TNPSC Tamil Question Paper 3

TNPSC Tamil Question Paper 3

61. “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே

வாளொடு முன்தோன்றி மூத்தக்குடி” எனக் கூறும் நூல்

(A) புறநானூறு

(B) புறப்பொருள் வெண்பாமாலை

(C) மதுரைக்கலம்பகம்

(D) திருவாரூர் மும்மணிக்கோவை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

62. கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்படும் பகுதி எது?

(A) மாம்பாக்கம்

(B) மயிலாப்பூர்

(C) மாமல்லபுரம்

(D) மாதவரம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

63. ‘இந்தியாவின் தேசியப் பங்கு வீதம்’ என்னும் ஆய்வுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்

(A) அறிஞர் அண்ணா

(B) சட்டமேதை அம்பேத்கர்

(C) காயிதே மில்லத்

(D) ராம்ஜி சக்பால்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

64. “மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்’ என மணக்கொடை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்

(A) காயிதே மில்லத்

(B) தந்தை பெரியார்

(C) முத்துராமலிங்கர்

(D) காமராசர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

65. பொருத்துக.

(a) வீரமாமுனிவர்     1. அயர்லாந்து

(b) ஜி.யு.போப்         2. ஜெர்மன்

(c) கால்டுவெல்       3. இங்கிலாந்து

(d) சீகன்பால்கு        4. இத்தாலி

            (a)        (b)       (c)       (d)

(A)       3         4          2          1

(B)       1          2          3          4

(C)       4         3          1          2

(D)       2          1          4          3

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

66. ‘கொய்யாக்கனி’ – என்ற நூலை எழுதியவர் யார் எனக் கண்டறிக.

(A) மு.வரதராசனார்

(B) அறிஞர் அண்ணா

(C) வ.சுப. மாணிக்கம்

(D) பெருஞ்சித்திரனார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

67. முதன் முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்யும் பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தனர் – உ.வே.சா.

மேற்கண்ட வரியில் ‘வித்தியாப்பியாசம்’ என்பது

(A) கல்வித் தொடக்கம்

(B) எழுத்துப்பயிற்சி

(C) கல்விப்பயிற்சி

(D) மனனப்பயிற்சி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

68. கூற்று (உ) :  தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் ‘கானல் வரி’ புதுவகையான ஆராய்ச்சி நூல்.

காரணம் (கா):  சிலப்பதிகார காப்பியத்தைக் கானல் வரி என்னும் பகுதியை மையமாக இயக்கிச் செல்வது என்னும் கொள்கையை இதன் மூலம் நிலைநாட்டினார்.

(A) இரண்டும் சரி

(B) இரண்டும் தவறு

(C) உறுதிக் கூற்று சரி; காரணம் தவறு

(D) உறுதிக் கூற்று தவறு; காரணம் சரி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

69. திராவிட சாஸ்த்திரி என்று போற்றப்பட்டவர்

(A) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்

 (B) தாமோதரனார்

(C) பரிதிமாற்கலைஞர்

(D) பண்டிதமணி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

70. சரியான விடையை மொழியுடன் பொருத்துக.

(a) வட்டார மொழி    1. நாளேடுகள்

(b) கிளை மொழி            2. உணர்ச்சி மொழி

(c) எழுத்து மொழி     3. கன்னடம், தெலுங்கு

(d) பேச்சு மொழி       4. இருக்குது

            (a)        (b)        (c)       (d)

(A)       3          4          1          2

(B)       1         2          3          4

(C)       2         1          4          3

(D)       4          3          1          2

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

71. தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யும் வகையில் எகர , ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்

(A) வீரமாமுனிவர்

(B) கால்டுவெல்

(C) ஜி.யு. போப்

(D) எர்னஸ்ட் காசிரர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

72. மேடைக் காட்சித் திரைகளைப் பற்றியும் நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் கூறும் நூல்

(A) யசோதர காவியம்

(B) குண்டலகேசி

(C) சிலப்பதிகாரம்

(D) நாககுமார காவியம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

73. ‘மீசைக்கார பூனை’ என்ற நூலின் ஆசிரியர்

(A) தேனரசன்

(B) நெல்லை சு. முத்து

(C) சே.பிருந்தா

(D) பாவண்ணன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

74. ‘மங்கையர்க்கரசியின் காதல்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளில், ‘தமிழின் முதல் சிறுகதை’ எனப் போற்றப்படும் சிறுகதை

