TNPSC Tamil Notes

TNPSC Tamil Notes

TNPSC TAMIL QUESTIONS COLLECTION – 04

1. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.

(A) எவன் ஒருவன்

(B) எவன்னொருவன்

(C) எவனொருவன்

(D) என்னொருவன்

(E) விடை தெரியவில்லை

2. உயர்வு + அடைவோம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.

(A) உயர்வடைவோம்

(B) உயர்அடைவோம்

(c) உயர்வுவடைவோம்

(D) உயர்வு அடைவோம்

(E) விடை தெரியவில்லை

3. பிரித்தெழுதுதல் :

‘வேதியுரங்கள்’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதுக.

(A) வேதி + யுரங்கள்

(B) வேதி + உரங்கள்

(C) வேத் + உரங்கள்

(D) வேதியு + ரங்கள்

(E) விடை தெரியவில்லை

4. எதிர்ச்சொல் எடுத்தெழுதுதல்.

எளிது

(A) அரிது

(B) சிறிது

(C) பெரிது

(D) வறிது

(E) விடை தெரியவில்லை

5. சொல்லும் பொருளும் பொருந்தாத இணை எது ?

(A) கொம்பு – கிளை

(B) புழை – துளை

(C) கான் – காட்சி

(D) அசும்பு – நிலம்

(E) விடை தெரியவில்லை

6. பொருந்தாத இணை எது?

(A) சூழி – தலை

(B) குழை – காது

(C) கிண்கிணி – இடை

(D) சுட்டி – நெற்றி

(E) விடை தெரியவில்லை

7. பொருந்தாத இணை எது?

(A) குறிஞ்சி – யாமம்

(B) முல்லை –  எற்பாடு

(C) மருதம் – வைகறை

(D) பாலை –  நண்பகல்

(E) விடை தெரியவில்லை

8. பொருந்தாத இணையைக் காண்க.

(A) சாஸ்தி –  மிகுதி

(B) விஸ்தாரம் –  அளவு

(C) பொக்கிஷம் –  செல்வம்

(D) நமஸ்காரம் –  வணக்கம்

(E) விடை தெரியவில்லை

9. வழுஉச் சொல் இல்லாத தொடரை எழுதுக :

(A) அதைச் செய்தது  நான் அன்று

(B) அதைச் செய்தது  நான் அல்லேன்

(C) அதைச் செய்தது  நான் அல்ல

(D) அதைச் செய்தது நான் அல்லர்

(E) விடை தெரியவில்லை

10. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லில் சரியானதைக் குறிப்பிடுக.

(A) Vowel                               –              மெய்யெழுத்து

(B) Consonant                       –              ஆய்த எழுத்து

(C) Homograph                     –              ஒப்பெழுத்து

(D) Discussion                       –              உயிரெழுத்து

(E) விடை தெரியவில்லை

11. ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல் பொருந்தா இணையைக் கண்டறிக:

(A) Storm                               –              புயல்

(B) Tempest                           –              சுழல் காற்று

(C) Tornado                           –              சூறாவளி

(D) Sea Breeze                      –              கடற்காற்று

(E) விடை தெரியவில்லை

12. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க :

வானம் – வாணம்

(A) ஆகாயம்         –              வெட்டவெளி

(B) பட்டாசு          –              ஆகாயம்

(C) வெடி            –              ஆகாயம்

(D) ஆகாயம் –              வெடி

(E) விடை தெரியவில்லை

13. தொடர் அமைப்பினை கண்டறிக :

“பாடி மகிழ்ந்தனர்”

(A) வினையெச்சத் தொடர்

(B) பெயரெச்சத் தொடர்

(C) வினைமுற்றுத் தொடர்

 (D) வேற்றுமைத் தொடர்

(E) விடை தெரியவில்லை

14. ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’- தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற் – பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே

(A) பாடிய, கேட்டவர்

(B) பாடல், கேட்டவர்

(C) கேட்டவர், பாடிய

(D) பாடல், பாடிய

(E) விடை தெரியவில்லை

15. சரியான அகர வரிசைச் சொற்களைத் தேர்வு செய்க :

