TNPSC Tamil Question Paper 1
1) ‘சின்னூல்’ என்ற பெயருடைய இலக்கண நூல்
(A) வீர சோழியம்
(B) நேமிநாதம்
(C) வச்சணந்திமாலை
(D) தண்டியலங்காரம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
2. ‘புதுநெறிகண்ட புலவர்’ என்று யாரை யார் போற்றினார்?
(A) வள்ளலார் – பாரதியார்
(B) வள்ளலார் – பாரதிதாசன்
(C) பாரதியார் – வள்ளலார்
(D) பாரதிதாசன் – வள்ளலார்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
3. ‘காலங்காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம்’ எவ்வாறு அழைக்கப்படுகிறது என்பதை பின்வருவனவற்றுள் தேர்ந்தெடு.
(A) வினையெச்சம்
(B) பண்புத்தொகை
(C) வினைத்தொகை
(D) எதிர்மறை பெயரெச்சம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
4. ‘வெரீஇ’ என்பது ________ அளபெடை
(A) இன்னிசை
(B) செய்யுளிசை
(C) சொல்லிசை
(D) ஒற்று
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
5. சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை தனித்து உண்ணாமை
(A) விருந்தோம்பல் பண்பின் அடிப்படை தனித்து உண்ணாமையா?
(B) தனித்து உண்ணாமை விருந்தோம்பல் பண்பின் அடிப்படையா?
(C) விருந்தோம்பல் என்றால் என்ன?
(D) தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை யாது?
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
6. மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தோர் திரு.வி.க., பேரறிஞர் அண்ணா. ரா.பி. சேதுப்பிள்ளை, கலைஞர் மு. கருணாநிதி முதலியோர் ஆவர்.
விடைக்கேற்ற வினா அமைக்க
(A) மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்த நால்வர் யாவர்?
(B) பேச்சின் முக்கூறுகள் யாவை?
(C) பேச்சின் தொடக்கம் எவ்வாறு அமைதல் வேண்டும்?
(D) மேடைப்பேச்சின் கூறு யாது ?
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
7. எவ்வகை வாக்கியம் எனக் கண்டுபிடி ?
‘ஐயோ! முள் குத்தி விட்டதே!’
(A) செய்தித் தொடர்
(B) வினாத் தொடர்
(C) உணர்ச்சித் தொடர்
(D) கட்டளைத் தொடர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
8. கீழ்வருவனவற்றுள் ‘செய்வினை வாக்கியம்’ எது?
(A) உழவனால் நெற்பயிர் வளர்க்கப்பட்டது
(B) பாரதிதாசன் ‘பாண்டியன் பரிசைப்’ பாடினார்
(C) சேக்கிழார் சோழனால் வரவேற்கப்பட்டார்
(D) பாண்டியன் பரிசு பாரதிதாசனால் பாடப்பட்டது
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
9. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது – இக்குறட்பாவில் அமைந்த அடிமோனைச் சொற்களைத் தேர்ந்து எடுத்து எழுதுக.
(A) இன்மையின், இன்னாதது
(B) இன்னாதது. இன்மையின்
(C) இன்மையின், இன்மையே
(D) இன்னாதது, யாதெனின்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
10. சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்
இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம் ….
இயைபு அமைந்த சொற்கள் யாது?
(A) சகமக்கள். இனிதினிதாய்
(B) உணர்வதற்கும், எண்ணமெல்லாம்
(C) ஒன்றென்ப. எழுந்த
(D) சகமக்கள். எண்ணமெல்லாம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
11. தீயொழுக்கம் கானல்நீர் போன்றது
பொருத்தமான பொருள் யாது?
(A) மகிழ்ச்சியைத் தருவது
(B) இருப்பது போல் தோன்றும் ஆனால் இராதது
(C) துன்பத்தைக் கொடுப்பது
(D) இன்பம், துன்பம் உடையது
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
12. உவமைத் தொடரின் பொருத்தமான பொருளைத் தேர்ந்து எழுதுக.
‘அறிஞர் அண்ணாவின் மேடைப்பேச்சு மடை திறந்த வெள்ளம் போல அமைந்துள்ளது’
(A) தெளிவற்ற பேச்சு
(B) குழப்பமான பேச்சு
(C) தெளிவான, சீரான பேச்சு
(D) கலக்கம் நிறைந்த பேச்சு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
13. பொருந்தாச் சொல்லைத் தேர்க.
(A) ஓஒதல்
(B) படாஅ
(C) விலக்க்கு
(D) கொடுப்பதூஉம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
14. மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் இப்பழமொழியின் பொருள்
(A) தண்ணீர் கொண்டு கல்லைக் கரைக்கலாம்
(B) தண்ணீர் மெதுவாகப் பாயும்
(C) கல் எப்போதும் கரையும் தன்மை கொண்டது
(D) தொடர்ந்து முயன்றால் தடைகளைத் தாண்டலாம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
15. விழுந்தானைத் தூக்கிவிட்டேன் இத்தொடரில் ‘விழுந்தானை’ என்பது
(A) தொழிற்பெயர்
(B) பண்புப்பெயர்
(C) வினையாலணையும் பெயர்
(D) ஆகுபெயர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
16. ‘வளர்’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்க.
(A) வளர்த்தல்
(B) வளர்ந்து
(C) வளர்த்தார்
(D) வளர
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
17. ‘வந்தனன்’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை தேர்ந்தெடு.
(A) வந்த
(B) வந்தான்
(C) வா
(D) வருவான்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
18. ‘பரப்புமின்’ இச்சொல்லின் வினையடியைத் தேர்ந்தெடு.
(A) பரப்பினான்
(B) பரப்பு
(C) பர
(D) பரப்பினர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
19. ‘தென்னன்’ என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?
(A) பொருட் பெயர்ச்சொல்
(B) இடப் பெயர்ச்சொல்
(C) காலப் பெயர்ச்சொல்
(D) சினைப் பெயர்ச்சொல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
20. விடியலில் துயில் எழுந்தேன் – இதில் விடியல் என்பது
(A) இடுகுறிப்பெயர்
(B) காரண சிறப்புப்பெயர்
(C) காலப்பெயர்
(D) சினைப்பெயர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
21. இறைவனுக்கும் ஆண்டாளுக்கும் திருமணம் ஆன இடம்
(A) திருவில்லிபுத்தூர்
(B) திருமழிசை
(C) திருமலை
(D) திருவரங்கம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
22. ‘நுண் துளி தூங்கும் குற்றாலம்’ என்று பாடியவர்
(A) அப்பர்
(B) சம்பந்தர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
23. தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாகத் தாலாட்டுப் பாடியவர்
(A) நம்மாழ்வார்
(B) பெரியாழ்வார்
(C) பொய்கையாழ்வார்
(D) குலசேகர ஆழ்வார்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
24. நாட்டுப்புற இலக்கியக் கூறுகளை வாய்மொழி, பண்ணத்தி, பிசி, முதுசொல், அங்கதம் என்று சுட்டிக்காட்டிய இலக்கண நூல்
(A) தொல்காப்பியம்
(B) நன்னூல்
(C) தொன்னூல் விளக்கம்
(D) இலக்கண விளக்கம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
25. சிவனுக்கும் வாழைப்பழத்துக்கும் சிலேடையாகப் பாடிய புலவர்
(A) அழகிய சொக்கநாதப்பிள்ளை
(B) காளமேகப் புலவர்
(C) படிக்காசுப் புலவர்
(D) ஒட்டக்கூத்தர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A