களைக் கொண்ட காட்டுப் பகுதிகளில் அல்லது நாட்டுப்புறப் பகுதிகளில் காட்டுக்கு அடங்காமல் எரியும் தீயைக் குறிக்கும். காட்டுத்தீ குறித்த குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அடையாளம் காண்க.
குறிப்பு 1 : சில தாவரங்கள் மீது ஏற்படக்கூடிய தீயானது மின்னலின் விளைவுகள் போன்ற கடுமையான காரணங்களால் உருவாக்கப்படுகின்றன.
குறிப்பு 2 : இயற்கையான இடங்கள் வழியாக செல்லும் மின்கம்பிகளின் குறுகிய சுற்றுகள் அல்லது அதிக சுமைகளால் பல காட்டுத் தீ ஏற்படுகிறது.
A) குறிப்பு 1 மற்றும் குறிப்பு 2 இன் மூலம் இயற்கை காரணங்களால் காட்டுத்தீ ஏற்படுகிறது என அறிய முடிகிறது.
B) குறிப்பு 1 மற்றும் குறிப்பு 2 இன் மூலம் மனிதர்களின் சில செயல்களால் காட்டுத்தீ ஏற்படுகிறது என அறிய முடிகிறது.
C) காட்டுத்தீயானது குறிப்பு 1 இன் மூலம் இயற்கையாகவும் குறிப்பு 2 இன் மூலம் செயற்கையாகவும் ஏற்படுகிறது என அறிய முடிகிறது.
D) காட்டுத்தீயானது குறிப்பு 1 இன் மூலம் செயற்கையாகவும் குறிப்பு 2 இன் மூலம் இயற்கையாகவும் ஏற்படுகிறது என அறிய முடிகிறது.
ANSWER: C
19) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை அடையாளம் காண்க.
கூற்று 1 : நிலநடுக்கம், கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் மிகப்பெரிய அலைகள் ________
கூற்று 2 : உயர் அழுத்தத்தால் சூழப்பட்ட குறைவழுத்தப் பகுதியில் உருவாகும் காற்று _______.
A) சூறாவளி, புயல்
B) புயல், பூகம்பம்
C) பூகம்பம், சுனாமி
D) சுனாமி, சூறாவளி
ANSWER: D
20) நம் நாட்டில் ஏற்படும் இடர்களை மக்களுக்கு அறிவிப்பதற்காக அமைந்த அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பொருந்தாத ஒன்றினைத் தேர்வு செய்க.
1) தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
2) மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்
3) தமிழ்நாடு பேரிடர் மறுமொழி படை
4) மாநில பேரிடர் மறுசீரமைப்பு படை
A) 1, 2 மற்றும் 3 பொருந்தும்; 4 பொருந்தாது.
B) 1, 2 மற்றும் 4 பொருந்தும்; 3 பொருந்தாது.
C) 1, 3 மற்றும் 4 பொருந்தும்; 2 பொருந்தாது.
D) 2, 3 மற்றும் 4 பொருந்தும்; 1 பொருந்தாது.
ANSWER: A
21) கொடுக்கப்பட்டுள்ளவற்றி பேரிடர் மேலாண்மை சூழற்சியின் சரியான வரிசையைத் தேர்வு செய்க.
A) முன்னேற்றம், மீட்டல், தயார் நிலை, கட்டுப்படுத்துதல், மட்டுப்படுத்துதல், துலங்கல்.
B) முன்னேற்றம், தயார் நிலை, மீட்டல், கட்டுப்படுத்துதல், துலங்கல், மட்டுப்படுத்துதல்.
C) தயார் நிலை, மட்டுப்படுத்துதல், கட்டுப்படுத்துதல், துலங்கல், மீட்டல், முன்னேற்றம்.
D) மட்டுப்படுத்துதல், துலங்கல், கட்டுப்படுத்துதல், மீட்டல், தயார் நிலை, முன்னேற்றம்.
ANSWER: C
22) பூமியின் பல பகுதிகளிலும், புவி அதிர்ச்சிகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன. எனினும் அந்த அதிர்ச்சி ஓரிடத்தில் மிகுதியானால், அதைப் பூகம்பம் அல்லது நிலநடுக்கம் என்பர். நிலநடுக்கத்தின் தாக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் சரியான வரிசையைத் தேர்வு செய்க.
1) மண் சரிவு, பனிச்சரிவு
2) நிலம் நடுங்குதலும், பிளத்தலும்
3) வெள்ளம்
4) ஆழிப்பேரலை
A) 2 4 3 1
B) 4 3 2 1
C) 4 2 1 3
D) 2 1 4 3
ANSWER: D
23) வெள்ளம் என்பது நிலத்தை மூழ்கடிக்குமளவுக்குத் தேங்கி நிற்கும் அல்லது பொங்கிப் பாய்ந்தோடும் நீர் ஆகும். வெள்ளங்களின் முக்கிய வகைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பொருந்தாத ஒன்றிணைத் தேர்வு செய்க.
A) புயலால் உண்டாகும் கடல் அலை பொங்குநிலை மற்றும் அழுத்தப் புயல்காற்றால்ஏற்படும் வெள்ளம் “கழிமுக வெள்ளங்கள்” எனப்படும்.
B) கடுமையான கடற்புயல் அல்லது வேறு இயற்கைச் சீற்றங்கள் காரணமாக ஏற்படும் வெள்ளங்கள் “கடற்கரையோர வெள்ளங்கள்” எனப்படும்.
C) அணை உடைப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் அல்லது வேறு இயற்கைச் சீற்றத்தின் விளைவாக உண்டாகும் பேரழிவுகள் காரணமாக ஏற்படும் வெள்ளங்கள் “பேரழிவு வெள்ளங்கள்” எனப்படும்.
D) இடியுடன் கூடிய பெருமழை அல்லது நீர்த்தேக்கங்களில் கரைகள் உடைவது, நிலச்சரிவு மற்றும் பனியாறு ஆகியவற்றினால் ஏற்படும் வெள்ளங்கள் “சேற்று வெள்ளங்கள்” எனப்படும்.
ANSWER: D
24) கடலும் தேரும் இருக்க வேண்டியப் பகுதியில் இருப்பதே சரியானது என்னும் கருத்தினைக் கூறும் அதிகாரம்_________.
A) குற்றங்கடிதல்
B) நடுவுநிலைமை
C) இடனறிதல்
D) கூடாஒழுக்கம்
ANSWER: C
25) _______கொம்பு இனியதாக இருக்கும் எனத் திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
A) அம்பு
B) வில்
C) யாழ்
D) குழல்
ANSWER: C
26) _____வரும் முன் சிந்தித்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
A) புயல்
B) குற்றம்
C) கவலை
D) மழை
ANSWER: B
27) திருக்குறளில் வரும் நான்கு இயல்களில் பொருந்தாத ஒன்று.
A) துறவறவியல்
B) இல்லறவியல்
C) பொருளியல்
D) பாயிரவியல்
ANSWER: C
28) ஒருவர் நீதி தவறி நடந்துக் கொள்வாராயின் அவருக்குப் பின் எஞ்சி நிற்பது_________.
A) பெருமை
B) புகழ்
C) பழி
D) இழிவு
ANSWER: C
29) மனதை அடக்கும் வல்லமை இல்லாதவர் எதனுடன் ஒப்பிட்டுக் கருதப்படுவார்.
A) புலி
B) பசு
C) வலியவர்
D) பயிருடன்
ANSWER: B
30) களர்நிலம் என்பது ________.
A) விளைச்சல் நிலம்
B) புன்செய் நிலம்
C) நன்செய் நிலம்
D) பயன்படாத நிலம்
ANSWER: D
31) பிறரின் குற்றத்தை ஆராய்பவர் முதலில் செய்ய வேண்டியது_________.
A) தன் குற்றத்தை ஆராய வேண்டும்
B) தன் குற்றத்தை ஆராய்ந்து நீக்க வேண்டும்
C) குற்றமற்ற நடுவுநிலைமையினைக் கற்க வேண்டும்
D) தன்மேல் உள்ளக் குற்றத்தை மறைக்க வேண்டும்
ANSWER: B
32) ஒருவன் தீய பழக்கத்தினை உடையவன் என்பதை எவ்வாறுக் கண்டறிய வேண்டும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
A) அவனது தோற்றத்தை வைத்து
B) அவனது செயலினை வைத்து
C) அவனது உடையினை வைத்து
D) அவனது இருப்பிடத்தை வைத்து
ANSWER: B
33) ”வைத்தூறு போலக் கெடும்” இவ்வரிகளின் விளக்கம்.
