TNPSC Tamil MCQ Questions and Answers – 02:
51. ஆறு – இச்சொல்லுக்கு இருபொருள் தருக.
(A) ஆறுதல் – நதி
(B) நதி – எண்
(C) பொறுத்தல் – மனம்
(D) நதி- கடல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
52. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க : (மணிமேகலை)
(A) எட்டுத்தொகை நூல்களில் ஒன்று __________.
(B) பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று ____________.
(C) ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று ___________.
(D) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ___________.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
53. பொருத்தமான இணைப்புச் சொல்லுடன் தொடரை அமைக்க :
மழை நன்கு பெய்தது; _________ எங்களால் விளையாட முடியவில்லை.
(A) மழை நன்கு பெய்தது. ஏனென்றால் எங்களால் விளையாட முடியவில்லை.
(B) மழை நன்கு பெய்தது. எனவே, எங்களால் விளையாட முடியவில்லை.
(C) மழை நன்கு பெய்தது. மேலும் எங்களால் விளையாட முடியவில்லை.
(D) மழை நன்கு பெய்தது. ஏனெனில் எங்களால் விளையாட முடியவில்லை.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
54. பொருத்தமான இணைப்புச் சொல்லைக் கண்டறிக :
அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். _______ அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்துவிடுகிறது.
(A) எனவே
(B) ஆகையால்
(C) அதுபோல
(D) ஏனெனில்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
55. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு :
அறநெறிச்சாரம் பாடலை எழுதியவர்
(A) எவர்
(B) யாவர்
(C) யாரால்
(D) யார்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
56. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:
ஐம்பெருங்காப்பியங்கள் ___________
(A) என்ன
(B) எது
(C) யாவை
(D) யாது
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
57. சொற்களை இணைத்து புதிய சொல்லை உருவாக்கல் :
சிங்கம் ________ சரியான சொல்.
(A) உறுமும்
(B) முழங்கும்
(C) பிளிறும்
(D) கத்தும்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
58. பொருத்தமான மரபுச் சொல்லைத் தேர்ந்தெழுதுக :
ஆட்டு _________ வருகிறது.
(A) கூட்டம்
(B) மந்தை
(C) இனம்
(D) நிரை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
59. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல் :
புலியின் இளமைப் பெயர்
(A) பறழ்
(B) குருளை
(C) கன்று
(D) குஞ்சு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
60. கீழ்வருவனவற்றுள் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு சொற்களை கண்டுபிடி.
(A) வருவியா? – வந்ததா?
(B) வந்தாய் – வருவாய்
(C) வந்தியா- வந்தாயா?
(D) வருகிறாய் – வருவாய்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
61. வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் ___________ என வழங்குகிறோம்.
(A) கதவு
(B) நிலைப்படி
(C) நுழையும் வழி
(D) வாசல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
பத்தியைப் படித்து வினாக்களுக்கு உரிய சரியான விடையைத் தேர்ந்தெடு: (62 – 66)
முகிலன் பொங்கல் விழா கொண்டாடத் தாத்தா வீட்டிற்குச் சென்றான். அங்கு செவலை என்ற காளை இருந்தது. அக்காளையை முகிலனுக்கு மிகவும் பிடிக்கும். அதற்குத் தீவனம் வைப்பது அவனது வழக்கம். வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து காய்கறிகள் பறித்துக் கொடுத்துத் தாத்தாவுக்கு உதவுவான். அவன், தாத்தா பாட்டியோடு மகிழ்வாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடுவான்.
62. முகிலன் யார் வீட்டிற்குச் சென்றான்?
(A) மாமா
(B) தாத்தா
(C) அக்கா
(D) சித்தி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
63. தாத்தா வீட்டிலுள்ள காளையின் பெயர் என்ன?
(A) கொற்றன்
(B) முகிலன்
(C) லட்சுமி
(D) செவலை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
64. முகிலன் எவ்விழாவைக் கொண்டாட தாத்தா வீட்டிற்குச் சென்றான்?
(A) பொங்கல்
(B) தீபாவளி
(C) கிறிஸ்துமஸ்
(D) பக்ரீத்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
65. முகிலன் தோட்டத்தில் இருந்து எதை பறித்துக் கொடுத்து தாத்தாவுக்கு உதவுவான்?
(A) பழங்கள்
(B) கீரைகள்
(C) காய்கறிகள்
(D) பூக்கள்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
66. ‘செவலை’ என்பது எதைக் குறிக்கிறது?