(A) பானம், பிடி, புலி, பௌவம், பசி

(B) பசி, பானம், பிடி, புலி, பௌவம்

(C) பசி, பிடி, பானம், பௌவம், புலி

(D) பெளவம், பசி, பானம், புலி, பிடி

(E) விடை தெரியவில்லை

16. சரியான அகர வரிசையை எழுதுக :

(A) தூவி, துன்பம், தீவு, தாவி, தண்ணீர்

(B) துன்பம், தூவி, தீவு, தாவி, தண்ணீர்

(C) தூவி, தீவு, துன்பம், தண்ணீர், தாவி

(D) தண்ணீர், தாவி, தீவு, துன்பம், தூவி

(E) விடை தெரியவில்லை

17. அகர வரிசைப்படுத்தி எழுது:

நீலம், மாணிக்கம், வைரம், பவளம், முத்து

(A) நீலம், பவளம், மாணிக்கம், முத்து, வைரம்

(B) மாணிக்கம், பவளம், முத்து, வைரம், நீலம்

(C) பவளம், முத்து, மாணிக்கம், நீலம், வைரம்

(D) முத்து, பவளம், மாணிக்கம், நீலம், வைரம்

(E) விடை தெரியவில்லை

18. சொற்களை ஒழுங்குபடுத்துக.

ஜப்பானில் உருவாக்கிய பெப்பர் இயந்திர மனிதனே சாப்ட் வங்கி.

(A) ஜப்பானில் இயந்திர மனிதனே உருவாக்கிய சாப்ட் வங்கி பெப்பர்

(B) ஜப்பானில் உருவாக்கிய சாப்ட் வங்கி இயந்திர மனிதனே பெப்பர்

(C) ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்

(D) பெப்பர், ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே

(E) விடை தெரியவில்லை

19. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

(A) தொகுதி; துள்ளி; தேடல்; தானியம்

(B) தேடல்; தானியம் ; தொகுதி ; துள்ளி

(C) துள்ளி; தொகுதி; தேடல்; தானியம்

(D) தானியம் ; துள்ளி; தேடல்; தொகுதி

(E) விடை தெரியவில்லை

20. விடை வகையைச் சுட்டுக. “நீ தேர்வு எழுதவில்லையா?” என்ற வினாவிற்குக் “கை வலிக்கிறது” என்று கூறுவது.

(A) உற்றது உரைத்தல்

(B) உறுவது கூறல்

(C) இனமொழி

(D) சுட்டு விடை

(E) விடை தெரியவில்லை

21. உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.

எலியும் பூனையும் போல –

உவமை கூறும் பொருள் கூறுக.

(A) ஒற்றுமை

(B) வேற்றுமை

(C) ஏமாற்றம்

(D) நட்பு

(E) விடை தெரியவில்லை

22. ‘இலவு காத்த கிளி போல’ என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்?

(A) ஏமாற்றம்

(B) தோல்வி

(C) காவல்

(D) நன்மை

(E) விடை தெரியவில்லை

23. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் ;

“பசுமரத்தாணி போல”.

(A) பயனற்ற செயல்

(B) எளிதில் மனத்தில் பதிதல்

(C) எதிர்பாரா நிகழ்வு

(D) தற்செயல் நிகழ்வு

(E) விடை தெரியவில்லை

24. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடு:

Reform

(A) விழிப்புணர்வு

(B) சீருடை

(C) சீர்திருத்தம்

(D) விண்ணப்பம்

(E) விடை தெரியவில்லை

25. “உனக்குக் கதை எழுதத் தெரியுமா”? என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று விடை கூறுவது. ________________  விடை ஆகும்.

(A) வினா எதிர் வினாதல் விடை

(B) நேர் விடை

(C) இனமொழி விடை

(D) உறுவது கூறல் விடை

(E) விடை தெரியவில்லை

26. நிறுத்தற்குறி அறிக (எது சரியானது)

(A) கண்ணா வா. அதோ, அங்குள்ள துணி ஓவியங்களைப் பார்ப்போம்.

(B) “கண்ணா வா அதோ அங்குள்ள துணி ஓவியங்களைப் பார்ப்போம்”.