A) குற்றம் உடையவன் போலக் அழிந்துவிடும்
B) வையத்தில் வாழ முடியாமல் அழிந்துவிடும்
C) வைக்கோல் போல அழிந்து விடும்
D) குறைக் கொண்டு அழிந்துவிடும்
ANSWER: C
34) நாம் செய்யக்கூடிய செயலிற்கான இடத்தை அறிவதற்கு முன் எந்தவொரு செயலையும்________.
A) செய்தல் கூடாது
B) தொடங்குதல் கூடாது
C) முயற்சித்தால் கூடாது
D) புகழ்தல் கூடாது
ANSWER: B
35) தன் மனதை சரியாக கையாள தெரியாத ஒருவன் எவ்வாறு இருப்பான் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
A) தான் என்ற எண்ணத்துடனும் தைரியத்துடன் இருப்பான்.
B) தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு இருப்பான்.
C) எந்த செயலையும் செய்து முடிக்கும் வல்லவனாக இருப்பான்.
D) தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குபவனாக இருப்பான்.
ANSWER: B
36) ”வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று” – இக்குறளில் இல்பொருள் உவமையணி இடம்பெற்றிருபதற்கான காரணம்.
A) ஒரு பொருளினை அதிகமாக மிகைப்படுத்திக் கூறியுள்ளதானால்
B) ஒரு பொருளிற்கு வேறொரு பொருளை உவமைப்படுத்திக் கூறியதால்.
C) உலகில் இல்லாத ஒன்றை உவமைப் படுத்திக் கூறியுள்ளதால்.
D) தான் கருதும் பொருளை வெளிப்படையாகக் கூறாமல் பிறிதொன்றால் ஏற்றிக் கூறுதல்.
ANSWER: C
37) நீங்கள் ஒரு நாட்டின் அரசராக இருக்கும் தருணத்தில் நாட்டிற்கு சரியாக வரி செலுத்தாதவர்களை அரண்மனைக்கு வரவழைத்து அவர்களுக்கு உரிய இழப்பிடுகளை அபராதமாக விதித்தும், தண்டனைகளை வழங்கியும் கொண்டிருக்கின்ற போது அந்தப் பட்டியலில் சிறுவயதிலிருந்து உன் நெருங்கிய நண்பன் ஒருவனும் இருக்கிறான். அவனுக்கு நண்பனாகவும் ஒரு நாட்டை ஆளும் மன்னனாக நடுவுநிலைமையுடன் இருக்கிற உங்களின் செயல் என்னவாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுக.
A) தன் நண்பன்தானே என அவனுக்கு கால அவகாசம் கொடுத்து அனுப்புதல்.
B) மற்றவர்களுக்கு கொடுக்கும் தண்டனையில் இருந்து சற்றுக் குறைவாக வழங்குதல்.
C) அனைவருக்கும் வழங்கிய அதே தண்டனையையே அவருக்கும் கொடுத்தல்.
D) தன்னுடைய நண்பனுக்கு பதிலாக அதற்குரிய இழப்பீடுகளைத் தானே செய்வதாகக் கூறுதல்.
ANSWER: C
38) ஒருவன் மற்றவர்களின் பொருள்களைத் திருடுதல் மற்றும் தீங்கு விளைவித்தல் போன்றப் பலத் தவறான செயல்களைச் செய்கின்றான். இத்தகைய செயல்களை உடைய அவன் தன்னுடைய தவறுகள் மற்றவர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் கட்டாயம் தன்னை தண்டிப்பார்கள் எனத் தெரிந்துக் கொண்டு, அறத்தத்துவத்தின் வழி யாருக்கும் திங்கு செய்ய நினைக்காதவர்கள் இருக்கும் இடத்தில் தானும் ஒருவனாக சென்று சேர்ந்துக் கொண்டு, அங்கும் தன் பழையச் செயலினைச் செய்கின்றான் இவனின் இத்தகையச் செயலை கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எந்த அதிகாரத்தின் கீழ் குறிப்பிடுவீர்கள்.
A) குற்றங்கடிதல்
B) கூடா ஒழுக்கம்
C) இடனறிதல்
D) கல்லாமை
ANSWER: B
39) அமுதனும் அழகனும் சகோதரர்கள். அமுதன் நன்கு படித்து நல்ல வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால் அழகன் என்பவன் படிக்காமல் தன் அப்பாவின் செல்வ வசதியில் ஊரிலேயே படிக்காமல் இருந்து விட்டான். சில நாட்களுக்குப் பிறகு அவர்களின் தந்தை இறந்து விடுகின்றார். அவர் தனது சொத்துக்களை ஏழை மக்களுக்கென கொடுத்துவிட்டதால் அவரின் சொத்துக்கள் பொது சொத்தாகிறது. இந்நிலையில் அமுதன் தன்னுடையத் திறமையினால் நன்கு வாழ்கிறான். ஆனால், அழகனோ, தான் என்ன செய்வதென தெரியாமல் குழம்புகிறான். அழகனின் இந்நிலைக்கு முக்கியக் காரணம் என்ன என்பதை இருவரின் நிகழ்வுகளையும் நன்கு உணர்ந்துக் குறிப்பிடுக.
A) அழகன் மற்ற ஊர்களுக்குச் செல்லாமல் தன் ஊரிலேயே இருந்ததால்.
B) அழகன் சிறு வயதிலிருந்து படிக்காமல் தன் வாழ்வினைக் கழித்ததால்.
C) தன் தந்தையின் செல்வத்தினை மட்டும் எதிர்பார்த்து வாழ்ந்ததால்.
D) தன் சகோதரன் அமுதனின் உதவியினை நாடாமல் இருந்ததால்.
ANSWER: B
40) தன் உடனிருந்தவள் செய்தக் குற்றத்திற்காக தீபாவின் மேல் பழி சுமத்தப்பட்டது. அவளும் அதனை மறுக்காமல் தான் செய்யவில்லையென நிரூபிக்காமல் அமைதியாக இருந்துவிட்டாள். சில நாட்கள் கழித்து பிரியா என்பவள் செய்தக் குற்றத்தினைத் தவறு என்றுக் கூறிய தீபாவினை அங்குள்ளவர்கள் நீயே பலக் குற்றங்களைச் செய்தவள் எனச் சுட்டிக் காட்டினார். இன்னிலை வராமல் இருந்திருக்க தீபா என்ன செய்திருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுக.
A) பிரியா குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தீபா எதுவும் கூறி இருக்கக் கூடாது.
B) அந்த இடத்திலிருந்து எதுவும் பேசாமல் கவலையுடன் செல்லுதல்.
C) தன்னை பற்றி தவறாக பேசியவர்கள் மீது மிகுந்தக் கோவம் கொள்ளுதல்.
D) தன் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றத்தினை நீக்க முற்படுதல்.
ANSWER: D
41) நீங்கள் ஒரு தொழிலினை ஆரமிப்பதற்கு முன்பு எதனையெல்லாம் முக்கியமாகக் கருதுவீர்கள் என்பதில் பொருந்தாத ஒன்றைக் குறிப்பிடுக.
1) நீங்கள் ஒரு தொழிலினை ஆரமிப்பதற்கு முன்பு எதனையெல்லாம் முக்கியமாகக் கருதுவீர்கள் என்பதில் பொருந்தாத ஒன்றைக் குறிப்பிடுக.
2) எதை செய்தால் அந்தத் தொழிலை மேம்படுத்த முடியும் என்பதை புரிந்து செய்தல் வேண்டும்.
3) நம்மால் அந்த தொழிலினைச் செய்ய முடியுமா என பலமுறை யோசித்த பிறகு அதனை செயல்படுத்த வேண்டும்.
4) நமக்குத் துணையாகப் பலர் இருக்கும் தருணத்தில் மட்டுமே ஒரு தொழிலை ஆரமித்தல் வேண்டும்
A) நீங்கள் ஒரு தொழிலினை ஆரமிப்பதற்கு முன்பு எதனையெல்லாம் முக்கியமாகக் கருதுவீர்கள் என்பதில் பொருந்தாத ஒன்றைக் குறிப்பிடுக.
