TNPSC Group 4 General Tamil Questions

TNPSC Group 4 General Tamil Questions

பகுதி – அ – கட்டாயத்  தமிழ்மொழித் தகுதித் தேர்வு (பத்தாம் வகுப்பு தரம்)

Part – A – Compulsory Tamil Language Eligibility Test (SSLC Std)

வினாக்கள்: 1 – 100

Questions: 1 – 100

1) கீழ்காணும் தொடர்களில் (ஒரு – ஓர்) சரியாக அமைந்த தொடர் எது?

(A) ஒரு அழகிய ஊஞ்சல் ஆடுகிறது

(B) ஓர் ஊஞ்சல் ஆடுகிறது

(C) ஒரு ஊஞ்சல் ஆடுகிறது

(D) ஓர் மர ஊஞ்சல் ஆடுகிறது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

2) சொல் – பொருள் – பொருத்துக.

(a) பண்           1. பதித்து

(b) இழைத்து     2. இசை

(c) பார்            3. பூஞ்சோலை

(d) நந்தவனம்    4. உலகம்

(a)          (b)          (c)           (d)

(A)          3              4              2              1

(B)          1              2              3              4

(C)          3              2              1              4

(D)          2              1              4              3

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

3) பொருந்தா இணையைக் கண்டறிக :

சொல்லோடு பொருளைப் பொருத்துக.

1. கா       – சோலை

2. கோ      – அரசன்

3. சோ      – மதில்

4. நா       – கொடு

(A) கா      – சோலை

(B) கோ     – அரசன்

(C) சோ     – மதில்

(D) நா      – கொடு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

4) சரியான தொடரைத் தேர்ந்தெடு :

நான் மழையில் நனைந்தேன்

(A) உணர்ச்சித் தொடர்

(B) பிறவினைத் தொடர்

(C) உடன்பாட்டு வினைத் தொடர்

(D) பெயர்ப் பயனிலைத் தொடர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

5) நான் நாளை மதுரை செல்கிறேன் – இது எவ்வகைத் தொடர்?

(A) வினாத் தொடர்

(B) செய்தித் தொடர்

(C) கலவைத் தொடர்

(D) கட்டளைத் தொடர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

6) கூட்டப் பெயரைக் குறிப்பிடு.

மக்கள்

(A) மக்கள் கூட்டம்

(B) மக்கள் தொகை

(C) மக்கள்கள்

(D) மனிதர்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

7) கூட்டப் பெயரை எழுதுக.

திராட்சை

(A) குலை

(B) கொத்து

(C) குவியல்

(D) கூடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

8) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.

மலை முகட்டில் மேகம் _______________ அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத் ______________

(A) தங்கும் – தயங்கும்

(B) தவழும் – படியும்

(C) கூடும் – தயங்கும்

(D) சேரும் – கூடும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

9) “முதலைக் கண்ணீர்” – இம்மரபுத்தொடர் உணர்த்தும் பொருள் தெளிக.

(A) முதலையின் கண்ணீர்

(B) பொய்யழுகை

(C) இல்லாத ஒன்று

(D) அவலநிலை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

10) அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (அவர்கள்)

(A) ஏழாம் வகுப்பு _____________ மாணவர்கள்

(B) ______________ ஏழாம் வகுப்பு மாணவர்கள்

(C) _______________ மாணவர்கள் அவர்கள் உள்ளனர்

(D) நான் _______________ மாணவர்கள்

(E) விடை தெரியவில்லை

 ANSWER KEY: B

11) சரியான இணைப்புச் சொல்

காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர். ___________  அவர் எளிமையை விரும்பியவர்.

(A) ஏனெனில்

(B) அதனால்

(C) ஆகையால்

(D) அதுபோல

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

12) சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு.

நாயன்மார்கள் _____________ பேர்?

(A) என்ன

(B) எப்படி

(C) எத்தனை

(D) எவ்வாறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

13) பொருத்தமான காலமறிக.