(C) கண்ணா, வா ! அதோ ! அங்குள்ள துணி ஓவியங்களைப் பார்ப்போம்.

(D) கண்ணா வா அதோ அங்குள்ள துணி ஓவியங்களைப் பார்ப்போம்.

(E) விடை தெரியவில்லை

27. நிறுத்தற்குறி அறிக (எது சரியானது)

(A) வீடு கட்டியாயிற்று?

(B) “சட்டி உடைந்து போயிற்று”

(C) பணம் காணாமல் போனது !

(D) ஓவியம் குமரனால் வரையப்பட்டது.

(E) விடை தெரியவில்லை

28. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று :

“எனக்குக் கூட ஒங்கள மாரி ஆடணுமுன்னு ஆசை”

(A) எனக்குக் கூட உங்கள மாரி ஆடவேண்டும் என்று ஆசை.

(B) எனக்குக் கூட உங்களை மாரி ஆடவேண்டும் என்று ஆசை.

(C) எனக்குக் கூட உங்களைப் போல் ஆடவேண்டுமென்று ஆசை.

(D) எனக்குக் கூட உங்களை மேரி ஆடவேண்டும் என்று ஆசை.

(E) விடை தெரியவில்லை

29. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று.

குடுத்துடு

(A) கொடு

(B) குடுத்து விடு

(C) குடித்து விடு

(D) கொடுத்து விடு

(E) விடை தெரியவில்லை

30. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.

அறநெறிச்சாரம் பாடலை எழுதியவர் ___________?

(A) யார்?

(B) என்ன?

(C) எப்படி?

(D) எவ்வாறு?

(E) விடை தெரியவில்லை

31. எவ்வகை வினா என்பதை எழுதுக.

மாணவரிடம், ‘இந்த கவிதையின் பொருள் யாது ? என்று ஆசிரியர் மாணவரிடம் கேட்டல்

(A) அறியா வினா

(B) ஐய வினா

(C) கொடை வினா

(D) அறி வினா

(E) விடை தெரியவில்லை

32. காட்சியழகு – காட்சி + ய் + அழகு

பின்வருவனவற்றுள் தொடர்புபடுத்துக

(A) ஈகார ஈறு

(B) ஐகார ஈறு

(C) ஆகார ஈறு

(D) இகர ஈறு

(E) விடை தெரியவில்லை

33. சரியான இணையைத் தேர்ந்தெடு

(A) உயிர் + உயிர் –  மலை + அருவி

(B) மெய் + மெய் – தமிழ் + அன்னை

(C) உயிர் + உயிர் –  தென்னை + மரம்

(D) மெய் + உயிர் –  தேன் + மழை

(E) விடை தெரியவில்லை

34. குறில் நெடில் மாற்றம், பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிக.

கொள் – கோள்

(A) புறங் கூறல் –  வாங்கு

(B) புறங் கூறல் – கிரகம்

(C) கொல்லுதல் – கிரகம்

(D) வாங்கு –  புறங்கூறல்

(E) விடை தெரியவில்லை

35. குறில்-நெடில் பிழையான சொல் எது ?

(A) கல் – கால்

(B) கிரி – கீரி

(C) குடம் – கூடம்

(D) கெண்டை – கொண்டை

(E) விடை தெரியவில்லை

36. கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று 1: பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி, காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.

கூற்று 2 : மதுரைக் காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.

(A) கூற்று இரண்டும் தவறு

(B) கூற்று 1 மட்டும் சரி

(C) கூற்று இரண்டும் சரி

(D) கூற்று 2 மட்டும் சரி

(E) விடை தெரியவில்லை

37. கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று: ண, ன, ந  –  இவை மூன்றும் மயங்கொலி எழுத்துகள்.

காரணம் : உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே பொருள் வேறுபாடும் உடையது.

(A) கூற்று : சரி; காரணம் : சரி

(B) கூற்று : சரி ; காரணம் : தவறு

(C) கூற்று : தவறு; காரணம் : சரி

(D) கூற்று : தவறு; காரணம் : தவறு

(E) விடை தெரியவில்லை

38. கல்லாமை ஒழிக எனும் பொருளில் வரும் தொடர்?