B) எதை செய்தால் அந்தத் தொழிலை மேம்படுத்த முடியும் என்பதை புரிந்து செய்தல் வேண்டும்.
C) நம்மால் அந்த தொழிலினைச் செய்ய முடியுமா என பலமுறை யோசித்த பிறகு அதனை செயல்படுத்த வேண்டும்.
D) நமக்குத் துணையாகப் பலர் இருக்கும் தருணத்தில் மட்டுமே ஒரு தொழிலை ஆரமித்தல் வேண்டும்
ANSWER: D
42) ஒரு நீதி மன்றத்தில் நடுவுநிலமை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் நீதி தேவதையின் கண்கள் கருப்புத் துணியினால் கட்டப்பட்டதன் காரணம் என்ன என்பதை கொடுக்கப்பட்டுளைக் கூற்றுகளை ஆராய்ந்து சரியான காரணத்தினைக் குறிப்பிடுக.
அ. செல்வந்தர் ஏழை என யாரையும் வேறுபடுத்தாமல் நீதி வழங்குவதற்காக.
ஆ. யாரின் நிலையினைப் பார்த்தும் நீதியை தவறாகவோ வழங்கக் கூடாது என்பதற்காக.
இ. நீதி வழங்குவதில் சரி தவறென எதுவும் பாராமல் தண்டனை வழங்குவதற்காக.
ஈ. முறையிடும் அனைவருக்கும் தண்டனைகளைச் சரிசமமாக வழங்க வேண்டும் என்பதால்.
A) அ மற்றும் ஆ சரி
B) ஆ மற்றும் இ சரி
C) இ மற்றும் ஈ சரி
D) ஈ மற்றும் அ சரி
ANSWER: A
43) தன்னுள் பலக் குற்றங்களை வைத்திருந்தாலும், மற்றவர் முன் மாண்பு உடையவர் போல நடிப்பவர்கள் இந்த உலகில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனவே இப்பொருளிற்கு ஏற்ற வள்ளுவரின் குறளினைக் குறிப்பிடுக.
A) மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்.
B) வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
C) நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்.
D) மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்.
ANSWER: D
44) கல்லாமை என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள் கொடுக்கப்பட்டுள்ளது. இக்குறளின் சரியான விளக்கத்தினைக் குறிப்பிடுக. “நல்லார்கண் பட்ட வறுமை இன்னாதே கல்லார்கண் பட்ட திரு”
A) படிக்காதவரிடம் இருக்கும் வறுமையும், படித்தவர்களிடம் இருக்கும் வறுமையும் ஒன்றாகவேக் கருதப்படும்.
B) கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்வரின் வறுமையை விட அதிகத்துன்பம் தருவதாகும்.
C) கற்றவரின் வறுமையை கல்லாதவரிடம் உள்ள செல்வம் அதிகம் பாதிக்கும் வகையில் அமையும்.
D) கற்ற ஒருவரின் வறுமை கல்லாதவனிடம் இருக்கும் செல்வத்தை விட அதிக வலுபெற்றதாக விளங்கும்.
ANSWER: B
45) பணத்தின் மற்றும் பொருள்களின் மீது மிகுந்த ஆசைக் கொண்டு அதனால் செய்யவேண்டிய செயல்களை செய்யாமல் வாழ்பவன் மற்றும் கஞ்சனாக வாழ்பவனின் நிலைப் பற்றிக் குறிப்பிடும் இரண்டுக் குறளினைக் குறிப்பிடுக.
குறள் 1 : பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
குறள் 2 : வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
குறள் 3 : இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
குறள் 4 : செயற்பல செய்யா திவறியான் செல்வம்
உயர்பால தன்றிக் கெடும்.
A) குறள் 1 மற்றும் 2 சரி
B) குறள் 1 மற்றும் 4 சரி
C) குறள் 3 மற்றும் 2 சரி
D) குறள் 3 மற்றும் 4 சரி
ANSWER: B
46) கொடுக்கப்பட்டுள்ளவைகளில் இடமறிந்து செயல்படும் வகையில் அமைந்து வந்துள்ளக் கருத்துக்களைக் ஆராய்ந்துக் குறிப்பிடுக.
கூற்று 1 : ஊக்கம் உடைய ஒருவன் பகைவரின் மேல் போருக்கு செல்லாமல் ஒடுங்கியிருப்பது போரிடும் ஆட்டுக் கடா பகையைத் தாக்குவதற்குப் பின்வாங்குவதைப் போன்றது.
கூற்று 2 : பகை உணர்வு நிறைந்தும் ஆற்றல் நிறைந்தும் இருப்பவருக்கு அரணோடுப் பொருந்தி உண்டாகும் வெற்றியானது பலவகை பயன்களைத் தரும்.
கூற்று 3 : பகைவருக்கு முடிவு ஏற்படும். மேலும் அவர்கள் தாமாகவே கவிழந்திடும் உரிய நேரம் வரும் வரை தங்களின் பகையுணர்வை பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.
கூற்று 4 : ஆழமான நீரினுள் மற்ற உயிரினங்களை முதலை வெற்றிக் கொள்ளும். நீரை விட்டு வெளியே வந்தால் மற்ற உயிரினங்கள் முதலையை வெற்றிக் கொள்ளும்.
A) கூற்று 1 மற்றும் 2 சரி
B) கூற்று 3 மற்றும் 4 சரி
C) கூற்று 1 மற்றும் 3 சரி
D) கூற்று 2 மற்றும் 4 சரி
ANSWER: D
47) தமிழ்நாட்டின் “வேர்ட்ஸ்வொர்த்” என்று சிறப்பிக்கபடுபவர் யார்?
A) கண்ணதாசன்
B) எத்திராசலு
C) பாரதிதாசன்
D) ரங்கராஜன்
ANSWER: B
48) வாணிதாசன் இயற்றிய நூல்களுள் அடங்காதவையைத் தேர்வு செய்க.
A) தமிழச்சி
B) குழந்தை இலக்கியம்
C) எழிலோவியம்
D) தமிழ்ச்சோலை
ANSWER: D
49) கீழுள்ளவற்றுள் இசைக்கருவியைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடு.
A) முழவு
B) ஓட்டி
C) தோடி
D) குலவி
ANSWER: A
50) வள்ளைப்பாட்டை எப்போது பாடுவார்?
A) நெற்பயிர்களை விதைக்கும்போது
B) நெற்கதிர்களைக் குத்தும்போது
C) நெற்கதிர்களை அறுவடை செய்யும்போது
D) நாற்றுகளை நடும்போது
ANSWER: B
51) “ஏடு போதா இதன்கவிக் கார் ஈடு செய்யப் போரா ரோடி ” – இதில் பயின்று வருவது ___________ .
A) மோனை
B) எதுகை
C) இயைபு
D) முரண்
ANSWER: B
52) செஞ்சொல் என்ற சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது ____________________.
A) செஞ் + சொல்
B) செம் + சொல்
C) செம்மை + சொல்
D) செங்கை + சொல்
ANSWER: C
53) ஓடைகள், கல், செடி போன்ற அனைத்தையும் கடந்து செல்லும்போது _________ எனும் ஒலியை எழுப்புகிறது.
A) மடமட
B) கலகல
C) சலசல
D) தகதக
ANSWER: C
54) எதற்காகவும் நிற்காமல் ஓடித் தன் உழைப்பை கொடையாகத் தந்து வழங்குவது ________ .
A) ஈரம்
B) ஓடை
C) ஆறு
D) புற்கள்
ANSWER: B
55) “நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக் ” – இதில் பயின்று வருவது _____________________
A) சீர் மோனை, அடி மோனை
B) சீர் எதுகை, அடி மோனை
C) சீர் எதுகை, அடி எதுகை
D) சீர் மோனை, அடி எதுகை
ANSWER: B
56) நாணம் எனும் சொல்லின் பொருளைப் பண்பாக எடுத்துரைக்குமாறு அமைந்த சொல் இடம்பெற்றுள்ள தொடரைத் தேர்வு செய்க.
A) அனைவரிடமும் பணிவாக இருத்தல் வேண்டும்
B) எல்லா இடங்களிலும் அமைதி காத்தல் வேண்டும்
C) பிறரைப் பற்றி புறங்கூறுவதைத் தவிர்த்தல் வேண்டும்
D) அனைவரிடமும் வஞ்சகம் இல்லாமல் இனியாக பேச வேண்டும்
ANSWER: A
57) செய்தி 1 : ஏரி, கண்மாய் மற்றும் ஆற்றுப் பாசனத்தை நம்பி இருக்கும் நிலங்களே நஞ்சை நிலங்கள் ஆகும். இந்நிலத்தில் பயிர்கள் நீர்வளத்தோடு விளையும் .