அவன் நேற்று திரைப்படம் ___________  (காண்)

(A) காண்பான்

(B) கண்டான்

(C) காண்பிப்பான்

(D) காண்கிறான்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

14) சொற்களை இணைத்து புதிய சொல்லை உருவாக்கு.

ஆழ், வயல், நாடு, கடல், விண், வளி

(A) ஆழ் கடல்

(B) ஆழ் வயல்

(C) விண் வயல்

(D) வளி நாடு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

15) சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்.

பொருத்துக.

(a) விண்    1. மொழி

(b) தமிழ்    2. மீன்

(c) நூல்     3. நூல்

(d) நீதி      4. வெளி

(a)          (b)          (c)           (d)

(A)          1              2              3              4

(B)          4              3              2              1

(C)          1              3              2              4

(D)          2              1              4              3

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

16) குறில் நெடில் அடிப்படையில் பொருள் வேறுபாடு காண்க.

விடு – வீடு

(A) தங்குமிடம் – விட்டுவிடுதல்

(B) விட்டுவிடுதல் – தங்குமிடம்

(C) விட்டுவிடுதல் – தவிர்த்துவிடுதல்  

(D) தங்குமிடம் – தாங்குமிடம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

17) குறில் நெடில் வேறுபாடு அறிந்து சரியான இணையைத் தேர்க.

சிலை      –     சீலை

(A) சிற்பம்        – புடவை

(B) புடவை        – சிற்பம்  

(C) கற்சிலை      – ஓவியம் 

(D) சிற்பம்        – ஒழுக்கம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

18) தழை – தாழை – பொருள் சரியாகப் பொருந்திய இணையைத் தேர்க.

(A) செழிக்கச் செய்            – வாடச்செய்

(B) மலர்                – மடல்

(C) மலர்                – இலை

(D) இலை               – மலர் வகை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

19) கூற்று : அயோத்திதாசர் “ஒரு பைசா தமிழன்” என்ற வார இதழைத் தொடங்கினார்.

காரணம் (1) : இவர் தனது ஆசிரியர் பெயரையே தம் பெயராக வைத்துக் கொண்டார்.

காரணம் (2) : ஒரு பைசா தமிழன் என்ற வார இதழ் 1 பைசாவிற்கு விற்கப்பட்டது.

காரணம் (3) : ஓர் ஆண்டிற்குப் பின் இவ்விதழின் பெயரைத் தமிழன் என மாற்றினார்.

(A) கூற்றும், காரணங்களும் சரி

(B) கூற்று சரி காரணம் 1 தவறு 2, 3 சரி

(C) கூற்று சரி காரணம் 1, 2 சரி 3 மட்டும் தவறு

(D) கூற்றும் காரணம் 1, 3 ம் சரி 2 மட்டும் தவறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

20) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

குச்சு, கிளை, கொம்பு, கவை, கொப்பு

(A) கவை, கிளை, குச்சு, கொம்பு, கொப்பு

(B) கவை, கிளை, குச்சு, கொப்பு, கொம்பு

(C) கவை, குச்சு, கொம்பு, கொப்பு, கிளை

(D) கவை, கிளை, கொம்பு, கொப்பு, குச்சு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

21) வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக :

வா

(A) வந்த

(B) வந்தான்

(C) வந்தவன்

(D) வந்து

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

22) வேர்ச்சொல்லைக் கொண்டு தொழிற்பெயரை உருவாக்கு :

நடி

(A) நடித்தான்

(B) நடித்தல்

(C) நடித்து

(D) நடித்த

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

23) வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு :

உணர்

(A) உணர்ந்தான்

(B) உணர்வான்

(C) உணர்ந்தோர்

(D) உணர்தல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

24) ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்:

ஏரி – ஏறி

(A) ஆறு – ஆற்றுப்படுத்தல்

(B) ஏறுதல் – எறிதல்

(C) ஆறு – குளம்

(D) நீர்நிலை – மேலே சென்று

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

25) ஒலி வேறுபாடறிந்து சரியான இணையைத் தேர்வு செய் :

மரை – மறை

(A) மறைதல் – மறைத்தல்

(B) தாமரை – மறத்தல்

(C) தாமரை – மறைத்தல்

(D) ஆணி – மறைதல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

26) பொருள் வேறுபாடறிந்து சரியானவற்றைத் தேர்க.