(A) நந்தவனத்தில் ஓர் ஆண்டி

(B) குளத்தங்கரை அரசமரம்

(C) கோயில் காளையும் உழவு மாடும்

(D) நட்சத்திரக் குழந்தை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

75. பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் தொடர்பான இலக்கணம் கூறும் நூல்

(A) தண்டியலங்காரம்

(B) தொல்காப்பியம்

(C) நன்னூல்

(D) யாப்பருங்கலம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

76. சரியான விடையைத் தெரிவு செய்.

கீழ்க்கண்ட செய்திகளில் கூத்துப்பட்டறை நா. முத்துசாமி பற்றிய சரியான செய்தியை தேர்ந்தெடு

1. தாமரைத்திருவிருது பெற்ற ந. முத்துசாமி புலி ஆட்டம் தோன்ற காரணமாக இருந்தவர்

2. கலைஞாயிறு ந. முத்துசாமி நாடகக் கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோளாகக் கொண்டவர்

3. ந. முத்துசாமி தெருக்கூத்தைத் தமிழ்க் கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்.

(A) 1 மட்டும் சரி

(B) 1 மற்றும் 2 சரி

(C) 1 மற்றும் 3 சரி

(D) 2 மற்றும் 3 சரி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

77. இந்திரா காந்தி படித்த விசுவபாரதி கல்லூரி அமைந்துள்ள மாநிலம்

(A) டெல்லி

(B) மேற்கு வங்காளம்

(C) தமிழ்நாடு

(D) உத்திரபிரதேசம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

78. நாளும் கிழமையும்

நலிந்தோர்க்கு இல்லை

ஞாயிற்றுக்கிழமையும்

பெண்களுக்கில்லை – என்று பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்த கவிஞர்

(A) மாலதி மைத்ரி

(B) சுகிர்தராணி

(C) கந்தர்வன்

(D) இன்குலாப்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

79. தமிழக அரசின் பரிசைப் பெற்ற முடியரசனின் காவியம்

(A) வீர காவியம்

(B) காவியப்பாவை

(C) பூங்கொடி

(D) கொடிமுல்லை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

80. “நதிவெள்ளம் காய்ந்து விட்டால்

நதி செய்த குற்றமில்லை” என்ற திரை இசைப்பாடலை இயற்றியவர்

(A) மருதகாசி

(B) உடுமலை நாராயணகவி

(C) கண்ணதாசன்

(D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

81. எது உம்மைத்தொகை

(A) அண்ணன் தம்பி

(B) மதுரை சென்றார்

(C) தேரும் பாகனும்

(D) மலர்க்கை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

82. ‘செல்வி செய்தாள்’ என்பதன் பிறவினை

(A) செல்வி செய்வாள்

(B) செல்வி செய்வித்தாள்

(C) செல்வி செய்கிறாள்

(D) செல்வி செய்தாள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

83. பெயருக்கு ஏற்ற வினை மரபினை தேர்ந்தெடு.

செய்யுள் ________.

(A) எழுதினான்

(B) செய்தான்

(C) புனைந்தான்

(D) இயற்றினான்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

84. சரியான ஒன்றை இனம் காண்க.

(A) அவன் சிகப்பு மேலாடையை அணிந்துக் கொண்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டான்

(B) அவன் சிவப்பு மேலாடையை அணிந்துக் கொண்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டான்

(C) அவன் சிகப்பு சர்ட் அணிந்துக் கொண்டு ஆபிஸ் புறப்பட்டான்

(D) அவன் சிகப்பு மேல் அங்கியை அணிந்துக் கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டான்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

85. ‘பகுத்தறிவுத் துறையில் அவருக்கு இணை அவரே’ என்று அம்பேத்கரை புகழ்ந்துரைத்தவர்

(A) திரு.வி.க

(B) பேரறிஞர் அண்ணா

(C) நேரு

(D) இராஜாஜி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

86. எவருடன் உறவுகலவாமை வேண்டும் என்கிறார் வள்ளலார் ?