செய்தி 2 : நீர்ப்பாசன வசதி இருக்கின்ற மேடான நிலம் புஞ்சை ஆகும். இந்நிலத்தில் குறைந்த அளவுடைய நீரினால் மட்டுமே பயிர்கள் விளையும். மேல்காணும் செய்திகளை ஆராய்க.
A) செய்தி 1 சரி அனால், செய்தி 2 தவறு
B) செய்தி 1 தவறு அனால், செய்தி 2 சரி
C) செய்தி 1 மற்றும் 2 இரண்டுமே சரி
D) செய்தி 1 மற்றும் 2 இரண்டுமே தவறு
ANSWER: A
58) ஓடையானது எந்த ஒரு வேறுபாடும் கருதாமல் நன்செய் நிலத்திற்கும் புன்செய் நிலத்திற்கும் நீரை வழங்கி பயிர்களைச் செழிக்க செய்கிறது. இதனால் ஒரு நாடு எந்த அளவிற்கு மாறுதலைப் பெரும் என்பதை பாடல் வழி ஆராய்க.
A) அந்நாட்டின் வளமைப் பெருகும்
B) அந்நாட்டில் உள்ள வறுமை நீங்கும்
C) அந்நாட்டில் உள்ள மக்கள்தொகை பெருகும்
D) அந்நாடு செழித்து காணப்படும்
ANSWER: B
59) மாணவர்களாகிய நீங்கள் படிக்கும்பொழுது பல இடையூறுகளைச் சந்திப்பீர்கள். அந்நிலையில் மனம் தளர்வு பெரும் மற்றும் நிதானத்தை இழக்கும். இந்நிலையில் நீங்கள் ஓடையைப் போன்று செயல்படுவீர்களானால் உங்களின் செயல் என்னவாக இருக்கும் ______________________.
A) தடைகள் வரும்போது எச்செயலையும் மேற்கொள்ளமல் அமைதியாக இருப்பது.
B) இடையூரைக் கட்டுபடுத்தும் திறனை வளர்த்துக்கொண்டு தப்புவது.
C) தடைகள் பல வந்தாலும் அதனைக் கடந்து நம் இலக்கை அடைய முற்படவது.
D) தடைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று யோசித்தப்பின் செயல்படுவது.
ANSWER: C
60) இன்றைய காலகட்டத்தில் நீர்நிலைகளின்றி வாழ்வதே அரிதான ஒன்றாகும். அத்தகைய நீர்நிலைகளில் இருக்கும் நீர் வற்றாமல் இருப்பதற்கான காரணமாய் திகழ்வது _________________________.
A) நிலத்தடி நீர் மட்ட உயர்வினால் நீரின் அளவும் அதிகமாகி நீர்நிலைகளை வற்றாமல் இருக்க வழிவகை செய்கிறது.
B) நீர்நிலைகள் தரும் குளிர்ந்த காற்றுகள் மேகங்களைக் குளிர்வித்துப் பின்பு மழையாக பொழிந்து நீர் நிலைகளை வற்றாமல் காக்கிறது.
C) இயற்கையாகவே நீர்நிலையின் அடியிலிருக்கும் நிலத்தின் நீர் அளவு அதிகம். எனவே, அவ்விடத்தில் வற்றாமல் இருக்க செய்கிறது.
D) பருவத்திற்கு ஏற்றார் போல மழையானது பொழிந்துக் கொண்டே இருப்பதனால் நீர்நிலைகளில் நீரானது வற்றாமல் இருக்கிறது.
ANSWER: B
61) நீர்நிலைகளில் புள்ளியற்ற மூல மாசுபாட்டைத் தடுக்க சிறந்த வழியாக நாம்மேற்கொள்ளப்படுவது____________.
அ) விவசாயங்களில் போதிய அளவு நீரையே பயன்படுத்த வேண்டும்
ஆ) உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைக் குறைவாக பயன்படுத்த வேண்டும்
இ) செப்டிக் அமைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும்
ஈ ) சுத்திகரிப்பு பகுதிகளில் தேங்கி இருக்கும் நீரை சுத்தம் செய்ய வேண்டும்.
A) அ மற்றும் ஆ சரி
B) இ மற்றும் ஈ சரி
C) ஆ மற்றும் இ சரி
D) அ மற்றும் ஈ சரி
ANSWER: C
62) ஒரு விவசாயி தன் நிலத்தில் உள்ள பயிர்கள் செழித்து வளர பாசன முறையை மேற்கொண்டு நீரைப் பாய்ச்சிக் கொண்டிருந்தான். அப்போது தொலைவில் இருக்கும் பயிர்களுக்கு நீர் போதுமானதாக இல்லை. இந்நிலையில் அவ்விவசாயி __________
1) தெளிப்பு நீர் பாசன முறைப்படி
2) கால்வாய்களை வெட்டி அதன்மூலம்
3) பயிர்நிலங்களில் தானே சென்று நீரை ஊற்றி
4) பழுப்பு போன்றவற்றால் நீரை இரைத்துப் பாய்ச்சி அப்பயிர்களைச் சேதமில்லாமல் செழிக்கச் செய்வார். இதன்மூலம் பயிர்கள் நல்ல விளைச்சலைத் தரும்.
A) தெளிப்பு நீர் பாசன முறைப்படி
B) கால்வாய்களை வெட்டி அதன்மூலம்
C) பயிர்நிலங்களில் தானே சென்று நீரை ஊற்றி
D) பழுப்பு போன்றவற்றால் நீரை இரைத்துப் பாய்ச்சி
ANSWER: B
63) உயிருள்ள பொருட்களுக்கு மட்டும் அல்லாமல் உயிரில்லா பொருட்களுக்கும் தன்னால் இயன்ற உதவியை ஓடை அளிக்கிறது. அவ்வகையில் ஓடையின் பங்களிப்பு பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கபட்டுள்ளன. அவற்றுள் தவறானத்தைத் தேர்வு செய்க.
A) மனிதர்களுக்கு மட்டுமல்ல, மற்ற விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கும் குடிநீரை வழங்குகிறது.
B) உணவு விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக பயிர்களுக்கான நீர்ப்பாசனத்தை அளிக்கிறது.
C) துணிகளில் சாயம் பூசுதலுக்கு ஓடை நீரே உகந்ததாக இருக்கிறது.
D) கழிவுகளைக் கழுவி சுத்தமாக வைத்திருக்க ஒரு வழியாக திகழ்கிறது
ANSWER: C
64) ஓடை எவ்வாறு விவசாயத்திற்கு துணைப் புரிகிறது என்பதைப் பின்வரும் தொடரிலிருந்துத் தேர்வு செய்க.
1) நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்க செய்து விவசாயத்தை காக்கிறது.
2) வறண்ட நிலப் பகுதியைக் கூட தன் நீரால் நீரைப் பாய்ச்சி பயிர்கள் விளையும் நிலமாக மாற்றுகிறது.
3) ஓடை, தான் படர்ந்துப் போகிற பகுதியை எல்லாம் களர் நிறமாக உருமாற்றி நிலத்தைப் பண்படுத்துகிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) 2 மற்றும் 3 சரி
D) 1 மற்றும் 2 சரி
ANSWER: D
65) விவசாயத்தின் நண்பன் என்று மண்புழுவைக் கூறுவது உண்டு. அதேபோல் விவசாயத்தின் மற்றொரு நண்பன் நீர்நிலை. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று ஓடையும் ஆகும். இத்தொடர்க்கான சரியான விளக்கத்தைக் கீழ்காண்பவைகளிலிருந்துக் கண்டறி.
1) விவசாயத்திற்கு மிக முக்கியமானது தண்ணீர் தான் எனவே நீர்நிலைகளில் ஒன்றான ஓடை இருக்கும் பகுதி செழிப்பாக இருக்கும்.
2) மண்புழு எவ்வாறு விளைச்சலுக்கு துணைப் புரிகிறதோ அதே அளவு ஓடையும் விளைச்சலை அதிகப்படுத்துகிறது.
