TNPSC Tamil Questions Test 1
1. கீழ்க்கண்டவற்றில் எது கவிஞர் தேனரசன் படைப்பு இல்லை?
(A) மண்வாசல்
(B) வெள்ளை ரோஜா
(C) பெய்து பழகிய மேகம்
(D) மழை பற்றிய பகிர்தல்கள்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
2. பொதுமொழிக்கு எடுத்துக்காட்டு
(A) துட்டு
(B) எட்டு
(C) சாத்தன்
(D) நிலம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
3. காலம் கடந்த பெயரெச்சம்
(A) பண்புத் தொகை
(B) வினைத் தொகை
(C) உவமைத் தொகை
(D) வேற்றுமைத் தொகை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
4. பாஞ்சாலி சபதத்தில் பாம்புக் கொடியவன் என்றழைக்கப்படுபவன்?
(A) துரியோதனன்
(B) துச்சாதனன்
(C) சகுனி
(D) கர்ணன்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
5. காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரது மேடை பேச்சினை மொழிபெயர்த்த பெருமகனார்
(A) பாரதியார்
(B) கவிமணி
(C) திரு.வி.க.
(D) வ.உ.சி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
6. 1856ல் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூலை எழுதியவர்
(A) கமில்சுவலபில்
(B) ஆந்திரனோவ்
(C) ஸ்டென்கனோ
(D) கால்டுவெல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
7. “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” எனப் புகழ்ந்துரைத்த கவிஞர்
(A) தேவநேயப் பாவாணர்
(B) சந்தக் கவிமணி தமிழழகனார்
(C) பாரதியார்
(D) நாமக்கல் கவிஞர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
8. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க பாடும் பாடல் வகை எது?
(A) நாட்டுப்புற பாடல்
(B) சங்க இலக்கியப் பாடல்
(C) பக்திப்பாடல்
(D) சமயப்பாடல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
9. ‘பகை’ என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க
(A) நே
(B) சீ
(C) தூ
(D) மோ
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
10. தவறான ஒலி மரபுச் சொல்லைத் தேர்வு செய்க.
(A) குயில் கூவும்
(B) மயில் அகவும்
(C) புறா குழறும்
(D) கிளி பேசும்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
11. உழவு பற்றிய பழமொழியைத் தேர்வு செய்க.
(A) அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்
(B) வேலியே பயிரை மேய்வது போல
(C) ஆடிப்பட்டம் தேடி விதை
(D) வரப்பு உயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
12. ‘கூடா நட்புக் கேடாய் முடியும்’-இப்பழமொழியால் நாம் அறிவனவற்றைத் தேர்க
கூற்று 1: தீயவரோடு கொண்ட நட்பு துன்பத்தில் முடியும்
கூற்று 2: நட்பு நமக்குக் கேடயம் போல் பாதுகாப்பு தரும்.
(A) கூற்று 1 சரி
(B) கூற்று 2 சரி
(C) கூற்று 1ம், 2ம் சரி
(D) கூற்று 1ம்,2ம் தவறு
(E)விடை தெரியவில்லை
ANSWER KEY: A
13. நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நல்மணம் கழிக – இவ்வரிகள்
இடம்பெற்ற நூல் எது?
(A) குறுந்தொகை
(B) ஐங்குறுநூறு
(C) நற்றிணை
(D) அகநானூறு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
14. பாவகையால் பெயர் பெற்ற சங்க இலக்கிய எட்டுத் தொகை நூல்கள்
(A) பதிற்றுப்பத்து, பரிபாடல்
(B) கலித்தொகை, மதுரைக்காஞ்சி
(C) மலைபடுகடாம், நெடுநல்வாடை
(D) பரிபாடல், கலித்தொகை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
15. அகநானூறு _________ எனவும் அழைக்கப்படுகிறது.
(A) பெரியநூல்
(B) நெடுந்தொகை
(C) பழமொழி நானூறு
(D) இனியவை நாற்பது
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
16. அகன் அமர் காதல் ஐய?
நின்னொடும் எழுவர் ஆனேம் என்று இராமன் யாரைக் குறிப்பிடுகிறான்?
(A) குகன்
(B) சுக்ரீவன்
(C) அனுமன்
(D) வீடணன்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
17. ஒவ்வொரு சிவனடியார் பெருமையையும்ஓர் அடியில் கூறும் நூலைப் பாடியவர்
(A) சேக்கிழார்
(B) சுந்தரர்
(C) நம்பியாண்டார் நம்பி
(D) மாணிக்கவாசகர்.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
18. திருவிளையாடற் புராணத்தில் உள்ள திருவிளையாடல்களின் எண்ணிக்கை
(A) 60
(B) 63
(C) 64
(D) 18
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
19. முனைப்பாடியார் இயற்றிய ‘அறநெறிச்சாரம்’ எத்தனை பாடல்களைக் கொண்டது?
