NMMS Social Science Question Paper in Tamil

NMMS Social Science Question Paper in Tamil:

1)  பண்டங்கள் வாங்கும் போது அதற்கான செலுத்துத் தொகையாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய எதையும் பணம் என்று கூறியவா் ________________________

  1. இராபா்ட்சன்
  2. ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
  3. ஆடம் ஸ்மித்
  4. அமித்யா சென்

ANSWER KEY: 1

 

2) இந்தியாவின் ”ரூபாய்” என்ற சொல் __________________ மொழியில் இருந்து பெறபப்பட்டது.

  1. தமிழ்
  2. தெலுங்கு
  3. சமஸ்கிருதம்
  4. மலையாளம்

ANSWER KEY: 3

 

3) கூற்று  1. பணம் என்ற வாத்தை ரோம் வார்த்தையான மொனேட்டா ஜுனோவிலிருந்து பெறப்பட்டது

கூற்று  2. இது ரோமின் பெண் கடவுள் மற்றும் ரோம் பேரரசின் குடியரசு பணமாகும்.

  1. கூற்று 1 சரி 2 தவறு
  2. கூற்று 2 சரி 1 தவறு
  3. கூற்று இரண்டும் தவறு
  4. கூற்று இரண்டும் சரி

ANSWER KEY:  4

 

4) பண்டைய கால வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவா் ______________________

  1. இராபர்ட் புரூஸ்ட்
  2. ஹெரோடோடஸ்
  3. மிடாஸ்
  4. அலெக்சாண்டா்

ANSWER KEY:  2

 

5) உலோக நாணயத்தை கண்டுபிடித்தவா் ______________ எந்த நுாற்றாண்டு _________________

  1. இராபா்ட் புரூஸ்ட் , 6
  2. ஹெரோடோடஸ், 12
  3. லிடியாவின் பேரரசா் மிடாஸ், 8
  4. மாவீரர் நெப்போலியன், 8

ANSWER KEY:  3

 

6) இந்தியாவில் பூரணாஸ், கா்ஷபணம், பனாஸ் போன்ற நாணயங்கள் ________________ ஆட்சியில் அச்சடிக்கப்பட்டன.

  1. மகாஜனபதங்கள்
  2. அதிஷ்ட கஜங்கள்
  3. முகலாயா்கள்
  4. டெல்லி சுல்தானியா்கள்

ANSWER KEY:  1

 

7) தங்கம், வெள்ளி, தாமிரம் அல்லது  ஈயம் போன்ற நாணயங்கனை துளையிட்டு வெளியிட்டவா்கள்

  1. சேரர்கள்
  2. சோழர்கள்
  3. மௌரியா்கள்
  4. பாண்டியா்கள்

ANSWER KEY:  3

 

8) இந்தியாவில் கிரேக்க மரபுப்படி சித்திரங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களை அறிமுகப்படுத்தியவா்கள் _________________

  1. மௌரிய அரசா்கள்
  2. குஷாண அரசா்கள்
  3. செமண அரசா்கள்
  4. புத்த வம்சத்தினா்கள்

ANSWER KEY:  2

 

9) 12 ஆம் நுாற்றாண்டில் நாணயத்தில் இந்திய அரசா்களின் உருவத்தை நீக்கி இஸ்லாமிய எழுத்துக்களைப் பொறித்தவா்கள் யார்?

  1. அரோபியா்கள்
  2. மௌரியா்கள்
  3. டெல்லி துருக்கி சுல்தான்கள்
  4. மெசபடோமியா்கள்

ANSWER KEY:  3

 

10) 12 ஆம் நுாற்றாண்டில் தங்கம், வெள்ளி மற்றும் தாமிரத்தால் ஆன நாணயங்களை _____________________ என்று அழைத்தனா்.