3) மனிதன் உயிர் வாழ உணவு எவ்வளவு முக்கியமோ அதேபோல் பயிர்கள் செழிக்கவும் பயிர்கள் வாடாமல் இருக்கவும் நீர்நிலை அவசியமான ஒன்றாகும்.
4) மண்புழு மண்ணின் தன்மையை எவ்வாறு சீரமைக்கிறதோ அதே போல் ஓடையும் மண்ணின் தன்மையை மேலும் கீழுமாக பிரட்டி சீரமைக்கிறது.
A) 1 மற்றும் 2 சரி
B) 2 மற்றும் 4 சரி
C) 1, 2 மற்றும் 3 சரி
D) 2, 3 மற்றும் 4 சரி
ANSWER: C
66) நாம் மேற்கொள்ளும் ஒவ்வொறு செயலும் நம் வாழ்வில் ஒவ்வொரு பாடத்தைக் கற்பிக்கும். அதேபோல் நாம் நல்ல பண்புடன் வாழவும் நமக்கு துணைப் புரியும் அவ்வாறு ஓடையிடமிருந்து நாம் கற்பிக்கும் பண்பைக் கீழ்காணும் கூற்றுகளிலிருந்துக் கண்டறி.
கூற்று 1 : ஓடையானது மற்றவைகளினால் தனக்கு எந்தப் பயனும் இல்லை எனத் தெரிந்தும் எந்தவொரு பயனையும் எதிர்பார்க்காமல் தன் கடமையைச் செய்கிறது.
கூற்று 2 : ஓடையானது பகல், இரவு என்று எந்த நேரமும் பாராமல் தான் உற்பத்தியான இடத்தில் இருந்து தான் சேரப் போகும் இலக்கான கடல் வரையும் எந்த இடத்திலும் ஓய்வெடுக்காமல் தன் இலக்கை நோக்கிப் பயணிக்கிறது.
கூற்று 3 : ஓடையானது தன் ஓடும் போது சலசலவென்று ஓசையை எழுப்பிக் கொண்டே பாடிக் கொண்டே பிற உயிரினங்களைப் புத்துணர்வோடு வைத்துக்கொள்ள வழிசெய்கிறது.
கூற்று 4 : ஓடையானது தன் வருகையால் பிற உயிர்களான தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றிற்கு நீரான ஆதாரத்தைத் தருவதோடு அவைகளை இன்புறவும் செய்கிறது .
A) கூற்று 1 மற்றும் 2 சரி
B) கூற்று 2 மற்றும் 3 சரி
C) கூற்று 1, 2 மற்றும் 4 சரி
D) கூற்று 2, 3 மற்றும் 1 சரி
ANSWER: C
67) “ஓடையின் மூலம் பல கிராமப்புறங்களில் வாழும் பல மக்களின் வீட்டில் அடுப்பு எரிகிறது” – மேல்காணும் இத்தொடர்க்கான விளக்கத்தை ஆராய்ந்துக் கண்டறி.
விளக்கம் 1 : ஓடையின் மூலம் அப்பகுதியின் நீர்வளம் மேன்மையடைந்து, பயிர்கள் செழித்து வளருகிறது. அதனால் அங்கிருக்கும் மக்களுக்கு விவசாய தட்டுபாடு ஏற்படாது.
விளக்கம் 2 : ஓடையானது அப்பகுதியில் உள்ள நிலவளத்தை மேம்பட செய்கிறது. மேலும் நீர் ஊரில் புகாதவாறு ஓடைத் தடைசெய்கிறது . எனவே அவ்வூரில் நீரினால் ஏற்படும் பாதிப்பு இல்லை.
A) விளக்கம் 1 சரி, ஆனால் 2 தவறு
B) விளக்கம் 2 சரி, ஆனால் 1 தவறு
C) விளக்கம் 1, 2 இரண்டுமே சரி
D) விளக்கம் 1, 2 இரண்டுமே தவறு
ANSWER: A
68) அக்காலத்தில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதற்கு ஏற்றார் போல பாடல்களைப் பாடுவதுண்டு. அவ்வகையில் நம் பாடப்பகுதியில் சொல்லபட்டுள்ள வள்ளைப்பாட்டை எப்போது பாடுவர் என்பதைப் பின்வரும் கூற்றுகளிலிருந்து தேர்வு செய்க.
கூற்று 1 : பெண்கள் நிலங்களில் நாற்றுகளை நடும்போது களைப்புத் தெரியாமல் இருக்க பாடப்படுவது .
கூற்று 2 : பயிர்களை அறுவடை செய்யும்போது களைப்புத் தெரியாமல் இருக்க பாடப்படும் பாடலாகும்.
கூற்று 3 : பெண்கள் உலக்கையால் மாறிமாறிக் குற்றும்போது ஏற்படும் களைப்பு தெரியாமல் இருக்க பாடுவது.
கூற்று 4 : மக்கள் தங்கள் கவலைகளை நீக்கி இன்பத்தை அடைய வேண்டி திருவிழாக்களில் பாடப்படுவது.
A) கூற்று 1 சரி
B) கூற்று 2 சரி
C) கூற்று 3 சரி
D) கூற்று 4 சரி
ANSWER: C
69) பச்சைவெட்டுக்கிளி ________ – வின் இதழ்களுக்கிடையே வசித்துவந்தது என நம் பாடபகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
A) சிவப்புப்பூ
B) நீலப்பூ
C) மஞ்சள்ப்பூ
D) ரோஜாப்பூ
ANSWER: B
70) பித்தக்கண்ணு என்பது எந்த விலங்கின் பெயராக கதை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
A) சிறுத்தை
B) கரடி
C) புலி
D) சிங்கம்
ANSWER: A
71) காடர்கள் எனும் பழங்குடி சமுதாயத்தினர், அவர்கள் பேசும் மொழியை ________ என்று அழைத்தனர்.
A) ஆல்அலப்பு
B) கால்கலப்பு
C) சிலுசிலுப்பு
D) மால்மலப்பு
ANSWER: A
72) ஓடையில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்த மரத்தின் மீது _____ படர்ந்திருந்தது.
A) கொடிகள்
B) செடிகள்
C) பச்சைப்பாசி
D) புல்கள்
ANSWER: C
73) வெட்டுக்கிளி அச்சத்திலேயே வாழ்ந்துவருவதற்கான காரணமாய் திகழ்வதை இக்கதை வழிக் குறிப்பிடுக.
A) சிறுத்தையின் கூர்ப்பாதங்கள் தன்மீது பட்டுவிடுமோ என்பதால்
B) மானின் கூர்ப்பாதங்கள் தன்மீது பட்டுவிடுமோ என்பதால்
C) புலியின் கூர்ப்பாதங்கள் தன்மீது பட்டுவிடுமோ என்பதால்
D) சிங்கத்தின் கூர்ப்பாதங்கள் தன்மீது பட்டுவிடுமோ என்பதால்
ANSWER: B
74) பித்தக்கண்ணு எதற்காக கூரனைத் துரத்திக்கொண்டு வந்தது?
A) கூரனிடம் பேசுவதற்கு
B) கூரனிடம் வழி கேட்க
C) கூரனுடன் விளையாட.
D) கூரனை வேட்டையாட
ANSWER: D
75) குறிஞ்சிப்புதர் அப்படியும் இப்படியும் ஆடியது ஏன்?
A) பித்தக்கண்ணு எகிறிக் குதித்ததால்.
B) கூரன் எகிறிக் குதித்ததால்.
C) வெட்டுகிளி எகிறிக் குதித்ததால்.
D) புனுகுப்பூனை எகிறிக் குதித்ததால்.
ANSWER: B
76) கூரன் வெட்டுகிளியைப் பார்த்து, “இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் தங்கக் கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்” என்று எதனால் கூறியது?
A) கூரனின் மறைவிடத்தை பித்தக்கண்ணுவிடம் வெட்டுக்கிளி காட்டிக் கொடுத்ததால்
B) வெட்டுகிளி இடைவிடாமல் பேசி கொண்டே இருந்ததால்
C) வெட்டுகிளி பித்தக்கண்ணிடம் கூரன் இருக்கும் இடத்தை கூறியதால்
D) நீலப் பூவின் இதழ்களுக்கிடையே வெட்டுக்கிளி வசித்திருந்ததால்
ANSWER: A
77) தாகம் தணிந்தபின் சிறு விலங்குகள் ______ ல் ஓய்வெடுத்துக் கொள்ளும்.
