TNPSC Tamil Question Answer:
1. தவறான நிறுத்தற்குறி பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தினைச் சுட்டுக
(A) தமிழின் இனிமைதான் என்னே!
(B) அந்தோ! இயற்கை அழிகிறதே!
(C) புலி! புலி!
(D) நேற்று மழை பெய்ததா!
(E) விடை தெரியவில்லை
2. சரியான நிறுத்தற்குறி அமைந்த வாக்கியத்தைக் கண்டறிக
(A) பிரபஞ்சனின் படைப்புகளுள் “வானம் வசப்படும்” என்னும் நூல் குறிப்பிடத்தக்கது.
(B) ‘கண்வனப்பு கண்ணோட்டம்’ என்று சிறுபஞ்சமூலம் குறிப்பிடுகிறது.
(C) காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை; வாலைப் பிடித்தல் தாழ்மை.
(D) மா பலா வாழை ஆகியவற்றை ‘முக்கனி’ என்பர்.
(E) விடை தெரியவில்லை
3. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
‘சாப்டு’ எனும் பேச்சு வழக்கின் எழுத்து வழக்கைக் கண்டறிக
(A) சாப்பிட்டு
(B) சாப்பிடு
(C) சாப்பாடு
(D) சாதம்
(E) விடை தெரியவில்லை
4. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு :
பின்வருவனவற்றுள் பேச்சுவழக்கில் அமைந்த தொடரைக் கண்டறிக
(A) அம்மா பசிக்கிறது
(B) அம்மா பசிக்கின்றது
(C) அம்மா பசிக்கிது
(D) அம்மா பசிப்பது
(E) விடை தெரியவில்லை
5. பொருத்தமான காலம் அமைத்தல்
தவறான தொடரைத் தேர்ந்தெடு
(A) கண்மணி நாளை பாடம் படிப்பாள்
(B) நாங்கள் நேற்றுக் கடற்கரைச் சென்றோம்
(C) ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்
(D) அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்
(E) விடை தெரியவில்லை
6. பொருத்தமான காலம் அமைத்தல்
நட – என்ற சொல்லின் இறந்த காலத்தைக் குறிப்பிடு
(A) நடக்கிறாள்
(B) நடந்தாள்
(C) நடப்பாள்
(D) நடக்கவில்லை
(E) விடை தெரியவில்லை
7. ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? என்று நூலகரிடம் வினவுதல் – இது எவ்வகை வினா?
(A) கொடை வினா
(B) கொளல் வினா
(C) ஏவல் வினா
(D) அறி வினா
(E) விடை தெரியவில்லை
8. இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா? என வினவுதல் என்ன வகை வினா?
(A) அறி வினா
(B) ஏவல் வினா
(C) கொடை வினா
(D) ஐய வினா
(E) விடை தெரியவில்லை
9. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (தமது)
(A) மாடுகள் ________ தலையை ஆட்டின
(B) மாடு _________ தலையை ஆட்டியது
(C) பசு ________ தலையை ஆட்டியது
(D) கன்று _________ தலையை ஆட்டியது
(E) விடை தெரியவில்லை
10. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (விடை)
(A) மனிதனுக்கு __________ கொடு
(B) கவிதைக்கு __________ கொடு
(C) கவலைக்கு __________ கொடு
(D) மானத்துக்கு __________ கொடு
(E) விடை தெரியவில்லை
11. மா ஓடியது – இத்தொடரில் ‘மா’ என்ற சொல் உணர்த்தும் பொருளைத் தருக
(A) மரம்
(B) நிலம்
(C) குதிரை
(D) வண்டு
(E) விடை தெரியவில்லை
12. இரு பொருள் தருக.
திங்கள்
(A) நிலவு, துன்பம்
(B) நிலவு. மாதம்
(C) கிழமை,ஆகாயம்
(D) மாதம், வாரம்
(E) விடை தெரியவில்லை
13. கலைச் சொற்களை அறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு.
(A) Creator – கையெழுத்துப்படி
(B) Inscriptions – கல்வெட்டு
(C) Sculpture – படைப்பாளர்
(D) Manuscripts – சிற்பம்
(E) விடை தெரியவில்லை
14. சரியான பொருளறிந்து பொருத்துக.
