TNPSC TAMIL QUESTIONS COLLECTION – 02
26) விடை வகைகள் :
‘கடைத்தெரு எங்குள்ளது’ என்ற வினாவிற்கு இப்பக்கத்தில் உள்ளது எனக் கூறல் :
எவ்வகை விடை?
(A) சுட்டுவிடை
(B) இனமொழிவிடை
(C) உறுவது கூறல்விடை
(D) ஏவல்விடை
(E) விடை தெரியவில்லை
27) பிறமொழிச் சொற்கள் கலவாத – தொடரை எடுத்து எழுது.
(A) என் நண்பன் ஏரோப்பிளேனில் பயணம் செய்தான்
(B) என் நண்பன் வானூர்தியில் பயணம் செய்தான்
(C) முக்கியஸ்தர் வானூர்தியில் பயணம் செய்தார்
(D) என் நண்பன் இரயிலில் பயணம் செய்தான்
(E) விடை தெரியவில்லை
28) பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை – எடுத்து எழுதுக.
(A) இராமநாதபுரம் சமஸ்தானம் பெரியது
(B) வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்
(C) திருவிழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்
(D) ஷாப்பிங்மால் அருகாமையில் உள்ளது
(E) விடை தெரியவில்லை
29) பொருத்துக.
(a) கீது – 1. இலை
(b) எல – 2. சாப்பிட்டான்
(c) ஒலகம் – 3. இருக்கிறது
(d) சாப்ட்டான் – 4. உலகம்
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 4 2 3 1
(C) 4 3 2 1
(D) 2 3 1 4
(E) விடை தெரியவில்லை
30) எழுத்து வழக்குத் தொடரைத் தேர்ந்தெடு.
(A) அதிக தொலைவிலிருந்து வருகிறேன்
(B) ரெம்ப தொலைவிலிருந்து வருகிறேன்
(C) ரொம்ப தொலைவிலிருந்து வாரென்
(D) ரொம்பத் தொலவட்லயிருந்து வர்ரென்
(E) விடை தெரியவில்லை
31) திருவள்ளுவரின் புகழை _ உலகமே அறிந்துள்ளது.
(A) குடத்துள் இட்ட விளக்கு போல
(B) உள்ளங்கை நெல்லிக்கனி போல
(C) பசுமரத்தாணி போல
(D) கண்ணை இமை காப்பது போல
(E) விடை தெரியவில்லை
32) கீழ்கண்டவற்றுள் இரண்டு சொற்கள் இணைந்து உருவாக்கப்படாதச் சொல்லைக் கண்டறிக.
(A) தலைவன்
(B) தலைவிதி
(C) தலையெழுத்து
(D) தலைமகன்
(E) விடை தெரியவில்லை
33) சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
- காட்சியைப் பார்
- என கேட்டார்
- ஊருக்கு செல்
- கதவைத் திற
(A) 1 மற்றும் 4
(B) 2 மற்றும் 3
(C) 1 மற்றும் 3
(D) 4 மற்றும் 2
(E) விடை தெரியவில்லை
34) கீழ்க்காணும் சொற்களில் கூட்டப் பெயர்களைக் கண்டுபிடித்து பொருத்துக. (கூட்டமாக)
(a) கல் 1. கட்டு
(b) பழம் 2. குவியல்
c) புல் 3. மந்தை
(d) ஆடு 4. குலை
(a) (b) (c) (d)
A) 2 4 1 3
(B) 3 4 1 2
(C) 1 4 2 3
(D) 4 3 2 1
(E) விடை தெரியவில்லை
35) அடைப்புக்குள் உள்ள எழுத்தைத் தகுந்த இடத்தில் சேர்க்க (ஐ)
(A) ஆடை __ அணிந்தேன்
(B) தோசை _ மாவு
(C) பள்ளி __ சென்றேன்
(D) கண்ணன் __ சட்டை
(E) விடை தெரியவில்லை
36) சிறு – சீறு என்ற சொற்களின் பொருள் தரும் தொடரைத் தேர்ந்தெடுக்க.
(A) சிறிய வீடு கட்டிச் சிறப்பாக வாழ்ந்தான்
(B) ஆற்றங்கரையோரம் கோபத்துடன் அமர்ந்திருந்தான்
(C) சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேற உழைக்க வேண்டும்
(D) சிறு குட்டியாக இருந்தாலும் சீறுவதில் புலியை மிஞ்ச முடியாது
(E) விடை தெரியவில்லை
37) கூற்று காரணம் – சரியா? தவறா?