  1. டாங்கா
  2. ஜிட்டால்
  3. ரூபியா
  4. ரூபாய்

ANSWER KEY:  1

 

11) 12 ஆம் நுாற்றாண்டில் மதிப்பு குறைந்த நாணயங்களை ___________________________ என்று அழைத்தனா்

  1. டாங்கா
  2. ஜிட்டால்
  3. ரூபியா
  4. ரூபாய்

ANSWER KEY:  2

 

12) முகலாயாரின் ஆட்சிக்காலத்தில் ஹுமாயூனை தோற்கடித்தவா் ____________________

  1. அக்பா்
  2. ஔரங்கசீப்
  3. பாபா்
  4. ஷொ்ஷா சூரி

ANSWER KEY:  4

 

13) ஷொ்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்தின் பெயா் _____________________

  1. டாங்கா
  2. ஜிட்டால்
  3. ரூபியா
  4. ரூபாய்

ANSWER KEY:   3

 

14) ஷொ்ஷா சூரி காலத்தில் பயன்படுத்தப் பட்ட நாணய முறை ______________________

அ) 178 கிராம் வெள்ளி நாணயம்

ஆ) 187 கிராம் வெள்ளி நாணயம்

இ) 40 தாமிர துண்டுகள்

ஈ) பைசா

  1. ஆ தவிர அனைத்தும்
  2. அ, இ மட்டும்
  3. அ, ஆ, இ மட்டும்
  4. அ, ஈ மட்டும்

ANSWER KEY:  1

 

15) முகலாயா் ஆட்சி காலம் முழுவதும் பயன்பாட்டில் இருந்த நாணயம் _____________________

  1. வெள்ளி
  2. செம்பு
  3. ஜிட்டால்
  4. டாங்கா

ANSWER KEY:  1

 

16) ஆங்கிலேயா்களுக்கு முகலாய பண நாணயத்தை பம்பாய் அச்சகத்தில் அச்சடிக்க அனுமதி அளித்த முகலாயப் பேரரசா் _______________________________

  1. ஷொ்ஷா சூரி
  2. ஹீமா யூன்
  3. அக்பா்
  4. பாருக் ஷாயா்

ANSWER KEY:  4

 

17) பொருத்துக.

i) தங்க நாணயங்கள் –        a) டின்னி

ii) வெள்ளி நாணயங்கள் – b) கப்ரூன்

iii)  செம்பு நாணயங்கள்   –  c) ஏஞ்ஜேலினா

iv) வெண்கல நாணயங்கள் – d) கரோலினா

  1. i – d, ii – c, iii – b, iv – a
  2. i – d, ii – b, iii – c, iv – a
  3. i – d, ii – c, iii – a, iv – b
  4. i – b, ii – c, iii – a, iv – d

ANSWER KEY:  1

 

18) உப்பு, அரிசி, கோதுமை, பாத்திரங்கள், ஆயுதங்கள் போன்ற பண்டங்களை பொதுவாக பரிமாற்றிக் கொள்வது ____________________  ஆகும்

  1. பண்டமாற்று முறை
  2. காகித மாற்று முறை
  3. பணம் மாற்று முறை
  4. நாணயங்கள் மாற்று முறை

ANSWER KEY:   1

 

19) மனித நாகரிக முன்னேற்றத்தின் அாிய கண்டுபிடிப்பு ________________________________

  1. தங்கம்
  2. வெள்ளி
  3. பணம்
  4. செம்பு

ANSWER KEY:  3

 

20) கூற்று – காகித பணம் கண்டுபிடிப்பு பணத்தின் வளா்ச்சியில் ஒரு முக்கிய நிலையாக  கருதப்பட்டது.

காரணம் – தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை ஓா் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது சிரமமாகவும், ஆபத்தானதாகவும் உள்ளது.

  1. கூற்று சரி, காரணம் தவறு
  2. கூற்று தவறு, காரணம் சரி
  3. கூற்று மற்றும் காரணம் சரி், காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது
  4. கூற்று மற்றும் காரணம் சரி், கூற்றை காரணம் சரியாக விளக்கவில்லை

ANSWER KEY:   3

 

21) பண மதிப்பிழப்பு செய்வதாக அறிவித் ஆண்டு _________________________

  1. 2016 நவம்பா் 8
  2. 2017 ஜுலை 1
  3. 2016 ஜுலை 1
  4. 2017 நவம்பா் 8

ANSWER KEY:   1

 

22) பண மோசடி நடவடிக்கை தடுப்புச் சட்டம்  கொண்டுவரப்பட்ட ஆண்டு __________________

  1. 2002
  2. 2001
  3. 2003
  4. 2004

ANSWER KEY:   1

 

23) பணம் என்ற வாத்தை ________________________ மொழியிலிருந்து பெறப்பட்டது.