(A) காளை
(B) பசு
(C) நாய்
(D) பூனை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
67. சொல் – பொருள் – பொருத்துக :
(a) குருளை 1. மலை
(b) கல் 2. குட்டி
(c) மல்லல் 3. வயல்
(d) செறு 4. வளம்
(a) (b) (c) (d)
(A) 2 4 1 3
(B) 4 3 2 1
(C) 2 1 4 3
(D) 2 1 3 4
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
68. சொல் – பொருள் – பொருத்துக :
(a) மட்டு 1. நாள்தோறும்
(b) வையம் 2. பாதுகாத்தல்
(c) பேணி 3. அளவு
(d) நித்தம் நித்தம் 4. உலகம்
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 3 4 2 1
(C) 4 3 2 1
(D) 4 3 1 2
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
69. சொல் – பொருள் – பொருத்துக :
(a) கருணை 1. மழை
(b) மாரி 2. உலகம்
(c) பூதலம் 3. வயிறு
(d) கும்பி 4. இரக்கம்
(a) (b) (c) (d)
(A) 1 3 4 2
(B) 4 1 3 2
(C) 4 1 2 3
(D) 4 3 2 1
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
70. பின்வருவனவற்றுள் சரியான இணைகளைக் குறிப்பிடுக.
(அ) புல் – புற்கள்
(ஆ) சொல் – சொல்கள்
(இ) பூ – பூக்கள்
(ஈ) மாதம் – மாதக்கள்
(A) (அ), (ஆ)
(B) (இ), (ஈ)
(C) (அ), (இ)
(D) (ஆ), (ஈ)
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
71. காரணப் பெயருக்கு எடுத்துக்காட்டினைத் தேர்ந்தெடுக்க :
(A) மரம்
(B) மண்
(C) நாற்காலி
(D) காற்று
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
72. கலைச்சொல் அறிதல் :
HERO STONE
(A) நடுகல்
(B) பொறிப்பு
(C) அகழாய்வு
(D) கல்வெட்டியல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
73. கலைச்சொல் அறிதல் :
MEDIA
(A) ஊடகம்
(B) இதழியல்
(C) மொழியியல்
(D) பருவ இதழ்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
74. வழூஉச் சொல்லற்ற தொடர் எது ?
(A) ஊசியில் நூலைக் கோர்த்தான்.
(B) ஊசியில் நூலைக் கோர்ப்பான்.
(C) ஊசியில் நூலைக் கோத்தான்.
(D) ஊசியில் நூலைக் கோர்க்கலாம்.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
75. வழுவற்ற தொடர் எது ?
(A) அதைச் செய்தது நான் அன்று.
(B) அதைச் செய்தது நான் அல்ல.
(C) அதைச் செய்தது நான் அல்லேன்.
(D) அதைச் செய்தது நான் அல்லை.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
76. பொருந்தும் இணையைக் காண்க :
(A) கரி – குதிரை
(B) அருவர் – காலன்
(C) பிலம் – மலைக்குகை
(D) மறலி – புதர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
77. பொருந்தாச் சொல்லைக் காண்க :
(A) உம்
(B) ஐ
(C) மற்று
(D) மா
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
78. ‘பாட்டு + இருக்கும்’ – என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
(A) பாட்டிருக்கும்
(B) பாட்டுருக்கும்
(C) படியிருக்கும்
(D) பாடியிருக்கும்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
79. குடந்தை __________ என்பதன் மரூஉ.
(A) குடகு
(B) கும்பை
(C) கும்பகோணம்
(D) குளித்தலை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
80. தவறான ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக :
(A) உதகமண்டலம் – உதகை
(B) புதுச்சேரி – புதுகை
(C) மன்னார்குடி – மன்னை
(D) திருநெல்வேலி – நெல்லை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
81. சரியான ஊர்ப்பெயரின் மரூஉச்சொல்லைத் தேர்ந்தெடு :
(A) புதுவை – புதுக்கோட்டை
(B) புதுகை – புதுச்சேரி
(C) நாகை – நாகப்பட்டினம்
(D) மயிலம் – மயிலாடுதுறை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
82. ‘கான்வர்சேஷன்’ என்பது
(A) உரையாடல்
(B) கலந்துரையாடல்
(C) பேசுதல்
(D) கூடிப்பேசுதல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
83. பிலாஸஃபர் (Philosopher) என்பவர்
(A) பத்திரிக்கையாளர்
(B) மெய்யியலாளர்
(C) எழுத்தாளர்
(D) நெறியாளர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
84. ‘நிலவும் வானும் போல’ – இவ்வுவமை கூறும் பொருள் விளக்கம் :
(A) பண்புடைமை
(B) பணிவுடைமை
(C) வேற்றுமை
(D) ஒற்றுமை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
85. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
“பாட்டு கபிலனால் பாடப்பட்டது”
(A) உடன்பாட்டு வாக்கியம்
(B) தன்வினை வாக்கியம்
(C) எதிர்மறை வாக்கியம்
(D) செயப்பாட்டுவினை வாக்கியம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
86. தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க :
(A) மாணவன் மனம் திருத்தினான்.