(A) செய்தித் தொடர்

(B) வினாத் தொடர்

(C) விழைவுத் தொடர்

(D) உணர்ச்சித் தொடர்

(E) விடை தெரியவில்லை

39. நேரான தமிழ்ச்சொல் அறிக.

டெரகோட்டா

(A) மரச்சிற்பம்

(B) ஒற்றைக் கற்சிற்பம்

(C) சுடுமண் சிற்பம்

(D) மெழுகுச் சிற்பம்

(E) விடை தெரியவில்லை

40. பொருளின் செறிவை சுட்டுக.

(A) அகமும் புறமும்

(B) உற்றார் உறவினர்

(C) காலை மாலை

(D) கன்னங்கரேல்

(E) விடை தெரியவில்லை

41. சொல்லும் பொருளும் – பொச்சாப்பு

(A) தற்சார்பு

(B) சோர்வு

(C) பொறாமை

(D) பொறுமை

(E) விடை தெரியவில்லை

42. குமரிவட்டத்தில் ‘உப்பர்’ என்பது யாரைக் குறிக்கும்?

(A) உறவினர்

(B) உப்பளம்

(C) அப்பா

(D) தாத்தா

(E) விடை தெரியவில்லை

43. பிழை திருத்துதல்

சரியான பதிலை தேர்ந்தெடு.

(A) ஓரூர்

(B) ஓர் ஊர்

(C) ஒன்று ஊர்

(D) ஒரு ஊர்

(E) விடை தெரியவில்லை

44. பிழை திருத்துதல்

சரியான பதிலை தேர்ந்தெடு.

(A) ஓர் நகரம்

(B) ஓரிரு நகரம்

(C) ஒரு நகரம்

(D) ஒன்று நகரம்

(E) விடை தெரியவில்லை

45. சொல்லையும், பொருளையும் பொருத்துக.

(a) ஒப்புமை         1.             மேகம்

(b) அற்புதம்         2.             வள்ளல்

(c) முகில்           3.             வியப்பு

(d) உபகாரி          4.             இணை

     (a)                      (b)                           (c)                           (d)

A)  4                        3                              1                              2

(B)  1                       2                              3                              4

(C)  3                       2                              1                              4

(D)  2                      3                              4                              1

(E) விடை தெரியவில்லை

கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு.

இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித மூளைதான் என்று சொல்கிறார்கள். அதனுள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை ட்ரில்லியன். அவற்றில் நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. இந்த நியூரான்களின் வலைப்பின்னல்தான் படைப்பு உணர்ச்சி, ஞாபகம், தன்னுணர்வு ஆகியன எல்லாம். மூளை முதுகு தண்டில் இருந்து முளைக்கிறது. தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக முட்டைகோஸ் இலைகள் போல உள்ளது. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி குருதி தேவைப்படுகிறது. சிறுமூளை தான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துகிறது.

46. இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் சிக்கலான ஒரு பொருள் எது?

(A) செல்கள்

(B) நியூரான்கள்

(C) மனித மூளை

(D) வலைப்பின்னல்

(E) விடை தெரியவில்லை

47.  மனித மூளையில் இருக்கும் செல்களின் எண்ணிக்கையைக் கூறு ?

A) டிரில்லியன்

(B) நூறுபில்லியன்

(C) பத்தாயிரம்

(D) கோடி

(E) விடை தெரியவில்லை

48. மூளை எங்கிருந்து முளைக்கிறது ?

(A) தலையில்

(B) குருதியில்

(C) முதுகுதண்டில்

(D) நியூரான்களில்

(E) விடை தெரியவில்லை

49. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு குருதி தேவைப்படுகிறது?

(A) டிரில்லியன் மி.லி.

(B) 100 மி.லி.

(C) 1000 மி.லி.

(D) 800 மி.லி.

(E) விடை தெரியவில்லை

50. நம் உடலின் அசைவுகளைக் கட்டுப்படுத்துவது எது ?