  1. ரோமன்
  2. இத்தாலி
  3. இலத்தீன்
  4. கிரேக்கம்

ANSWER KEY:   1

 

24) கீழ்க்கண்டவற்றுள் எது பண்ட மாற்று முறையின் குறைபாடு அல்ல?

  1. இருமுகத் தேவை பொருத்தமின்மை
  2. பொதுவான மதிப்பின் அளவு கோல்
  3. செல்வத்தைச் சேமிக் எளிதானது
  4. பொருள்களின் பகுபடாமை

ANSWER KEY:  3

 

25) எந்தப் பொருட்கள் பொதுவாகப் பணமாகப் பயன்படுத்தப்பட்டன?

  1. உப்பு
  2. அரிசி
  3. கோதுமை
  4. மேற்கண்ட அனைத்தும்

ANSWER KEY:   4

 

26) எந்த உலோகங்கள் உலோகப் பணமாகப் பயன்படுத்தப்பட்டன?

  1. தங்கம்
  2. வெள்ளி
  3. தாமிரம்
  4. மேற்கண்ட அனைத்தும்

ANSWER KEY:   4

 

27) எந்த நுாற்றாண்டில் லிடியாவில் முதல் உலோக நாணயம் கண்டறியப்பட்டது

  1. பொ.ஆ.பி.8
  2. கிமு.8
  3. பொ.ஆ.மு. 6
  4. கி.பி.12

ANSWER KEY:  2

 

28) பொ.ஆ.மு. 6 ஆம் நுாற்றாண்டில் கீழ்க்கண்ட எந்த இந்திய நாணயம் மகாஜனபதங்களால் அச்சடிக்கப்படவில்லை?

  1. பூரணாஸ்
  2. ரூபியா
  3. பனாஸ்
  4. கா்ஷபணம்

ANSWER KEY:  2

 

29) காகிதப் பணத்தினை ஒழுங்குபடுத்துவதும் கட்டுப்படுத்துவதும் ஒரு நாட்டின் ____________________  வங்கியாகும்.

  1. மைய வங்கி
  2. பாரத ஸ்டேட் வங்கி
  3. இந்தியன் வங்கி
  4. கூட்டுறவு வங்கி

ANSWER KEY:  1

 

30) வங்கிக் காசோலை ___________________ எனவும் அழைக்கப்படுகிறது.

  1. கடன் பணம்
  2. வங்கிப் பணம்
  3. 1 மற்றும் 2
  4. எதுவுமில்லை

ANSWER KEY:   3

 

31) பணமில்லா நடவடிக்கையானது கீழ்க்கண்டவற்றுள் எதன் நோக்கமாகும்?

  1. உலோகப் பணம்
  2. காகிதப் பணம்
  3. பண்டமாற்று முறை
  4. நெகிழிப் பணம்

ANSWER KEY:  4

 

32) விலைகள் வீழ்ச்சி அடைந்து பணத்தின் மதிப்பு உயா்வது ______________________ ஆகும்.

  1. பணவீக்கம்
  2. பணவாட்டம்
  3. தேவை
  4. ஏதுவுமில்லை

ANSWER KEY:  2

 

33) தனிநபா் வருமானத்தின் ஒரு பகுதி __________________ ஆகும்.

  1. முதலீடு
  2. சேமிப்பு
  3. 1 மற்றும் 2
  4. ஏதுவுமில்லை

ANSWER KEY:  2

 

34) கீழ்க்கண்டவற்றுள் எது/எவை தவறான கூற்றுகள்?

அ) ரூபியா என்றால் வெள்ளி நாணயம் என்று பொருள்.

ஆ) பண்டமாற்று செயலில் பணத்தின் ஈடுபாடு இல்லாமல் இருப்பது ஒரு தீமையாகும்.

இ) பண்டமாற்று முறை எஎன்பது குறைகள் இல்லாத ஒரு முறையாகும்.

ஈ) பண்டமாற்று முறை எஎன்பது பழங்கால முறையாகும்.

  1. ஈ தவிர அனைத்தும்
  2. அ மற்றும் ஈ
  3. ஆ மற்றும் இ
  4. இ மட்டும்

ANSWER KEY:  3

 

35) கீழ்க்கண்ட குழுவில் பொருந்தாதது எது?