போரில் பயன்படுத்தியது _________________, பூனைக்கு உள்ளது _______________.

(A) வாழ், தாழ்

(B) வாள், வால்

(C) கால், காளை

(D) மனம், மணம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

27) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.

Confidence

(A) அச்சம்

(B) நம்பிக்கை

(C) பயம்

(D) பொய்மை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

28) பிழையற்றத் தொடரைக் கண்டறிக.

(A) தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்

(B) தேர்த் திருவிலாவிற்குச் செண்றணர்

(C) தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்

(D) தேர்த் திருவிழாவிற்குச் செண்றண்ர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

29) பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக.

(A) கருங்குவளை

(B) செந்நெல்

(C) விரிமலர்

(D) செம்மலர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

30) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

(A) தமிழ்நாடு

(B) கேரளா

(C) இலங்கை

(D) ஆந்திரா

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

31) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

பாடுகிறாள், நடித்தார், நடிக்கின்றார், சிரிக்கின்றாள்

(A) பாடுகிறாள்

(B) நடித்தார்

(C) நடிக்கின்றார்

(D) சிரிக்கின்றாள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

32) ‘கிளை’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.

(A) உறவினர்

(B) தாவர உறுப்பு

(C) வளர்

(D) பகைவர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

33)  சரியான நிறுத்தற்குறியிட்ட வாக்கியத்தை தேர்ந்தெடு.

(A) வீரன், அண்ணன், மருதன் – ஆண் பால்

(B) வீரன் அண்ணன் மருதன் – ஆண்பால்

(C) வீரன் அண்ணன் மருதன் ஆண்பால்

(D) ‘வீரன்’ அண்ணன், மருதன் – ஆண்பால்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

34) சரியான நிறுத்தற்குறிகள் அமைந்த தொடரைத் தேர்க.

(A) சிகாமணியின் தந்தை “பண்டுக்கிழவர்”.

(B) சிகாமணியின் தந்தை, பண்டுக்கிழவர்.

(C) சிகாமணியின், தந்தை பண்டுக்கிழவர்.

(D) சிகாமணியின்! தந்தை பண்டுக்கிழவர்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

35) ஊர்ப்பெயரின் மரூஉவை எழுது.

மன்னார்குடி

(A) மதுரை

(B) மன்னை

(C) மானாமதுரை

(D) கோவை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

36) ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக.

கும்பகோணம்

(A) குடுமியான் மலை

(B) கூடம்குளம்

(C) குடந்தை

(D) கும்பை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

37) பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்.

‘அலர்ஜி’ என்பதன் தமிழ்ச் சொல்

(A) உண்ணாமை

(B) ஒவ்வாமை

(C) படை, சொரி

(D) சிரங்கு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

38) எனக்கு எழுதித் தருகிறாயா? என்ற வினாவிற்கு, “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடையளிப்பது

(A) மறை விடை

(B) உறுவது கூறல்

(C) வினா எதிர் வினாதல் விடை

(D) உற்றது உரைத்தல் விடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

39) விடை வகையை கண்டறிக.

‘கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்கு ‘போவேன்’ என்று கூறுவது

(A) ஏவல் விடை

(B) சுட்டு விடை

(C) உறுவது கூறல் விடை

(D) நேர் விடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

40) ‘உனக்குக் கதை எழுதத் தெரியுமா?’ என்ற வினாவிற்குக் ‘கட்டுரை எழுதத் தெரியும்’ என்று கூறுவது எவ்வகை விடை?

(A) உற்றது உரைத்தல் விடை

(B) உறுவது கூறல் விடை

(C) ஏவல் விடை

(D) இனமொழி விடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

41) ‘எலியும் பூனையும் போல’ உவமை கூறும் பொருளை எழுதுக

(A) பகைமை

(B) ஒற்றுமை

(C) நட்பு

(D) வேற்றுமை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

42) உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்.