(A) 215
(B) 225
(C) 235
(D) 205
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
20. அகர வரிசையில் அமைத்தெழுது
மீன், மண், முன், மான், மூடி, மெல்ல, மிளகு, மேடு
(A) மான்,மூடி, மிளகு, மேடு, மெல்ல, மீன், மண், முன்
(B) மண், மீன், முன், மூடி, மிளகு, மேடு, மெல்ல, மான்
(C) மண், மான், மிளகு. மீன், முன், மூடி, மெல்ல, மேடு
(D) மான், முன், மூடி, மேடு, மெல்ல, மிளகு, மண், மீன்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
21. வேர்ச்சொல் — காண்க.
ஞாலம்
(A) ஞல்
(B) ஞாள்
(C) ஞால்
(D) ஞாலு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
22. பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
“குழந்தை தனது ஒரு விரலைக் காட்டி
இந்த விரல் சின்ன விரலா? பெரிய விரலா?
எனக் கேட்பது”
(A) வினா வழு
(B) மரபு வழு
(C) பால் வழு
(D) திணை வழு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
23. பொருந்தாததைக் கண்டறிக
(A) வெண்டைக்காய்
(B) தண்ணீர்த்தொட்டி
(C) அத்திக்காய்
(D) ஆலங்காய்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
24. ஆதிரையான் என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்லைக் குறிக்கிறது?
(A) பொருட்பெயர்
(B) காலப்பெயர்
(C) இடப்பெயர்
(D) பண்புப்பெயர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
25. சொற்களை முறைப்படுத்துக
(A) ஏகலை கலையை அம்பு விடும் தமிழ் என்றது
(B) அம்பு விடும் கலையை ஏகலை என்றது தமிழ்
(C) அம்பு விடும் தமிழ் என்றது ஏகலை கலையை
(D) தமிழ் ஏகலை என்றது அம்பு விடும் கலையை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
26. ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் தருக :
நா
(A) கொடு
(B) ஆடை
(C) நாக்கு
(D) நான்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
27. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க
தால்-தாள்
(A) தாலாட்டு – பாதம்
(B) சித்திரம் – வண்ணம்
(C) நூல் – எழுத்து மொழி
(D) பார்வை – மெய்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
28. தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் நாடுகள் எவை?
(A) இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
(B) சிங்கப்பூர், இங்கிலாந்து, இலங்கை
(C) தாய்லாந்து, பிரிட்டன், பிஜித்தீவு
(D) இலங்கை, கனடா, மலேசியா
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
29. கிரேக்க அறிஞர் தாலமி தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக எந்த ஊரைக் குறிப்பிட்டுள்ளார்?
(A) கோயம்புத்தூர்
(B) திருச்சிராப்பள்ளி
(C) திருப்பூர்
(D) கரூர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
30. தமிழகத்தின் தலைநகராக சென்னையே இருக்க வேண்டும் என்பதற்காக “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என முழங்கியவர்
(A) தந்தை பெரியார்
(B) நேசமணி
(C) சங்கரலிங்கம்
(D) ம.பொ.சிவஞானம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
31. அம்பேத்கரின் இயற்பெயர் _______ ஆகும்.
(A) இராம்ஜி சக்பால்
(B) சக்பால்
(C) இராம்ஜி
(D) பீமாராவ் இராம்ஜி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
32. வாணிதாசனின் நூல்கள்
(A) தமிழச்சி,கொடிமுல்லை, இதயக் கோயில்
(B) தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம்
(C) தமிழச்சி, பிச்சைக்காரன், தொடுவானம்
(D) தமிழச்சி, பிச்சைக்காரன், இதயக் கோயில்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
33. ஆண்டிப்பண்டாரம் – உனை வேண்டிக் கொண்டேனே’ எனும் நாட்டுப்பாடலை ஒட்டி ‘தீண்டாதார் விண்ணப்பம்’ பாடியவர்
(A) பாரதியார்
(B) கவிமணி தேசிக விநாயகனார்
(C) பாரதிதாசன்
(D) நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
34. வேங்கடத்தில் குலசேகராழ்வார் _______ ஆக இருக்க விரும்பினார்.
(A) மீன்
(B) கொக்கு
(C) வில்
(D) படி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
35. 1981 – முதல் உலகத்தமிழ் மாநாட்டில் “மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றியவர் :
(A) வையாபுரிப் பிள்ளை
(B) அ. சிதம்பர நாதன்
(C) சாலை. இளந்திரையன்
(D) தேவநேயப் பாவாணர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
36. “தமிழ் மகள்” என பாரதியாரால் அழைக்கப்பெற்ற பெண்பாற்புலவர்
(A) ஔவையார்
(B) காக்கைப் பாடினியார்
(C) வெள்ளி வீதியார்
(D) நக்கண்ணையார்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
37. கூற்றும் காரணமும்:
கூற்று : காவடியாட்டம் மரத்தண்டின் இரு முனைகளிலும் சிற்ப வேலைப்பாடுள்ள பலகையைப் பொருத்தி மூங்கில் குச்சிகளால் அரைவட்டமாக இணைக்கின்றனர்.
