NMMS Social Questions and Answers:
1) ராஜபுதனத்தில் மிகவும் புகழ்பெற்றது
(1) மாளவம்
(2) குஜராத்
(3) சித்தூர்
(4) கன்னோஜ்
ANSWER KEY – 3
2) சித்தூரின் ராணா மாளவத்தை வெற்றிகொண்டதன் நினைவாக நிறுவப்பட்ட தூண் _______________
(1) ஜெய ஸ்தம்பா
(2) கஜூராகோ
(3) குதுப்மினார்
(4) சாரணாத்
ANSWER KEY – 1
3) பந்தேல்கண்டின் ராஜபுத்திர இனக்குழு _________
(1) தோமரர்கள்
(2) சந்தேலர்கள்
(3) செளகான்கள்
(4) பரமாரர்கள்
ANSWER KEY – 2
4) ராஜபுத்திர அரசகுலங்களின் எண்ணிக்கை
(1) 16
(2) 26
(3) 36
(4) 46
ANSWER KEY – 3
5) கூர்ஜர அரச வம்சத்திற்கு அடிக்கல் நாட்டியவர் ___________
(1) ஹரிச்சந்திரா
(2) வத்சராஜா
(3) முதலாம் போஜா
(4) முதலாம் நாகபட்டர்
ANSWER KEY – 1
6) பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் ___________
(1) ஹரிச்சந்திரா
(2) ராமபத்ரா
(3) மிகிர போஜா
(4) முதலாம் நாகபட்டர்
ANSWER KEY – 4
7) பால அரச வம்சத்தை உருவாக்கியவர் ____________
(1) தர்மபாலர்
(2) கோபாலர்
(3) தேவபாலர்
(4) முதலாம் மகிபாலர்
ANSWER KEY – 2
8) விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர்
(1) தர்மபாலர்
(2) ஜெயபாலர்
(3) தேவபாலர்
(4) முதலாம் மகிபாலர்
ANSWER KEY – 1
9) பௌத்த கல்விக்கான மிகச்சிறந்த மையம்
(1) விக்கிரமசீலா
(2) நாளந்தா
(3) கஜூராகோ
(4) தில்வாரா
ANSWER KEY – 1
10) பௌத்தர்களுக்கு ஐந்து கிராமங்களை கொடையாக வழங்கியவர்
(1) ஜெயபாலர்
(2) தர்மபாலர்
(3) தேவபாலர்
(4) முதலாம் மகிபாலர்
ANSWER KEY – 3
11) தர்மபாலர், தேவபாலர் ஆகியோரின் ஆட்சிக் காலங்கள் வங்காள வரலாற்றின் சிறப்புமிக்க ஒளிரும் அத்தியாயங்கள் என கூறிய அறிஞர்
(1) அதிசா
(2) சந்த் பார்தை
(3) ஜேம்ஸ் டாட்
(4) ஆர்.சி. மஜூம்தார்
ANSWER KEY – 4
12) பால வம்சத்தின் மிகச்சிறந்த, வலிமைமிக்க அரசர்
(1) தர்மபாலர்
(2) ஜெயபாலர்
(3) தேவபாலர்
(4) முதலாம் மகிபாலர்
ANSWER KEY – 4
13) யாருடைய படையெடுப்பின் காரணமாக வாரணாசிக்கு அப்பால் தனது அதிகாரத்தை விரிவுபடுத்த முதலாம் மகிபாலரால் இயலாமல் போயிற்று?