(A) உள்ளே பலபொருள் வைத்துள்ள உத்தமர்களின் உறவு

(B) மனதில் பல பொய் பேசுபவர்களின் உறவு

(C) உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுபவர் உறவு

(D) நோயற்ற வாழ்க்கை வாழ்பவரின் உறவு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

87. ‘இன்சொல்’ – என்பதன் எதிர்ச்சொல்லை எழுது.

(A) நல்லசொல்

(B) செஞ்சொல்

(C) வன்சொல்

(D) மென்சொல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

88. “நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்” இதில் ‘நயம் இல’ என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்.

(A) வஞ்சகம்

(B) சூழ்ச்சி

(C) நன்மை

(D) பழித்தல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

89. அம்மானை பற்றி தவறான ஒன்றை தேர்வு செய்க.

(A) அம்மானை – ஒரு வகை காய் விளையாட்டு

(B) அம்மானை சுவையான ஓர் உரையாடல் விளையாட்டு

(C) அம்மானை விளையாட்டை 10 பேர் இணைந்து விளையாடுவர்

(D) அம்மானை பெண்கள் விளையாடுவதற்கு ஏற்றது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

90. கீழுள்ளவற்றில் பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

(A) செம்மை

(B) பசுமை

(C) கருமை

(D) எளிமை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

91. Proposal – என்ற அலுவலகக் கலைச் சொல்லுக்குரிய தமிழாக்கம் கூறுக.

(A கருத்துரு

(B) மெய்யுரு

(C) கூர்ந்தறி

(D) கூர்ந்துணர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

92. Underground drainage – என்பதன் பொருத்தமான தமிழ் மொழிபெயர்ப்பு எது?

(A) பாதாளக் கழிவு

(B) புதை சாக்கடை

(C) பாதாளக் கழிவு நீர் வழி

(D) புதைக்கழிவு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

93. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடு.

கரி – கறி

(A) கருமை – கடுமை

(B) சாட்சி – காட்சி

(C) ஆடு-மாடு

(D) யானை – காய்கறி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

94. பொருந்தாத இணையைக் கண்டறிக.

(A) கோலம்  – அழகு

(B) கூளம் – தானியம்

(C) குழவி – குழந்தை

(D) கூறை – புடவை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

95. ‘தே’ என்பதன் பொருள்

(A) தேவாரம்

(B) கடவுள்

(C) தேங்காய்

(D) தேன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

96. ‘பூமி’ என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க.

(A) MUU

(B) வை

(C) SUU

(D) கூ

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

97. சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு.

‘களர்நிலம் இல்லாத கல்வி பெண்கள்’

(A) கல்வி இல்லாத களர்நிலம் பெண்கள்

(B) கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்

(C) பெண்கள் இல்லாத கல்வி களர்நிலம்

(D) களர்நிலம் இல்லாத கல்வி பெண்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

98. முறையான சொற்றொடரினைக் கண்டறிக:

(A) தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது விழிகளை இழந்துவிட்டால் கூட என்று எண்ணியவர் இரா. இளங்குமரனார்

(B) விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர் இரா. இளங்குமரனார்

(C) இழந்துவிடக்கூடாது தாய்த்தமிழினை விழிகளை இழந்து விட்டால் கூட என்று எண்ணியவர் இளங்குமரனார். இரா.

(D) தாய்த் தமிழினை இழக்க நேரிட்டால் கூட விழிகளை இழந்துவிடக் கூடாது என்று எண்ணியவர் இரா. இளங்குமரனார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

99. ‘பங்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு’ என்ற தலைப்பில் இலங்கை யாழ்ப் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தியவர்

(A) ர.பி. சேது

(B) தனிநாகம்

(C) சுந்தரனார்

(D) ம.பொ.சிவஞானம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

100. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

(A) உழவு, மண், ஏர், மாடு

(B) மண், மாடு,ஏர்,உழவு

(C) உழவு, ஏர், மண், மாடு

(D) ஏர், உழவு,மாடு, மண்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

Leave a Comment