(B) மாணவன் மனம் திருந்தினான்.
(C) மாணவன் மனம் திருந்தினானா?
(D) மாணவன் மனம் திருந்தச் செய்தான்.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
87. ஒயிலாட்டத்தில் தோலால் கட்டப்பட்ட குடம், தவில், சிங்கி, போலக், தப்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க :
(A) ஒயிலாட்டத்தில் எந்த இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகிறது?
(B) ஒயிலாட்டத்தில் எந்தெந்த இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகிறது?
(C) ஒயிலாட்டத்தில் எவ்வாறான இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகிறது?
(D) ஒயிலாட்டத்தில் எதற்கான இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகிறது?
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
88. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
பாரதியார் மகாகவி என அழைக்கப்படுகிறார்.
(A) பாரதியார் இயற்பெயர் யாது?
(B) மகாகவி பாரதியா?
(C) பாரதியார் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
(D) மகாகவி யார் ?
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
89. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க :
பெருஞ்சித்திரனார் பாவலரேறு என்று அழைக்கப்படுகிறார்.
(A) பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
(B) பாவலரேறு யார்?
(C) ஏன் பாவலரேறு என அழைக்கப்படுகிறார்?
(D) பெருஞ்சித்திரனார் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
90. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல் :
சொற்களை ஒழுங்குபடுத்துக.
(A) மணிமேகலை மணிபல்லவத்தீவிற்குச் சென்றாள்.
(B) மணிபல்லவத்தீவிற்குச் சென்றாள் மணிமேகலை.
(C) மணிமேகலை சென்றாள் மணிபல்லவத்தீவிற்கு.
(D) பல்லவத்தீவிற்கு மணி மணிமேகலை சென்றாள்.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
91. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல் :
சொற்களை ஒழுங்குபடுத்துக.
(A) முளையிலே விளையும் தெரியும் பயிர்.
(B) விளையும் பயிர் முளையிலே தெரியும்.
(C) பயிர் விளையும் முளையிலே தெரியும்.
(D) முளையிலே தெரியும் விளையும் பயிர்.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
92. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல் :
சொற்களை ஒழுங்குபடுத்துக.
(A) ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை.
(B) கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்.
(C) இல்லாமை ஆக்குவோம் கல்லாமையை.
(D) இல்லாமை கல்லாமையை ஆக்குவோம்.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
93. வா-என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை எழுதுக:
(A) வந்தவர்
(B) வந்தான்
(C) வருதல்
(D) வந்த
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
94. அழை – என்ற வேர்ச் சொல்லின் தொழிற் பெயரைக் கண்டறி.
(A) அழைத்த
(B) அழைத்து
(C) அழைத்தல்
(D) அழைத்தான்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
95. வேர்ச்சொல்லை வினையெச்சமாக மாற்றுக.
“பெறு”
(A) பெற்று
(B) பெற்றவன்
(C) பெறுதல்
(D) பெற்றான்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
96. வருக – வேர்ச்சொல்லைத் தருக.
(A) வரு
(B) வருதல்
(C) வா
(D) வந்த
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
97. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக.
(A) ஒலி – நீங்கு
(B) ஒளி – வெளிச்சம்
(C) ஒழி – சீற்றம்
(D) கழி- சத்தம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
98. சரியான இணையைத் தேர்ந்தெடுக்க :
I. நேர் விடை – ஆடுவேன்
II. உற்றது உரைத்தல் விடை – கால் வலிக்கும்
III. ஏவல் விடை – நீயே செய்.
IV. சுட்டு விடை – தலை வலிக்கிறது
(A) I, III
(B) I, IV
(C) II, III
(D) II, IV
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
99. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் :
கம்ப்யூட்டர் (Computer) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்.
(A) மின்னணி
(B) கணினி
(C) கனினி
(D) மின்னஞ்சல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
100. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைப் பொருத்துக.
(a) Volunteer 1. சமூக சீர்திருத்தவாதி
(b) Social Reformer 2. வெளிநாட்டவர்
(c) Entrepreneur 3. தன்னார்வலர்
(d) Foreigner 4. தொழில்முனைவோர்
(a) (b) (c) (d)
(A) 2 3 4 1
(B) 4 2 1 3
(C) 3 1 4 2
(D) 1 4 2 3
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
TNPSC ORIGINAL QUESTIONS ANSWER KEY