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ் மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே
கூற்று :
(1) தமிழை வாழ்த்தி பாடப்பட்ட பாடல்
(2) பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது
(3) இதனைப் பாடியவர் பாரதிதாசன்
(A) கூற்று (1), (2), (3) சரி
(B) கூற்று (1), (2), (3) தவறு
(C) கூற்று (3) சரி, (1), (2) தவறு
(D) கூற்று (1), (2) சரி (3) தவறு
(E) விடை தெரியவில்லை
38) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.
சொல் பொருள்
(a) விசும்பு 1. சிறப்பு
(b) ஊழி 2. முறை
(c) ஊழ் 3. வானம்
(d) பீடு 4. யுகம்
(a) (b) (c) (d)
(A) 4 1 2 3
(B) 2 3 4 1
(C) 3 4 2 1
(D) 1 2 4 3
(E) விடை தெரியவில்லை
39) சொல்லுக்கானப் பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக.
நுணங்கிய கேள்வியர்
(A) கேள்விக்கு விடை அறிந்தவர்
(B) நுட்பமான கேள்வியறிவு உடையவர்
(C) மெத்த படித்த கல்வியாளர்
(D) காது கேட்கும் திறன் இல்லாதோர்
(E) விடை தெரியவில்லை
40) கீழ்காணும் சொல்லுக்கானப் பொருளைத் தேர்ந்தெடு.
பேணாமை
(A) பாதுகாத்தல்
(B) பாதுகாக்காமை
(C) பேணுதல்
(D) பேணிக்காத்தல்
(E) விடை தெரியவில்லை
41) பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
செவிச்செல்வம்
(A) செவித்திறன்
(B) கேட்கும் சக்தி
(C) கேட்பதால் பெறும் அறிவு
(D) அறிவு அற்றங்காக்கும் கருவி
(E) விடை தெரியவில்லை
42) சரியான தொடரைக் கண்டறிக :
(A) கந்தனும் வள்ளியும் வந்தான்
(B) நல்ல மாணவர் காலையில் படிப்பான்
(C) இவன் நேற்று வந்தவனல்லன்
(D) நாளை நான் வருகிறேன்
(E) விடை தெரியவில்லை
43) சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.
(A) நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்
(B) இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்
(C) இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்
(D) இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு
(E) விடை தெரியவில்லை
44) சரியான தொடரைக் கண்டறிக :
(A) ஒரு ஊர் ஓர் கடல்
(B) ஒரு ஊர் ஒரு கடல்
(C) ஓர் ஊர் ஒரு கடல்
(D) ஓர் ஊர் ஓர் கடல்
(E) விடை தெரியவில்லை
45) பிழை திருத்துக – சரியான எண்ணடையைத் தேர்வு செய்க.
இரண்டு + ஆண்டு
(A) இரண்டு ஆண்டு
(B) இரு ஆண்டு
(C) ஈராண்டு
(D) மூன்றும் சரி
(E) விடை தெரியவில்லை
கீழ்க்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு.
கப்பல் பல்வேறு வகையான உறுப்புகளை உடையது, எரா, பருமல் வங்கு. கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம் போன்றவை கப்பல் உறுப்புகளுள் சிலவாகும். கப்பலின் முதன்மையாகிய உறுப்பாகிய அடிமரம் ‘எரா’ எனப்படும். குறுக்கு மரத்தை பருமல் என்பர். கப்பலை செலுத்துவதற்கும், உரிய திசையில் திருப்பதற்கும் பயன்படும் முதன்மையான கருவி ‘சுக்கான்’ எனப்படும். கப்பல் கட்டும் கலைஞர்கள் ‘கம்மியர்’ என்றழைக்கப்படுகின்றனர். பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று பரிபாடல் கூறுகிறது.
46) கப்பல் கட்டும் கலைஞர்கள் _ -என்றழைக்கப்படுகின்றனர்.
(A) மாலுமி
(B) கம்மியர்
(C) கண்ணடை
(D) தச்சர்
(E) விடை தெரியவில்லை
47) கப்பலின் முதன்மை உறுப்பு எது?
(A) எரா
(B) வங்கு
(C) கூம்பு
(D) பருமல்
(E) விடை தெரியவில்லை
48) பருமல் எனப்படுவது யாது?