(A) உள்மூளை

(B) சிறுமூளை

(C) நடுமூளை

(D) பின்மூளை

(E) விடை தெரியவில்லை

51. சேர்த்தெழுதுக :

இவை + எல்லாம்

(A) இவை எல்லாம்

(B) இவையெல்லாம்

(C) இவயெல்லாம்

(D) இதுயெல்லாம்

(E) விடை தெரியவில்லை

52. என்றென்றும் – பிரித்தெழுதுக.

(A) என் + றென்றும்

(B) என்று + என்றும்

(C) என்றும் + என்றும்

(D) என் + என்றும்

(E) விடை தெரியவில்லை

53. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.

(A) தாம்இனி

(B) தாம்மினி

(C) தாமினி

(D) தாமனி

(E) விடை தெரியவில்லை

54. இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.

(A) இன்றுஆகி

(B) இன்றி ஆகி

(C) இன்றாகி

(D) இன்றாஆகி

(E) விடை தெரியவில்லை

55. ‘புரவலர்’ என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக.

(A) இறப்பவர்

(B) கொடுப்பவர்

(C) இரவலர்

(D) இரவுக்காவலர்

(E) விடை தெரியவில்லை

56. பொருந்தாத இணையைக் கண்டறிக.

(A) கிழக்கு  – கொண்டல்

(B) மேற்கு –  கோடை

(C) வடக்கு –  குணக்கு

(D) தெற்கு – தென்றல்

 (E) விடை தெரியவில்லை

57. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக –

ஆண்பாற் பிள்ளைத் தமிழ் பருவத்தில்

அல்லாததை கண்டறிக.

(A) காப்பு

(B) செங்கீரை

(C) அம்புலி

(D) கழங்கு

(E) விடை தெரியவில்லை

58. பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக

பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குப் பொருந்தாத

பருவத்தைக் கண்டறிக.

(A) கழங்கு

(B) அம்மானை

(C) சிறு தேர்

(D) ஊசல்

(E) விடை தெரியவில்லை

59. பொருந்தா இணையைக் கண்டறிக.

(A) ஆரி – அருமை

(B) இறடி – திணை

(C) அல்கி – தங்கி

(D) படுகர் – மேடு

(E) விடை தெரியவில்லை

60. சந்திப்பிழையற்ற தொடரை அறிக.

(A) நெகிழிபையை புறக்கணிப்போம்; நெடுநாள் வாழ்வோம்.

(B) நெகிழிப்பையை புறகணிப்போம்; நெடுநாள் வாழ்வோம்.

(C) நெகிழிபையைப் புறக்கணிப்போம்; நெடுநாள் வாழ்வோம்.

(D) நெகிழிப்பையைப் புறக்கணிப்போம்; நெடுநாள் வாழ்வோம்.

(E) விடை தெரியவில்லை

61. மரபுப் பிழையற்ற காய்களின் இளமைப் பெயர் காண்க.

(A) வாழைக்காய்

(B) கத்தரிப்பிஞ்சு

(C) மாம்பிஞ்சு

(D) அவரைக்காய்

(E) விடை தெரியவில்லை

62. மரபு வழுவை காண்க.

(A) மயில் அகவும்

(B) குயில் கத்தும்

(C) கோழி கொக்கரிக்கும்

(D) கிளி கீச்சிடும்

(E) விடை தெரியவில்லை

63. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுது :

(A) மயில் அகவும்

(B) காகம் கத்தும்

(C) கோழி கூவும்

(D) புறா குழறும்

(E) விடை தெரியவில்லை

64. சந்திப் பிழையை நீக்குக :

(A) உலகப் பெரும் புகழைப் பெற்றுத்தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள்

(B) உலக பெரும் புகழைப் பெற்று தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள்

(C) உலக பெரும் புகழை பெற்று தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள்

(D) உலகப் பெரும் புகழை பெற்றுத்தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள்

(E) விடை தெரியவில்லை

65.  ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான சொல்லைத் தேர்வு செய்க:

உண்டாக்குதல்

(A) விலை

B) விளை

(C) விழை

(D) விடை

(E) விடை தெரியவில்லை

66. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.