  1. நெகிழிப்பணம்
  2. உலோகப் பணம்
  3. மின்னணு பணம்
  4. நிகழ்நிலை வங்கி

ANSWER KEY:  2

 

36) கால வரிசைப்படுத்து

அ) உலோக பணம்

ஆ) நிகா் பணம்

இ) பண்டப் பணம்

ஈ) காகித பணம்

உ) வங்கிப்பணம்

  1. இ, ஆ, உ, அ, ஈ
  2. அ, ஆ, இ, ஈ, உ
  3. உ, ஆ, அ, இ, ஈ
  4. இ, அ, ஈ, உ, ஆ

ANSWER KEY:   4

 

37) கூற்று – தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்கள் உலோக  பணமாகப் பயன்படுத்தப்பட்டன.

காரணம் – அவைகள் வெள்வேறு பிரிவுகளாகப் பிரிப்பதற்கும், எடுத்துச்  செல்வதற்கும், செலுத்துவதற்கும் வசதியாக இருந்தன.

  1. கூற்று சரி காரணம் தவறு
  2. கூற்று தவறு காரணம் சரி
  3. கூற்றுக்கு காரணம் சரியான பொருத்தமில்லை
  4. கூற்று சரி காரணம் பொருத்தமே

ANSWER KEY:   4

 

38) இந்திய ரூபாய் (₹) குறியீட்டினை வடிவமைத்தவா் யார்?

  1. உதயகுமார்
  2. அமா்தியாசென்
  3. அபிஜித் பானர்ஜி
  4. இவா்களில் எவருமில்லை

ANSWER KEY:  1

 

39) பணத்தின் மதிப்பு __________________________

  1. அக மதிப்பு
  2. புற மதிப்பு
  3. 1 மற்றும் 2
  4. எதுவும் இல்லை

ANSWER KEY:  3

 

40) வங்கிப் பணம் என்பது எது?

  1. காசோலை
  2. வரைவு
  3. கடன் மற்றும் பற்று அட்டைகள்
  4. மேற்கூறிய அனைத்தும்

ANSWER KEY:  4

 

41) தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

முதலீட்டுக் கருவிகள் என்பவை

  1. பங்கு வர்த்தகம்
  2. பத்திரங்கள்
  3. பரஸ்பர நிதி
  4. வரி செலுத்துவது

ANSWER KEY:  4

 

42) பின்வருவனவற்றில் கருப்புப் பணம் குவிப்பதற்குக் காரணமானவா்கள் _________________________

  1. வரி ஏய்ப்பவா்கள்
  2. பதுக்குபவா்கள்
  3. கடத்தல் காரா்கள்
  4. இவா்கள் அனைவரும்

ANSWER KEY:  4

 

43) நிகழ்நிலை வங்கியை _____________________ என்று அழைக்கலாம்.

  1. மின்னணு வங்கி
  2. இணைய வங்கி
  3. இவ்விரண்டும்
  4. எதுவுமில்லை

ANSWER KEY:  2

 

44) மின்னணு வங்கியை _________________ என்று அழைக்கலாம்.

  1. தேசிய மின்னணு நிதி பரிமாற்றம்
  2. நிகழ்நிலை வங்கி
  3. RTGS
  4. IMPS

ANSWER KEY:  1

 

45) கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் ________________ பணமாகும்.

  1. உலோகப் பணம்
  2. நெகிழிப் பணம்
  3. மின்பணம்
  4. காகிதப் பணம்

ANSWER KEY:  2

 

46) இந்தியரிசா்வ் வங்கி தோற்று விக்கப்பட்ட ஆண்டு ___________________

  1. கி.பி. 1717
  2. கி.பி. 1600
  3. கி.பி. 1935
  4. கி.பி. 2016

ANSWER KEY:  3

 

47) தவறானன ஒன்றைக் கண்டுபிடிக்க

பரிமாற்றத்திற்கு பணத்தின் சமிபத்திய வடிவங்கள்

  1. பற்று அட்டை
  2. பண்டமாற்று முறை
  3. கடன் அட்டை
  4. நிகழ்நிலை வங்கி

ANSWER KEY:  2

 

48) பொருத்துக.