(A) அடிமரம்
(B) குறுக்குமரம்
(C) பாய்மரம்
(D) நங்கூரம்
(E) விடை தெரியவில்லை
49) கப்பலை உரிய திசையில் செலுத்த பயன்படும் கருவி யாது?
(A) சக்கரம்
(B) சுக்கான்
(C) கைப்பிடி
(D) ஒலிப்பான்
(E) விடை தெரியவில்லை
50) பாய்மரக்கப்பலில் பாய், கயிற்றில் ஏற்படும் பழுதினை சரிசெய்யும் பொருளை எழுது.
(A) மரப்பட்டை
(B) அடிமரம்
(C) இரும்புப்பட்டை
(D) மரப்பிசின்
(E) விடை தெரியவில்லை
- ‘எற்பாடு’ – பிரித்து எழுதுக.
(A) எல் + பாடு
(B) எற் + பாடு
(C) எழு + பாடு
(D) எழுமை + பாடு
(E) விடை தெரியவில்லை
- நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(A) நம் + இல்லை
(B) நமது +இல்லை
(C) நமன் + நில்லை
(D) நமன் + இல்லை
(E) விடை தெரியவில்லை
- நீலம் + வான் – சேர்த்து எழுதுக.
(A) நீலம்வான்
(B) நீளம்வான்
(C) நீலவ்வான்
(D) நீலவான்
(E) விடை தெரியவில்லை
- ஓடை + எல்லாம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
(A) ஓடைஎல்லாம்
(B) ஓடையெல்லாம்
(C) ஓட்டையெல்லாம்
(D) ஓடெல்லாம்
(E) விடை தெரியவில்லை
- பிரித்து எழுதுக :
ஆற்றுணா
(A) ஆற்று + உணா
(B) ஆற்று + உண்ணா
(C) ஆறு + உணா
(D) ஆறு + உண்ணா
(E) விடை தெரியவில்லை
- பொருந்தா இணையைக் கண்டறிக.
(A) சிலம்பு – காலில் அணிவது
(B) சூழி – நெற்றியில் அணிவது
(C) குழை – காதில் அணிவது
(D) அரைநாண் – இடையில் அணிவது
(E) விடை தெரியவில்லை
- பொருந்தா இணையைக் கண்டறிக.
(A) அள்ளல் – அள்ளுதல்
(B) வெரீஇ – அஞ்சி
(C) நந்து – சங்கு
(D) முத்தம் – முத்து
(E) விடை தெரியவில்லை
- இதில் தவறான இணை எது?
(A) பொக்கிஷம் – செல்வம்
(B) சாஸ்தி – மிகுதி
(C) விஸ்தாரம் – பரப்புதல்
(D) சிங்காரம் – அழகு
(E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதவற்றைக் கண்டறிக.
(A) சப்பாத்திக் கள்ளி, தாழை – இலை
(B) கமுகு (பாக்கு) – கூந்தல்
(C) நெல், வரகு – தாள்
(D) கரும்பு, நாணல் – தோகை
(E) விடை தெரியவில்லை
- சந்திப் பிழை :
கதையை படித்தேன்
(A) கதை படித்தேன்
(B) கதையைப் படித்தேன்
(C) கதையில் படித்தேன்
(D) கதையால் படித்தேன்
(E) விடை தெரியவில்லை
- ‘புலிக்குட்டி’ என்பதில் உள்ள வழுவை நீக்குக.
(A) புலிப்பறழ்
(B) புலிக்கன்று
(C) புலிக்குருளை
(D) புலிப்பிள்ளை
(E) விடை தெரியவில்லை
- மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
(A) சிங்கப்பறழ்
(B) சிங்கக்குட்டி
(C) சிங்கக்குருளை
(D) சிங்கக்கன்று
(E) விடை தெரியவில்லை
- சொல்லை இணைத்துப் புதிய சொல் உருவாக்குக.
நெல்
(A) குருத்து
(B) நாற்று
(C) தளிர்
(D) கொழுந்து
(E) விடை தெரியவில்லை
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக.
(A) Homograph – மெய்யெழுத்து
(B) Consonant – ஒப்பெழுத்து
(C) Monolingual – ஒருமொழி
(D) Discussion – உரையாடல்
(E) விடை தெரியவில்லை
- ‘கற்றான்’- என்பதன் வேர்ச்சொல் அறிக.
(A) கல்
(B) கற்ற
(C) கற்று
(D) கற்றா
(E) விடை தெரியவில்லை
- வேர்ச்சொல் காண்க – தந்தான்
(A) தந்த
(B) தந்து
(C) தர
(D) தா
(E) விடை தெரியவில்லை
- வேர்ச்சொல்லில் தொழிற்பெயர் காண்க.
