TNPSC Group 4 General Tamil Questions – 2

TNPSC Group 4 General Tamil Questions – 2

53) ஒரு – ஓர் பயன்பாடு சரியாக உள்ள தொடரைத் தேர்க.

(A) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

(B) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது

(C) ஓர் அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது

(D) ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

54) பிழை திருத்துக (ஒரு – ஓர்)

பின்வருவனவற்றுள் பிழையற்றத் தொடரைத் தேர்ந்தெடுக்க.

(A) சென்னை ஒரு மாநகரம்

(B) சென்னைக்கு ஓர் மாணவன் வந்தான்

(C) வந்தாரை வாழ வைக்கும் ஓர் நகரம் சென்னை

(D) சென்னை தொழில் நுட்பப் பூங்காக்கள் நிறைந்த ஓர் நகரம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

55) சொல் – பொருள் – பொருத்துக.

(a) பொக்கிஷம்         1. அழகு  

(b) சாஸ்தி              2. செல்வம்

(c) விஸ்தாரம்          3. மிகுதி

(d) சிங்காரம்           4. பெரும் பரப்பு

                (a)          (b)          (c)           (d)

(A)          2              3              4              1

(B)          1              3              2              4

(C)          1              2              3              4

(D)          2              3              1              4

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

56) ஒருமை,பன்மை பிழையற்ற தொடர் எது?

(A) மேகங்கள் சூழ்ந்து கொண்டன

(B) மேகம் சூழ்ந்து கொண்டன

(C) மேகம் சூழ்ந்து கொண்டனர்

(D) மேகங்கள் சூழ்ந்துள்ளது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

57) ஒருமை, பன்மை பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.

(A) இது பழம் அல்ல

(B) இது பழம் அன்று

(C) இது பழங்கள் அல்ல

(D) இது பழங்கள் அன்று

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

58) கீழ்கண்டச் சொல்லின் கூட்டுப்பெயரினை எழுது.

வாழைமரம்

(A) வாழைத் தோப்பு

(B) வாழைக்கன்று

(C) வாழைத் தோட்டம்

(D) வாழையிலை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

59) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.

(a) விளைவுக்கு  1. பால்

(b) அறிவுக்கு     2. வேல்

(c) இளமைக்கு   3. நீர்

(d) புலவர்க்கு    4. தோள்

(a)          (b)         (c)           (d)

(A)          1              2              3              4

(B)          3              4              1              2

(C)          1              3              2              4

(D)          4              1              2              3

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

60) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்.

5 – என்பதன் தமிழ் எண்

(A) ச

(B) க

(C) ரு

(D) அ

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

61) சரியான இணைப்புச் சொல்லினைத் தேர்ந்தெடு

பிறருக்கு கொடுத்தலே செல்வத்தின் பயன் ______________ பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.

(A) அதுபோல

(B) மேலும்

(C) ஏனெனில்

(D) அதனால்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

62) சரியான இணைப்புச்சொல்

தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

(A) அதனால்

(B) அதுபோல

(C) எனவே

(D) ஏனெனில்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

63) சரியான இணைப்புச்சொல்

அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். மரங்கள்தான் மழைக்கு அடிப்படை.

(A) ஏனெனில்

(B) ஆகையால்

(C) அதனால்

(D) அதுபோல

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

64) சரியான வினாச்சொல் அமைந்த தொடரைத் தேர்க.

(A) இனஎழுத்துகள் என்றால் எப்போது?

(B) இனஎழுத்துகள் என்றால் யார்?

(C) இனஎழுத்துகள் என்றால் ஏன்?

(D) இனஎழுத்துகள் என்றால் என்ன?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

65) பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.

பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு.

(A) பேப்பரப் படித்துக்கொண்டு இரு

(B) செய்தித்தாளை படித்துக்கொண்டு இரு

(C) காகிதத்தை படிச்சிக்கிட்டு இரு

(D) காகிதத்தை படிச்சிட்டு இரு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

66) பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று.

