SGT TRB Exam Tamil Model Question Paper with Answers:
1. விடை வகைகளைப் பொருத்துக.
(A) சுட்டிக் கூறுவது (1) நேர் விடை
(B) மறுத்துக் கூறுவது (2) இனமொழி விடை
(C) இனமாகக் கூறுவது (3) மறை விடை
(D) உடன்பட்டுக் கூறுவது (4) சுட்டு விடை
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 4 1 2 3
(C) 4 2 3 1
(D) 4 3 2 1
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : D
2. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் கண்டறிந்து பொருத்தமற்றதை தேர்ந்தெடுத்தெழுதுக.
(A) டெபிட் கார்டு – பற்று அட்டை
(B) கிரெடிட் கார்டு – கடன் அட்டை
(C) ஆன்லைன் ஷாப்பிங் – இணையத்தள வணிகம்
(D) ஈ காமர்ஸ் – மின்னனுமயம்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : D
3. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தெரிவு செய்க.
நாயு
(A) நாய்
(B) நாடு
(C) நாவாய்
(D) நாக்கு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
4. ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக.
கும்பகோணம்
(A) குமரி
(B) மதுரை
(C) சைதை
(D) குடந்தை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
5. ஊர்ப்பெயரின் மரூ௨வை அறிந்து பொருந்தா இணையைக் கண்டறிக.
(A) புதுச்சேரி – புதுவை
(B) புதுக்கோட்டை – புதுமை
(C) கும்பகோணம் – குடந்தை
(D) நாகப்பட்டினம் – நாகை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
6. ஊர்ப் பெயர்களின் மரூ௨வைப் பொருத்துக.
(a) கோயம்புத்தூர் (1) நாகை
(b) நாகப்பட்டினம் (2) புதுகை
(c) புதுச்சேரி (3) கோவை
(d) புதுக்கோட்டை (4) புதுவை
(a) (b) (c) (d)
(A) 1 3 4 2
(B) 2 4 3 1
(C) 3 1 4 2
(D) 3 1 2 4
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
7. சரியான நிறுத்தற் குறித்தொடரை காண்க.
(A) ஆ; எவ்வளவு பெரிய கரடி? கரடிக்கு மரம் ஏறத் தெரியும்.
(B) ஆ! எவ்வளவு பெரிய கரடி. கரடிக்கு மரம் ஏறத் தெரியுமா?
(C) ஆ, எவ்வளவு பெரிய கரடி? கரடிக்கு மரம் ஏறத் தெரியுமா
(D) ஆ. ஆ! எவ்வளவு பெரிய கரடி, கரடிக்கு மரம் ஏறத் தெரியுமா?
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : B
8. நிறுத்தற்குறிகளை அறிதல்
நிறுத்தற்குறிகள் (எது சரியானது)
(A) மீனே, ஏன் இப்படி தூண்டிலை இழுக்கிறாய்!
(B) மீனே! ஏன் இப்படி தூண்டிலை இழுக்கிறாய்?
(C) மீனே, ஏன் இப்படி தூண்டிலை இழுக்கிறாய்?
(D) “மீனே! ஏன்? இப்படி தூண்டிலை இழுக்கிறாய்”
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
9. சரியான எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக
(A) வாடைக் காத்து வீசியது
(B) வாடைக் காற்று வீசுது
(C) வாடைக் காற்று வீசின
(D) வாடைக் காற்று வீசியது
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
10. பேச்சு வழக்குத் தொடரைக் காண்க.
(A) “எங்கடா போறே?”
(B) எங்கே போற?
(C) “எங்கடா போகின்றாய்?”
(D) “எங்கே போகின்றாய்?”
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : A
11. எந்த இரண்டு சொற்களை இணைத்தால் கீழ்க்கண்ட புதிய சொல் கிடைக்கும் (பாடறிந்து)
(A) பாட் + அறிந்து
(B) பா + அறிந்து
(C) பாடு + அறிந்து
(D) பாட்டு + அறிந்து
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : C
12. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக.
வெளி, நூல், மாலை, கோல்
(A) நூல் கோல்
(B) நூல்வெளி
(C) நூல் மாலை
(D) கோல்வெளி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
13. பின்வரும் விடை வகையினைச் சுட்டுக.