“ஓடு”
(A) ஓடுதல்
(B) ஓடிய
(C)ஓடியவன்
(D) ஓடி
(E) விடை தெரியவில்லை
- வேர்ச்சொல்லை வினையெச்சமாக மாற்றுக :
“ஓடு”
(A) ஓடியவன்
(B) ஓடிய
(C) ஓடுதல்
(D) ஓடி
(E) விடை தெரியவில்லை
- அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்தல்
ஒழுக்கம்,உயிர், ஆடு, எளிமை, அன்பு, இரக்கம், ஓசை, ஐந்து, ஈதல், ஊக்கம், ஏது, ஒளவை
(A) அன்பு, ஆடு, இரக்கம், ஈதல், உயிர், ஊக்கம், எளிமை, ஏது, ஐந்து, ஒழுக்கம், ஓசை, ஒளவை
(B) இரக்கம், உயிர், அன்பு, ஆடு, ஈதல், எளிமை, ஒளவை, ஐந்து, ஓசை, ஊக்கம், ஏது, ஒழுக்கம்
(C) உயிர், ஊக்கம், எளிமை, ஏது, அன்பு, ஆடு, இரக்கம், ஈதல், ஒளவை, ஐந்து, ஒழுக்கம், ஓசை
(D) எளிமை, ஏது, அன்பு, இரக்கம், ஆடு, ஈதல், ஊக்கம், ஒழுக்கம், ஐந்து, ஓசை, ஒளவை, உயிர்
(E) விடை தெரியவில்லை
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
(A) குருத்து, கொழுந்தாடை, கவை, கைம்பெண்
(B) கவை, குருத்து, கொழுந்தாடை, கைம்பெண்
(C) கைம்பெண், கவை, குருத்து, கொழுந்தாடை
(D) கொழுந்தாடை, கைம்பெண், கவை, குருத்து
(E) விடை தெரியவில்லை
- அகர வரிசைப்படுத்துக.
எழுத்து, இரண்டல்ல, உரைநடை, ஐயம்
(A) உரைநடை, எழுத்து, ஐயம், இரண்டல்ல
(B) ஐயம், எழுத்து, உரைநடை, இரண்டல்ல
(C) இரண்டல்ல, உரைநடை, எழுத்து. ஐயம்
(D) எழுத்து, உரைநடை, ஐயம், இரண்டல்ல
(E) விடை தெரியவில்லை
- சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்.
(A) பரணி பாடும் இலக்கியம் பகைவரை – வென்றதை ஆகும்
(B) பகைவரை வென்றதை இலக்கியம் – பாடும் பரணி ஆகும்
(C) பரணி பாடும் பகைவரை வென்ற இலக்கியம் ஆகும்
(D) பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்
(E) விடை தெரியவில்லை
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்.
(A) நாட்டுப்புறப்பாடல்கள் அறிதல் வழி மக்களின் உணர்வு
(B) நாட்டுப்புறப்பாடல்கள் வழி மக்களின் உணர்வுகளை அறிதல்
(C) மக்களின் உணர்வுகளை அறிதல் நாட்டுப்புறப்பாடல்
(D) மக்களின் உணர்வுகளை அறிதல் வழி நாட்டுப்புறப்பாடல்
(E) விடை தெரியவில்லை
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.
அப்துல் நேற்று வந்தான்
(A) தன்வினைத் தொடர்
(B) உடன்பாட்டு வினைத்தொடர்
(C) பிறவினைத் தொடர்
(D) செயப்பாட்டு வினைத்தொடர்
(E) விடை தெரியவில்லை
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.
அப்துல் நேற்று வருவித்தான்
(A) கட்டளைத் தொடர்
(B) எதிர்மறை வினைத்தொடர்
(C) பிறவினைத்தொடர்
(D) தன்வினைத்தொடர்
(E) விடை தெரியவில்லை
- “மழை காணாப் பயிர் போல” – உவமை கூறும் பொருள் தெளிக.
A) சோகம்
(B) அழுகை
(C) உவகை
(D) சிரிப்பு
(E) விடை தெரியவில்லை
- “குன்றேறி யானைப்போர் கண்டற்றால்” – உவமை கூறும் பொருள் தெளிக.