பார்

(A) உலகம், கடல்

(B) உலகம், மேதினி

(C) கடல், பார்த்தல்

(D) ஆர்கலி, புவனம்

(E) விடை தெரியவில்லை

67. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.

சொல்லுதல்

(A) மொழிதல், வாசித்தல்

(B) செப்புதல், கூறல்

(C) உரைத்தல், கேட்டல்

(D) விளம்புதல், கவனித்தல்

(E) விடை தெரியவில்லை

68. “உண்” என்னும் வேர்ச் சொல்லின் பதம் அறிக.

(A) கற்பனை

(B) உண்டாள்

(C) கடித்தான்

(D) சிரிப்பு

(E) விடை தெரியவில்லை

69. “ஆடினான்” – வேர்ச் சொல்லைத் தருக.

(A) போ

(B) சிரி

(C) ஓடு

(D) ஆடு

(E) விடை தெரியவில்லை

70. சரியான அகர வரிசையை எழுதுக :

(A) கரம், கானகம், கீற்று, கொண்டை, கோட்டை

(B) கொண்டை, கோட்டை, கானகம், கரம், கீற்று

(C) கோட்டை, கரம், கானகம், கீற்று, கொண்டை

(D) கரம், கொண்டை, கோட்டை, கீற்று, கானகம்

(E) விடை தெரியவில்லை

71. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க :

(A) வகுப்பு, வானம், விழி, வெற்றி, வேள்வி

(B) விழி, வெற்றி, வேள்வி, வகுப்பு, வானம்

(C) வானம்,விழி, வெற்றி, வேள்வி, வகுப்பு

(D) வெற்றி, வேள்வி, வகுப்பு, வானம், விழி

(E) விடை தெரியவில்லை

72. அகர வரிசையில் எழுதுக:

வணிகம், துறைமுகம், பொருள்கள், முதலீடு

(A) துறைமுகம், பொருள்கள், முதலீடு, வணிகம்

(B) பொருள்கள், வணிகம், முதலீடு, துறைமுகம்

(C) முதலீடு, பொருள்கள், வணிகம், துறைமுகம்

(D) துறைமுகம், வணிகம், பொருள்கள், முதலீடு

(E) விடை தெரியவில்லை

73. கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படி எழுதுக :

சுத்தி, சிற்பம், சொட்டு, சங்கு

(A) சிற்பம்,சுத்தி, சங்கு, சொட்டு

(B) சொட்டு, சங்கு, சுத்தி, சிற்பம்

(C) சங்கு, சிற்பம், சுத்தி, சொட்டு

(D) சுத்தி, சங்கு, சொட்டு, சிற்பம்

(E) விடை தெரியவில்லை

74. விடை வகைகள் ‘கால் பந்து விளையாடுவாயா?’ என்ற வினாவிற்குக் ‘கைப்பந்து விளையாடுவேன்’ என்பது எவ்வகை விடை?

(A) இனமொழி விடை

(B) நேர் விடை

(C) மறை விடை

(D) வினாவெதிர் வினாதல் விடை

(E) விடை தெரியவில்லை

75. விடைக்கேற்ற வினாவைத் தேர்க. “மன்னுஞ் சிலம்பே ! மணிமேகலை வடிவே !”

(A) காப்பியங்கள் எத்தனை?

(B) ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?

(C) ஐஞ்சிறுகாப்பியங்கள் யாவை?

(D) இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவது எது?

(E) விடை தெரியவில்லை

76. ‘என்னுடன் ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு’ வராமல் இருப்பேனா? என்று கூறுவது எவ்வகை விடை?

(A) உற்றது உரைத்தல் விடை

(B) உறுவது கூறல் விடை

(C) வினா எதிர் வினாதல் விடை

(D) இன மொழி விடை

 (E) விடை தெரியவில்லை

77. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.

“பள்ளிக்கு புத்தகங்கள் வருவித்தார்”.

(A) தன்வினை

(B) பிறவினை

(C) செய்வினை

(D) செயப்பாட்டு வினை

(E) விடை தெரியவில்லை

78. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.

“வீடு கட்டியாயிற்று”.