‘வவுத்து வலி’

(A) வருத்து வலி

(B) வயற்று வலி

(C) வயிற்று வலி

(D) வவுறு வலி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

67) இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.

நீதிமன்றத்தில் தொடுப்பது _______________

‘நீச்சத் தண்ணி குடி’ என்பது பேச்சு ______________

(A) சொல்

(B) வலக்கு

(C) விளக்கு

(D) வழக்கு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

68) இரு பொருள் தருக.

‘தாரணி’

(A) பூமி, உலகம்

(B) சூரியன், உலகம்

(C) கதிரவன், மதி

(D) கடல், பூமி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

69) கலைச் சொல் அறிக.

Journalism

(A) கணினியியல்

(B) மொழியியல்

(C) ஒலியியல்

(D) இதழியல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

70) கலைச் சொற்களை அறிதல்

Herbs

(A) நோய்

(B) மூலிகை

(C) மரபணு

(D) ஒவ்வாமை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

71) கலைச்சொல் தருக.

Conical stone

(A) கல்

(B) நடுகல்

(C) கல்வெட்டு

(D) குமிழிக்கல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

72) கலைச்சொல் அறிக.

Consonant

(A) உயிரெழுத்து

(B) மெய்யெழுத்து

(C) ஒப்பெழுத்து

(D) ஆய்த எழுத்து

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

73) நடத்தல் – என்பதன் வேர்ச்சொல்லை எழுதுக.

(A) நடந்த

(B) நடந்து

(C) நட

(D) நடந்தவர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

74) வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க :

கேட்டனன்

(A) கேல்

(B) கேட்க

(C) கேட்ட

(D) கேள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

75) ஓடியவர் – என்பதன் வேர்ச்சொல்லை எழுதுக.

(A) ஓடிய

(B) ஓடு

(C) ஓடி

(D) ஓடினான்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

76) வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்: தந்தான்

(A) தந்து

(B) தா

(C) தந்த

(D) தருகின்றான்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

77) மரம், விலங்கு, பெரிய, அழகு, வண்டு எனப் பொருள் தரும் சொல்லை எழுதுக.

(A) தா

(B) மா

(C) தீ

(D) பூ

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

78) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.

Volunteer

(A) தன்னார்வலர்

(B) தொகுப்பாளர்

(C) தலைவர்

(D) தொண்டர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

79) பொருத்துக.

(a) பள்ளத்தாக்கு  1. Plain

(b) புதர்           2. Tribes

(c) சமவெளி            3. Valley

(d) பழங்குடியினர் 4. Thicket

(a)          (b)          (c)           (d)

(A)          3              4              1              2

(B)          4              1              2              3

(C)          3              2              1              4

(D)          1              2              4              3

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

80) மரபுப்பிழையற்ற தொடரைத் தேர்க.

(A) கோழி கொக்கரிக்கும்

(B) கோழி கத்தும்

(C) கோழி அகவும்

(D) கோழி கூவும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

81) மரபுப் பிழைகளை நீக்கிச் சரியானதைத் தேர்க.

கொடியிலுள்ள மலரை எடுத்து வா

(A) பறித்து

(B) கொய்து

(C) தொடுத்து

(D) எடுத்து

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

82) ‘எளிது’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

(A) அரிது

(B) சிறிது

(C) பெரிது

(D) வறிது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

83) பிரித்தெழுதுக:

தானென்று

(A) தானெ + என்று

(B) தான் + என்று

(C) தா + னென்று

(D) தான் + னென்று

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

84) நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

(A) நன்றி + யறிதல்

(B) நன்றி + அறிதல்

(C) நன்று + அறிதல்

(D) நன்று + யறிதல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

85) ‘மின்னணு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

(A) மின் + அணு

(B) மின் + னணு

(C) மின்ன + அணு

(D) மின்னல் + அணு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

86) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்:

நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்.

