tnpsc tamil question paper

TNPSC Tamil Question Paper 2

26. தமிழின் முதல் பாவடிவ நாடக நூல்

(A) இரகசிய வழி

(B) நூல்தொகை விளக்கம்

(C) மனோன்மணீயம்

(D) திருவிதாங்கூர் அரசர் வரலாறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

27. ‘இது பொறுப்பதில்லை – தம்பி

எரிதழல் கொண்டு வா

கதிரை வைத்திழந்தான் அண்ணன்

கையை எரித்திடுவோம்’

என பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் கூறுபவன் யார்?

(A) அர்ச்சுனன்

(B) வீமன்

(C) நகுலன்

(D) துச்சாதனன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

28. சரியான இணையைத் தேர்க.

(A) நவ்வி – மான்

(B) புனல் – மேகம்

(C) முகில் – சொரிதல்

(D) உகுதல் – நீர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

29. ‘வாயில் இலக்கியம்’ என்றழைக்கப்படும் நூல் வகை

(A) உலா

(B) தூது

(C) பள்ளு

(D) குறவஞ்சி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

30. நச்சிலைவேல் கோக்கோதை நாடு என்று குறிப்பிடப்படும் நாடு

(A) சேர நாடு

(B) சோழ நாடு

(C) பாண்டிய நாடு

(D) பல்லவ நாடு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

31. குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் எத்தொகுப்பில் உள்ளது?

(A) திருவியற்பா

(B) பெரிய திருமொழி

(C) முதலாயிரம்

(D) நான்காயிரம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

32. அருண்மொழித்தேவர் என்ற இயற்பெயருடையவர்

(A) சுந்தரர்

(B) சேக்கிழார்

(C) மாணிக்கவாசகர்

(D) திருநாவுக்கரசர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

33. ‘ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல்

தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்’ – இதில் ‘தீன்’ என்பதின் பொருள் என்ன?

(A) நகரம்

(B) சேனாவீரர்கள்

(C) மார்க்கம்

(D) கதிரவன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

34. மதுரைக் காண்டம். கூடற்காண்டம். திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று  காண்டங்களும் இடம் பெற்றுள்ள நூல்

(A) சிலப்பதிகாரம்

(B) கம்பராமாயணம்

(C) திருவிளையாடற்புராணம்

(D) வேதாரண்யப்புராணம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

35. கோவலன் ‘தன் தீது இலள்’ என்று யாரைக் குறிப்பிடுகிறான்?

(A) மாதவி

(B) மாதரி

(C) கண்ணகி

(D) மணிமேகலை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

36. ‘உரைப்பாட்டு மடை’ எனும் தமிழ் உரைநடைப் பகுதி இடம்பெற்றுள்ள நூலை இயற்றியவர்

(A) திருத்தக்கதேவர்

(B) சீத்தலைச்சாத்தனார்

(C) சேக்கிழார்

(D) இளங்கோவடிகள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

37. உலக உயிர்களுக்கு உண்டியும் உடையும் உரையுளும் கொடுப்பது எதுவென மணிமேகலை சுட்டுகிறது?

(A) தானம்

(B) உதவி

(C) அறம்

(D) இன்பம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

38. சரியான இணையைத் தெரிவு செய்க.

(A) துகிர் – துணி

(B) நொடை – விலை

(C) கிழி – குற்றம்

(D) மறு – பவளம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

39. பேரண்டத் தோற்றம் குறித்த அறிவியல் செய்தியினைக் குறிப்பிடும் சங்க இலக்கியம்

(A) பட்டிணப்பாலை

(B) கலித்தொகை

(C) அகநானூறு

(D) பரிபாடல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

40. சங்க இலக்கிய நூல்களுள் பன்னோடு பாடப்பட்ட நூல்

(A) புறநானூறு

(B) அகநானூறு

(C) பரிபாடல்

(D) நற்றிணை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

41. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல்

(A) குறிஞ்சிப்பாட்டு

(B) முல்லைப்பாட்டு

(C) மதுரைக்காஞ்சி

(D) நெடுநல்வாடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

42. கம்பராமாயணத்தின் ‘குகப்படலம்’ இப்படியும் அழைக்கப்படும்

(A) யமுனைப்படலம்

(B) கோதாவரிப்படலம்

(C) கங்கைப்படலம்

(D) துங்கபத்திரைப்படலம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

43. ‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுபவர்

(A) பாரதியார்

(B) வ.வே.சு.ஐயர்

(C) பாரதிதாசன்

(D) தி.க.சிவசங்கரன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

44. கம்பராமாயணத்தில் அனுமனின் தலைமைப் பண்புகள் வீறுபெற்று விளங்கும் காண்டம்

(A) யுத்த காண்டம்

(B) ஆரணிய காண்டம்

(C) சுந்தர காண்டம்

(D) கிட்கிந்தா காண்டம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

45. ஏலாதி – எந்த நூல் வகையைச் சார்ந்தது?