(a) நீயே செய் 1. உறுவது கூறல் விடை
(b) வராமல் இருப்பேனா? 2. சுட்டு விடை
(c) கால் வலிக்கும் 3. வினா எதிர் வினாதல் விடை
(d) வலப்பக்கத்தில் உள்ளது 4. ஏவல் விடை
(a) (b) (c) (d)
(A) 3 1 2 4
(B) 3 4 2 1
(C) 4 3 1 2
(D) 2 4 3 1
(E) விடை தெரியவில்லை
15. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.
(a) சூரன் 1. பெரும்பரப்பு
(b) பொக்கிஷம் 2. மிகுதி
(c) சாஸ்தி 3. செல்வம்
(d) விஸ்தாரம் 4. வீரன்
(a) (b) (c) (d)
(A) 3 2 4 1
(B) 1 2 3 4
(C) 4 2 3 1
(D) 4 3 2 1
(E) விடை தெரியவில்லை
16. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
(a) களித்திட 1. காடு
(b) நச்சரவம் 2. தங்கும் இடம்
(c) விடுதி 3. விடமுள்ளபாம்பு
(d) கானகம் 4. மகிழ்ந்திட
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 3 4 1 2
(C) 2 3 4 1
(D) 1 4 3 2
(E) விடை தெரியவில்லை
17. பிழையை திருத்தி சரியாக எழுதுக.
குழலி நடனம் ஆடியது
(A) ஆடினாள்
(B) ஆடுவாள்
(C) ஆடுகின்றாள்
(D) ஆடிக்கொண்டு இருக்கிறாள்
(E) விடை தெரியவில்லை
18. பிழையை நீக்கி எழுது.
(A) ஒரு அறிவு
(B) ஒரு அறிவின்
(C) ஒரு அறிவுக்கு
(D) ஓரறிவு
(E) விடை தெரியவில்லை
19. சொல் பொருள் பொருத்துக.
(a) முத்துச்சுடர் போல 1. மாடங்கள்
(b) தூய நிறத்தில் 2. தென்றல்
(c) சித்தம் மகிழ்ந்திட 3. நிலா ஒளி
(d) கத்தும் குயிலோசை 4. காதில் கேட்டல்
(a) (b) (c) (d)
(A) 3 1 2 4
(B) 4 3 1 2
(C) 1 2 3 4
(D) 1 4 3 2
(E) விடை தெரியவில்லை
20. ஒருமை பன்மை பிழையை நீக்குக.
(A) பறவைகள் வந்து தங்கின
(B) பறவை வந்து தங்கின
(C) பறவைகள் வந்து தங்கியது
(D) பறவைகள் வந்து தங்கினார்கள்
(E) விடை தெரியவில்லை
21. ஒருமை பன்மை பிழையை நீக்குக.
(A) யானைக் கூட்டம் வந்தது
(B) யானைக் கூட்டம் வந்தன
(C) யானைக் கூட்டம் வந்தார்கள்
(D) யானைக் கூட்டம் வந்ததுகள்
(E) விடை தெரியவில்லை
22. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக.
(A) மணிமேகலை மணிப்பல்லவத் தீவிற்கு சென்றது.
(B) மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்.
(C) மணிமேகலை மணிப்பல்லவத் தீவிற்கு சென்றார்கள்.
(D) மணிமேகலை மணிப்பல்லவத் தீவிற்கு சென்றார்.
(E) விடை தெரியவில்லை
23. பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க
(A) பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க
(B) பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னாங்க
(C) பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள்
(D) பெற்றோரிடம் பர்மிசன் கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள்
(E) விடை தெரியவில்லை
24. ‘கண்ணுறங்கு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(A) கண் + உறங்கு
(B) கண்ணு + உறங்கு
(C) கண் + றங்கு
(D) கண்ண் + உறங்கு
(E) விடை தெரியவில்லை
25. பிரித்து எழுதுக.
‘கண்டறி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) கண் + அறி
(B) கண்டு + அறி
(C) கண்ட + அறி
(D) கண் + டறி
(E) விடை தெரியவில்லை
26. பிரித்து எழுதுக.
‘அவ்வுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) அவ்வு + ருவம்
(B) அ + உருவம்
(C) அவ் + வுருவம்
(D) அ + வுருவம்
(E) விடை தெரியவில்லை
27. தவறான இணையைக் கண்டறிக
(A) சிலை – சீலை
(B) மலை – மாலை
(C) விடு – வீடு
(D) கெடு-கோடு
(E) விடை தெரியவில்லை
28. சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக:
1. நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பேன்
2. நேரத்தை சரியாகக் கடைபிடிப்பேன்
3. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது
4. வாழ்க்கைப்பயணமே வேறுப்பட்ட பாடங்களை கற்றுத் தருகிறது.