அ) பண்டமாற்று முறை                    –        i) வரி ஏமாற்றுபவா்கள்

ஆ) இந்திய ரிசா்வ் வங்கி சட்டம்    –        ii) மின்னணு பணம்

இ)  மின் பணம்                           –        iii) நுகா்வு தவிர்த்த வருமானம்

ஈ) சேமிப்பு                                    –        iv)பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்

உ) கருப்புப் பணம்          –        v) 1935

  1. அ – i, ஆ – ii, இ – iii, ஈ – iv, உ- v
  2. அ – iv, ஆ – ii, இ – i, ஈ – v, உ- iii
  3. அ – iv, ஆ – iii, இ – ii, ஈ – v, உ- i
  4. அ – iv, ஆ – v, இ – ii, ஈ – iii, உ- i

ANSWER KEY:  4

 

49) இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடுவது யார்?

  1. நிதி அமைச்சகம்
  2. ரிசா்வ் வங்கி
  3. அரசு அனுமதி பெற்ற அச்சகம்
  4. மத்திய கூட்டுறவு வங்கி

ANSWER KEY:  2

 

50) தவறான ஒன்றைக் கண்டுபிடி

பொருளாதாரத்தில் கருப்புப் பணத்தின் விளைவுகள்

  1. இரட்டை பொருளாதாரம்
  2. சமத்துவம் வலுவிழத்தல்
  3. உற்பத்தியில் விளைவுகள் இல்லை
  4. ஆடம்பர நுகா்வுச் செலவு

ANSWER KEY:  3

 

51) தவறான இணையைக் கண்டறிக.

  1. பண்டப் பணம் – ஆயுதங்கள்
  2. உலோகப் பணம் – தாமிரம்
  3. காகிதப் பணம் – பொற்கொல்லா் ரசீது
  4. நிகா் பணம் – பரஸ்பர நிதி

ANSWER KEY:  4

 

52) பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் எவ்வகையான பணம் முக்கிய பங்கு வகித்தது?

  1. உலோகப்பணம்
  2. பண்டப்பணம்
  3. நிகா்பணம்
  4. காகிதப்பணம்

ANSWER KEY:  1

 

53) அமரிக்க நாட்டின் நாணயத்தின் பெயா் _________________________

  1. ரூபாய்
  2. யென்
  3. டாலா்
  4. பவுண்ட்

ANSWER KEY:  3

 

54) குழுவில் பொருந்தாததைத் தோ்ந்தெடுக்க

  1. கருவூல பட்டியல்
  2. கடன் பத்திரங்கள்
  3. காப்பீடு
  4. உண்டியல்

ANSWER KEY:  3

 

55) பங்கு வா்த்தகம், பத்திரங்கள், பரஸ்பர நிதி, காப்பீடு அடங்கிய குழுவிற்குப் பெயரிடுக.

  1. சேமிப்பு
  2. முதலீடு
  3. நிகா் பணம்
  4. பணத்தின் சமீபத்திய வடிவங்கள்

ANSWER KEY:  2

 

56) நாணயங்கள் அடிப்படையில் குழுவில் பொருந்தாததைத் தோ்ந்தெடு.

  1. இந்தியா
  2. சிங்கப்பூா்
  3. பாகிஸ்தான்
  4. ஸ்ரீலங்கா

ANSWER KEY:  2

 

57) வங்கியில் கணினி அமைப்புகளில் உள்ள மின்னணு முறையின் மூலம் பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளப்படுவது.

  1. மின்னணு பணம்
  2. இணைய வங்கி
  3. நிகழ்நிலை வங்கி
  4. மின் வங்கி

ANSWER KEY:  1

 

58) பணப் பரிணாம வளா்ச்சியின் இறுதி நிலை ______________________

  1. காகிதப் பணம்
  2. பண்டப் பணம்
  3. நிகா் பணம்
  4. வங்கிப்பணம்

ANSWER KEY:  3

 

59) NEFT  என்பது

  1. National Education Fundamental Training
  2. National Eco Forest Type
  3. National Empowerment of Foreign Treaty
  4. National Electronic Fund Transfer

ANSWER KEY:  4

 

60) பின்வருவனவற்றில் தவறான கூற்று எது?