‘கடைத்தெரு எங்குள்ளது’ என்ற வினாவிற்கு ‘வலப்பக்கத்தில் உள்ளது’ எனக்கூறல்.
(A) நேர்விடை
(B) மறை விடை
(C) சுட்டு விடை
(D) இனமொழி விடை
(E) விடைதெரியலில்லை
ANSWER KEY : C
14. கண்மணி நாளை பாடம் படித்தாள் – பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக
(A) கண்மணி நாளை பாடம் படித்தாள்
(B) கண்மணி நாளை பாடம் படிப்பாள்
(C) கண்மணி இன்று பாடம் படிக்கிறாள்
(D) கண்மணி நேற்று பாடம் படித்தாள்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : B
15. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
பகுபத உறுப்புகள் _________ வகைப்படும்.
(A) எத்தனை
(B) எவற்றை
(C) எவ்வாறு
(D) எப்படி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
16. சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக.
நெல்லையப்பர் கோவில் _________ உள்ளது?
(A) எது
(B) எப்பொழுது
(C) எங்கு
(D) யார்
(E) விடைதெரியலில்லை
ANSWER KEY : C
17. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். ________ மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.
(A) அதனால்
(B) ஆகையால்
(C) அதுபோல
(D) ஏனெனில்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
18. சரியான இணைப்புச் சொல்லைத் தெரிவு செய்தல்.
சாலைகள் தோன்றிய பிறகே சாலை விதிகள் தோன்றியிருக்கும். ___________ இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும்.
(A) அதுபோல
(B) எனவே
(C) ஏனெனில்
(D) ஆகையால்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : A
19. சரியான இணைப்புச் சொல்.
பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தார் பாரதியார். ஏன் அப்படி பெயர் வைத்தார்? _________ கல்விக் கூடங்களில் தான் குழந்தைகளின் எதிர்காலம்நிர்ணயிக்கப்படுகிறது.
சரியான இணைப்புச் சொல்லைத் தேர்வு செய்க.
(A) அதனால்
(B) அதுபோல
(C) எனவே
(D) ஏனெனில்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : D
20. அடைப்புக்குள் உள்ள குலை வகை குறித்த சொல்லைத் தகுந்த வாக்கியத்துடன் பொருத்துக.
(அலகு)
(A) அவரைகுலை
(B) துவரை குலை
(C) சோளம் கதிர்
(D) நெல், தினை- கதிர்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : D
21. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக _______ ஆற்றினார். (உரை/உறை)
(A) பேசி
(B) உறை
(C) உரை
(D) கலந்துரையாடல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
22. பின்வரும் சொல்லுக்கு இருபொருள் தரும் சொற்களை தெரிவு செய்க.
ஆறு
(A) மாலை – படி
(B) எண் — நீர்நிலை
(C) பொழுது – காலை
(D) ஓடும்நீர் - கரை
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : B
23. இருபொருள் தருக:
துய்ப்பது
(A) பொருந்துதல், பெறுதல்
(B) விளித்தல், கேட்டல்
(C) கற்றல், தருதல்
(D) வேண்டுதல், அளித்தல்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : C
24. இருபொருள் தருக.
கல் – இரு பொருள் தருக.
(A) கற்றல் – இயற்கையாகக் கிடைக்கும் திடப்பொருள்
(B) மறத்தல் – சிறு உருண்டை வடிவமான பொருள்
(C) சுவாசித்தல் – சிறு உருண்டை வடிவமான நீர்
(D) அகழ்தல் – சிறு உருண்டை வடிவமான வாயு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
25. குறில் – நெடில் மாற்றம், பொருள் வேறுபாடு
விடு – வீடு
(A) வீடுபேறு – இன்பம்
(B) தயங்குதல் – தங்குதல்
(C) அறிக்கை விடுதல் – மரவீடு
(D) விடுதி – விற்பனை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
26. குறில் சொல்லை நெடில் சொல்லாக மாற்றி பொருள் வேறுபாடு வருமாறு ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
சிலை
(A) சிலை – சேலை
சிலையை சேலையைக் கொண்டு மறைத்திருக்கிறார்கள்
(B) சிலை – சீலை
சிலையைத் திரைச் சீலையால் மறைத்திருக்கிறார்கள்
(C) சிலை – சோலை
சிலை ஒரு சோலையில் வைக்கப்பட்டது
(D) சிலை – சூளை
சிலையை சூளைக்கருகில் வைத்தனர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
27. கூற்று காரணம் – சரியா? தவறா?