(A) 1 மற்றும் 3
(B) 2 மற்றும் 4
(C) 2 மற்றும் 3
(D) 1 மற்றும் 4
(E) விடை தெரியவில்லை
29. வழுவற்ற தொடர் எது?
(A) கொடியிலுள்ள மலரைக் கொண்டு வா
(B) கொடியிலுள்ள மலரைக் கொய்து வா
(C) கொடியிலுள்ள மலரை எடுத்து வா
(D) கொடியிலுள்ள மலரைக் கிள்ளி வா
(E) விடை தெரியவில்லை
30. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது ?
(A) ஆதி, அகில், விசும்பு, கனல்
(B) அங்கத்தினர், கனல், சாவி, ஆதி
(C) சபதம், சாவி, அந்தம், அகில்
(D) அலங்காரம், ஆரம்பம், அங்கத்தினர், தீபம்
(E) விடை தெரியவில்லை
31. வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்
நடக்கிறான்
(A) நடப்பான்
(B) நட
(C) நடக்கிறது
(D) நடந்து கொண்டு இருப்பான்
(E) விடை தெரியவில்லை
32. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் :
பின்வருவனவற்றுள் தவறான இணையைக் கண்டறிக.
(A) அழை – கூப்பிடு
(B) களை – எடு
(C) அளை – துழாவு
(D) கலை -கல்வி
(E) விடை தெரியவில்லை
33. அகர வரிசைப்படுத்துக.
(A) உழை,யாழி, இளி, கைக்கிளை, விளரி
(B) யாழி, கைக்கிளை, விளரி, உழை, இளி
(C) இளி, உழை, யாழி, விளரி, கைக்கிளை
(D) இளி, உழை, கைக்கிளை, யாழி, விளரி
(E) விடை தெரியவில்லை
34. சொல்லுதல்
தவறானக் கூற்றினை கண்டறிக
(A) பேசுதல், விளம்புதல்
(B) செப்புதல், உரைத்தல்
(C) எழுதுதல், கேட்டல்
(D) கூறல், இயம்பல்
(E) விடை தெரியவில்லை
35. வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் காண்க – ‘படி’
(A) படித்தல்
(B) படித்த
(C) படித்து
(D) படித்தான்
(E) விடை தெரியவில்லை
36. அகர வரிசையில் எழுதுக
(A) ஆற்றல்; அன்பு; எறும்பு; ஏணி
(B) எறும்பு; ஏணி; அன்பு; ஆற்றல்
(C) அன்பு; ஆற்றல்; எறும்பு; ஏணி
(D) ஏணி; அன்பு; எறும்பு; ஆற்றல்
(E) விடை தெரியவில்லை
37. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
(A) தெலுங்கு, திராவிடம், தையல், தூறு
(B) தையல், தூறு, திராவிடம், தெலுங்கு
(C) தூறு, தெலுங்கு, தையல், திராவிடம்
(D) திராவிடம், தூறு, தெலுங்கு, தையல்
(E) விடை தெரியவில்லை
38. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
(A) ரீங்காரம், ரொட்டி, ரௌத்திரம், ரூபாய்
(B) ரொட்டி, ரௌத்திரம், ரூபாய், ரீங்காரம்
(C) ரீங்காரம், ரூபாய், ரொட்டி, ரௌத்திரம்
(D) ரௌத்திரம், ரொட்டி, ரீங்காரம், ரூபாய்
(E) விடை தெரியவில்லை
39. சொற்களை ஒழுங்குபடுத்துக :
பழந்தமிழர் வள்ளல் எழுவர் கொடை மாட்சியைப் புலப்படுத்துகிறது கொடையின் சிறப்பால் போற்றப்படுவது
(A) கொடையிள் வள்ளல் எழுவர் சிறப்பால் போற்றப்படுவது பழந்தமிழர் மாட்சியைப் கொடை புலப்படுத்துகிறது
(B) பழந்தமிழர் கொடை மாட்சியைப் புலப்படுத்துகிறது கொடையின் சிறப்பால் வள்ளல் எழுவர் போற்றப்படுவது
(C) கொடையின் சிறப்பால் வள்ளல் எழுவர் போற்றப்படுவது பழந்தமிழர் கொடை மாட்சியைப் புலப்படுத்துகிறது
(D) கொடையின் சிறப்பால் வள்ளல் எழுவர் போற்றப்படுவது கொடை மாட்சியைப் புலப்படுத்துகிறது பழந்தமிழர்
(E) விடை தெரியவில்லை
40. “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடையளிப்பது என்ன விடை கண்டறிக.