  1. காகித பணமும் கடன் பணமும் ஒரே நேரத்தில் வளா்ந்தன.
  2. பணத்தின் புற மதிப்பு என்பது வெளி மாநிலத்தில் உள்ள பண்ட மற்றும் பணிகளை வாங்கும் சக்தியைக் குறிக்கும்.
  3. பணத்தின் மதிப்பும் விலையின் அளவும் எதிர்விகிதத் தொடா்புடையது
  4. பணமாகப் பிரகடனம் செய்யப் படும் எவையும் பணமாகும் என சில வல்லுநா்கள் பணத்தைச சட்டபூா்வமான சொற்களால் வரையறுத்துள்ளனா்.

ANSWER KEY:  2

 

61) பணத்தின் மதிப்பு என்பது ____________________________

  1. பொருட்களை விற்கும் போது கிடைக்கும் லாபத்தைக் குறிக்கும்
  2. பண்ட மற்றும் பணிகளை வாங்கும் சக்கியைக் குறிக்கும்.
  3. மேற்கண்ட இரண்டும்
  4. இவை எதுவுமில்லை.

ANSWER KEY:  2

 

62) உள்நாட்டில் உள்ள பண்ட மற்றும் பணிகளின் வாங்கும் சக்தியைக் குறிப்பது

  1. பணத்தின் புற மதிப்பு
  2. பணத்தின் அக மதிப்பு
  3. கடன் பணம் (அ) வங்கி பணம்
  4. இவற்றில் எதுவும் இல்லை

ANSWER KEY:  2

 

63) எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே பணம் எனக் கூறியவா் யார்?

  1. பேராசிரியா் வாக்கா்
  2. ஸ்டோவ்ஸ்கி
  3. சா் ஜான் ஹிக்ஸ்
  4. ராபர்ட்சன்

ANSWER KEY:  1

 

64) பொருத்துக.

அ) மாணவா் சேமிப்புக் கணக்கு  –        i) வியாபாரிகள்

ஆ) சேமிப்பு வைப்பு                           –        ii) பூஜ்ய இருப்பு

இ)  நடப்பு கணக்கு வைப்பு             –        iii) நிலையான வருவாய்

ஈ) நிரந்தர வைப்பு                              –        iv) பெயரளவு வட்டி

  1. அ – iv, ஆ – iii, இ – i, ஈ – ii
  2. அ – ii, ஆ – iv, இ – iii, ஈ – i
  3. அ – ii, ஆ – iv, இ – i, ஈ – iii
  4. அ – iv, ஆ – i, இ – ii, ஈ – iii

ANSWER KEY:  3

 

65) கூற்று – ஸ்டோவ்ஸ்கியின் கருத்துப்படி பணம் என்பது ஒரு கடினமான  கருத்தாகும்.

காரணம் 1. ஏனெனில் பணத்தின் வரையறைகள் அதனுடைய  செயல்பாட்டைப் பொறுத்தே வரையறுக்கப்பட்டுள்ளது

  1. ஏனெனில் அது வேறுபட்ட துறைகளில் மூன்று பணிகளைக் குறிப்பிடுகிறது.
  1. கூற்று மற்றும் காரணங்கள் சரி
  2. கூற்றுக்கு காரணம் 1 மட்டுமே பொருத்தமானது காரணம் 2 பொருத்தமில்லை
  3. கூற்றுக்கு காரணம் 2 மட்டுமே சரியாக விளக்குகிறது.
  4. கூற்று தவறு

ANSWER KEY:  3

 

66) கீழ்கண்டவற்றுள் ஒரே குழுவில் அடங்குவன எவை?

அ) மதிப்பின் நிலைகலன் அல்லது வாங்கும் சக்தியின் நிலைகலன்

ஆ) மதிப்பின் அளவுகோல்

இ) மாற்று மதிப்பு அல்லது மாற்று வாங்கும் சக்தி

ஈ) எதிர்கால செலுத்துகைக்கான நிலைமதிப்பு

உ) பரிமாற்ற கருவி அல்லது பண செலுத்துகை

  1. அ, இ, ஈ
  2. ஆ, உ, இ
  3. அ, ஆ, உ
  4. ஆ, ஈ

ANSWER KEY:  1

 

67) ஸ்டோவ்ஸ்கியின் கருத்துப்படி பணத்தின் பணிகள் ________________________

அ) மாற்று மதிப்பு

ஆ) கணக்கீட்டின் அலகு

இ) மதிப்பின் அளவுகோல்

ஈ) மதிப்பின் நிலைகலன்

  1. அ, ஆ, இ
  2. அ, இ, ஈ
  3. ஆ, இ, ஈ
  4. அ, ஆ, ஈ

ANSWER KEY:  3

 

68) சா்.ஜான் என்பாரின் பணம் பற்றிய கூற்று கீழ்க்கண்டவற்றுள் எது?