(1) ராஜராஜ சோழன்
(2) ராஜேந்திர சோழன்
(3) குலோத்துங்கன்
(4) சிம்மராஜன்
ANSWER KEY – 2
14) சௌகான்கள் எனும் ராஜபுத்திர அரச வம்சத்தை தோற்றுவித்தவர்
(1) சிம்மராஜ்
(2) பிருதிவிராஜ்
(3) போஜராஜ்
(4) தேவராஜ்
ANSWER KEY – 1
15) சௌகான் வம்சாவளி அரசர்களுள் தலை சிறந்தவர்
(1) சிம்மராஜ்
(2) பிருதிவிராஜ்
(3) போஜராஜ்
(4) தேவராஜ்
ANSWER KEY – 2
16) பிருதிவிராஜ ராசோ எனும் நூலை எழுதியவர்
(1) கல்ஹணர்
(2) விசாகதத்தர்
(3) ராஜசேகரர்
(4) சந்த் பார்தை
ANSWER KEY – 4
17) முதல் தரெய்ன் போரில் வெற்றி பெற்றவர் ___________ : தோல்வியுற்றவர் ________________
(1) பிருதிவிராஜ் சௌகான் : முகமது கோரி
(2) முகமது கோரி : பிருதிவிராஜ் சௌகான்
(3) சிம்மராஜ் சௌகான் : முகமது கோரி
(4) முகமது கோரி : சிம்மராஜ் சௌகான்
ANSWER KEY – 1
18) இரண்டாம் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு
(1) 1191
(2) 1192
(3) 1193
(4) 1194
ANSWER KEY – 2
19) பொருத்துக:
(i) சூரியனார் கோவில் – a) மத்தியப்பிரதேசம்
(ii) தில்வாரா சமணக்கோவில் – b) கோனார்க்
(ii) காந்தர்யா கோவில் – c) பந்தேல்கண்ட்
(iv) கஜூராகோ கோவில – d) அபுகுன்று
(1) (i) – b (ii) – a (iii) – c (iv) – d
(2) (i) – c (ii) – a (iii) – d (iv) – b
(3) (i) – c (ii) – a (iii) – b (iv) – d
(4) (i) – b (ii) – d (iii) – a (iv) – c
ANSWER KEY – 4
20) ரக்ஷாபந்தன் என்ற மரபு யாருக்கு உரியது?
(1) சோழர்கள்
(2) பாலர்கள்
(3) ராஜபுத்திரர்கள்
(4) அரேபியர்கள்
ANSWER KEY – 3
21) வங்கப்பிரிவினையின் போது பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கியவர் _________.
(1) ரவீந்திரநாத் தாகூர்
(2) மகிபாலர்
(3) பகத்சிங்
(4) பாலகங்காதர திலகர்
ANSWER KEY – 1
22) திபெத்திய பௌத்தத்தை சீர்செய்தவர் _______.
(1) அதிசா
(2) சந்த் பார்தை
(3) ஜேம்ஸ் டாட்
(4) ஆர்.சி.மஜூம்தார்
ANSWER KEY – 1
23) ஓர் இஸ்லாமிய அரசு அரசியல்ரீதியாகவும், மதரீதியாகவும் ஒரே நபரால் ஆளப்பட்டால் அவ்வரசு ________ என்றழைக்கப்பட்டது.
(1) உமையத்து
(2) கலீஃபத்
(3) அப்பாசித்து
(4) எதுவுமில்லை
ANSWER KEY – 2
24) கஜினி மாமூது இந்தியாவின் மீது ______ முறை படையெடுப்பு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
(1) 11
(2) 13
(3) 15
(4) 17
ANSWER KEY – 4
25) கஜினி மாமூதின் இந்திய படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் _______.
(1) சிலை வழிபாட்டை ஒழிப்பது
(2) செல்வங்களை சூறையாடல்
(3) இந்தியாவில் இஸ்லாமை பரப்புவது
(4) இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது
ANSWER KEY – 2
26) மாமூது கஜினியால் தோற்கடிக்கப்பட்ட பஞ்சாபின் ஷாகி வம்ச அரசர் __________________.
(1) ஆனந்தபாலர்
(2) ஜெயபாலர்
(3) மகிபாலர்
(4) தருமபாலர்
ANSWER KEY – 1
27) முகமது பின் காசிம் தோற்கடித்த சிந்து மன்னன் ________.
(1) தாகீர்
(2) சுல்தான்
(3) முகமது கோரி
(4) பீமதேவர்
ANSWER KEY – 1
28) சிந்துவின் தலைநகராக இருந்தது ______.
(1) கன்னோஜ்
(2) அரோர்
(3) தானேஸ்வர்
(4) நாகர்கோட்
ANSWER KEY – 2
29) இந்தியர்களிடமிருந்து மேலைநாட்டவரும், அரேபியரும் கற்றுக் கொண்ட விளையாட்டு _______.
(1) கபடி
(2) கைப்பந்து
(3) சதுரங்கம்
(4) ஹாக்கி
ANSWER KEY – 3
30) கஜினி மாமூது புனித நகரமான மதுராவைக் கொள்ளையடித்த ஆண்டு _____________.
(1) 1018
(2) 1019
(3) 1020
(4) 1021
ANSWER KEY – 1
31) “டெல்லியின் முதல் சுல்தான்” என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர் ____________.
(1) குத்புதீன் ஐபக்
(2) கஜினி மாமூது
(3) அல்ப்-டஜின்
(4) சபக்டிஜின்
ANSWER KEY – 1
32) இந்தியாவின் மீதான கஜினி மாமூதின் இறுதி படையெடுப்பு ________.