கூற்று : வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்.
காரணம் : மூவாயிரம் பாடல்களை கொண்டதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.
(A) கூற்று சரி; காரணம் சரி
(B) கூற்று சரி; காரணம் தவறு
(C) கூற்று தவறு; காரணம் தவறு
(D) கூற்று தவறு; காரணம் சரி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
28. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
(அ) “ஆ” என்பது எதிர்மறை இடைநிலை.
(ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.
(இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கியவடிவம்.
(A) மூன்றும் தவறு
(B) (ஆ), (இ) சரி; (௮) தவறு
(C) மூன்றும் சரி
(D) (௮) , (இ) சரி; (ஆ) தவறு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
29. Equality — இச்சொல்லுக்கு ஏற்ற சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்க.
(A) பேச்சாற்றல்
(B) ஒற்றுமை
(C) முழக்கம்
(D) சமத்துவம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
30. கலைச் சொற்களை அறிதல்
(a) கண்ணியம் (1) Doctrine
(b) வாய்மை (2) Preaching
(c) உபதேசம் (3) Dignity
(d) கொள்கை (4) Sincerity
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 3 4 2 1
(C) 4 1 3 2
(D) 1 4 3 2
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
31. கலைச் சொற்களை அறிதல்
Tornado
(A) சூறாவளி
(B) புயல்
(C) கடற்காற்று
(D) சுழல் காற்று
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
32. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ________.
(A) நெருப்பு
(B) நீர்
(C) நிலம்
(D) காற்று
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : D
33. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் எந்த பா-வில் அமைந்துள்ளது?
(A) அகவற்பா
(B) வெண்பா
(C) வஞ்சிப்பா
(D) கலிப்பா
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
34. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
சரியான இணையை தேர்ந்தெடு.
இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ________.
இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் __________.
(A) அமைச்சர், மன்னன்
(B) அமைச்சர், இறைவன்
(C) இறைவன், மன்னன்
(D) மன்னன், இறைவன்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : D
35. சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க.
மக்கள்
(A) கூட்டம்
(B) மந்தை
(C) நிரை
(D) மக்கள்கள்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : A
36. சரியான கூட்டப் பெயரைத் தேர்க.
ஆடு
(A) குவியல்
(B) குலை
(C) மந்தை
(D) கட்டு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
37. சொற்களின் கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க.
எறும்புகள்
(A) கூட்டமாக
(B) சாரை, சாரையாக
(C) அணி, அணியாக
(D) மந்தை, மந்தையாக
(E) விடைதெரியலில்லை
ANSWER KEY : B
38. சரியானத் தொடரைத் தேர்ந்தெடுக்க
(A) கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறார்.
(B) வேலை செய்ததால் இருக்கிறார் கபிலன் களைப்பாக
(C) களைப்பாக இருக்கிறார் கபிலன் செய்ததால் வேலை
(D) கபிலன் களைப்பாக வேலை இருக்கிறார் செய்ததால்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
39. சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக.
(A) கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்.
(B) மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்.
(C) கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்.
(D) மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : C
40. சரியான தொடர் எது என்பதைக் கண்டறிந்து எழுதுக.
(A) இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை வடித்தார்.
(B) சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
(C) சிலப்பதிகாரம் காப்பியத்தை என்னும் இயற்றியவர் இளங்கோவடிகள்.
(D) காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
41. ஒரு-ஓர் சரியாக அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக்க.
(A) ஒரு நாள் பகலவன் பள்ளிக்கு நடந்துவந்தான்.
(B) ஓர் நாள் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தது.
(C) ஒரு நாள் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தன.