(A) போக்குதல்

(B) தள்ளுதல்

(C) அழித்தல்

(D) சேர்த்தல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

87) திருநெல்வேலி என்பதன் மரூஉ

(A) நெல்வேலி

(B) மல்லை

(C) தில்லை

(D) நெல்லை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

88) ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.

திருச்சிராப்பள்ளி

(A) குடந்தை

(B) நெல்லை

(C) மயிலை

(D) திருச்சி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

89) பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.

வாடகை

(A) வருமானம்

(B) குடிக்கூலி

(C) செலவு

(D) சிக்கனம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

90) பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.

‘LUTE MUSIC’

(A) வீணை இசை

(B) நாத ஓசை

(C) யாழிசை

(D) குழலிசை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

91) அலுவல் சார்ந்த கலைச்சொற்கள்.

Compact Disk – என்பதன் தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.

(A) மின்னஞ்சல்

(B) குறுந்தகடு

(C) மென்பொருள்

(D) மின்நூல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

92) கலைச்சொல் தேர்ந்தெழுதுதல்.

Video Conference

(A) கூட்டம்

(B) வழிபாட்டுக் கூட்டம்

(C) காணொலிக் கூட்டம்

(D) பதிவிறக்கம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

93) அலுவல் சார்ந்த சொல் (கலைச்சொல்)

Discipline

(A) அடக்கம்

(B) ஒழுக்கம்

(C) பணிவு

(D) பொறுமை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

94) உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

“கண்ணினைக் காக்கும் இமை போல”

(A) உடனிருத்தல்

(B) பேணல்

(C) தவித்தல்

(D) வாட்டுதல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

95) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்

(A) சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்

(B) இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்

(C) சிலப்பதிகாரம் இயற்றியவர் என்னும் காப்பியத்தை இளங்கோவடிகள்

(D) காப்பியத்தை சிலப்பதிகாரம் என்னும் இளங்கோவடிகள் இயற்றியவர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

96) ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக. (சரியானதை தேர்ந்தெடு)

விரிந்தது – விரித்தது

(A) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரித்தது; மயில் தோகையை விரிந்தன.

(B) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.

(C) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரிந்தன.

(D) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரித்தது: மயில் தோகையை விரித்தது.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

97) அகரவரிசைப்படுத்துக.

நட்பு, அன்பு, மகிழ்ச்சி, பள்ளி, விளையாட்டு, வீடு, தோட்டம்

(A) தோட்டம், நட்பு, மகிழ்ச்சி, வீடு, விளையாட்டு, அன்பு, பள்ளி

(B) அன்பு, தோட்டம், நட்பு, பள்ளி, மகிழ்ச்சி, விளையாட்டு, வீடு

(C) நட்பு, அன்பு, மகிழ்ச்சி, பள்ளி, விளையாட்டு, வீடு, தோட்டம்

(D) நட்பு, வீடு, மகிழ்ச்சி, விளையாட்டு, தோட்டம், பள்ளி, அன்பு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

98) எவ்வளவு உயரமான மரம்! – இது எவ்வகைத் தொடர் என கண்டறிக.

(A) வினாத் தொடர்

(B) கட்டளைத் தொடர்

(C) செய்தித் தொடர்’

(D) உணர்ச்சித் தொடர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

99) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

கியூரி அம்மையார் போலந்து நாட்டைச் சேர்ந்தவர்.

(A) கியூரி அம்மையார் பிறந்த ஊர் எது ?

(B) கியூரி அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

(C) கியூரி அம்மையார் எங்கு வாழ்ந்தார்?

(D) கியூரி அம்மையார் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

100) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு

திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது.

(A) உலகப் பொதுமறை என்று போற்றப்படுவது திருக்குறளா?

(B) எந்த நூல் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது?

(C) போற்றப்படும் உலகப் பொதுமறை நூல் எது?

(D) நூல் போற்றப்படுகிறது உலகப் பொதுமறை என்று ?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

Leave a Comment