(1) புனிதநகர் மதுராவில் கொள்ளையடிப்பு
(2) அன்கில்வாட் நகரை சூறையாடியது
(3) தானேஸ்வர் நகரை சூறையாடியது
(4) சோமநாதபுரம் கோவில் கொள்ளையடிப்பு
ANSWER KEY – 4
33) ராஜபுத்திரர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்திய போர் _______.
(1) முதல் தரெய்ன் போர்
(2) இரண்டாம் தரெய்ன் போர்
(3) மூன்றாம் தரெய்ன் போர்
(4) நான்காம் தரெய்ன் போர்
ANSWER KEY – 2
34) ________ மீது ஆதிக்கம் நிறுவவே மும்முனைப் போராட்டம் நடைபெற்றது.
(1) குஜராத்
(2) பந்தேல்கண்ட்
(3) கன்னோஜ்
(4) அரோர்
ANSWER KEY – 3
35) இந்தியாவில் முதல் இஸ்லாமியப் பேரரசை உருவாக்கியவர் ________.
(1) முகமது கோரி
(2) கஜினி மாமூது
(3) குத்புதீன் ஐபக்
(4) அல்ப்-டஜின்
ANSWER KEY – 1
36) கஜினி எனும் ஒரு சிறிய அரசு அமைந்திருந்த இடம் ________.
(1) மங்கோலியா
(2) துருக்கி
(3) பாரசீகம்
(4) ஆப்கானிஸ்தான்
ANSWER KEY – 2
37) ஆனந்தபாலர், மாமூது கஜினியால் தோற்கடிக்கப்பட்ட இடம் ____________.
(1) தரெய்ன்
(2) சாகம்பரி
(3) வைகிந்த்
(4) அரோர்
ANSWER KEY – 3
38) ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் _________.
(1) குத்புதீன் ஐபக்
(2) முகமது கோரி
(3) கஜினி மாமூது
(4) சிம்மராஜ்
ANSWER KEY – 4
39) இஸ்லாமைத் தோற்றுவித்தவர் _______.
(1) முகமது நபி
(2) முகமது அலி
(3) கஜினி மாமூது
(4) முகமது பின் காசிம்
ANSWER KEY – 1
40) மெக்கா அமைந்துள்ள இடம் _________.
(1) ஆப்கானிஸ்தான்
(2) அரேபியா
(3) குவைத்
(4) துருக்கி
ANSWER KEY – 2
41) சௌகான் வம்சாவளியின் கடைசி அரசன் _________.
(1) சிம்மராஜ் சௌகான்
(2) பிருதிவிராஜ் சௌகான்
(3) தேவராஜ் சௌகான்
(4) பீமராஜ் சௌகான்
ANSWER KEY – 2
42) மகிபாலரின் இறப்பால் பால வம்சம் வீழ்ச்சியுற்று, _______ வம்சம் உருவானது.
(1) சௌகான்
(2) பரமாரர்
(3) சேனா
(4) சந்தேலர்
ANSWER KEY – 3
43) மக்களால் அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் __________.
(1) கோபாலர்
(2) தர்மபாலர்
(3) தேவபாலர்
(4) முதலாம் மகிபாலர்
ANSWER KEY – 1
44) ரக்ஷாபந்தன் என்பது ________ உறவு தொடர்பான ஒரு விழாவாகும்.
(1) நண்பர்கள்
(2) சகோதர
(3) சமூகம்
(4) சமயம்
ANSWER KEY – 2
45) சிந்துவை அரேபியர்கள் கைப்பற்றிய ஆண்டு _________.
(1) கி.பி. 710
(2) கி.பி. 711
(3) கி.பி. 712
(4) கி.பி. 713
ANSWER KEY – 3
46) பாலர்களின் கலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(1) மேற்கிந்திய கலை
(2) கிழக்கிந்திய கலை
(3) தெற்கத்திய கலை
(4) வடக்கத்திய கலை
ANSWER KEY – 2
47) பாலர்கள் ________ மதத்தை பின்பற்றியராவர்.
(1) மகாயான பௌத்தம்
(2) ஹீனயான பௌத்தம்
(3) இஸ்லாம்
(4) கிறிஸ்தவம்
ANSWER KEY – 1
48) அபுகுன்றின் மேலுள்ள சமணக்கோவிலில் உள்ள கூடத்தில் ____________ பொதுமைய வட்டங்களைக் கொண்ட குவிமாடம் உள்ளது.