A) மண் புதர்
B) புல் புதர்
C) கோரைப் புதர்
D) குறிஞ்சிப் புதர்
ANSWER: D
78) கூரன் எதற்காக மரத்திற்கு அடியில் ஒளிந்து கொண்டது?
A) வெட்டுகிளி பேசி கொண்டே இருப்பதால்
B) மிகுந்த வெப்பம் தாக்கியதால்
C) பித்தக்கண்ணு துரத்திக்கொண்டு வருவதால்
D) கடும்மழை பெய்ததால்
ANSWER: C
79) ஓடையில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்த மரத்தின் மீது படர்ந்திருந்த பச்சைபாசியை எவை மேய்ந்து கொண்டிருந்தது. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் சரியான விடையை கண்டறிக.
A) பூச்சி புழுக்கள், நத்தைகள்
B) நத்தைகள், பறவைகள்
C) பறவைகள், விலங்குகள்
D) பூச்சி புழுக்கள், விலங்குகள்
ANSWER: A
80) வெட்டுக்கிளி துள்ளிக்குதித்து உற்சாகமாக இருந்ததற்கான காரணத்தைக் கீழுள்ளவற்றிலிருந்து ஆராய்க.
A) பித்தக்கண்ணு கூரனை வேட்டையாடியதால்
B) முதல் முறையாக கூரனை பார்த்ததால்
C) பித்தக்கண்ணை பார்த்து கூரன் பயந்து ஓடியதால்
D) பித்தக்கண்ணுவைப் பக்கத்தில் பார்த்ததால்
ANSWER: D
81) பித்தக்கண்ணு எவ்வாறு மோப்பம் பிடித்தாலும், கூரனின் உடல்வாடை அதன் மூக்குக்கு எட்டவில்லை, அதற்கான காரணத்தைப் பின்வருவனவற்றிலிருந்துக் கண்டறிக.
A) வெட்டுக்கிளி பக்கத்தில் இருப்பதால் மோப்பம் பிடித்தாலும், கூரனின் உடல்வாடை பித்தக்கண்ணு மூக்குக்கு எட்டவில்லை.
B) முதல்நாள் இரவு அந்த மரத்தடியில் புனுகுப்பூனை ஒன்று தங்கியிருந்தால் மோப்பம் பிடித்தாலும், கூரனின் உடல்வாடை பித்தக்கண்ணு மூக்குக்கு எட்டவில்லை.
C) கூரன் மரத்தின் கீழ் இல்லாததால் மோப்பம் பிடித்தாலும், கூரனின் உடல்வாடை பித்தக்கண்ணு மூக்குக்கு எட்டவில்லை.
D) பித்தக்கண்ணு மோப்ப சக்தி போய் விட்டதால் மோப்பம் பிடித்தாலும், கூரனின் உடல்வாடை பித்தக்கண்ணு மூக்குக்கு எட்டவில்லை.
ANSWER: B
82) மான் வெட்டுக்கிளியை என்ன கூறித் திட்டிவிட்டு சென்றது.
A) இனி இப்படி செய்தால் உன்னை என் காலால் மிதித்துவிடுவேன்
B) எனக்கு இப்படி செய்ததற்கு உன்னை கொள்ள வேண்டும்
C) புலியும் நீயும் முட்டாள்கள்
D) உன் செயலால் பலர் பயதிக்கப்பட்டுள்ளார்
ANSWER: A
83) ஒருவர் தன் நண்பரை நம்பி அவரிடம் ஒரு உதவியினைக் கேட்டு வருகிறார். அப்பொழுது அவரது நண்பனும் தன் நண்பனின் நம்பிக்கை வினாகக் கூடாதென நினைத்து அவருக்கு உதவுகிறார். உதவி செய்த நண்பனின் குணம் நம் கதையில் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களில் யாருடைய குணதிற்கு எதிர்மறையாக இருக்கிறது என்பதைக் குறிப்பிடுக.
A) கூரனின் குணதிற்கு எதிர்மறையாக அமைந்துள்ளது
B) வெட்டுக்கிளியின் குணதிற்கு எதிர்மறையாக அமைந்துள்ளது
C) புலியின் குணதிற்கு எதிர்மறையாக அமைந்துள்ளது
D) புலி மற்றும் வெட்டுக்கிளியின் குணதிற்கு எதிர்மறையாக அமைந்துள்ளது
ANSWER: B
84) ஒரு ஆபத்தான நிலையில் இருக்கும் உங்களைக் காத்துக்கொள்வதற்கு நீங்கள் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து சரியானதைக் குறிப்பிடுக.
A) முதலில் மற்றவர்களிடம் உதவி கேட்டுச் அவரை நாடி செல்லுதல்.
B) தனக்கு வந்துள்ள ஆபத்தை நினைத்து மனக்குழப்பம் கொண்டிருத்தல்.
C) இந்த ஆபத்தைப் போக்குவதற்கான வழியினை தானே சிந்தித்து செய்யபடுதல்.
D) ஆபத்து வந்து அதனால் பாதிக்கப்பட்ட பிறகு அதற்கான தீர்வினைத் தேடுதல்.
ANSWER: C
85) நாம் இப்போது நகரங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். பல தலைமுறைகளுக்கு முன் நம் முன்னோர்கள் காடுகளில் வாழ்ந்திருந்தார்கள். காடுகளில் இருந்து அவர்கள் நகரங்களுக்கு மாறியதன் காரணம் என்ன என்பதில் முக்கியமானதைக் குறிப்பிடுக.
அ. காடுகளில் அனைவருக்கும் போதிய உணவு கிடைக்காததால்.
ஆ. ஒவ்வொரு தலைமுறையத் தாண்டியும் மக்களின் பெருக்கம் அதிகமானதல்.
இ. கால சூழலுக்கேற்ப பல அறிவியல் வளர்ச்சி முறைகள் ஏற்பட்டதால்.
ஈ. விவசாயம் செய்வதற்கு போதிய நில வசதி இல்லாதக காரணத்தால்.
A) அ மற்றும் ஆ சரி
B) இ மற்றும் ஈ சரி
C) ஆ மற்றும் இ சரி
D) அ மற்றும் ஈ சரி
ANSWER: C
86) இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் நிலைத்தன்மையை பாதுகாக்கும் சில பாரம்பரிய பழங்குடி நடைமுறைகள் யாவை?
A) விவசாய நோக்கங்களுக்காக காடுகளை வெட்டுதல்
B) ஆறுகள் மற்றும் பெருங்கடல்களில் அதிகப்படியான மீன்பிடித்தல்
C) கால்நடைகளை சுழற்சி முறையில் மேய்ச்சல்
D) இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு
ANSWER: C
87) பழங்குடி சமூகங்கள் தாவரங்களையும் விலங்குகளையும் மருத்துவ நோக்கங்களுக்காக எவ்வாறு பயன்படுத்தினர் .
A) அழிந்து வரும் உயிரினங்களை வேட்டையாடுதல் மற்றும் கொல்வதன் மூலம்
B) மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிடுவதன் மூலம்
C) மருத்துவ குணம் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றிய பாரம்பரிய கற்றுக் கொண்டதன் மூலம்
D) அவர்கள் காலங்களில் இருந்த நவீன மருத்துவ சிகிச்சைகளை நம்பி.
ANSWER: C
88) வெட்டுக்கிளியும் சருகுமானும் என்னும் நம் பாடப்பகுதியில் வெட்டுக்கிளியானது தன்வாயால் தானே கெடும் என்ற தன்மை கொண்டது எனக் குறிப்பிட்டிருப்பார். அத்தகையப் பண்பினை ஊடையவருக்கு அறிவுறுத்தும் வகையில் வள்ளுவரின் குறள் கொடுக்கப்பட்டுள்ளது அக்குறளின் சரியான விளக்கதினைக் குறிப்பிடுக. “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”
A) நாம் நம் உருப்புகளுடன் சேர்த்து நாவையும் காத்தல் அவசியம்.
B) நாம் எதை காக்கா விட்டாலும் நாவை மட்டுமாவது தவறாமல் காக்க வேண்டும்.
C) நாம் பிறரை எவ்வாறு காக்க நினைக்கிறோமோ அதனைப் போலவே நாவையும் காத்தல் வேண்டும்.
D) நம் நாவினை எவ்வாறு காக்க வேண்டுமோ அதுபோல நம்மை சுற்றி உள்ளவரையும் காத்தல் வேண்டும்.