(A) பதினெண்கீழ்க்கணக்கு

(B) ஐஞ்சிறுங்காப்பியம்

(C) ஐம்பெருங்காப்பியம்

(D) பதினெண்மேற்கணக்கு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

46. மருந்துப் பெயரில் அமைந்த இரு நூல்கள்?

(A) திருக்குறள் – நாலடியார்

(B) திரிகடுகம் – ஏலாதி

(C) அகநானூறு – புறநானூறு

(D) நற்றிணை – குறுந்தொகை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

47. ‘மன்னற்கு தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்கு

சென்ற இடமெல்லாம் சிறப்பு’ – என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?

(A) மூதுரை

(B) பழமொழி நானூறு

(C) திருக்குறள்

(D) நாலடியார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

48. திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர்

(A) வீரமாமுனிவர்

(B) ஜி.யு.போப்

(C) தாயுமானவர்

(D) கால்டுவெல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

49. “பெரியாரைப் பேணித் தமரா கொளல்” – இதில் “தமர்” என்பதன் பொருள்

(A) நூல்

(B) துணை

(C) பேறு

(D) அரிய

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

50. கிடைத்தற்கரிய பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு என்று வள்ளுவர் கூறுவது

(A) செல்வம் பெறுதல்

(B) பெரியாரைத் துணைக்கொளல்

(C) நட்பு கொள்ளுதல்

(D) நீடுவாழ்தல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

51. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் எது?

(A) திருவனந்தபுரம் நடுவண் நூலகம்

(B) தேசிய நூலகம் – கொல்கத்தா

(C) கன்னிமரா நூலகம்

(D) சரசுவதிமகால் நூலகம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

52. “வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்!” என்று வலியுறுத்தியவர்

(A) சீர்காழி இரா. அரங்கநாதன்

(B) அறிஞர் அண்ணா

(C) மு. வரதராசன்

(D) மறைமலை அடிகள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

53. சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவர் யார்?

(A) இராமலிங்க அடிகள்

(B) விவேகானந்தர்

(C) இராமகிருஷ்ண பரமஅம்சர்

(D) குமரகுருபரர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

54. மூலிகை நோய் அறிந்து பொருத்துக.

(a) ஆவாரம்                 1. நினைவாற்றல்

(b) வாழைப்பூ               2. சர்க்கரை நோய்

(c) வல்லாரை               3. மூட்டு வலி

(d) முடக்கத்தான் இலை        4. வயிற்றுப்புண்

            (a)        (b)        (c)       (d)

(A)       1          4          3          2

(B)       3         2          4          1

(C)       2         4          1          3

(D)       4          1          2          3

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

55. “பலப்பம் பிடிக்க வேண்டிய

சின்னஞ்சிறு விரல்களில்

தீக்குச்சிகள்” என்று குழந்தைத் தொழிலாளர் நிலையினைத் தனது புதுக்கவிதையில் படம் பிடித்துக் காட்டியவர்

(A) மு.மேத்தா

(B) கலாப்ரியா

(C) அப்துல் ரகுமான்

(D) இரா.மீனாட்சி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

56. முசிறித் துறைமுகப்பட்டினத்தில் ‘பந்தர்’ என்று பெயரிடப்பட்ட இடம்

(A) அரேபியர் வணிகம் செய்த இடம்

(B) கிரேக்கர் வணிகம் செய்த இடம்

(C) உரோமர் வணிகம் செய்த இடம்

(D) தமிழர் வணிகம் செய்த இடம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

57. பொருத்துக.

(a) தோவாளை        1. ஆட்டுச்சந்தை

(b) அய்யலூர்          2. பூச்சந்தை

(c) ஈரோடு             3. மீன்சந்தை

(d) நாகப்பட்டினம்     4. ஜவுளிச்சந்தை

            (a)        (b)        (c)       (d)

(A)       3          2          4          1

(B)       4         3          1          2

(C )      2          1          4          3

(D)       3          4          2          1

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

58. மூவலூர் இராமாமிர்தம்மாள் வாழ்ந்த காலம்

(A) 1886 – 1968

(B) 1883 – 1962

(C) 1870 – 1960

(D) 1858 – 1922

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

59. ‘சந்திரமண்டலத்தியல் கண்டுதெளிவோம்’ எனப் பாடியவர்

(A) பாரதியார்

(B) பாரதிதாசன்

(C) வண்ணதாசன்

(D) காளிதாசன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

60. தமிழில் எகர ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்

(A) பெரியார்

(B) வீரமாமுனிவர்

(C) கால்டுவெல்

(D) ஜி.யு.போப்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *