NMMS Social Science Question Bank:
1) தொடக்க இடைக்கால இந்திய வரலாற்று காலம் என்பது
- கி.பி. 700 முதல் 1200 வரை
- கி.பி. 600 முதல் 1100 வரை
- கி.பி. 500 முதல் 1000 வரை
- கி.பி. 800 முதல் 1300 வரை
ANSWER KEY: 1
2) பின் இடைக்கால இந்திய வரலாற்று காலம் என்பது
- கி.பி. 1000 முதல் 1500 வரை
- கி.பி.1100 முதல் 1600 வரை
- கி.பி. 1200 முதல் 1700 வரை
- கி.பி.1300 முதல் 1800 வரை
ANSWER KEY: 3
3) இடைக்கால இந்திய வரலாற்றை கற்கும் அறிஞர்களுக்கு நல்வாய்ப்பாக கிடைக்கப் பெற்றவை
- பணம்
- சான்றுகள்
- மனிதர்கள்
- விலங்குகள்
ANSWER KEY: 2
4) அதிக செய்திகளை வழங்கும் இடைக்கால இந்திய வரலாற்றுச் சான்றுகள்
- கல்வெட்டுகள்
- கட்டடங்கள்
- இலக்கியங்கள்
- பயணக்குறிப்புகள்
ANSWER KEY: 1
5) ஔரங்கசீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞராக இருந்தவர்
- காஃபிகான்
- நேதாஜி
- வாஸ்கோடகாமா
- அக்பர்
ANSWER KEY: 1
6) விசுவாசம் உள்ளவராக இருத்தல், ஆபத்துக்கு அஞ்சாமை ஆகியவை வரலாற்று ஆசிரியரின் கடமைகள் என்று கூறியவர்
- ஔரங்கசீப்
- நேதாஜி
- காஃபிகான்
- ஜஹாங்கீர்
ANSWER KEY: 3
7) கடந்த காலத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு உதவக்கூடிய பதிவுகளே __________ எனப்படும்.
- கடமைகள்
- சான்றுகள்
- உரிமைகள்
- கூற்றுகள்
ANSWER KEY: 2
8) சான்றுகள் உதவியுடன் நாம் ________________, பொருளாதார, சமூக பண்பாட்டு வளர்ச்சி ஆகிய விவரங்களை திறனாய்வு செய்கிறோம்.
- அரசியல்
- சினிமா
- கல்வி
- கூற்றுகள்
ANSWER KEY: 1
9) இந்திய வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் ___________ வகைப்படும்.
- இரண்டு
- மூன்று
- நான்கு
- ஐந்து
ANSWER KEY: 1
10) கீழ்க்கண்டவற்றுள் எது முதல்நிலைச் சான்றுகளுள் ஒன்று அல்ல?
- பொறிப்புகள்
- கல்வெட்டுகள்
- நாணயங்கள்
- சுயசரிதைகள்
ANSWER KEY: 4
11) இரண்டாம்நிலைச் சான்றுகளுக்கு எடுத்துக்காட்டு
- பொறிப்புகள்
- இலக்கியங்கள்
- செப்புப்பட்டயங்கள்
- நாணயங்கள்
ANSWER KEY: 2
12) பாறைகள், கற்கள், கோவிற்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றில் கடினமான மேற்பரப்பின் மேல் பொறிக்கப்படும் எழுத்துக்கள் _________ எனப்படும்.
- பொறிப்புகள்
- இலக்கியங்கள்
- பயணக்குறிப்புகள்
- நாணயங்கள்
ANSWER KEY: 1
13) சட்டப்பூர்வமான ஆவணங்களாக ஐயப்பாடுகளுக்கு இடமில்லாத மதிப்புகளைக் கொண்டுள்ளவை _____________ ஆகும்.
- இலக்கியங்கள்
- பயணக்குறிப்புகள்
- நாணயங்கள்
- செப்புப்பட்டயங்கள்
ANSWER KEY: 4
14) செப்புப்பட்டயங்கள் விலை அதிகமாக இருப்பதன் விளைவாக அவற்றுக்கு மாற்றாகப் பயன்பாட்டுக்கு வந்த சான்று ____________.
- பனையோலை
- கற்கள்
- தகடுகள்
- உலோகங்கள்
ANSWER KEY: 1
15) செப்புப்பட்டயங்கள் நடைமுறைக்கு வந்த ஆண்டு _________.
- 11 ஆம் நூற்றாண்டு
- 12 ஆம் நூற்றாண்டு
- 13 ஆம் நூற்றாண்டு
- 14 ஆம் நூற்றாண்டு
ANSWER KEY: 3
16) பிற்கால சோழர்களின் காலம்
- 5 – 10 ஆம் நூற்றாண்டு
- 10 – 15 ஆம் நூற்றாண்டு
- 10 – 13 ஆம் நூற்றாண்டு
- 15 – 20 ஆம் நூற்றாண்டு
ANSWER KEY: 3
17) பிற்காலச் சோழர்கள் காலத்தில் கொடை வழங்கியவரின் அறச்செயல்கள் அதிகம் பதிவு செய்யப்பட்ட ஆவணம் ___________.
- செப்புப்பட்டயங்கள்
- கல்வெட்டுகள்
- பனையோலைகள்
- நாணயங்கள்
ANSWER KEY: 2
18) உத்திரமேரூர் கல்வெட்டுகள் ____________ நிர்வாகம் குறித்த விவரங்களை உள்ளடக்கியது ஆகும்.
- அரசவை
- மாவட்டங்கள்
- சான்றுகள்
- கிராமங்கள்
ANSWER KEY: 4
19) தவறான இணையைக் கண்டுபிடி.
- வேளாண் வகை – பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்
- பிரம்மதேயம் – பிராமணர்க்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
- சாலபோகம் – கல்வி நிலையங்களைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள்
- தேவதானம் – சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
ANSWER KEY: 4
20) சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள் ____________ ஆகும்.
- பள்ளிச் சந்தம்
- தேவதானம்
- சாலபோகம்
- பிரம்மதேயம்
ANSWER KEY: 1
21) இந்தியாவில் புதுவகையான கட்டடக்கலையை அறிமுகம் செய்தவர்கள்
- அசோகர்கள்
- சீக்கியர்கள்
- மராத்தியர்கள்
- சுல்தான்கள்
ANSWER KEY: 4
22) இந்தியாவில் சுல்தான்கள் அறிமுகம் செய்த புதுவகையான கட்டடக்கலையின் முக்கியக் கூறுகளுள் ஒன்று ___________.
- குவிமாடங்கள்
- பயணக்குறிப்புகள்
- நாணயங்கள்
- செப்புப்பட்டயங்கள்
ANSWER KEY: 1
23) பிற்காலச் சோழர்கள் தமிழ்நாட்டில் கட்டியெழுப்பிய நேர்த்தியான பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கு அடையாளமாகத் திகழ்வது ________.
- கஜுராகோ
- அபுகுன்று
- கங்கைகொண்ட சோழபுரம்
- விருப்பாக்சா
ANSWER KEY: 3
24) ஹைதராபாத்தில் உள்ள இடைக்காலத்தைச் சேர்ந்த முக்கியமான மசூதி _____________.
- மோத்-கி-மசூதி
- சார்மினார்
- ஜமா மசூதி
- குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி
ANSWER KEY: 1
25) வட இந்தியாவில் உள்ள பாழடைந்த நகரம் ____________.
- சென்னை
- மும்பை
- கேரளா
- துக்ளகாபாத்
ANSWER KEY: 3
26) பொருத்துக.
i) கஜுராஹோ கோயில் – a) ஒடிசா
ii) அபு குன்று – b) தமிழ்நாடு
iii) கோனார்க் கோயில் – c) தில்வாரா
iv) பிரகதீஸ்வரர் கோயில் – d) மத்தியப்பிரதேசம்
1) i – d, ii – c, iii – b, iv – a
2) i – a, ii – d, iii – b, iv – c
3) i – d, ii – c, iii – a, iv – b
4) i – d, ii – a, iii – b, iv – c
ANSWER KEY: 2
27) பொருத்துக.
i) ஜெய்ப்பூர் அரண்மனை – a) கர்நாடகா
ii) ஹம்பி – b) பாழடைந்த நகரம்
iii) பெரியபுராணம் – c) சேக்கிழார்
iv) துக்ளகாபாத் – d) இராஜபுத்திரர்கள்
1) i – d, ii – a, iii – c, iv – b
2) i – d, ii – a, iii – b, iv – c
3) i – d, ii – c, iii – a, iv – b
4) i – a, ii – d, iii – b, iv – c
ANSWER KEY: 4
28) தென்னிந்தியாவில் உள்ள ___________ இடைக்கால இந்திய வரலாற்றுக்கான சான்றுக் கருவூலமாகும்.
- பிரோஷாபாத்
- ஹம்பி
- துக்ளகாபாத்
- டெல்லி
ANSWER KEY: 2
29) _______________ இல் உள்ள உலோகக்கலவை பேரரசின் பொருளாதார நிலை குறித்த செய்திகளை வழங்குகின்றன.
- கட்டடங்கள்
- கல்லறைகள்
- மசூதிகள்
- நாணயங்கள்
ANSWER KEY: 4
30) தான் வெளியிட்ட தங்கநாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்தவர்
- முகமது கோரி
- அக்பர்
- நேதாஜி
- வாஸ்கோடகாமா
ANSWER KEY: 1
31) டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள _____________ என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன.
- ஜிட்டல்
- டங்கா
- தேவாரம்
- குன்றிமணி
ANSWER KEY: 1
32) தவறான இணையைக் கண்டுபிடி.
- டெல்லி சுல்தான் – ஜிட்டல்
- இல்துமிஷ் – டங்கா
- அலாவுதீன் கில்ஜி – வெள்ளி நாணயங்கள்
- முகமது பின் துக்ளக் – செப்பு நாணயங்கள்
ANSWER KEY: 3
33) ஒரு ஜிட்டல் என்பது __________ வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டதாகும்.
1) 3.6
2) 3.2
3) 3.4
4) 3.8
ANSWER KEY: 1
34) ஒரு வெள்ளி டங்காவுக்குச் சமமானது _________ ஜிட்டல்கள் ஆகும்.
- 36
- 42
- 56
- 48
ANSWER KEY: 4
35) கீழ்க்காணும் அரசர்களுள் தங்க நாணயங்களை வெளியிட்டவர் / வெளியிட்டவர்கள் _________________.
- அலாவுதீன் கில்ஜி
- முகமதுகோரி
- இல்துமிஷ்
- முகமதுபின் துக்ளக்
1) 1 மட்டும்
2) 1 மற்றும் 2
3) 1, 2, மற்றும் 3
4) எதுவுமில்லை
ANSWER KEY: 2
36) “பக்தி இலக்கியங்களின் காலம்” என்று அழைக்கப்படுவது ___________ காலமாகும்.
- முகலாயர்கள்
- சோழர்கள்
- சேரர்கள்
- பாண்டியர்கள்
ANSWER KEY: 2
37) கீழ்க்காண்பவைகளுள் எது சமய இலக்கிய நூல்களுள் ஒன்று?
- மதுராவிஜயம்
- அமுக்த மால்யதா
- ராஜதரங்கிணி
- திருவாசகம்
ANSWER KEY: 4
38) கீழ்க்காண்பவைகளுள் எது சமயச் சார்பற்ற இலக்கியங்களுள் ஒன்று அல்ல?
- மதுராவிஜயம்
- அமுக்தமால்யதா
- ராஜதரங்கிணி
- திருவாசகம்
ANSWER KEY: 4
39) பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்டு நாதமுனியால் தொகுக்கப்பட்ட பக்தி இலக்கியம் ______________.
- கம்பராமாயணம்
- பெரியபுராணம்
- தேவாரம்
- நாலாயிர திவ்விய பிரபந்தம்
ANSWER KEY: 4
40) அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்டு நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட பக்தி இலக்கியம் __________
- தேவாரம்
- கீதகோவிந்தம்
- திருவாசகம்
- பெரியபுராணம்
ANSWER KEY: 1
41) பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த இறைநிலை உணர்வு பெற்ற கவிஞர் _____________.
- முகமது கோரி
- அலாவுதீன்
- கபீர்தாஸ்
- இல்துமிஷ்
ANSWER KEY: 3
42) கங்காதேவியால் இயற்றப்பட்ட இலக்கியம் ________________.
- அமுக்த மால்யதா
- மதுரா விஜயம்
- திருவாசகம்
- தேவாரம்
ANSWER KEY: 2
43) இஸ்லாமுக்கு முந்தைய காலத்தைப் பற்றி விளக்கும் ஒரே சான்று கல்ஹணரின் ______________ மட்டுமே ஆகும்.
- ராஜதரங்கிணி
- பிருதிவிராஜ ராசோ
- மதுரா விஜயம்
- அமுக்த மால்யதா
ANSWER KEY: 1