(A) ஏவல் விடை
(B) மறை விடை
(C) வினா எதிர் வினாதல் விடை
(D) உறுவது கூறல் விடை
(E) விடை தெரியவில்லை
41. விடைக்கேற்ற வினாத் தேர்ந்தெடுத்தல்.
அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார்
(A) எவ்வாறு அகத்தியர் வாழ்ந்தார்?
(B) எத்தனை மலையில் வாழ்ந்தார்?
(C) எந்த மலையில் அகத்தியர் வாழ்ந்தார்?
(D) எப்படி அகத்தியர் வாழ்ந்தார்?
(E) விடை தெரியவில்லை
42. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
நெல்லையப்பர் கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது
(A) நெல்லையப்பர் கோவில் எத்தனை உள்ளது?
(B) நெல்லையப்பர் கோவில் எந்த மாவட்டத்தில் உள்ளது ?
(C) நெல்லையப்பர் கோவில் எதனால் உள்ளது?
(D) நெல்லையப்பர் கோவில் எதில் உள்ளது ?
(E) விடை தெரியவில்லை
43. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
நல்ல சொற்களைப் பேச வேண்டும்
(A) யார் சொற்களைப் பேச வேண்டும்?
(B) என்ன சொற்களைப் பேச வேண்டும்?
(C) எவர் சொற்களைப் பேச வேண்டும்?
(D) எப்பொழுது சொற்களைப் பேச வேண்டும்?
(E) விடை தெரியவில்லை
44. சரியான கலைச்சொல்லை கண்டறிக.
(A) Conversation – உயர் தொழில் நுட்பம்
(B) Bio-Technology – கலந்துரையாடல்
(C) Discussion – உரையாடல்
(D) Consonant – மெய்யெழுத்து
(E) விடை தெரியவில்லை
45. சரியான கலைச்சொல்லைத் தெரிவு செய்
Rational
(A) சீர்திருத்தம்
(B) ரேசன் அட்டை
(C) பகுத்தறிவு
(D) தொண்டு
(E) விடை தெரியவில்லை
46. விடை வகைகள் :
“எனக்குக் கற்றுத் தருகிறாயா” என்ற வினாவுக்கு எனக்கு யார் கற்றுத் தருவார்கள் என உரைப்பது
(A) வெளிப்படை விடை
(B) ஏவல் விடை
(C) வினா எதிர் வினாதல் விடை
(D) குறிப்பு விடை
(E) விடை தெரியவில்லை
47. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை எழுது
Uniform
(A) யூனிஃபார்ம்
(B) சீருடை
(C) ஆயத்த ஆடை
(D) வண்ண ஆடை
(E) விடை தெரியவில்லை
48. இதில் தவறான இணை எது?
(A) ஹோட்டல் – உணவகம்
(B) நாஷ்டா – பலகாரம்
(C) மார்னிங் – காலை
(D) டின்னர் – இரவு உணவு
(E) விடை தெரியவில்லை
49. புதுகை எனும் மரூஉச் சொல் குறிப்பிடும் ஊர்
(A) புதுச்சேரி
(B) புதுக்கோட்டை
(C) புத்தூர்
(D) புதுப்பாளையம்
(E) விடை தெரியவில்லை
50. மரூஉப் பெயர் அல்லாத ஊர்ப்பெயரைக் கண்டறிக
(A) கோவை
(B) நாகை
(C) வேலூர்
(D) உதகை
(E) விடை தெரியவில்லை
51. தவறான ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக
(A) நாகப்பட்டினம் – நாகை
(B) கும்பகோணம் – கும்பை
(C) மயிலாப்பூர் – மயிலை
(D) சைதாப்பேட்டை- சைதை
(E) விடை தெரியவில்லை
52. கீழ்கண்ட வாக்கியங்களில் சரியான நிறுத்தற்குறியுடைய வாக்கியத்தை கண்டறிக
(A) முக்கனி : மா, பலா, வாழை.