(D) ஓர் நாள் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான்.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
42. கீழ்காணும் தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை
(A) அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.
(B) அது நகரத்திற்குச் செல்லும் சாலை.
(C) நகரத்திற்கு அஃது செல்லும் சாலை.
(D) நகரத்திற்கு செல்லும் சாலை அது.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
43. கீழ்காணும் தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
(A) இல்லாத அது இடத்தில் எதுவும் நடக்காது.
(B) இல்லாத இடத்தில் அஃது எதுவும் நடக்காது.
(C) அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
(D) இல்லாத இடத்தில் எதுவும் அது நடக்காது.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
44. நீகான் என்ற சொல்லின் பொருள் __________.
(A) கலங்கரை விளக்கம்
(B) கப்பல்
(C) பகல்
(D) நாவாய் ஓட்டுபவன்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
45. வங்கம் – என்னும் சொல்லின் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(A) பகல்
(B) கப்பல்
(C) கலங்கரை விளக்கம்
(D) நாவாய் ஒட்டுபவன்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
46. சொல்லையும், பொருளையும் பொருத்துக.
(a) திங்கள் (1) இமயமலை
(b) அலர் (2) கருனை
(c) மேரு (3) நிலவு
(d) அளி (4) மலர்தல்
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 2 4 3 1
(C) 1 2 3 4
(D) 4 3 2 1
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
47. ஒருமை பன்மை பிழை நீக்குக.
(A) யானைப் படையும் குதிரைப் படையும் சென்றார்கள்.
(B) யானைப் படையும் குதிரைப் படையும் சென்றது.
(C) யானைப் படையும் குதிரைப் படையும் சென்றன.
(D) யானைப் படையும் குதிரைப் படையும் சென்றார்.
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : C
48. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(A) தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர்.
(B) தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்தன.
(C) தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்தான்.
(D) தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்தது.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
49. பின்வரும் தொடரில் உள்ள பிழையைத் திருத்தி எழுதுக.
பகைவர் நீவீர் அல்லர்
(A) பகைவர் நீவீர் அல்லேன்
(B) பகைவர் நீவீர் அல்லோம்
(C) பகைவர் நீவீர் அல்லீர்
(D) பகைவர் நீவீர் அல்லன்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி (50 – 54)
திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும். இதனைத் தண்பொருநை நதி என்று முன்னர் அழைத்தனர். இது பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி என்று பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.
திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத் தொழில். தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெறுகின்றது. இங்கு குளத்துப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன. இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது. மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயிறு வகைகள் போன்றன பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் வாழைத்தார்கள். தமிழ்நாடு மட்டுமின்றிக் கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும்அனுப்பப்படுகின்றன. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது.
50. திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிக்கும் தொழில்
(A) நெசவுத் தொழில்
(B) உழவுத் தொழில்
(C) வணிகம்
(D) கட்டுமானத்தொழில்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : B
51. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம் பெறும் மாவட்டம்.
(A) காஞ்சிபுரம்
(B) கோவை
(C) திருநெல்வேலி
(D) சேலம்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : C
52. தாமிரபரணி ஆறு முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது ?
(A) தண்பொருநை
(B) கடனாநதி
(C) தாமிரா
(D) சிற்றாறு
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : A
53. திருநெல்வேலியின் மரூ௨ பெயர்
(A) குமரி
(B) கோவை
(C) செங்கை
(D) நெல்லை
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : D
54. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகளுள் ஒன்று
(A) பாலாறு
(B) தண்பொருநை
(C) சேர்வலாறு
(D) காவிரி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
55. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______.
(A) நிலம் + இடையே
(B) நிலத்தின் + இடையே
(C) நிலத்து + இடையே
(D) நிலத் + திடையே
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
56. ”அருந்துணை” என்பதைப் பிரித்தால்
(A) அரு + துணை
(B) அரு + இணை
(C) அருமை + துணை
(D) அருமை + இணை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
57. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.
(A) இடவெங்கும்
(B) இடம்எங்கும்
(C) இடமெங்கும்
(D) இடம்மெங்கும்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
58. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
(A) சிறிது
(B) பெரிது
(C) அரிது
(D) வறிது
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
59 எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.