ANSWER: B
89) காட்டில் உள்ள விலங்குகளும் அவை உண்ணும் உணவுகளின் பெயரும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) மான் – புற்கள்
ஆ) குதிரை – இறைச்சி வகை
இ) வெட்டுக்கிளி – இலைகள்
ஈ) நத்தை – பச்சைபாசி
A) அ மட்டும்
B) இ மட்டும்
C) ஈ மட்டும்
D) ஆ மட்டும்
ANSWER: D
90) பழங்குடியினரின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் வாய்வழி மரபுகளின் பங்கு என்ன?
A) பாரம்பரிய நடைமுறைகளை நவீனப்படுத்துதல்
B) ஒருங்கிணைப்பை ஊக்குவித்தல்
C) கலாச்சார அடையாளத்தை பாதுகாக்க
D) உலகமயமாக்கலை ஊக்குவிக்க
ANSWER: C
91) ஒருவருக்குத் தீங்கு செய்ய நினைத்து அதனை சிறிதும் தயங்காமல் செய்து வரும் ஒருவர் சில நாட்கள் கழித்து அதே போன்ற தீமைகளை அவரும் அனுபவித்தார். என்னும் இக்கருதிற்குப் பொருந்தும் சரியான வரியினைக் குறிப்பிடுக.
A) காற்று உள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்
B) வினை விதைத்தவன் வினை அறுப்பான்
C) பட்ட காலிலேயே படும் கெட்ட குடியிலேயே கெடும்
D) மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
ANSWER: B
92) சருகுமானிற்கு துன்பம் வரும்போது அது எத்தகைய துணையை நாடியது என்பதை மனதில் கொண்டு, நமக்கு துன்பம் வரும்போது நாம் எத்தகையவரின் துணையை நாட வேண்டும் என்பதைக் கொடுக்கப்பட்டுள்ளக் கருத்துக்களில் இருந்து தேர்வு செய்க.
A) வந்துள்ள துன்பத்தைப் போக்கி மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
B) தன்னைப் போன்று துன்பததால் பாதிக்கப்பட்டு அதனை போக்க வழிதெரியா ஒருவரின் துணையினை நாட வேண்டும்.
C) தனக்கான துன்பத்தைக் கண்டு நீங்காமல் துன்பத்துடனே வாழும் பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
D) தன்னுடைய துன்பத்தைப் ஏற்றுக் கொண்டு தன்னோடு பயணிக்க விரும்பும் ஒருவரின் துணையினை நாட வேண்டும்.
ANSWER: A
93) செயல் என்பதன் வேறு சொல்________.
A) குறிப்பு
B) தெரிவு
C) வினை
D) முற்று
ANSWER: C
94) வினைமுற்று எத்தனை நிலைகளில் வரும்.
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
ANSWER: B
95) பன்மை ஏவல் வினை முற்றுக்குப் பொருந்தாத ஒன்றைக் குறிப்பிடுக.
A) ஒரு நபரைக் குறிப்பிடுவது
B) இரண்டு நபரைக் குறிப்பிடுவது
C) மூன்று நபரைக் நபரைக் குறிப்பிடுவது
D) நான்கு நபரைக் குறிப்பிடுவது
ANSWER: A
96) ஒரு செயலைச் செய்யுமாறு கூறுவது _________.
A) வியங்கோள் வினைமுற்று
B) ஏவல் வினைமுற்று
C) தெரிநிலை வினைமுற்று
D) குறிப்பு வினைமுற்று
ANSWER: B
97) உயர்திணைகளில் அமைந்து வருபவைகளில் தவறான ஒன்றைக் குறிப்பிடுக
A) மனிதன்
B) தேவர்
C) விலங்குகள்
D) நரகர்
ANSWER: C
98) பொருந்தாத ஒன்றைக் குறிப்பிடுக
A) அவர்கள் வந்தார்கள்
B) ஆண் குழுவினர் செய்தனர்
C) தோழிகள் வந்தார்கள்
D) தோழியின் வீட்டிற்கு அவள் சென்றாள்
ANSWER: D
99) “ஒருவன் விளையாடுவதற்குப் பட்டம் செய்கிறான்” இவ்வரிகளில் செய்பொருள் __________.
A) ஒருவன்
B) விளையாட
C) பட்டம்
D) செய்கிறான்
ANSWER: C
100) “அவன் நடந்து வந்து வாகனத்தில் சென்றான்” இத்தொடர் _______________.
A) வினைமுற்று
B) குறிப்பு வினைமுற்று
C) ஏவல் வினைமுற்று
D) வியங்கோள் வினைமுற்று
ANSWER: A
101) கொடுக்கப்பட்டுள்ளக் கூற்றினை ஆராய்க
கூற்று 1 : தெரிநிலை வினைமுற்றில் பயின்று வரும் தொடரில் கருவி மற்றும் செய்பொருள் இரண்டும் ஒன்றையேக் குறித்து வரும்.
கூற்று 2 : குறிப்பு வினை முற்றில் இடம் மற்றும் காலம் ஆகிய இரண்டும் வெளிப்படையாக அமைந்து வரும் .
A) கூற்று 1 சரி
B) கூற்று 2 சரி
C) கூற்று 1, 2 சரி
D) கூற்று 1, 2 தவறு
ANSWER: D
102) கொடுக்கப்பட்டுள்ள வினைமுற்று சொல்லின் வேர் சொல்லினைக் குறிப்பிடுக. “போனான்”
A) போன
B) போ
C) போனான்
D) ப்
ANSWER: B
103) கொடுக்கப்பட்டுள்ளதில் பொருந்தாத ஒன்றினைக் குறிப்பிடுக.
A) நடந்தான்
B) நடந்தது
C) நடப்பான்
D) நடந்தேன்
ANSWER: C
104) ஒரு செயல் நடைப்பெறுவதற்கு ________ வகை நிலைகள் வேண்டும்.
A) ஐந்து
B) ஆறு
C) ஏழு
D) எட்டு
ANSWER: B
105) கொடுக்கப்பட்டுள்ளதில் வினைமுற்று பயின்று வராத தொடரினைக் குறிப்பிடுக.
A) அவன் பாடம் படித்தான்
B) அது பறந்து வந்து
C) மாடு கத்தியது
D) அவள் பாடினாள்
ANSWER: B
106) வகுப்பில் ஆசிரியர் மாணவனை ஒரு வினைமுற்று வாக்கியத்தினைக் கூறுமாறு கூறினார். அம்மாணவன் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தைக் கூறினான். “நானும் எனது தம்பியும் என் நண்பனின் வீட்டிற்கு சென்று வந்து” என முடித்தான். அம்மாணவன் கூறிய வரிகள் சரியா அல்லது தவறா என்பதையும் அதற்கான சரியானக் காரணத்தினையும் குறிப்பிடுக.
A) அவன் தன் நண்பனின் வீட்டிற்குச் சென்று வந்துவிட்டதைக் குறிப்பதால் இது வினைமுற்று வாக்கியம். எனவே, அம்மாணவன் கூறியது சரியானது.
B) அவன் தன் நண்பனின் வீட்டிற்குச் சென்று வந்தாலும், வந்து என்ன செய்தான் என கூறாமல் முடிவடைந்துள்ளதால் இது வினை முற்று வாக்கியம் இல்லை. எனவே, அம்மாணவன் கூறியது தவறானது.
C) அவன் தன் நண்பனின் வீட்டிற்கு சென்றதைக் கூறியதாலே அவ்வாக்கியம் முற்றுப்பெற்று வினை முற்றாக மாறியது. எனவே, அம்மாணவன் கூறியது சரியானது.
D) அவன் பயன்படுத்திய வாக்கியத்தில் தன்னை மட்டும் குறிப்பிட்டிருக்க வேண்டும் அவனுடைய தம்பியையும் குறிப்பிட்டு வந்து என முடிந்துள்ளதால் அவ்வாக்கியம் வினைமுற்று அல்ல எனவே அம்மாணவன் கூறியது தவறானது.
ANSWER: B
107) “அன்பு, சிறு வீடு காட்டினான்” இவ்வரிகளில் நிலமும், கருவி, காலம் அமைந்து வந்துள்ளதா? என்பதை அறிந்து சரியானதைக் குறிப்பிடுக.