(B) முத்தமிழ் – இயல் இசை நாடகம்.
(C) முச்சங்கம் – முதல், இடை, கடை
(D) ‘மூவேந்தர்: சேர! சோழ! பாண்டியர்
(E) விடை தெரியவில்லை
53. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
பின்வருவனவற்றுள் பேச்சுவழக்கில் அமைந்த சொல்லைக் கண்டறிக.
(A) படித்தான்
(B) செஞ்சான்
(C) உண்டான்
(D) வந்தான்
(E) விடை தெரியவில்லை
54. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கு
யானை – சரியான சொல்
(A) குட்டி
(B) குஞ்சு
(C) குழவி
(D) கன்று
(E) விடை தெரியவில்லை
55. ‘அத்தி பூத்தாற்போல’ – உவமை கூறும் பொருள் தெளிக
(A) வேகமாக
(B) அரிதாக
(C) மெதுவாக
(D) நிதானமாக
(E) விடை தெரியவில்லை
56. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக.
சோறு – சரியான சொல்.
(A) சாப்பிட்டான்
(B) விழுங்கினான்
(C) தின்றான்
(D) உண்டான்
(E) விடை தெரியவில்லை
57. பொருத்தமான காலம் அமைத்தல்
“நாங்கள் நேற்று கடற்கரைக்குச் சென்றோம்” என்ற தொடர் குறிக்கும் காலம்
(A) எதிர்காலம்
(B) குளிர்காலம்
(C) நிகழ்காலம்
(D) இறந்த காலம்
(E) விடை தெரியவில்லை
58. வினாவின் வகையைக் கண்டறிக
“வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம்
வினவி வேலையைச் சொல்லுதல்
(A) அறியா வினா
(B) கொளல் வினா
(C) ஏவல் வினா
(D) ஐய வினா
(E) விடை தெரியவில்லை
59. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். ______ மரங்கள்தான் மழைக்கு அடிப்படை
(A) எனவே
(B) ஆகையால்
(C) மேலும்
(D) ஏனெனில்
(E) விடை தெரியவில்லை
60. சரியான இணைப்புச் சொல்லினைத் தேர்ந்தெடு
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
நல்ல நூல்கள் படிக்க படிக்க இன்பம் தருகிறது. நண்பர் தவறு செய்தால் அவரைக்
கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது
(A) எனவே
(B) ஆகையால்
(C) அதுபோல
(D) ஏனெனில்
(E) விடை தெரியவில்லை
61. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிக
(A) E. Mail – மின் இதழ்கள்
(B) E. Book – மின்நூல்
(C) E. Magazine – மின் நூலகம்
(D) E. Library – மின் அஞ்சல்
(E) விடை தெரியவில்லை
62. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்கவும்.
__________ எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
(A) (செறிவு)
(B) (நிறை)
(C) (முறை)
(D) (அறிவு)
(E) விடை தெரியவில்லை
63. இருபொருள் தருக.
ஆறு
(A) எண், நதி
(B) வரிசை, எண்ணிக்கை
(C) ஆறுதல், எண்
(D) நீர், நதி
(E) விடை தெரியவில்லை
64. குறில் நெடில் மாற்றம் பொருள் வேறுபாடறிந்து சரியானதைத் தெரிக.
மடு-மாடு
(A) செல்வம் – பக்கம்
(B) நீர்நிலை – எருது
(C) கிராமம் – செல்வம்
(D) மடித்துவை – பசு
(E) விடை தெரியவில்லை
65. கீழ்க்கண்ட தொடர்களைக் கவனி.
கூற்று (A) : இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்ததில்லான்
“இந்திய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான்” என்றார்.
காரணம் (R) : இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு
உரியவர்கள் தமிழர்கள்.
(A) (A) கூற்று சரி (R) காரணம் சரி
(B) (A) கூற்று சரி (R) காரணம் தவறு
(C) (A) கூற்று தவறு (R) காரணம் சரி
(D) (A) கூற்று தவறு (R) காரணம் தவறு
(E) விடை தெரியவில்லை
66. கலைச்சொல் அறிக.
Biotechnology
(A) உயிரித் தொழில் நுட்பம்
(B) மீநுண்தொழில் நுட்பம்
(C) உயிரியல் ஆய்வு
(D) தாவர உயிரியல்
(E) விடை தெரியவில்லை
67. கலைச்சொல் அறிக.