காய் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
(A) முறி
(B) தாறு
(C) கனி
(D) வடலி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
60. எதிர்ச் சொல்லை எடுத்தெழுதுதல்
அணுகு
(A) தெளிவு
(B) சோர்வு
(C) பொய்மை
(D) விலகு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
61. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) கர்நாடகம்
(B) கேரளா
(C) இலங்கை
(D) ஆந்திரா
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
62. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) நான் – அல்லேன்
(B) நாம் – அல்லோம்
(C) நீ – அல்லை
(D) நீவீர் – அல்லர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
63. விகாரப் புணர்ச்சியில்லாத சொல்லைக் கண்டறிக
(A) தமிழ்த்தாய்
(B) விற்கொடி
(C) வாழைமரம்
(D) மனமகிழ்ச்சி
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : C
64. பின்வரும் வாக்கியங்களுள் சந்திப் பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக.
(A) மெய்க்கீர்த்திகள் புலவர்களால் எழுதப்பட்டு கல்தச்சர்களால் பொறிக்கப்பட்டவை.
(B) மெய்க்கீர்த்திகள் புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை.
(C) மெய்க்கீர்த்திகள் புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில்பொறிக்கபட்டவை.
(D) மெய்க்கீர்த்திகள் புலவர்கள் ஆல் எழுதப்பட்டு கல்தச்சர்களால் கல்லில்பொறிக்கப்பட்டவை.
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : B
65. சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
1. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
2. கற்றோருகு சென்ற இடமெல்லாம் சிறப்பு
3. கைபொருள் தன்னின் மெய்பொருள் கல்வி
4. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
(A) 1 மற்றும் 3
(B) 1 மற்றும் 4
(C) 2 மற்றும் 3
(D) 3 மற்றும் 4
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : B
66. சந்திப் பிழை நீக்குக.
பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க.
(A) ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு.
(B) ஆசிய யானைகளில் ஆண் யானைக்கும் தந்தம் உண்டு.
(C) ஆசிய யானைகளில் ஆண் யானைக்குச் தந்தம் உண்டு.
(D) ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு தந்தம் உண்டு.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
67. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.
Sentence
(A) சொற்றொடர்
(B) உயிரெழுத்துகள்
(C) மெய்யெழுத்துகள்
(D) சொல்லாக்கம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
68. ஆங்கிலச் சொல்லுக்கு பொருந்தாத தமிழ்ச்சொல் அறிக.
(A) ஒலியியல் — Phonology
(B) இதழியல் — Magazine
(C) எழுத்திலக்கணம் — Orthography
(D) மொழியியல் — Linguistics
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
69. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எடுத்து எழுதுக.
டிஜிட்டல் ரிவாலியுசன் (Digital Revolution)
(A) மின்னணுப் புரட்சி
(B) மின்னணு புலம்
(C) மின் பரிவர்த்தனை
(D) மின்னணு பயன்பாடு
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : A
70. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக.
(A) ஆறு – நதி
(B) ஆரு – மரம்
(C) ஆளு – மன்
(D) ஆலு – மண்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : A
71. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க
விடு – வீடு
(A) கைவிடுதல் – தங்கும் இடம்
(B) கொடுத்தல் – உறைவிடம்
(C) விட்டு விடுதல் – பாடசாலை
(D) கொடுத்தல் – கூடு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
72. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பழந்தமிழர்கள் _________ வழியாக போர் செய்யும் __________ போன்ற கூர்ந்த மதியுடையவர்கள்
(A) வீரம், அரம்
(B) அரம், அறம்
(C) அறம், அரம்
(D) அகம், புறம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
73. ஒரு பொருள் தரும் பல சொற்கள்
நாவாய், வங்கம், தோணி, கலம் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
(A) பல வகையான மீன்கள்
(B) பல வகையான மான்கள்
(C) பல வகையான வானூர்திகள்
(D) பல வகையான கடற்கலன்கள்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : D
74. ஒரு பொருள் தரும் இரு சொற்கள் தருக.