  1. எதையெல்லாம் செய்ய வல்லதோ அதுவே பணம்
  2. பணம் அதன் பணிகளால் வரையறுக்கப்படுகிறது. எவையெல்லாம் பணமாகக் கருதப்படுகிறதோ அவை பணமாகப் பயன்படுத்தப்படுகிறது.
  3. பணமாகப் பிரகடனம் செய்யப்படும் எவையும் பணமாகும்.
  4. பொது ஏற்புத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு பண்டங்கள வாங்கும் போது அதற்கான செலுத்துத் தொகையாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய எதையும் பணமாகக் கருதலாம்.

ANSWER KEY:  2

 

69) பணத்தின் பணிகள் எத்தனை பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன?

  1. 2
  2. 3
  3. 4
  4. 10

ANSWER KEY:  1

 

70) கீழ்க்கண்டவற்றுள் பணத்தின் பணிகள் அல்லாதவை எது?

அ) பண்டம் மற்றும் பணிகளை வாங்க பயன்படுத்தப்படுகிறது.

ஆ) அனைத்து வகையான பண்டங்கள் மற்றும் பணிகள் மதிப்பையும் பணத்தால் அளவிடலாம்.

இ) எதிர்கால செலுத்துகைக்கு பணம் ஒரு கருவியாகப் பயன்படுகிறது.

ஈ) எதிர்காலத்திற்காகச் சேமிக்க முடியும்

உ) தொலைதுார இடங்களுக்கும் பண்டங்களைப் பரிமாற்றம் செய்ய முடியும்

  1. ஈ மட்டும்
  2. ஈ மற்றும் உ
  3. ஆ மட்டும்
  4. இவற்றில் ஏதுவுமில்லை

ANSWER KEY:  4

 

71) தவறான கூற்று எது?

  1. பணத்தைக் கொண்டு நாட்டின் வருவாயை அளவிடலாம்
  2. பணம் அனைவரிடமும் பொதுவான ஏற்புத் திறனைக் கொண்டுள்ளது.
  3. பணவீக்கம் என்பது பணத்தின் மதிப்பு உயா்ந்து விலைகள் குறைவதைக் குறிக்கும்
  4. பணம் சுதந்திரமாகப் பரவக்கூடியது

ANSWER KEY:  3

 

72) வா்த்தகா்கள் , வா்த்தக நிறுவனங்கள், பொது அதிகாரிகள் கீழ்க்கண்ட எந்த கணக்கைத் துவக்க வேண்டும்?

  1. மாணவா் சேமிப்புக் கணக்கு
  2. சேமிப்பு வைப்பு
  3. நடப்பு கணக்கு வைப்பு
  4. நிரந்தர வைப்பு

ANSWER KEY:  3

 

73) மாணவா்கள் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க கீழ்க்கண்ட எந்த திட்டம் பயன்படுகிறது?

  1. சஞ்சாயிகா
  2. கிஸான் விகாஸ் பத்திரம்
  3. சஞசீவினி
  4. செல்வமகள் / செல்வமகன்

ANSWER KEY:  1

 

74) குழுவில் பொருந்தாததைத் தோ்ந்தெடுக்க.

  1. ஆண்டுத்தொகை
  2. பரஸ்பர நிதி
  3. சொத்துக்கள்
  4. நிரந்தர வைப்பு

ANSWER KEY:  4

 

75) மூலதன உருவாக்கத்திற்கு் வருவாய்க்கும் உதவுவது

  1. சேமிப்பு
  2. முதலீடு
  3. நீா்மை தன்மை
  4. இவை எதுவுமில்லை

ANSWER KEY:  2

 

76) முதலீடு சம்பந்தப்பட்ட கீழ்க்கண்ட கருதுகொள்களில் அடைப்புக் குறிக்குள் உள்ள தவறானதைத் தோ்ந்தெடுக்க.