Courtesy
(A) வறுமை
(B) நற்பண்பு
(C) உடற்பயிற்சி
(D) தாழ்மை
(E) விடை தெரியவில்லை
68. தகுந்த சொல்லைத் தேர்ந்து எழுதுக.
பிறரிடம் நான் ________ பேசுவேன்
இன்சொல்
(A) கடுஞ்சொல்
(B) இன்சொல்
(C) வன்சொல்
(D) கொடுஞ்சொல்
(E) விடை தெரியவில்லை
69. பொருத்தமான சொற்களைக் கொண்டு பின்வரும் தொடர்களை நிரப்புக.
(1.தோப்பு, 2. தோட்டம், 3. கூட்டம், 4. படை)
(அ) கள்வர்கள் _________ சென்றனர்.
(ஆ) மாந் __________ குயில்கள் கூவின.
(இ) காலாட் _________விரைந்து சென்றது.
(ஈ) மல்லிகை ________ மலர்ந்து மணம் வீசியது.
(A) அ-3, ஆ-1, இ-4, ஈ-2
(B) அ-3, ஆ-4, இ-2, ஈ-1
(C) அ-4, ஆ-1, இ-2, ஈ-3
(D) அ-4, ஆ-3, இ-1, ஈ-2
(E) விடை தெரியவில்லை
70. கீழ்க்கண்டவற்றுள் எச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார்.
(A) பெயர்ச்சொற்கள்
(B) வினைச்சொற்கள்
(C) இடைச்சொற்கள்
(D) உரிச்சொற்கள்
(E) விடை தெரியவில்லை
71.”காலக் கணிதம்” – பாடலில் இடம் பெற்றுள்ள சரியான வரியை தேர்வு செய்க.
(A) பொருளென் செல்வம் பொன்னினும் விலை மிகு !
(B) விலைமிகு செல்வம் பொன்னினும் பொருள் என்! –
(C) பொன்னினும் விலைமிகு பொருள் என் பொருள்!
(D) பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
(E) விடை தெரியவில்லை
72. சரியான தொடரைத் தேர்ந்தெடு.
“கரிசல் இலக்கியம்” என்பது
(A) காய்ந்தும், பெய்தும் கெடுக்கும்
(B) தயக்கம் கொடுக்கும்
(C) பிரகாசம் தரும்
(D) மண்சாரல் வரும்
(E) விடை தெரியவில்லை
73. பொருத்துக.
சொல் பொருள்
(a) நெடி 1. மகிழ்ச்சி
(b) மழலை 2. அழகு
(c) வனப்பு 3. குழந்தை
(d) பூரிப்பு 4. நாற்றம்
(a) (b) (c) (d)
(A) 3 1 2 4
(B) 1 2 3 4
(C) 2 1 4 3
(D) 4 3 2 1
(E) விடை தெரியவில்லை
74. பொருத்துக.
சொல் பொருள்
(a) உரு 1. கப்பல்
(b) போழ 2. பகல்
(c) வங்கம் 3. அழகு
(d) எல் 4. பிளக்க
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 1 4 3 2
(C) 3 4 1 2
(D) 2 1 4 3
(E) விடை தெரியவில்லை
கீழ்க்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு.
(75-79)
நம்மில் எத்தனை உணர்ச்சிகள் உள்ளன எனச் சிந்தித்துப் பாருங்கள் ! கோபம், பாசம்,
அன்பு, வியப்பு, வெறுப்பு என எத்தனை உணர்ச்சிகளை நம் முகம் காட்டுகின்றது.
மனிதனுக்குத்தான் முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டும் திறமை அதிகம். கோபம், பயம் போன்ற ஒன்றிரண்டைத்தான் மிருகங்களால் காட்ட முடியும். மற்றபடி மனிதன் போல் நவரசங்களையும் காட்ட முடியாது. உணர்ச்சிகளின் பிறப்பிடம் மூளைதான். மூளை – உடல் இரண்டும் இணைந்து செயல்படுவதால் வெளிப்படுபவைதான் உணர்ச்சிகள்.
75. முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டும் திறமை அதிகம் யாருடையது?
(A) யானை
(B) மனிதன்
(C) சிங்கம்
(D) புலி
(E) விடை தெரியவில்லை
76. மிருகங்களால் எதை காட்ட முடியும்?