வெய்யோன்
(A) பகலவன், பாரி
(B) பகலவன், சூரியன்
(C) சந்திரன், சூரியன்
(D) ஆதவன், அரசன்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
75. துளிர், முறி, குருத்து, கொழுந்தாடை ஆகிய சொற்கள் தாவரத்தின் எப்பகுதியைக் குறிக்கும்?
(A) அடிப்பகுதி
(B) நுனிப்பகுதி
(C) மணிவகை
(D) இளம்பயிர்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : B
76. பின்வரும் வினைமுற்றின் வேர்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக
பார்த்தான்
(A) பார்க்க
(B) பாரு
(C) பார்
(D) பார்த்த
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : C
77. கீழ்க்கண்டவற்றுள் சரியான வேர்ச்சொல் இணையைக் கண்டறிக.
(A) நட – நடக்கிறது
(B) கேட்டு – கேட்டார்
(C) வாழி – வாழியர்
(D) சென்று – சென்றனர்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : A
78. வேர்ச்சொற்களைத் தேர்வு செய்க
அறிஞர்
(A) அறிஞன்
(B) அரி
(C) அறி
(D) அறு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
79. வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் காண்க.
கொடு
(A) கொடுத்தல்
(B) கொடுத்தோர்
(C) கொடுத்த
(D) கொடுத்து
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : B
80. கொடுக்கப்பட்டுள்ள தொழிற்பெயரிலிருந்து வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
படித்தல்
(A) படு
(B) படி
(C) படித்து
(D) படித்த
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
81. அகர வரிசைப்படுத்துக
(A) மோதல், மழை, மேகலை, மைலை
(B) மேகலை, மைலை, மோதல், மழை
(C) மைலை, மோதல், மழை, மேகலை
(D) மழை, மேகலை, மைலை, மோதல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
82. அகர வரிசைப்படி சொற்களை சீர செய்தல்
தேனி, ஓணான், கிளி, மாணவன், ஆசிரியர்
(A) மாணவன், தேனி, ஓணான், கிளி, ஆசிரியர்
(B) ஆசிரியா், ஓணான், கிளி, தேனி, மாணவன்
(C) தேனி, மாணவன், ஒணான், ஆசிரியர், கிளி
(D) கிளி, ஓணான், ஆசிரியர், மாணவன், தேனி
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : B
83. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்
பக்கம், வண்டு, சங்கு, கங்கை, மங்கை
(A) மங்கை, வண்டு, பக்கம், சங்கு, கங்கை
(B) கங்கை, சங்கு, பக்கம், மங்கை, வண்டு
(C) வண்டு, மங்கை, பக்கம், கங்கை, சங்கு
(D) சங்கு, வண்டு, மங்கை, பக்கம், கங்கை
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : B
84. சொற்களை ஒழுங்குப்படுத்துக
(A) யானைகள் தாக்குவதில்லை மனிதர்களை பொதுவாக
(B) யானைகள் பொதுவாக மனிதர்களை தாக்குவதில்லை
(C) பொதுவாக தாக்குவதில்லை மனிதர்களை யானைகள்
(D) யானைகள் தாக்குவதில்லை பொதுவாக மனிதர்களை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
85. முறை மாறியுள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக.
“முளையிலே விளையும் தெரியும் பயிர்”
(A) முளையிலே தெரியும் விளையும் பயிர்
(B) பயிர் முளையிலே விளையும் தெரியும்
(C) பயிர் விளையும் முளையிலே தெரியும்
(D) விளையும் பயிர் முளையிலே தெரியும்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
86. ‘Whatsapp’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தரு௧.
(A) இணையம்
(B) முகநூல்
(C) புலனம்
(D) இடஞ்சுழி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
87. இரு வினைகளின் வேறுபாடு அறிக.
முதலாளி _________ தொழிலாளி ____________.
(A) சேர்த்தார், சேர்ந்தார்
(B) குவித்தார், குவிந்தார்
(C) பணித்தார், பணிந்தார்
(D) பார்த்தார், சேர்ந்தார்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
88. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்.