இடா்பாடு                 –        (அ) புறக்கணிக்கப்பட்ட அளவு, ஆ) மிக அதிகம்

வருவாய்                    –        (இ) ஒப்பீட்டளவில் அதிகம், ஈ) குறைவு

நீா்மை தன்னை     –        (உ) குறைந்த நீா்மை, ஊ) அதிக நீா்மை

  1. அ, ஊ, இ
  2. ஆ, இ, ஈ
  3. ஆ, ஈ, உ
  4. அ, ஈ, ஊ

ANSWER KEY:  4

 

77) கீழ்காணும் கூற்றுகளில் எது தவறு?

  1. கருப்புப் பணம் என்பது கணக்கில் கொண்டுவராத பணத்தின் ஒரு வடிவமாகும்
  2. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியா்கள் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனா்.
  3. கருப்புப் பணத்தினால் சமுதாயத்தில் பணக்காரா், ஏழைகளிடையே இடைவெளி அதிகமாகிறது
  4. கருப்பு பணத்திற்கு மிகக்குறைந்த அளவே வாி செலுத்துகின்றன.

ANSWER KEY:  4

 

78) கீழ்காண்பவைகளில் எது பொருளாதாரத்தில் கருப்புப் பணத்தின் விளைவுகள் இல்லை?

  1. சமுதாயத்தில் பொது ஒழுக்க நிலைகளில் வீழ்ச்சி ஏற்படுகிறது.
  2. சமத்துவம் வலுவிழக்கிறது
  3. உற்பத்தி மீதான விளைவுகள் ஏற்படுவதில்லை.
  4. வரி ஏமாற்றுதல் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது

ANSWER KEY:  3

 

79) பொருத்துக.

அ) ரியல் எஸ்டேட் சட்டம்                           –        i) 1988

ஆ) ஊழல் தடுப்புச் சட்டம்                         –        ii) 2016

இ)  இந்திய ரூபாய் குறியீடு அங்கீகரிப்பு      –        iii) 2002

ஈ) பண மோசடி தடுப்புச் சட்டம்             –        iv) 2010

  1. அ – i, ஆ – ii, இ – iii, ஈ – iv
  2. அ – ii, ஆ – iv, இ – iii, ஈ – i
  3. அ – ii, ஆ – i, இ – iv, ஈ – iii
  4. அ – iv, ஆ – iii, இ – i, ஈ – ii

ANSWER KEY:  3

 

80) கருப்புப் பணத்திற்கு எதிராக எந்த நாடு தன் நாட்டுச் சட்டத்தில் திருத்தங்கள் ஏற்படுத்தி பிற நாடுகளுக்கு உதவியுள்ளது?

  1. லிடியா
  2. சுவிட்சா்லாந்து
  3. இந்தியா
  4. சீனா

ANSWER KEY:  2

 

81) வெளிக்கொணரப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து மசோதா (வரி விதித்தல்) கொண்டுவரப்பட்ட ஆண்டு _______________________

  1. 2002
  2. 1988
  3. 2016
  4. 2015

ANSWER KEY:  4

 

82) எதுவெல்லாம் பணமாகக் கருதப்படுகிறதோ அவை பணமாக பயன்படுத்தப்படுகிறத என்பது யாருடைய கூற்று?

  1. ஸ்டோவ்ஸ்கி
  2. இராபா்ட்சன்
  3. சா் ஜான் ஹிக்ஸ்
  4. ஆடம் ஸ்மித்

ANSWER KEY:  3

 

83) எந்த மதிப்பிலான ரூபாய் நோட்டினை முதன்முதலாக இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டது.

  1. ஒரு ரூபாய் நோட்டு
  2. இரண்டு ரூபாய் நோட்டு
  3. ஐந்து ரூபாய் நோட்டு
  4. பத்து ரூபாய் நோட்டு

ANSWER KEY:  3

 

84) நெகிழிப் பணம் என்பது __________________________

  1. இணைய வங்கி
  2. மின்னணு பணம்
  3. பற்று அட்டை
  4. மின் வங்கி

ANSWER KEY:  3

 

NMMS QUESTIONS

Leave a Comment