(A) கோபம், பயம்
(B) கோபம்
(C) பயம்
(D) எதுவுமில்லை
(E) விடை தெரியவில்லை
77. யாரைப் போல் நவரசங்களை காட்ட முடியாது?
(A) சிங்கம்
(B) மனிதன்
(C) யானை
(D) புலி
(E) விடை தெரியவில்லை
78. உணர்ச்சிகளின் பிறப்பிடம் எது ?
(A) இருதயம்
(B) மார்பு
(C) மூளை
(D) கண்
(E) விடை தெரியவில்லை
79. எவை இரண்டும் இணைந்து செயல்படுவதால் தான் உணர்ச்சிகள்?
(A) கண்-தலை
(B) மூளை – உடல்
(C) கை – கால்
(D) கண்-மூளை
(E) விடை தெரியவில்லை
80.பேதையார் – எதிர்ச்சொல் தருக.
(A) அறிவற்றவர்
(B) அறிவுடையவர்
(C) உற்றார்
(D) உறவினர்
(E) விடை தெரியவில்லை
81. அந்நியர் – எதிர்ச்சொல் தருக.
(A) நன்மை
(B) பெரியது
(C) உறவினர்
(D) ஒற்றுமை
(E) விடை தெரியவில்லை
82. முப்பால் ஆசிரியருக்கு வழங்கப்படாத பெயரைக் கண்டறிக
(A) தெய்வப் புலவர்
(B) பொய்யில் புலவர்
(C) பாவலரேறு
(D) மாதானுபங்கி
(E) விடை தெரியவில்லை
83. எட்டுத்தொகையில் இடம்பெறாத இலக்கிய நூல் கண்டறிக.
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) நற்றிணை
(D) முல்லைப்பாட்டு
(E) விடை தெரியவில்லை
84. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின்களைக் கண்டுபிடித்தனர்.
(A) இயற்கை
(B) இயந்திரம்
(C) ஆபரணம்
(D) குறிக்கோள்
(E) விடை தெரியவில்லை
85. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக.
‘Land Breeze’
(A) பெருங்காற்று
(B) நிலக்காற்று
(C) கடற்காற்று
(D) சுழல் காற்று
(E) விடை தெரியவில்லை
86. ‘Terminology’ – என்ற சொல்லின் தமிழ்ச்சொல் யாது?
(A) உயிரித்தொழில்நுட்பம்
(B) மீநுண்தொழில்நுட்பம்
(C) கலைச்சொல்
(D) விண்வெளித் தொழில்நுட்பம்
(E) விடை தெரியவில்லை
87. இலை,இளை, இழை – ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தருக
(A) மெலிதல், நூலிழை. தாவர உறுப்பு
(B) தாவர உறுப்பு, மெலிதல், நூலிழை
(C) நூலிழை, தாவர உறுப்பு, மெலிதல்
(D) தாவர உறுப்பு, நூலிழை, மெலிதல்
(E) விடை தெரியவில்லை
88. ஒரு பொருள் தரும் பல சொற்கள் :
அரசன்
(A) மன்னன், கவிஞன்
(B) கோ, தலைவன்
(C) முதல்வன், குடிலன்
(D) வேந்தன், உறுப்பினன்
(E) விடை தெரியவில்லை
89. ‘வென்றார்’ என்பதன் வேர்ச்சொல்
(A) வேல்
(B) வெல்
(C) வென்று
(D) வென்றி
(E) விடை தெரியவில்லை
90. வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயர் காண்க : “பாடு”
(A) பாடினான்
(B) பாடுதல்
(C) பாடினேன்
(D) பாடியவன்
(E) விடை தெரியவில்லை
91. வேர்ச்சொல்லை வினையெச்சமாக மாற்று :
பாடு
(A) பாடினான்
(B) பாடி
(C) பாடிய
(D) பாடப்பட்ட
(E) விடை தெரியவில்லை
92. சொற்களை ஒழுங்குபடுத்துக:
வீரத்தைச் சொல்லும் தமிழ் மக்களின் புலியாட்டமாகும் கலையாகத் திகழ்வது
(A) தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலியாட்டமாகும்
(B) தமிழ் வீரத்தைச் சொல்லும் மக்களின் கலையாகத் திகழ்வது புலியாட்டமாகும்
(C) வீரத்தைச் சொல்லும் மக்களின் தமிழ் கலையாகத் திகழ்வது புலியாட்டமாகும்
(D) வீரத்தைச் சொல்லும் மக்களின் கலையாகத் திகழ்வது தமிழ் புலியாட்டமாகும்
(E) விடை தெரியவில்லை
93. சொற்களை ஒழுங்குபடுத்துக :
“நாட்டில் தென்றல் அசைந்துவரும் அமைந்த திருக்குற்றாலம் மலைவளம் படைத்த
பழம்பதியாகும் மலைவளம்”
(A) தென்றல் அசைந்துவரும் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம் தென்தமிழ் படைத்த
மலைவளம் பழம்பதியாகும்.