வீரமாமுனிவர் 17 ஆம் நூற்றாண்டில் படைத்த பெருங்காப்பியம் தேம்பாவணி
(A) தேம்பாவணியின் ஆசிரியர் யார்?
(B) வீரமாமுனிவரின் பெருங்காப்பியம் யாது?
(C) 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்காப்பியம் யாது?
(D) வீரமாமுனிவர் 17 ஆம் நூற்றாண்டில் படைத்த பெருங்காப்பியம் யாது?
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
89. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
டாக்டர் அப்துல்கலாம் ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படுகிறார்.
(A) இந்திய ஏவுகணைத் தலைவன் யார்?
(B) இந்திய ஏவுகணை மன்னன் யார்?
(C) இந்திய ஏவுகணை நாயகன் யார்?
(D) இந்திய ஏவுகணை போராளி யார்?
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : C
90. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
பிறவினை வாக்கியத்தைத் தேர்ந்தெழுதுக.
(A) அப்துல் நேற்று வந்தான்
(B) நேற்று அப்துல் வராமலிருந்தான்
(C) அப்துல் நேற்று வந்திலன்
(D) அப்துல் நேற்று வருவித்தான்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : D
91. தன்வினைச் தொடரைக் கண்டறிக
(A) வள்ளி மாலை தொடுத்தாள்
(B) வள்ளியால் மாலை தொடுக்கப்பட்டது
(C) மாலை வள்ளியால் தொடுக்கப்பட்டது
(D) மாலை வள்ளி தொடுத்திலள்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : A
92. செயப்பாட்டு வினைத் தொடரைக் காண்க.
(A) அவள் பாட்டு பாடினாள்
(B) பாட்டு அவளால் பாடப்பட்டது
(C) பாட்டு அவள் பாடினாள்
(D) பாடினாள் அவள் பாட்டு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
93. “ஆகாயத் தாமரை” – உவமைக் கூறும் பொருளைக் கூறு.
(A) வானத்தில் இருப்பவை
(B) குளத்தில் இருப்பவை
(C) இல்லாத ஒன்று
(D) தரையில் இருப்பவை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : C
94. “புலி” – என்பதன் சரியான சொல்லை தேர்வு செய்க.
(A) குட்டி
(B) பரழை
(C) குழவி
(D) வேங்கை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : D
95. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
எடுப்பார் கைப்பிள்ளை உவமை கூறும் பொருள் தெளிக
(A) பகைமை
(B) பயனின்றி இருத்தல்
(C) ஒற்றுமை
(D) சொல்பவர் பேச்சைக் கேட்டு நடப்பவர்
(E) விடைதெரியலில்லை
ANSWER KEY : D
96. கலைச்சொல்லைப் பொருத்துக.
(a) Doctorate (1) பல்கலைக் கழகம்
(b) Confidence (2) ஒப்பந்தம்
(c) University (3) முனைவர் பட்டம்
(d) Agreement (4) நம்பிக்கை
(a) (b) (c) (d)
(A) 4 1 2 3
(B) 3 4 1 2
(C) 3 1 4 2
(D) 2 3 1 4
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : B
97. நீபவனத்தை நீத்து அடிகோடிட்ட சொல்லின் பொருள் காண்க.
(A) கடம்பவனம்
(B) ஊர்பவனம்
(C) இறைபவனம்
(D) நீர்பவனம்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : A
98. கலைச்சொல் அறிக.
பாசனத் தொழில் நுட்பம்
(A) Irrigation Technology
(B) Tropical Zone
(C) Water Management
(D) Conical Stone
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : A
99. விடை வகையைக் கண்டறிதல்.
நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கிறது’ என்று கூறுவது
(A) சுட்டு விடை
(B) மறை விடை
(C) உறுவது கூறல் விடை
(D) உற்றது உரைத்தல் விடை
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY : D
100. பொருத்தமில்லாத விடையைத் கண்டறிக.
வினா எதிர் வினாதல் விடை
(A) இது செய்வேனா
(B) இது செய்யேன்
(C) நான் போவேனா
(D) வராமல் இருப்பேனா
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY : B
JOIN OUR TELEGRAM GROUP: CLICK HERE