A) இவ்வரியில் காலம், கருவி மட்டுமே அமைந்துள்ளது. நிலத்தினைக் குறிக்கும் எவ்வித குறிப்புகளும் இல்லை .
B) இவ்வரியில் நிலம், காலம் மற்றும் கருவியினை குறிக்கும் எவ்வகை சொற்களும் குறிப்படவில்லை.
C) இவ்வரியில் காலத்தினைக் குறிக்கும் சொற்கள் இல்லை. நிலம் மற்றும் கருவி குறிக்கும் சொற்கள் மட்டுமே அமைந்து வந்துள்ளது .
D) இவ்வரியில் நிலம், காலம் மற்றும் கருவி அனைத்தும் அமைந்து வந்துள்ளது.
ANSWER: D
108) கொடுக்கப்பட்டுள்ளவைகளில் குணப்பெயரினைக் கொண்டிருக்காத பெயர் அமைந்து வந்துள்ள தொடரினைக் குறிப்பிடுக.
A) இனியன் என் நண்பன்
B) கரியனின் வேலை துணி தைப்பது
C) நெட்டையன் இங்கு வந்து சென்றான்
D) ஆறுமுகன் நல்ல பண்புகளை உடையவன்
ANSWER: D
109) ஏவல் வினை முற்றினைப் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மாணவர்கள் ஒவ்வொருவரையும் ஏவல் வினைமுற்றுடன் இருக்குமாறு ஒரு தொடரினைக் கூறுமாறு வினாவினார். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொடர்களைக் கூறுகின்றனர். முதல் மாணவன் “அங்கு யாரும் ஓடாதீர்கள்” என்றும் கூறுகிறான். இரண்டாம் மாணவன் “இங்கு நீ வராதே” என்றுக் கூறினான். மூன்றாம் மாணவன் “அவர்கள் இங்கு வருவது எனக்கு மகிழ்ச்சி” என்றுக் கூறினான். நான்காம் மாணவன் “என் சகோதரியை அங்கேயே நிற்கச்சொல்” என்றுக் கூறுகிறான். இவர்களில் யார் கூறியது தவறு என்பதனைக் கண்டறிக.
A) முதல் மாணவன்
B) இரண்டாம் மாணவன்
C) மூன்றாம் மாணவன்
D) நான்காம் மாணவன்
ANSWER: C
110) வகுப்பறையில் நடத்திய வியங்கோள் வினைமுற்றினைப் பற்றி இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களில் ஒருவன் பலர்பாலினையும், படர்க்கையும் குறித்து சில வார்தைகளைக் கூறுமாறுக் கேட்கிறான். அதற்கு அவனது நண்பன் இவ்வாறு வியங்கோள் வினைமுற்றில் குறிப்பிடுவதற்கு எந்த சொற்களும் இல்லை எனக் கூறினான். அவ்வாறு அவன் கூறியது சரியானதா என்பதனை அறிந்து வியங்கோள் வினைமுற்று என்பது எத்தகையத் தன்மை உடையது எனக் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் இருந்துக் குறிப்பிடுக.
A) வியங்கோள் வினைமுற்றில் இரு திணைகளையும், மூன்று காலங்களை மட்டுமே குறிக்கும்
B) வியங்கோள் வினைமுற்று காலத்தை வெளிப்படையாக காட்டாமல் வரும்
C) ஒரு தொடர் அரமித்து முடிவு பெற்றாலே அது வியங்கோள் வினைமுற்று.
D) மூன்று இடங்களையும் ஐந்து பால்களையும் குறித்து வருவது வியங்கோள் வினைமுற்று
ANSWER: D
111) “ஓவியன் ஓவியம் வரைந்தான்” இவ்வரிகளினைக் கொண்டு செய்பவர், கருவி, நிலம், செயல், செய்பொருள், காலம் இவை அனைத்தும் வரிசையாக அமைந்து வந்துள்ள சரியான வரியினைக் குறிப்பிடு.
A) ஓவியன், ஓவியம், ஓவியக் கூடம், ஓவியம் வரைதல், ஊளி, தற்காலம்
B) ஓவியன், ஓவியக்கூடம், தூரிகை, ஓவியம், சிற்பம் வரைதல், நிகழ்காலம்
C) ஓவியன், தூரிகை, ஓவியக்கூடம், ஓவியம் வரைதல், ஓவியம், இறந்தக் காலம்
D) ஓவியக்கூடம், ஓவியம் வரைதல், ஓவியம், ஓவியன், தூரிகை, எதிர்காலம்
ANSWER: C
112) கொடுக்கப்பட்டுள்ளதில் குறிப்பு வினை பற்றிய கூற்றுக்களை ஆராய்ந்து அவற்றில் தவறான ஒன்றைக் குறிப்பிடுக.
கூற்று 1 : குறிப்பு வினை என்பது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்று அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு வாக்கியமாக வரும்.
கூற்று 2 : குறிப்புவினை என்பதும் வினைக்குறிப்பு என்பதும் ஒரே பொருள்படும் சொற்களாகும். குறிப்புவினை சொல் வடிவால் காலம் காட்டுவதில்லை.
கூற்று 3 : பொன்னான் வந்தான் என்பதில் பொன்னன் என்பது எழுவாயாக உள்ளது. அவன் பொன்னன் என்பதில் பொன்னன் பயநிலையாக உள்ளது.
கூற்று 4 : குறிப்பு வினையில் தச்சு வேலைச் செய்பவரைக் குறிப்பிடும்போது தச்சர் என்றுக் குறிப்பிடுவது . தொழிற்பெயராக குறிப்பிடப்படும் .
A) கூற்று 1 தவறு
B) கூற்று 2 தவறு
C) கூற்று 3 தவறு
D) கூற்று 4 தவறு
ANSWER: A
113) கொடுக்கப்பட்டுள்ளக் கூற்றினை ஆராய்ந்து தவறானது கூற்றினைக் குறிப்பிடுக.
கூற்று 1 : ஒரு பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல்லுக்கு வினைசொல் என்று பெயர்.
கூற்று 2 : உயிர்ப்பொருள், உயிரற்றப் பொருள் ஆகியவற்றின் தொழிலையே வினை என்கிறோம்.
கூற்று 3 : வினைச்சொல் காலத்தைக் காட்டாது வேற்றுமை உருபை ஏற்கும்
கூற்று 4 : நீர் ஓடுகிறது என்னும் வரிகளில் நீரின் வினை ஓடுவது எனக் குறிப்பிடப்படுகிறது.
A) கூற்று 1 தவறு
B) கூற்று 2 தவறு
C) கூற்று 3 தவறு
D) கூற்று 4 தவறு
ANSWER: C
114) வியங்கோள் வினைமுற்று நான்கு பொருள்களில் வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அந்த நான்குப் பொருள்களுக்குப் அவைகளுக்கான எடுத்துக்காட்டும் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றில் சரியானவைகளைக் குறிப்பிடுக.
அ. வாழ்த்துதல் – வீழ்க, ஒழிக
ஆ. வைதல் – வெல்க, வாழ்க
இ. விதித்தல் – உண்க, அமர்க
ஈ. வேண்டால் – அருள்க, ஆசீர்வதிக்க
A) அ மற்றும் ஆ சரி
B) இ மற்றும் ஈ சரி
C) அ மற்றும் இ சரி
D) ஆ மற்றும் ஈ சரி
ANSWER: B
115) கொடுக்கப்பட்டுள்ள வரிகளில் ஏவல் வினைமுற்றினைப் பற்றிய சரியான வரிகளைக் குறிப்பிடுக.
அ. பன்மை ஏவல் வினைமுற்று என்பது ஒருவர் தன் முன் இருப்பவர்களுக்குக் கட்டளை விதிப்பது.
ஆ. செய்யுள்களில் ஏவல் வினைகள் பெரும்பாலும் வாராய்,சொல்லாய் போன்ற சொற்களில் அமைந்து வரும்.
இ. ஆய் என்னும் விகுதியினைக் கொண்டு மட்டுமே ஏவல் ஒருமை வினைமுற்று வரும்
ஈ. திறவேல் என்று ஒருவரைக் குறிப்பிட்டால் அது ஒருமை ஏவல் வினைமுற்றாக அமையாது.
A) அ மற்றும் ஆ சரி
B) ஆ மற்றும் இ சரி
C) இ மற்றும் ஈ சரி
D) ஈ மற்றும் அ சரி
ANSWER: A