(1) 10
(2) 11
(3) 12
(4) 13
ANSWER KEY – 2
49) வங்கப்பிரிவினை நடைபெற்ற ஆண்டு ________.
(1) 1900
(2) 1903
(3) 1905
(4) 1910
ANSWER KEY – 3
50) ராஜபுத்திர ஓவிய ________ பாணிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(1) இந்துஸ்தானி
(2) ராஜஸ்தானி
(3) மேற்கத்திய கலை
(4) தெற்கத்திய கலை
ANSWER KEY – 2
51) இந்தியாவில் இஸ்லாமியர்களின் காலக்கட்டம் எப்போதிலிருந்து தொடங்கியது?
(1) கி.பி. 712
(2) கி.பி 1200
(3) கி.மு1200
(4) கி. மு. 712
ANSWER KEY – 2
52) “ராஜ்புத்”என்னும் சொல் ___________ லிருந்து பெறப்பட்டது
(1) “ராஜ்புத்ர” எனும் வடமொழி
(2) ”ராஜ்புத்ர” எனும் சமஸ்கிருத மொழி
(3) ”ராஜ்புத்ர” எனும் அரபு மொழி
(4) “ராஜ்புத்ர” எனும் ஸ்பானிய மொழி
ANSWER KEY – 2
53) கூற்று : (அ) “ஜேம்ஸ் டாட்” என்பவர் கீழ்த்திசைப் புலமையாளர்
கூற்று : (ஆ) கி.பி.(பொ. ஆ) 1829 இல் 36 ராஜபுத்திர அரச குலங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
(1) ‘அ ‘சரி ‘ஆ‘ தவறு
(2) ‘அ’ மற்றும் ‘ஆ’ இரண்டும் தவறு
(3) ‘அ’ தவறு ‘ஆ’ சரி
(4) ‘அ’ மற்றும் ‘ஆ’ இரண்டும் சரி
ANSWER KEY – 4
54) வட இந்திய பிரதிகார அரசர்களை வரிசைப்படுத்துக
(1) நாகபட்டர், வத்சராஜா, இரண்டாம் நாகபட்டர்,ராமபத்ரா, மிகிரபோஜா.
(2) மிகிரபோஜா, இரண்டாம் நாகபட்டர்,ராமபத்ரா, நாகப்பட்டர், வத்சராஜா
(3) இரண்டாம் நாகபட்டர், ராமபத்ரா, மிகிரபோஜா, நாகப்பட்டர், வத்சராஜா
(4) நாகப்பட்டர், மிகிரபோஜா, வத்சராஜா, இரண்டாம் நாகபட்டர், ராமபத்ரா
ANSWER KEY – 1
55) கூற்று :
(அ) பால அரச வம்சத்தின் சிறந்த அரசர்கள், தர்மபாலர், தேவபாலர், முதலாம் மகிபாலர்.
(ஆ) இவர்களின் ஆட்சிகாலம் வங்காள வரலாற்றின் சிறப்பு மிக்க ஒளிரும் அத்தியாயங்கள் நிலவியது .
(1) ‘அ’ சரி ‘ஆ’ தவறு
(2) ‘அ’ மற்றும் ‘ஆ’ இரண்டும் தவறு
(3) ‘அ’ தவறு ‘ஆ’ சரி
(4) ‘அ’ மற்றும் ‘ஆ’ இரண்டும் சரி
ANSWER KEY – 4
56) ரக்ஷாபந்தன் விழா வங்காளத்தில் தொடங்கப்பட்ட ஆண்டு ________.
(1) 1905
(2) 1906
(3) 1907
(4)1908
ANSWER KEY – 1
57) பொருத்துக.
i) பிரதிகாரர்கள் – a) ராஜேந்திர சோழன்
ii) பாலர்கள் – b) சிம்மராஜ்
iii) தென்னிந்திய அரசர் – c) கோபாலர்
iv) ஆஜ்மீர் நகரம் தோற்றுவித்தவர் – d) நாகப்பட்டர்
(1) (i) – b (ii) – a (iii) – c (iv) – d
(2) (i) – d (ii) – c (iii) – b (iv) – a
(3) (i) – c (ii) – d (iii) – b (iv) – a
(4) (i) – d (ii) – c (iii) – a (iv) – b
ANSWER KEY – 4
58) ராஜபுத்திர அரசர்களின் கலை மற்றும் கட்டடக்கலையை _______________ என்று அழைக்கப்படுகின்றன.