(A) பயம்
(B) பாதுகாப்பு
(C) மலை
(D) சண்டை
(E) விடை தெரியவில்லை
- சரியான விடையை கண்டறி.
(A) Guild – பாசனம்
(B) Patent – வணிகம்
(C) Irrigation – காப்புரிமை
(D) Document – ஆவணம்
(E) விடை தெரியவில்லை
- ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக :
சைதாப்பேட்டை என்பதன் மரூஉ.
(A) சைதாப்பூர்
(B) சைதாப்பேட்டை
(C) சைதன்யம்
(D) சைதை
(E) விடை தெரியவில்லை
- ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக:
மயிலாப்பூர் என்பதன் மரூஉ.
(A) மயிலை
(B) மந்தைவெளி
(C) மயிலாப்பூர்
(D) மயில் பட்டினம்
(E) விடை தெரியவில்லை
- நிறுத்தற்குறிகள் இரட்டை மேற்கோள் குறி :
திரு.வி.க. மாணவர்களிடம் தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள் என்று கூறினார்
(A) திரு.வி.க மாணவர்களிடம், “தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்” என்று கூறினார்
(B) “திரு.வி.க” மாணவர்களிடம் தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள் என்று கூறினார்
(C) திரு.வி.க மாணவர்களிடம் தமிழ்க் காவியங்களைப் படியுங்கள் “இன்பம்” நுகருங்கள் என்று கூறினார்
(D) திரு.வி.க மாணவர்களிடம் தமிழ்க் காவியங்களைப் படியுங்கள் இன்பம் “நுகருங்கள்” என்று கூறினார்
(E) விடை தெரியவில்லை
- சரியான நிறுத்தற்குறியிட்ட தொடரினை தேர்ந்தெடு.
(A) கு. ஆண்டாள், எண் 45, காமராசர் தெரு, திருவள்ளூர்.
(B) கு. ஆண்டாள், எண் 45 காமராசர் தெரு, திருவள்ளூர்.
(C) கு.ஆண்டாள், எண் 45, காமராசர் தெரு, திருவள்ளூர்
(D) கு. ஆண்டாள் எண் 45 காமராசர் தெரு திருவள்ளூர்.
(E) விடை தெரியவில்லை
- தவறான இணையை தேர்ந்தெடு.
(A) பாம்பு வீட்டிற்குள் புகுந்தது (எதிர்காலம்)
(B) இன்று வீட்டிற்குள் புகுகிறான் (நிகழ்காலம்)
(C) காலையில் பள்ளிக்குப் புகுவான் (எதிர்காலம்)
(D) நேற்று பள்ளிக்குப் புகுந்தான் (இறந்த காலம்)
(E) விடை தெரியவில்லை
- இலக்கண முறைப்படி இவற்றுள் சரியான காலத்தைக் காட்டுவது எது ?
(A) நேற்று வருவான்
(B) நேற்று வருகிறான்
(C) நேற்று வரப்போகிறான்
(D) நேற்று வந்தான்
(E) விடை தெரியவில்லை
- சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு :
பொய்கையாழ்வார் __ பாமாலை சூட்டுகிறார்?
(A) எதற்காக
(B) என்ன
(C) எவற்றை
(D) எங்கு
(E) விடை தெரியவில்லை
- சரியான சொல் எது ?
பெண்ணுக்குரிய கடமை _
(A) யார்?
(B) யாது?
(C) ஏன்?
(D) எப்படி?
(E) விடை தெரியவில்லை
- இதில் தவறான இணை எது?
(A) செல்வி + ஆடினாள் – மெய்யீறு + மெய்ம்முதல்
(B) கோல் + ஆட்டம் – மெய்யீறு + உயிர்முதல்
(C) பாலை + திணை – உயிரீறு + மெய்ம்முதல்
(D) மண் + சரிந்தது – மெய்யீறு + மெய்ம்முதல்
(E) விடை தெரியவில்லை
- பொருத்துக :
(a) ஆறு 1. விரைவாக நடத்தல், கூரையோடு
(b) திங்கள் 2. வழி, நதி
(c) ஓடு 3. சிரிப்பு, அணிகலன்
(d) நகை 4. மதி, மாதம்
(a)(b)(c)(d)
(A) 1 2 3 4
(B) 4 3 2 1
(C) 2 4 1 3
(D) 1 4 2 3
(E) விடை தெரியவில்லை
- இரு பொருள் தருக-
(வரி)
(A) வரிசை, எழுதுதல்
(B) அரசுக்குச் செலுத்துவது, வரிசை
(C) அரசுக்குச் செலுத்துவது, எழுதுதல்
(D) வடிவம், வரிசை
(E) விடை தெரியவில்லை
- “வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே” – இவ்வடி உணர்த்தும் பொருள் அறிக.