காரணம் : ”கா’ என்பதற்குப் பாரந்தாங்கும் கோல் என்று பெயர்.
(A) கூற்று சரி காரணம் தவறு
(B) கூற்றும் சரி காரணமும் சரி
(C) கூற்று தவறு காரணம் சரி
(D) கூற்றும் சரி காரணமும் சரி ஆனால் கூற்றிற்கான சரியான காரணம் இல்லை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
38. ‘மரக்கால் கூத்து’ – என்று அழைக்கப்படுவது
(A) கோலாட்டம்
(B) பொய்க்கால் குதிரையாட்டம்
(C) பொடிக்கழி ஆட்டம்
(D) கழியல் ஆட்டம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
39.“உலக சரித்திரம்” என்ற உலகப் புகழ் பெற்ற நூலின் ஆசிரியர்
(A) காந்தியடிகள்
(B) இந்திரா காந்தி
(C) ஜவஹர்லால் நேரு
(D) சர்தார் வல்லபாய் படேல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
40. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு.:
வளவன் ‘கிணற்றுத் தவளை’ போல வாழ்ந்தான்.
(A) வளவன் எல்லாம் அறிந்தவன் ஆக வாழ்ந்தான்
(B) வளவன் ஏதும் அறியாதவன் ஆக வாழ்ந்தான்.
(C) வளவன் குறுகிய அறிவுடையவன் ஆக வாழ்ந்தான்
(D) வளவன் மூடனாக வாழ்ந்தான்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
41. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு:
பாரியின் பறம்பு மலையின் புகழ் ‘குன்றின் மேலிட்ட விளக்கு போல’ பரவியது.
(A) விளக்கு குன்றின் மேல் அமைந்துள்ளது
(B) பறம்பு மலையின் புகழ் மங்கியது
(C) பறம்பு மலையின் புகழ் ஓங்கியது
(D) பறம்பு மலையில் விளக்கு அமையவில்லை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
42. கீழ்வருவனவற்றுள் ‘செய்வினை’ – வாக்கியம் எது ?
(A) விருது வழங்கியது யார்?
(B) “வேலா இலக்கணத்தை நன்றாகப் படி”
(C) அமைச்சர் விருது வழங்கினார்
(D) நான் இலக்கணம் கற்று வாழ்வில் உயர்ந்தேன்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
43. பின்வருவனவற்றுள் வினாத்தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக
(A) கானலின் நீரோ
(B) வானகமே, இளவெயிலே, மரச்செறிவே
(C) காட்சிப் பிழைதானோ
(D) நானும் ஓர் கனவோ
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
44. அடிநிமிர் வில்லாச் செய்யுட் தொகுதி
அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வகைத்
திறம்பட வருவது
(A) கீழ்க்கணக்கு நூல்கள்
(B) மேற்கணக்கு நூல்கள்
(C) தொல்காப்பியம்
(D) நன்னூல்
(E) விடை தெரியவில்லை.
ANSWER KEY: A
45. கணிமேதாவியார் எந்த சமயத்தைச் சார்ந்தவர்
(A) சைவம்
(B) சமணம்
(C) வைணவம்
(D) பௌத்தம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
46. வாழ்வுக்குரிய அன்பு நெறியைக் கூறும் உயர்ந்த நூல் – திருக்குறள் என்று பாராட்டியவர் யார்?
(A) மல்லார்மே
(B) ஆல்பர்ட் ஸ்வைட்சர்
(C) விட்னே
(D) வால்ட் விட்மன்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
47. தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல் எது ?
(A) தேவாரம்
(B) பெரியபுராணம்
(C) திருமந்திரம்
(D) சிலப்பதிகாரம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
48. தேவநேயப் பாவாணர்
கூற்று (i) : ‘மொழிஞாயிறு’ என்றழைக்கப்படுகிறார்.
கூற்று (ii) : செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப்
பணியாற்றியவர்.
கூற்று (iii) : ”பள்ளிப் பறவைகள்’ என்ற நூலை எழுதியவர்
(A) கூற்று (i) மற்றும் (iii) சரி
(B) கூற்று (ii) மற்றும் (iii) சரி
(C) கூற்று (i) மட்டும் சரி
(D) கூற்று (i) மற்றும் (ii) சரி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
49. தம் மீது எச்சமிட்ட கொக்கை விழித்துப் பார்த்து எரித்தவர்
(A) போகர்
(B) புலிப்பாணி
(C) கொங்கணர்*
(D) சட்டை முனி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
50. அட்டமாசித்திகள் – இதில் அட்டம் எனும் சொல்லின் பொருள்
(A) ஐந்து
(B) ஆறு
(C) எட்டு
(D) ஒன்பது
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C