(1) ராஜஸ்தானி
(2) பாலர்களின் கலை
(3) கிழக்கு இந்தியக்கலை
(4) இந்துஸ்தானி
ANSWER KEY – 1
59) தவறான இணையைக் கண்டறிக:
(1) மேவார் – உதய்பூர்
(2) ஜெயசால்மர் – ராஜஸ்தான்
(3) ஜோத்பூர் – தமிழ் நாடு
(4) புரி – ஹரியானா
ANSWER KEY – 3
60) கூற்று (I): அரேபிய அறிஞர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை, இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர்.
கூற்று (II): பூஜ்யத்தின் முக்கியத்துவத்தை இந்தியாவிலிருந்து கற்றுக்கொள்ளவில்லை.
(1) | சரி
(2) || சரி
(3) | மற்றும் || சரி
(4) | சரி || தவறு
ANSWER KEY – 4
61) கி.பி.1001 ஆம் ஆண்டு கஜினி மாமூதுவால் தோற்கடிக்கப்பட்ட ஷாகி அரசர் _________.
(1) ஜெயபாலர்
(2) ஆனந்த பாலர்
(3) ராஜ்யபாலர்
(4) தர்மபாலர்
ANSWER KEY – 1
62) பொருத்துக:
i) ஜெயபாலர் – a) 1024
ii) ஆனந்தபாலர் – b) 1001
iii) ராஜ்ய பாலர் – c) 1008
iv) பீமதேவர் – d) 1018
(1) (i) – b (ii) – a (iii) – c (iv) – d
(2) (i) – d (ii) – c (iii) – b (iv) – a
(3) (i) – c (ii) – d (iii) – b (iv) – a
(4) (i) – b (ii) – c (iii) – d (iv) – a
ANSWER KEY – 4
63) முதலாம் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு ________.
(1) 1191
(2) 1192
(3) 1193
(4) 1194
ANSWER KEY – 1
64) முதலாம் தரெய்ன் போர் யார் – யாருக்கும் இடையில் நடைபெற்றது.
(1) பிருதிவிராஜ் சௌகான் – முகமது கஜினி
(2) பிருதிவிராஜ் சௌகான் – முகமது கோரி
(3) முதலாம் போஜா – ஜெயபாலர்
(4) முதலாம் போஜா – சந்திர தேவர்
ANSWER KEY – 2
65) இந்தியாவில் முதல் இஸ்லாமிய அரசு உறுதியாக நிறுவப்பட்ட இடம் _____________.
(1) டெல்லி
(2) கன்னோஜ்
(3) ஜெய்ப்பூர்
(4) ஆஜ்மீர்
ANSWER KEY – 4
66) ஆஜ்மீர் நகரைத் தோற்றுவித்தவர் __________. (NMMS-2020-2021)
(1) மகிபாலர்
(2) சிம்மராஜ்
(3) சந்த் பார்தை
(4) பிருதிவிராஜ் சௌகான்
ANSWER KEY – 2
67) பொருத்துக.
(a) தர்மபாலர் – (i) சமஸ்கிருத கல்லூரி
(b) இராஜபோஜ் – (ii) சந்த் பார்தை
(c) பிரித்திவிராஜ் ரசோ – (iii) புவனேஸ்வர்
(d) லிங்கராஜ கோயில் – (iv) நாளந்தா பல்கலைக்கழகம்
(1) (a) – (i), (b) – (ii), (c) – (iv), (d) – (iii)
(2) (a) – (ii), (b) – (iii), (c) – (iv), (d) – (i)
(3) (a) – (iv), (b) – (i), (c) – (ii), (d) – (iii)
(4) (a) – (i), (b) – (iv), (c) – (ii), (d) – (iii)
ANSWER KEY – 3
68) இராசபுத்திரர்கள் காலத்தில் கோயிற் கட்டிடக் கலையின் சிறப்பான எடுத்துக் காட்டாக திகழ்வது ________. [NMMS-2016]
(1) தில்வாரா கோயில்
(2) கடற்கரை கோயில்
(3) ஆயிரம் தூண் ஆலயம்
(4) எலிஃபண்டா குகைக் கோவில்
ANSWER KEY – 1
69) ________ எழுதிய ‘இந்திய வரலாறு’ என்னும் நூலில் முகமது கஜினியின் பதினேழு படையெடுப்புகளைப் பற்றி குறிப்பிடுகிறார். (NMMS-2018)
(1) பிரம்ம குப்தர்
(2) சர் ஹென்றி எலியட்
(3) மானகா
(4) பஹலா
ANSWER KEY – 2