(B) அசைந்துவரும் தென்றல் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம் படைத்த
மலைவளம் பழம்பதியாகும்
(C) தென்றல் அசைந்துவரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம்
மலைவளம் படைத்த பழம்பதியாகும்
(D) நாட்டில் அசைந்துவரும் தென்றல் அமைந்த திருக்குற்றாலம் மலைவளம் படைத்த பழம்பதியாகும் மலைவளம்
(E) விடை தெரியவில்லை
94. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
திருக்குறள் மூன்று பிரிவுகளை உடையது.
(A) திருக்குறள் என்றால் என்ன?
(B) திருக்குறள் எத்தனை பிரிவுகளை உடையது?
(C) திருக்குறள் என்பவர் யார்?
(D) திருக்குறள் என்பது யாது ?
(E) விடை தெரியவில்லை
95. ‘நீ விளையாடவில்லையா’? என்ற வினாவிற்கு ‘கால் வலிக்கும்’ என்று கூறுவது
(A) இனமொழி விடை
(B) உற்றது உரைத்தல் விடை
(C) உறுவது கூறல் விடை
(D) ஏவல் விடை
(E) விடை தெரியவில்லை
96. தன்வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
(A) சிறுவன் பாடம் படிப்பித்தான்
(B) சிறுவன் பாடம் படித்தான்
(C) சிறுவன் பாடம் படிக்க வைத்தான்
(D) சிறுவன் பாடம் படித்தானா?
(E) விடை தெரியவில்லை
97. செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
பானை குயவனால் வனையப்பட்டது
(A) செய்வினை வாக்கியம்
(B) செயப்பாட்டு வினைவாக்கியம்
(C) வினா வாக்கியம்
(D) எதிர்மறை வாக்கியம்
(E) விடை தெரியவில்லை
98. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் தன்வினை, பிறவினை, செய்வினை,
செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
அப்பா சொன்னார்
(A) தன்வினை வாக்கியம்
(B) செய்வினை வாக்கியம்
(C) பிறவினை வாக்கியம்
(D) செயப்பாட்டுவினை வாக்கியம்
(E) விடை தெரியவில்லை
99. கடலில் கரைத்த பெருங்காயம்’ – இவ்வுவமை கூறும் பொருள் விளக்கம்
(A) மணமின்மை
(B) வெற்றிடம்
(C) கரைதல்
(D) பயனின்மை
(E) விடை தெரியவில்லை
100. டெம்பெஸ்ட் (Tempest) என்பது
(A) சூறாவளி
(B) கடற்காற்று
(C) சுழல்காற்று
(D) பெருங்காற்று
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:
01) D 02) C 03) B 04) C
05) D 06) B 07) B
08) D 09) A 10) C 11) C
12) B 13) B 14) C
15) D 16) A 17) A 18) D
19) A 20) A 21) A
22) B 23) C 24) A 25) B
26) B 27) D 28) A
29) B 30) A 31) B 32) B
33) D 34) C 35) D
36) C 37) D 38) C 39) C
40) C 41) C 42) B
43) B 44) D 45) C 46) C
47) B 48) B 49) B
50) C 51) B 52) A 53) B
54) D 55) B 56) D
57) D 58) C 59) D 60) C
61) B 62) D 63) A
64) B 65) A 66) A 67) B
68) B 69) A 70) D
71) D 72) A 73) D 74) C
75) B 76) A 77) B
78) C 79) B 80) B 81) C
82) C 83) D 84) B
85) B 86) C 87) B 88) B
89) B 90) D 91) B
92) A 93) C 94) B 95) C
96) B 97) B 98) B
99) D 100) D