(A) தன்வினை

(B) பிறவினை

(C) செய்வினை

(D) செயப்பாட்டு வினை

(E) விடை தெரியவில்லை

79. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிக.

பொருத்துக.

(a) Creator                             1.             குகை ஓவியங்கள்

(b) Artist                                2.             படைப்பாளர்

(c) Cartoon                            3.             கலைஞர்

(d) Cave paintings                4.             கருத்துப்படம்

      (a)                     (b)           (c)           (d)

(A) 1                       2              3              4

(B) 4                        3              2              1

(C) 2                        3              4              1

(D) 1                       4              2              3

(E) விடை தெரியவில்லை

80. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக :

விஷம்

(A) விடம்

(B) நஞ்சு

(C) அமுது

(D) இனிப்பு

(E) விடை தெரியவில்லை

81. இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து சிதைந்து வழங்கும் சொல்

(A) குடந்தை

(B) நீலகிரி

(C) மதுரை

(D) திருச்சி

(E) விடை தெரியவில்லை

82. கீழ்க்காணும் ஊர் பெயர்களில் தவறான மரூஉவை எழுதுக.

(A) மன்னார் – மன்னார்குடி

(B) கோவை – கோயம்புத்தூர்

(C) அரிவை – அரியலூர்

(D) கும்பை – கும்பகோணம்

(E) விடை தெரியவில்லை

83. சரியான சொல் எது ?

கோழி – என்பதன் இளமைப் பெயர் என்ன?

(A) குட்டி

(B) குருளை

(C) குஞ்சு

(D) பிள்ளை

(E) விடை தெரியவில்லை

84. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்

நாவாய் என்பதன் சரியான சொல்

(A) இறை

(B) நிலவு

(C) தலைவன்

(D) படகு

(E) விடை தெரியவில்லை

85. பொருத்தமான காலத்தைச் சுட்டுக.

மகாகவி சுப்ரமணிய பாரதியார். ‘நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா’ என்று பாராட்டப் பெற்றவர்

(A) இறந்தகாலம்

(B) நிகழ்காலம்

(C) எதிர்காலம்

(D) வருங்காலம்

(E) விடை தெரியவில்லை

86. பொருத்தமான காலம் அமைத்தல் :

சரியான இணையைத் தேர்ந்தெடு

(A) கண்ணன் வந்தான் – இறந்தகாலம்

(B) கண்ணன் வருவான் – நிகழ்காலம்

(C) கண்ணன் வருகிறான் – எதிர்காலம்

(D) கண்ணன் வருகின்றான் – எதிர்காலம்

(E) விடை தெரியவில்லை

87. சரியான மரபுத் தொடர்களை தேர்வு செய்க

(A) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.

(B) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை கட்டினர்.

(C) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை முடுக்கினர்.

(D) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.

(E) விடை தெரியவில்லை

88. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (கவிழும்)

(A) மலைமுகட்டில் மேகம் _____________

(B) காலை ஒளியினில் மலரிதழ் _______________

(C) சோலைப் பூவினில் வண்டினம் ____________

(D) இயற்கையின் இன்பம் ______________

(E) விடை தெரியவில்லை

89.  இரு பொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு.

நகை

(A) பொன்னகை, அணிகலன்

(B) புன்னகை, சிரிப்பு

(C) நகைப்பு, உவகை

(D) புன்னகை, பொன்னகை

(E) விடை தெரியவில்லை

90. இரு பொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு.

செய்

(A) நன்றேசெய், இன்றேசெய்

(B) நன்செய், புன்செய்

(C) செயலைச் செய், வயல் நிலம்

(D) நஞ்சை நிலம், புஞ்சை நிலம்

(E) விடை தெரியவில்லை

91. கலைச்சொல் அறிதல்

Lexicon சரியான கலைச் சொல்லை கண்டுபிடி.