மழைமுகம் காணாப் பயிர் போல

(A) மழை பொழியாத நிலை

(B) மழையின் முகம் பயிரின் வருத்தம்

(C) நீண்ட நாள் காணாமல் ஏங்குவது

(D) வருத்தமும், மகிழ்ச்சியும் கலந்த நிலை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

43) எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் – தன்  வினை, பிற வினை, செய் வினை, செயப்பாட்டு வினை.

செய் வினையைத் தேர்ந்தெடு

(A) கண்ணன் நேற்று வந்தான்

(B) இது நாற்காலி

(C) குமரன் மழையில் நனைந்தான்

(D) கவிதா உரை படித்தாள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

44) செயப்பாட்டுவினைத் தொடரைக் கண்டறிக.

(A) தோசை வைத்தார்

(B) தோசை வைத்தான்

(C) தோசை வைக்கப்பட்டது

(D) தோசை வைத்தல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

45) இருவினைகளின் பொருளை வேறுபடுத்துக.

பணிந்து – பணித்து – இரு வினைகளின் பொருள் வேறுபாடு உணர்த்தும் தொடரைத் தேர்க.

(A) பெரியோர்களிடம் பணிந்து நடக்க வேண்டும் என்று ஆசிரியர் பணித்தார்

(B) இறைவனிடம் பணியாதவர்கள் பணித்தனர்

(C) பணியாதவர்கள் படிப்பறிவில்லாதவர்கள்

(D) பணிந்தால் படிப்பறிவு வளரும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

46) இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக.

மாறு, மாற்று

(A) மாறுபாடு அறிந்து மாற்று

(B) மனிதராக மாறு, மற்றவரையும் மாற்று

(C) மாறுபாடு அற்ற சமூகமாக மாறு

(D) மனிதராக மாரு சமூகத்தை மாற்று

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

47) இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக.

சேர்ந்து – சேர்த்து

(A) மாணவர்கள் சேர்த்து சண்டையிட்டனர் ஆசிரியர் சேர்ந்து வைத்தார்.

(B) மாணவர்கள் சேர்ந்து சண்டையிட்டதால் ஆசிரியர் சேர்த்து வைத்தார்

(C) ஆசிரியர் சேர்ந்து வைத்தார் மாணவர்கள் சேர்த்து சண்டையிட்டனர்

(D) மாணவர்கள் சேர்த்தார்களா? ஆசிரியர் சேர்ந்து வைத்தார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு:

நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர். கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் தொடர்ந்து இயங்கியவர். நரி கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. ‘கப்பலுக்குப் போன மச்சான்’ என்னும் நாவலையும் படைத்துள்ளார். இவரது இயற்பெயர் முகம்மதுரஃபி.

48) நாகூர்ரூமியின் இயற்பெயர் என்ன?

(A) முகம்மதுரஃபி

(B) முகம்மதுரூமி

(C) மகம்மதுரஃபி

(D) நாகூர் முகம்மது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

49) நாகூர்ரூமி எந்த மாவட்டத்தில் பிறந்தவர்?

(A) நாகூர்

(B) தஞ்சாவூர்

(C) நாகை

(D) மயிலை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

50) நாகூர்ரூமி முதன்முதலாக எந்த இதழில் எழுத ஆரம்பித்தார்?

(A) நரியின் கால்கள்

(B) ஏழாவது சுவை

(C) சொல்லாத சொல்

(D) கணையாழி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

51) நாகூர் ரூமியின் கவிதைத் தொகுதிகள் எத்தனை வெளியாகியுள்ளன?

(A) இரண்டு

(B) ஒன்று

(C) மூன்று

(D) நான்கு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

52) நாகூர்ரூமி எழுதிய நாவலின் பெயர் யாது?

(A) கணையாழி

(B) கப்பலுக்கு போன மச்சான்

(C) ஏழாவது சுவை

(D) புதிய பார்வை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

Leave a Comment