(A) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
(B) வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்
(C) செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்
(D) பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்
(E) விடை தெரியவில்லை
- கூற்று காரணம் – சரியா ? தவறா?
(1) சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.
(2) தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
(3) இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர்.
(4) இவர் பாடலில் உவமைகளைப் பயன்படுத்தமாட்டார்.
(A) கூற்று நான்கும் சரி
(B) கூற்று நான்கும் தவறு
(C) கூற்று (1), (2), (3) சரி (4) மட்டும் தவறு
(D) கூற்று (1), (2), (4) சரி (3) மட்டும் தவறு
(E) விடை தெரியவில்லை
- ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச் சொல்லைத் தெரிவு செய்க.
எப்பிக் லிட்ரேச்சர் (Epic Literature) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச் சொல்லைத் தெரிவு செய்க.
(A) செவ்விலக்கியம்
(B) காப்பிய இலக்கியம்
(C) பக்தி இலக்கியம்
(D) பண்டைய இலக்கியம்
(E) விடை தெரியவில்லை
- Forestry – என்ற பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்.
(A) வன விலங்குகள்
(B) வனப்பாதுகாவலர்
(C) வனவியல்
(D) காடுகள்
(E) விடை தெரியவில்லை
- கீழ்காணும் சொல்லுக்கானப் பொருளை தெரிவு செய்க.
பசுமண் கலம்
(A) சுடாத மண்கலம்
(B) சுட்டப் பானை
(C) சுடுகின்ற கலங்கள்
(D) மண்பாண்டக் கலை
(E) விடை தெரியவில்லை
- ‘கட்டுரையைப் படித்தான்’ இது எவ்வகைத் தொடர்?
(A) பெயரெச்சத் தொடர்
(B) வினையெச்சத் தொடர்
(C) விளித் தொடர்
(D) வேற்றுமைத் தொடர்
(E) விடை தெரியவில்லை
- ‘வாழையிலை விருந்து விழா’வை ஆண்டுதோறும் கொண்டாடும் நாடு எது ?
(A) இந்தியா
(B) ரஷ்யா
(C) அமெரிக்கா
(D) இலங்கை
(E) விடை தெரியவில்லை
- சரியான கூட்டப் பெயர்களைப் பொருத்துக.
(a) பழம் 1. கட்டு
(b) எறும்பு 2.குலை
(c) வாழை 3.சாரை
(d) புல் 4.தோப்பு
(a)(b)(c)(d)
(A) 2 3 1 4
(B) 2 3 4 1
(C) 2 4 3 1
(D) 2 4 1 3
(E) விடை தெரியவில்லை
- சொல் – பொருள் -பொருத்துக.
(a) செறு 1. பனையோலைப் பெட்டி
(b) வித்து 2. புதுவருவாய்
(c) யாணர் 3. விதை
(d) வட்டி 4. வயல்
(a)(b)(c)(d)
(A) 2 4 3 1
(B) 3 4 1 2
(C) 4 3 2 1
(D) 1 3 4 2
(E) விடை தெரியவில்லை
- சொல் – பொருள் பொருத்துக.
இயற்கை வங்கூழ் ஆட்ட
(A) நிலம்
(B) நீர்
(C) காற்று
(D) நெருப்பு
(E) விடை தெரியவில்லை
- ஒருமைச் சொல் – இது பழம்.
(A) அன்று
(B) அல்ல
(C) அவை
(D) அவைகள்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:
26) A
27) B
28) B
29) A
30) A
31) B
32) A
33) A
34) A
35) A
36) D
37) D
38) C
39) B
40) B
41) C
42) C
43) B
44) C
45) C
46) B
47) A
48) B
49) B
50) D
51) A
52) D
53) D
54) B
55) C
56) B
57) A
58) C
59) A
60) B
61) A
62) C
63) B
64) C
65) A
66) D
67) A
68) D
69) A
70) B
71) C
72) D
73) B
74) A
75) C
76) A
77) B
78) D
79) D
80) A
81) A
82) A
83) A
84) D
85) A
86) B
87) A
88) C
89) B
90) A
91) C
92) B
93) C
94) A
95) D
96) C
97) B
98) C
99) C
100) A