(A) அகராதி

(B) சதுரகராதி

(C) பேரகராதி

(D) தமிழகராதி

 (E) விடை தெரியவில்லை

92. சரியான கலைச்சொல் அறிதல் :

(a) Moral                                1.             குழந்தைத் தொழிலாளர்

(b) Guidance                         2.             ஒழுக்கம்

(c) Discipline                         3.             நீதி

(d) Child labour                    4.             வழிகாட்டுதல்

    (a)       (b)           (c)           (d)

A) 3         4              2              1

(B) 4        3              1              2

(C) 1        2              3              4

(D) 2       4              1              3

(E) விடை தெரியவில்லை

93. மரபுப் பிழைகள் :

புலி ______________ சரியான சொல்.

(A) குட்டி

(B) பறழ்

(C) குருளை

(D) கன்று

(E) விடை தெரியவில்லை

94. ‘அவசரக்குடுக்கை* –  சொல்லின் பொருள் தருக.

(A) எண்ணிச் செயல்படுதல்

(B) எண்ணித் துணிதல்

(C) எண்ணிச் செயல்படாமை

(D) விரைந்து செயல்படுதல்

(E) விடை தெரியவில்லை

95. சொற்களின் கூட்டுப் பெயர்கள்  – சரியானதைத் தேர்ந்தெடு.

கம்பு

(A) கம்பு தோட்டம்

(B) கம்பங் கொல்லை

(C) கம்பங் குவியல்

(D) கம்பந் தோட்டம்

(E) விடை தெரியவில்லை

96. சரியான தொடரைத் தேர்ந்தெடு.

பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் தொடர்

(A) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தல்.

(B) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

(C) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

(D) பட்டிமன்றம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.

(E) விடை தெரியவில்லை

97. சரியான தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(A) வல்லினம் இடங்கள் மிகும், மிகா அறிந்து பயன்படுத்த வேண்டும்.

(B) மிகும், மிகா இடங்கள் வல்லினம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.

(C) வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்கள் அறிந்து பயன்படுத்த வேண்டும்.

(D) பயன்படுத்த வேண்டும் வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்கள்.

(E) விடை தெரியவில்லை

98. பொருத்துக.

சொல்              பொருள்

(a) தேசம்            1.             வழி

(b) நெறி            2.             நாடு

(c) மாசற            3.             அறிஞர்கள்

(d) மேதைகள்       4.             குற்றம் இல்லாமல்

     (a)      (b)           (c)           (d)

(A) 2       1              4              3

(B) 4        3              2              1

(C) 3        1              4              2

(D) 1       3              2              4

(E) விடை தெரியவில்லை

99. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக.

(A) பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கின்றன.

(B) பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கின்றார்கள்.

(C) பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கின்றது.

(D) பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கிறார்.

(E) விடை தெரியவில்லை

100. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக.

(A) மாணவர்கள் வியந்து நிற்கின்றான்.

(B) மாணவர்கள் வியந்து நிற்கின்றன.

(C) மாணவர்கள் வியந்து நிற்கின்றது.

(D) மாணவர்கள் வியந்து நிற்கின்றனர்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

01) C                       02) A                      03) B                       04) A                     

05) C                       06) C                       07) B      

08) B                      09) B                       10) C                       11) B                      

12) D                      13) A                      14) B      

15) B                       16) D                      17) A                      18) C                      

19) D                      20) A                      21) B      

22) A                      23) B                       24) C                       25) C                      

26) C                       27) D                      28) C      

29) D                      30) A                      31) D                      32) D                     

33) A                      34) D                      35) D

36) C                       37) A                      38) C                       39) C                      

40) D                      41) B                       42) D     

43) B                       44) C                       45) A                      46) C                      

47) A                      48) C                       49) D     

50) B                       51) B                       52) B                       53) C                      

54) C                       55) C                       56) C      

57) D                      58) C                       59) D                      60) D                     

61) B                       62) B                       63) A     

64) A                      65) B                       66) B                       67) B                      

68) B                       69) D                      70) A

71) A                      72) A                      73) C                       74) A                     

75) D                      76) C                       77) B      

78) D                      79) C                       80) B                       81) A                     

82) B                       83) C                       84) D     

85) A                      86) A                      87) D                      88) C                      

89) D                      90) C                       91) C      

92) A                      93) B                       94) C                       95) B                      

96) C                       97) C                       98) A     

99) A                      100) D

Leave a Comment